Featured post

முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்

 முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன் சென்சார் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்ற தி டார்க...

Tuesday, 29 July 2025

ரசிகர்களே தயாராகுங்கள் 'மாமன்' ஆகஸ்ட் 8 ஆம் தேதி, உலக டிஜிட்டல் பிரீமியராக, ZEE5

 *ரசிகர்களே தயாராகுங்கள் 'மாமன்' ஆகஸ்ட் 8 ஆம் தேதி, உலக டிஜிட்டல் பிரீமியராக, ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகவுள்ளது.*



*பிளாக்பஸ்டர் “மாமன்” திரைப்படம், வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி  உலக டிஜிட்டல் பிரீமியராக, ZEE5 ல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகிறது.*


*~ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து  இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’  திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது. ~*


இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்  குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘மாமன்’ ஆகஸ்ட் 8, 2025 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உணர்ச்சிப்பூர்வமான கதை மற்றும் அற்புதமான நடிப்பு என பார்வையாளர்களைக் கவர்ந்த  இந்தத் திரைப்படம்,  டிஜிட்டல் ப்ரீமியர் மூலம், உலகம் முழுக்க  உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் தமிழ் ஸ்ட்ரீமிங்கில் கிடைக்கும்.


பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், நடிகர்  சூரி நாயகனாக நடித்துள்ள 'மாமன்' திரைப்படம், மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் நடிகர் ராஜ்கிரண் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அனைத்து வயதினரையும் ஈர்க்கும் என்பது உறுதி.


ZEE5 இன் தமிழ் மற்றும் மலையாள வணிகத் தலைவரும், தென்னக மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவருமான லாயிட் C சேவியர் கூறியதாவது… , 

"எங்கள் ZEE5 சந்தாதாரர்களுக்கு 'மாமன்' திரைப்படத்தைப் பிரத்தியேகமாகக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் குடும்ப உறவுகளின் பாசம் அன்பு மற்றும் சிக்கலான உணர்வுகளின் கலவையாக,  பார்வையாளர்கள் விரும்பும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம். இதன் பிளாக்பஸ்டர் திரையரங்க வெற்றியே அதற்குச்  சான்றாகும். ZEE5 தளத்தில் இப்படம்  உற்சாகமான வரவேற்பைப் பெறும், நாடு முழுவதும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும்  என்று நாங்கள் நம்புகிறோம்."


OTT வெளியீடு குறித்து இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டதாவது.., 

“மாமன்” என் மனதுக்கு  நெருக்கமான படம், இப்படம் குடும்ப உறவுகளின் ஆழத்தையும்  உணர்வுகளையும் வெளிப்படுத்தும் அற்புதமான கதை.  இப்படத்தை மிகச்சரியான முறையில் உருவாக்கியதில் முழுப்பங்களித்த எங்கள் குழுவை நினைத்துப் பெருமைப்படுகிறேன், மேலும் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ஆழத்தைக் கொண்டு வந்த சூரி அண்ணாவின் அற்புதமான நடிப்புக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். ZEE5 மூலம் இப்படம் பரந்த அளவில், உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும், மேலும் மனித இதயங்களைத் தொடும் மற்றும் குடும்ப பிணைப்புகள் பற்றிய உரையாடல்களைத் தூண்டும் என்று நம்புகிறேன்.”


தனது நுட்பமான நடிப்பிற்காக பெரும் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் சூரி பகிர்ந்துகொண்டதாவது…,

"உண்மையான வெற்றி என்பது, உறவுகள் மற்றும் உணர்ச்சிகளை நேர்மையாகப் பாராட்டுவதில் உள்ளது, மேலும் 'மாமன்' திரைப்படம் அந்த அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்தப் படம் உண்மையில் நடந்த சம்பவங்களின்  உணர்ச்சிப்பூர்வமான பயணம், மேலும் இது எத்தனை பேரின் மனங்களைத் தொட்டுள்ளது என்பதைப் பார்க்க  மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த உணர்வுகளை ஒரு துடிப்பான படமாகத் திறமையாக உருவாக்கிய இயக்குநர் பிரசாந்திற்கு எனது மனமார்ந்த நன்றி. 'மாமன்' ZEE5 இல் ஸ்ட்ரீமாவதில்  நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், இதனால் அதிகமான குடும்பங்கள் இந்தக் கதையைப் பார்த்து அனுபவிக்கவும், தங்கள் சொந்த பிணைப்புகளைப் போற்றவும் முடியும்."


அற்புதமான நடிப்பு, மனதைத் தொடும் தருணங்கள் என “மாமன்” திரைப்படம், குடும்ப உறவுகளின்  நெகிழ்ச்சியான, உணர்வுப்பூர்வமான  படமாக இருக்கும். 


இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை ZEE5 இல் வரும் ஆகஸ்ட் 8 ஆம் பிரத்தியேகமாக அனுபவிக்கத் தயாராகுங்கள்

Monday, 28 July 2025

ஹரி ஹர வீர மல்லு கொண்டாட்டத்தில் களை கட்டிய சென்னை

 *ஹரி ஹர வீர மல்லு கொண்டாட்டத்தில் களை கட்டிய சென்னை*






சென்னை நகரின் புகழ்பெற்ற காசினோ திரையரங்கில் ஹரி ஹர வீர மல்லு திரைப்படத்திற்கான சிறப்புவிழா மிக விமர்சனமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு உண்மையாகவே ஒரு திருவிழாவைப் போன்று இருந்தது. ரசிகர்கள் பெருமளவில் திரண்டுவந்து படத்தின் வெற்றியை உற்சாகத்துடன் கொண்டாடினர். படம் வெளியான முதல்நாளிலிருந்தே அதற்கு கிடைத்த வரவேற்பு கணிசமானது. நான்காவது நாளிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஹவுஸ் புல் காட்சிகளுடன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது.


தமிழகத்தில் ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு குறிப்பிடத்தக்கது. நடிகர் பவன் கல்யாண் மீது உள்ள தீவிர பாசம், அவரது சொந்த மாநிலங்களில் காணப்படும் அளவுக்கு தமிழகத்திலும் வெளிப்படுகிறது. குறிப்பாக சென்னை நகரம், அவருக்கென ஒரு கோட்டையாகவே அமைந்துவிட்டது என்பதை இந்த வெளியீடு மீண்டும் நிரூபித்தது.


திரையரங்கின் வெளியில் ரசிகர்கள் கொண்டாட்டங்களை மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடினர். வானில் பட்டாசுகள் வெடித்தன, பெரும் கேக்குகள் வெட்டப்பட்டன, பேனர்கள் ஏற்றப்பட்டன, பவன் கல்யாணுக்கான முழக்கங்கள் இடைவிடாது எழுந்தன. இது ஒரு சாதாரண திரைப்பட விழாவை விட, உண்மையான கலாச்சார திருவிழாவாகவே மாறியது. அவரது தமிழ் ரசிகர்கள் காட்டிய அன்பும் உணர்ச்சியும் இதன் ஊடாக வெளிப்பட்டன.


திரையரங்கின் உள்பகுதியிலும் அதே அளவிலான உற்சாகம் நிலவியது. அதிரடியான காட்சிகளில் ரசிகர்கள் கைதட்டினர், ஆரவாரம் செய்தனர், மகிழ்ச்சியில் ஒலித்தனர். அவர்கள் திரையறை அனுபவத்தில் முழுமையாக மூழ்கியிருந்தனர். படம் அவர்களை கவர்ந்ததுடன், கதையின் உணர்வுப்பூர்வ பிணைப்பும் அவர்களை நெகிழ வைத்தது.


திரையரங்கில் இருந்து வெளியே வந்த பின்னரும் ரசிகர்களின் உற்சாகம் குறையவில்லை. பலர் சமூக ஊடகங்களில் தங்கள் விமர்சனங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்தனர். படம் அனைத்துத் தரப்பினரிடமும் பெரும் பாராட்டுக்களையும் அன்பையும் பெற்றது. ரசிகர்கள் அனைவரும் ஒரே கருத்தைச் தெரிவித்தனர் ; ஹரி ஹர வீர மல்லு தொடர்ச்சியை விரைவில் காணவேண்டும் என்ற ஆவல் மிகுந்துள்ளது.


இந்த திரைப்படம் ரசிகர்களை மகிழ்வூட்டியதோடு, தொடரும் உற்சாகத்திற்கும் தெளிவான துவக்கமாக அமைந்துள்ளது.

கிங்டம்' ட்ரைலர் வெளியீடு - எதிர்பார்ப்பின் உச்சத்தை எட்டியுள்ளது !

 'கிங்டம்' ட்ரைலர் வெளியீடு - எதிர்பார்ப்பின் உச்சத்தை எட்டியுள்ளது !





விஜய் தேவராகொண்டா நடித்துள்ள "கிங்டம்" படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை கவுதம் தின்னனூரி இயக்க, நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கின்றனர். படம் வரும் ஜூலை 31, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது.


ட்ரைலர் ஒரு கதையை மிக வலிமையாகவும் தாக்கத்தோடும் கொண்டு வருகிறது. சாதாரண ஆக்‌ஷன் மட்டும் அல்லாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான நெருக்கத்தை உணர்த்தும் பல உணர்வுபூர்வமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.  விஜயின் 'சூரி' மற்றும் சத்யதேவின் 'சிவா' இடையேயான காட்சிகள் மிகுந்த கேமிஸ்ட்ரியுடன் உள்ளடக்கப்பட்டு, படம் ஒரு ஆழமான உணர்வை வழங்கப் போவதைக் காட்டுகின்றன. கதையின் உணர்வும், விழிப்பும் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது.


விஜய் தேவராகொண்டாவின் நடிப்பு, அவர் வழங்கிய மிகச் சிறந்த நிகழ்வாகவே கருதப்படுகிறது. அவரது  ரௌத்திரம் , உணர்ச்சிப்பூர்வமான அன்பு மற்றும் திரைமேடையில் அவரது நம்பிக்கையான உலாவல் அனைத்தும் இந்த ட்ரைலரில் நமக்கு அறிமுகமாகின்றன. இது திரையில் அவர் தரவுள்ள பெரிய விருந்து என்னும் அடையாளமாக அமைகிறது.


கவுதம் அவர்களின் தனித்துவத்தையும் , கதை சொல்லும் மென்மையையும் மிகச் சிறந்த உணர்வுகளுடன் இணைத்து வழங்கியுள்ளார். எடிட்டர் நவீன் நூலி அவர்களின் கூர்மையான எடிட்டிங் வேலை ட்ரைலரை மேலும் வலுப்படுத்தி, பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.


இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே "அண்ணா அந்தனே", "இதயம் உள்ளே வா" போன்ற ஹிட் பாடல்களை வழங்கிய அனிருத், இந்தப் படத்திலும் தனது பாக்ஸ்கிரவுண்ட் ஸ்கோரை வைத்து ஒவ்வொரு காட்சியையும் பறக்க வைக்கிறார். கதையின் உணர்வுகளுக்கும், ஓட்டங்களுக்கும் இசை வழிகாட்டியாக அமைந்துள்ளது.


ஒளிப்பதிவு - ஜோமன் T. ஜான் மற்றும் கிரிஷ் கங்காதரன்

படத்தொகுப்பு - நவீன் நூலி


சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் என்ற மூன்று நிறுவனங்களின் சார்பில், நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரித்துள்ளனர்.


ஜூலை 31 – வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ஒரு மாஸ் பிளாக்பஸ்டர் பிறக்கப்போவது உறுதி!

Kingdom Trailer Out Now: raised the expectations to the max

Kingdom Trailer Out Now: raised the expectations to the max





The official trailer of Kingdom starring Vijay Deverakonda has landed and looks like a blockbuster ride. Directed by Gowtam Tinnanuri and Produced by Naga Vamsi and Sai Soujanya. Film gears up for its release on July 31, 2025


The trailer tells the story in a very strong and striking way. It is not just full of action but also has many emotional moments that show the bond between the characters. The scenes between Vijay’s Suri and Satyadev’s Siva stand out with great chemistry giving the film a deep and meaningful feel. You can clearly sense the emotions and high stakes in the story.


Vijay’s performance is already being hailed as his most riveting in recent years packed with raw aggression, emotional range and sheer screen presence. This trailer sets the tone for the big treat he delivers on the silver screen 


Gowtam brings his own style to Kingdom, mixing strong drama with smooth storytelling and emotional moments. Editor Navin Nooli adds sharp, perfect cuts that make the trailer even more powerful and engaging.


Composer Anirudh Ravichander has returned with a background score that elevates every scene . Having already delivered hits like Anna Antene and Hridayam Lopala his music sets a tone for Kingdom’s emotional and narrative arcs 


Cinematography by Jomon T. John & Girish Gangadharan and editing by the Navin Nooli . 


Produced by Naga Vamsi and Sai Soujanya under Sithara Entertainments, Fortune Four Cinemas and Srikara Studios.


Looks Like All stars are aligning for a massive blockbuster on July 31.

Sunday, 27 July 2025

*A Musical Vibe That Hits You Like A Storm, Super Hero Teja Sajja, Karthik Ghattamaneni

 *A Musical Vibe That Hits You Like A Storm, Super Hero Teja Sajja, Karthik Ghattamaneni, TG Vishwa Prasad, Krithi Prasad, People Media Factory’s Pan India Film Mirai First Single Vibe Undi Is Out Now*


Super Hero Teja Sajja, who gained nationwide craze with the sensational success of HanuMan is set to enthrall this time as Super Yodha in the much-awaited flick Mirai, directed by Karthik Gattamaneni, and mounted on a majestic scale by TG Vishwa Prasad and Krithi Prasad on the leading production house People Media Factory. The glimpses and teaser of the film received an overwhelming response. The promo for the first single, Vibe Undi, created a buzz and sparked excitement. Now, the team has released the full lyrical video of the song.


Vibe Undi is a musical vibe that hits you like a storm, radiating vibrant energy through its spirited composition. The track is rich in instrumentation, with the lively interplay of accordions, saxophones, and powerful drums creating a celebratory, high-octane atmosphere. Krishna Kanth’s lyrics blend Telugu and English seamlessly, portraying the charm of the girl while capturing the protagonist’s effervescent romantic emotions


Teja Sajja oozes electrifying energy in every frame, lighting up the screen with his infectious charm and effortless dance moves. His precision, fluidity, and natural rhythm make every step look spontaneous yet striking.


Armaan Malik infuses the song with his signature flair, his vocals are both soothing and dynamic, perfectly matching the song’s upbeat tone and emotional core.


Visually, the song unfolds in a sleek, stylized urban setting enhanced by glowing architectural elements and a modern palette. The on-screen chemistry between Teja Sajja and Ritika Nayak brings the visuals to life. Their graceful dance moves and effortless charm make them a compelling on-screen duo, just as the lyrics suggest, they truly look like a hit pair. While Teja looks ultra-stylish, Ritika appears glamorous.


Blending contemporary aesthetics with subtle traditional undertones, Vibe Undi delivers a fun and engaging experience. This is going to top all the music charts in no time.


Manoj Manchu plays a powerful villain in Mirai, while Shriya Saran, Jayaram, and Jagapathi Babu also play important roles.


Director Karthik Gattamaneni not only directs Mirai but also brings his expertise behind the lens as the cinematographer. The film’s screenplay is crafted by Karthik himself, with Manibabu Karanam contributing both to the writing and the dialogues.


The world of Mirai is made visually rich and detailed by art director Sri Nagendra Tangala. Sujith Kumar Kolli is the Executive Producer.


Mirai will release in cinemas around the world on September 5th in eight languages, and it will be available in both 2D and 3D formats.


*Cast*: Super Hero Teja Sajja, Manoj Manchu, Ritika Nayak, Shriya Saran, Jayaram, Jagapathi Babu


*Technical Crew:*


Director: Karthik Gattamneni

Producers: TG Vishwa Prasad, Krithi Prasad

Banner: People Media Factory

Executive Producer: Sujith Kumar Kolli

Music: Gowra Hari

Art Director: Sri Nagendra Tangala

Writer: Manibabu Karanam

Pro: Yuvraaj

Marketing: Haashtag Media


https://www.youtube.com/watch?v=ncd3neZHomc

சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' படத்தின் முதல் பாடல் 'வைப்

 *'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' படத்தின் முதல் பாடல் 'வைப் இருக்கு பேபி..' Symptoms*

சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' படத்தின் முதல் பாடல் 'வைப்



'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா - கார்த்திக் கட்டமனேனி - டி. ஜி. விஸ்வ பிரசாத் - கிருத்தி பிரசாத் - பீப்பிள் மீடியா ஃபேக்டரி - கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'மிராய் ' படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' எனும் பாடலின் முழு லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.  


'ஹனுமான்' படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் நாடு முழுவதும் பிரபலமான 'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா-  'சூப்பர் யோதா'வாக நடிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' பாடலுக்கான ப்ரோமோ வெளியாகி பரபரப்பையும், உற்சாகத்தையும் உண்டாக்கியது. தற்போது இந்த பாடலின் முழு லிரிக்கல் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


' வைப் இருக்கு பேபி' என்ற பாடல் புயல் போல் ரசிகர்களை தாக்கி வருகிறது. இப்பாடலின் இசை.. உற்சாகத்தையும், துடிப்பான ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. இந்தப் பாடலில் சாக்ஸபோன், டிரம்ஸ் போன்ற இசை கருவிகளின் இனிய ஓசைகளால் நிறைந்துள்ளது. இந்தப் பாடல் கொண்டாட்டமான ஒரு சூழலையும் உருவாக்குகிறது. பாடலாசிரியர்  டி. மோகன் குமார் எழுதிய பாடல் வரிகளுக்கு... கதாநாயகனின் துடிப்பான காதல் உணர்வுகளை  வெளிப்படுத்தி இருப்பதுடன், பெண்ணின் வசீகர அழகையும் காட்சிப்படுத்தியிருக்கிறது.


தேஜா சஜ்ஜா ஒவ்வொரு காட்சியிலும் மின்சாரத்தைப் போல் பிரகாசமான ஆற்றலை வெளிப்படுத்துகிறார். அவரது வசீகரமான தோற்றம் மற்றும் எளிய துள்ளலான நடன அசைவுகளால் திரையை அதிர செய்கிறார். அவரது துல்லியம்- தாராளம்- தாளலயம் - என ஒவ்வொரு ரிதமும் இயல்பாக பிரதிபலிக்கிறது.  


பின்னணி பாடகர் சாய் சரண் பாஸ்கரூணி இந்தப் பாடலை தன்னுடைய இனிய குரலால் மெருகேற்றுகிறார். அவருடைய காந்த குரலில் இந்தப் பாடல் மேலும் துள்ளலாகவும், உற்சாகமான தொனி மற்றும் உணர்வின் மையத்துடனும் பொருந்துகின்றன.


இப்பாடலுக்கான திரை மொழி-  ஒளிரும் கட்டிடக்கலை கூறுகள் மற்றும் நவீன பாணியால் மேம்படுத்தப்பட்ட ஒரு நேர்த்தியான-  பகட்டான நகரத்தின் பின்னணியில் அமைந்திருக்கிறது. தேஜா சஜ்ஜா மற்றும் ரித்திகா நாயக்கின் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி காட்சிகளை உயிர்ப்புள்ளதாக்குகிறது. இந்த இருவரின் அழகான நடன அசைவு மற்றும் வசீகரம்.. அவர்களை ஆளுமை மிக்க கவர்ச்சிகரமான திரை ஜோடியாக மாற்றுகின்றன. பாடல் வரிகளில் இடம்பெறுவதை போல் அவர்கள் உண்மையிலேயே வெற்றிகரமான ஜோடியாக தோன்றுகிறார்கள். தேஜா சஜ்ஜா மிகவும் ஸ்டைலிஷ்ஷாக தோன்றினாலும்.. ரித்திகாவும் கவர்ச்சியாக மிளிர்கிறார்.


சமகால அழகியலை நுட்பமாகவும்,  பாரம்பரியமும் கலந்த 'வைப் இருக்கு பேபி..' பாடல்- கலக்கலான மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவத்தை அளிக்கிறது. இந்தப் பாடல் விரைவில் அனைத்து இசை சார்ந்த தளங்களிலும் முதலிடத்தை பிடிக்கும்.


'மிராய்' படத்தில் மனோஜ் மஞ்சு ஒரு சக்தி வாய்ந்த வில்லனாக நடிக்கிறார். இவருடன் ஷ்ரியா சரண், ஜெயராம் , ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி 'மிராய்' படத்தை இயக்குவதுடன் ஒளிப்பதிவாளராகவும் தன் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துகிறார். படத்தின் திரைக்கதையை கார்த்திக் கட்டமனேனி வடிவமைத்துள்ளார். மணி பாபு கரணம் எழுத்து மற்றும் வசனங்களில் பங்களிப்பு செய்திருக்கிறார்.


கலை இயக்குநர் ஸ்ரீ நாகேந்திர தங்கலா-  'மிராய் 'படத்திற்கான கற்பனை உலகத்தை காட்சி ரீதியாக‌ செழிப்பாகவும், நேர்த்தியாகவும், விரிவாகவும் உருவாக்கி இருக்கிறார். இப்படத்திற்கு சுஜித் குமார் கொல்லி நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.‌


செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் எட்டு மொழிகளில் 'மிராய்' வெளியாகிறது. மேலும் இந்தத் திரைப்படம் 2D மற்றும் 3 D தொழில்நுட்பங்களில் வெளியாகிறது.


*நடிகர்கள்* :


'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா , மனோஜ் மஞ்சு , ரித்திகா நாயக், ஷ்ரியா சரண், ஜெயராம், ஜெகபதி பாபு.


*தொழில்நுட்பக் குழு* :


இயக்குநர் : கார்த்திக் கட்டமனேனி

தயாரிப்பாளர்கள் : டி.ஜி. விஸ்வ பிரசாத் - கிருத்தி பிரசாத்

தயாரிப்பு நிறுவனம் : பீப்பிள் மீடியா ஃபேக்டரி

நிர்வாகத் தயாரிப்பாளர் : சுஜித் குமார் கொல்லி

இசை : கௌரா ஹரி

கலை இயக்குநர் : ஸ்ரீ நாகேந்திர தங்கலா

எழுத்து : மணி பாபு கரணம்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஹேஷ்டாக் மீடியா


https://www.youtube.com/watch?v=ncd3neZHomc

Saturday, 26 July 2025

Noise and Grains in association with Sashtha Production to present double delight

Noise and Grains in association with Sashtha Production to present double delight to Coimbatore - Grand concerts featuring Vidyasagar and Vijay Antony*






*Lively musical events to be held at CODISSIA Ground on September 20 and 21*


Noise and Grains, India’s leading Media Production, Event Management and Talent Management company, has earned a significant reputation in the Indian entertainment industry by successfully conceptualizing, producing, and executing grand events featuring cinematic legends.


The company has established itself as a key player in the media landscape through several successful shows featuring stalwarts of Indian music, Ilaiyaraaja, AR Rahman, Yuvan Shankar Raja, Harris Jayaraj, Vidyasagar, Vijay Antony, Arijit Singh, Sonu Nigam & Much More


In yet another addition to its list of success stories, Noise and Grains has teamed up with Sashtha Production to present south India's top music composers Vidyasagar and Vijay Antony for two grand live shows on subsequent days at CODISSIA Ground in Coimbatore. 


The Name Is Vidyasagar concert will be held on September 20 and Vijay Antony Live In Concert on September 21, both in front of energetic audience. Tickets for the events are available on District by Zomato platform and mobile app.


Noise and Grains, known for understanding the pulse of audience and curating exceptional live experiences, is excited to produce this event in association with Sashtha Production. The concerts will feature Vidyasagar and Vijay Antony delivering evergreen songs in the company of leading singers, musicians performing their numbers.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ், சாஸ்தா புரொடக்ஷன் வழங்கும் இரட்டை


*நாய்ஸ் அண்டு கிரைன்ஸ், சாஸ்தா புரொடக்ஷன் வழங்கும் இரட்டை இன்னிசை மழை: கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி*






*கொடிசியா மைதானத்தில் செப்டம்பர் 20 வித்யாசாகர், செப்டம்பர் 21 விஜய் ஆண்டனி ரசிகர்கள் முன்னிலையில் இசை விருந்து படைக்கவுள்ளனர்*


இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு, நிகழ்வு மேலாண்மை மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.


இந்திய இசையின் திலகங்கள், இளையராஜா, ARரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், விஜய் அந்தோணி, அரிஜித் சிங், சோனு நிகம் மற்றும் பல ஜாம்பவான்களுடன் நடத்தப்பட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து, புதுமையான பிரம்மாண்ட முயற்சி ஒன்றில் சாஸ்தா புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் இறங்கியுள்ளது.


தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களான வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி கலந்து கொள்ளும் இரண்டு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளை கோவையில் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் மற்றும் சாஸ்தா புரொடக்ஷன் ஏற்பாடு செய்யவுள்ளன.


தி நேம் இஸ் வித்யாசாகர் நிகழ்ச்சி செப்டம்பர் 20 அன்றும் விஜய் ஆண்டனி லைவ் இன் கான்செர்ட் செப்டம்பர் 21 அன்றும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் முன்னிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளன. இவற்றுக்கான நுழைவுச் சீட்டுகள் டிஸ்டிரிக்ட் பை சொமாட்டோ இணையதளம் மற்றும் செயலியில் கிடைக்கும்.


இசை ரசிகர்களின் இதயத்துடிப்பை புரிந்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை சிறப்பாக திட்டமிட்டு அரங்கேற்றி வரும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தினர், முன்னணி இசையமைப்பாளர்கள் வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி கோவையில் பங்கு பெறும் இசை நிகழ்ச்சியை சாஸ்தா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து நடத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் இதயம் கவர்ந்த‌ பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி உடன் பங்கேற்று மறக்க முடியாத பாடல்களை ரசிகர்களுக்காக மேடையில் வழங்குவார்கள்.


***



Thursday, 24 July 2025

Hari Hara Veera Mallu Movie Review

Hari Hara Veera Mallu Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம most expecting telugu படம் Hari Hara Veera Mallu: Part 1 - Sword vs Spirit  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  Krish Jagarlamudi and A. M. Jyothi Krishna. இந்த படத்துல  Pawan Kalyan , Bobby Deol, Nidhhi Agerwal, Nargis Fakhri, Nora Fatehi அப்புறம் Sathyaraj னு பலர் நடிச்சிருக்காங்க. இது ஒரு period action adventure கதை. 17 ஆம் நூற்றாண்டு ல இந்த கதை நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. முகலாயர்கள் கிட்ட இருந்து kohinoor diamond அ எடுத்துட்டு வரதுக்காக தான் veera mallu போவாரு. இவரோட இந்த journey தான் இந்த படத்தோட கதையை இருக்கு. ஆரம்பத்துல இந்த படத்தோட release தள்ளி போயிட்டே இருந்தது, ஆனா promotions , press events ல pawan kalyan பேசின விதத்துல இருந்து இந்த படத்தோட expectation இன்னும் அதிகமா ஆயிருச்சு னே சொல்லலாம்.



 இந்த படம் இன்னிக்கு release ஆகி theatre ல வெற்றிகரமா ஓடிட்டு இருக்கு.  சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்பபோம். 


இந்த கதை 1650 ல நடந்த மாதிரி காமிச்சிருக்காங்க. hari hara vera mallu வா நடிச்சிருக்காரு pawan kalyan. இவரு கிட்ட தட்ட அந்த ஊர்ல இருக்கற robin hood னே சொல்லலாம். இதுனால இவரு ரொம்ப famous ஆயிடுறாரு, அது மட்டும் கிடையாது kollur ஓட ராஜா  வரைக்கும் இவரை பத்தி தெரியும். ராஜாவை ஏமாத்தி பஞ்சமி அ நடிச்சிருக்க niddhi  agarwal ஓட தப்பிச்சு வந்துடுறாரு. veera mallu ஓட புத்திசாலிதனத்த பாத்து Qutub Shah ஆவா நடிச்சிருக்க Dalip Tahil ஒரு முக்கியமான வேலைய ஒப்படைக்குறாரு. அப்படி என்ன முக்கியமான வேலை னு பாத்தீங்கன்னா kohinoor  diamond அ கொண்டு வர்ரது தான். இந்த வேலைய செய்றத ஒத்துக்கிட்ட veera  mallu  வும் delhi  அ நோக்கி பயணம் பண்ணுறாரு. இந்த kohinoor  diamond முகலாயர்களோட அரசர் ஆனா aurangazeb  கிட்ட தான் இருக்கும். இந்த aurangazeb  அ நடிச்சிருக்கறது bobby deol தான். veera  mallu இங்க வரதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இந்த panchami யாரு? veera எந்த நோக்கத்துக்காக delhi க்கு வராரு? இவருக்கும் aurangazeb க்கும் என்ன சம்பந்தம்? qutab shah எதுக்காக veera மேல நம்பிக்கை வச்சு இந்த வேலைய குடுத்தாரு ன்ற பல கேள்விகளுக்கு இந்த படம் தான் பதில் அ தான் இருக்கு. 


இந்த படத்துக்கு பக்க பலமா இருக்கிறது pawankalyan ஓட acting தான். இவரோட performance ஒரு impact குடுக்கற விதமா இருந்தது. அது மட்டுமில்ல இவரோட action sequences எல்லாமே electrifying அ இருந்தது. இவரோட dialogue delivery, தர்மத்துக்காக சண்டை போடுறது, emotional scenes னு எல்லாமே பக்கவா நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். இந்த படத்தோட மிக பெரிய plus point ண அது கண்டிப்பா action sequences தான். அவ்ளோ super அ action stunts அ chereograph பண்ணிருக்காங்க, stunt masters ஆனா Nick Powell, Ram-Laxman, and Peter Hein . படத்தோட first half ல பாத்தீங்கன்னா மொத்தம் மூணு fight sequences இருக்கும். அதெல்லாம் அதிரடியா இருக்கும்னே சொல்லலாம். ஒன்னு மச்சிலிபட்டணத்துல நடக்கும், ரெண்டு charminar fight கடைசியா கொல்லூர் ல நடக்கற குஸ்தி சண்டை. அப்புறம் second half ல முகலாயர்கள் ஆட்சி செய்யற ஒரு ஊர்ல வச்சு ஒரு action block scene வரும் அது இன்னும் அட்டகாசமா இருக்கும். இந்த fight scenes எல்லாமே audience  அ seat ஓட edge ல உட்கார வைக்கிற  மாதிரி தான் இருக்கும்.  


bobby  deol  யும் pawankalyan  யும் face  to face பாத்துக்குற scenes  கம்மியா தான் இருக்கும் . second half க்கு lead குடுத்து படத்தை முடிச்சிருக்காங்க. supporting  actors அ நடிச்சிருக்க  Sathyaraj, Raghu Babu, Sunil, Kabir Duhan Singh, னு எல்லாருமே அவங்க role அ புரிஞ்சுகிட்டு நல்ல perform பண்ணிருக்காங்க. இந்த படத்துல use  பண்ணிருக்க cgi , vfx works எல்லாமே super அ தான் இருந்தது. இந்த கதைக்கு ஏத்த மாதிரி நெறய detailing அ குடுத்து படத்தை ரொம்ப interesting அ கொண்டு வந்திருக்காங்க. இந்த படத்துக்கு ரெண்டு cinematographers இருக்காங்க. Gnana Sekhar VS and Manoj Paramahamsa ஓட cinematography  ரொம்ப colourful ஆவும் attractive ஆவும் இருந்தது. இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது MM keeravani. இவரோட songs and bgm எல்லாமே super அ இருந்தது. முக்கியமா action sequences க்கு வர bgm எல்லாமே intense அ இருந்தது. praveen kl ஓட editing யும் நல்ல இருந்தது. 


மொத்தத்துல ஒரு நல்ல visual experience தான் இந்த hari hara veera mallu part one.  

கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய்  பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.