Featured post

ஜமா’ புகழ் பாரி இளவழகன் - ரம்யா ரங்கநாதன் ஜோடி சேர்ந்த புதிய படம்

 *ஜமா’ புகழ் பாரி இளவழகன் - ரம்யா ரங்கநாதன் ஜோடி சேர்ந்த புதிய படம்!படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது* Million Dollar Studios ...

Friday, 20 February 2026

LSS Tamil Movie Review

LSS Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம LSS படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Aadhav Krishna ,Simran Advani ,Badava Gopi, Vinodhini, Jawa Sundaresan, Bagavathi Perumal, Ilavarasu, Rohit, Dhananjeyan,  Muthu Buvan. னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது R. Mahalakshmi Murugan . சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



SHIVA வ நடிச்சிருக்க aadhav krishna ஒரு college ல படிக்கறாரு. இவரு ஒரு intelligent ஆனா student. இவரு pooja வா நடிச்சிருக்க simran யா love பண்ணுறாரு. pooja ஒரு பணக்கார வீட்டு பொண்ண இருப்பாங்க. இவங்க ரெண்டு பேரும் ரொம்ப sincere அ love பண்ணுவாங்க. பூஜா அவங்க அம்மாவை பாக்குறதுக்காக இவங்களும் இவரோட boyfrined shiva வும் ஒண்ணா சேந்து kashi க்கு போவாங்க. ஆனா இங்க தான் ஒரு பெரிய twist நடக்குது. kashi க்கு இவங்க ரெண்டு பேரும் போகும் போது பூஜா ஒரு accident ல சிக்கிடுறாங்க. accident ரொம்ப serious அ இருந்ததனால இவங்க coma stage க்கு போய்டுவாங்க. இப்போ இந்த விஷயம் இந்த ரெண்டு பேரோட family  க்கும் தெரிய வருது. இதுல main suspect shiva தான் நினைச்சு police யும் இவரை arrest பண்ணிடுறாங்க. pooja ஓட family யும் என்ன நடந்துச்சு ன்றதா விசாரிக்க ஆரம்பிக்குது. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


ஒரு collegestudents க்கு நடுவுல இருக்கற love , trust , அவங்க love ல face பண்ணுற பிரச்சனைகள் னு ரொம்ப ஆழமா இந்த characters அ design பண்ணிருக்காங்க. heroine எதுக்காக அவங்க அம்மாவை தேடி போறாங்க ன்ற விஷயத்தையும் நல்ல convey  பண்ணிருந்தாங்க. love ன்ற concept ஆயும் தாண்டி suspense யும் thriller யும் balance பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும். action scenes யும் decent அ இருந்தது. படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது aadhav krishna middle class family அ சேந்தவரா ரொம்ப புத்திசாலியான பையன நடிச்சிருக்காரு. இவரோட நடிப்பும் ரொம்ப எதார்த்தமா இருந்தது. simran ஒரு north indian பொண்ண ரொம்ப cute அ நடிச்சிருந்தாங்க. இவங்க வந்த எல்லா scenes யும் refreshing அ இருந்தது. முக்கியமா இவங்க ரெண்டு பேரோட chemistry யும் நல்ல இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ரொம்ப நல்ல perform பண்ணிருக்காங்க. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது jb films தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. ashwamitra ஓட bgm அ இருக்கட்டும் songs அ இருக்கட்டும் ரெண்டுமே இந்த கதைக்கு நல்ல அழகா set யிருந்தது. sathishkumar ஓட cinematography யும் bright ஆவும் colourful ஆவும் இருந்தது. எப்பவும் போல srikanth N b ஓட editing audience ஓட கவனம் சிதறாத மாதிரி crisp அ கதையை edit பண்ணிருக்காங்க. art direction யும் நல்ல இருந்தது. 


மொத்தத்துல இந்த love subscribe share  ஒரு நல்ல கதைக்களம் தான். சோ மறக்காம இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Intense & Gritty: ‘Toxic’ Teaser Unleashes a Vibrant Cinematic Universe with Rocking Star Yash’s Unrecognizable Transformation

 Intense & Gritty: ‘Toxic’ Teaser Unleashes a Vibrant Cinematic Universe with Rocking Star Yash’s Unrecognizable Transformation*



As the most awaited Indian film of 2026, Toxic: A Fairytale for Grown-Ups has kept its finger off the trigger for months, building immense anticipation through high-impact imagery. Following the seismic "Introducing Raya" birthday glimpse featuring Rocking Star Yash, and the stylish character posters of Nayanthara’s "Ganga," Kiara Advani’s "Nadia," Huma Qureshi’s "Elizabeth," Rukmini Vasanth’s "Mellisa," and Tara Sutaria’s "Rebecca," the official teaser has finally been fired—and the shot hits the bullseye.


The Toxic teaser reveals a massive, cinematic world that is both vibrant and brutal. Moving from a circus setting to an East Asian-inspired backdrop, the story spans different time periods with a dark, edgy atmosphere. Yet, beneath the brutal exterior and high-octane visuals, the teaser offers a glimpse into something deeper: a meticulous focus on storytelling and powerhouse performance that serves as the beating heart of this gritty universe.


At the center of this cinematic storm stands Rocking Star Yash, undergoing a transformation that is nothing short of a total reinvention. His physical evolution serves as one of the film’s most powerful statements, showcasing a range of appearances—from a lean, agile silhouette to a massive, battle-hardened physique—all forged through relentless discipline.


However, this evolution goes far deeper than mere aesthetics. Yash infuses each distinct look with precise body language and sharp mannerisms, signaling an intense, layered performance that marks a total departure from his previous roles. These transformations are unlike anything witnessed in the film’s journey so far, signaling a bold new chapter for the superstar.


The makers punctuated the teaser's release with a simple, high-stakes warning: "It’s gonna to get crazyyyy." Judging by the sheer scale and grit on display, March 19, 2026, is a promise that the world of Toxic will more than live up to.


The teaser is available in Kannada, Hindi, Telugu, Tamil and Malayalam.


Written by Yash and Geetu Mohandas, and directed by Geetu Mohandas, Toxic: A Fairytale for Grown-Ups has been shot simultaneously in Kannada and English, with dubbed versions releasing across Hindi, Telugu, Tamil, Malayalam, and more, positioning the film on a global stage. Produced by Venkat K. Narayana and Yash under KVN Productions and Monster Mind Creations, Toxic is set to hit the theatres on March 19, 2026



Link: https://youtu.be/IOADonyCAcc

அதிரடி ஆக்ஷன் நிறைந்த : ‘டாக்ஸிக்’ டீசர் – ராக்கிங் ஸ்டார் யாஷின் அதிரடி மாற்றத்துடன் பிரம்மாண்ட சினிமா உலகம்

 *அதிரடி ஆக்ஷன் நிறைந்த : ‘டாக்ஸிக்’ டீசர் – ராக்கிங் ஸ்டார் யாஷின்  அதிரடி மாற்றத்துடன் பிரம்மாண்ட சினிமா உலகம்*


https://youtu.be/IOADonyCAcc

2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'.  கடந்த சில மாதங்களாக வெளியான ஒவ்வொரு அப்டேட்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.


ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்தநாளில் வெளியான அதிரடி “ராயா அறிமுகம்” வீடியோவும், நயன்தாராவின் கங்கா, கியாரா அத்வானியின் நாடியா, ஹூமா குரேஷியின் எலிசபெத், ருக்மிணி வசந்தின் மெலிசா, தாரா சுதாரியாவின் ரெபெக்கா என வெளியாகிய ஸ்டைலான கேரக்டர் போஸ்டர்களும் ரசிகர்களை பரவசப்படுத்தின. இப்போது அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி, அந்த எதிர்பார்ப்பை துல்லியமாக பூர்த்தி செய்திருக்கிறது.


டாக்ஸிக் டீசர், வண்ணமயமான அதே நேரத்தில் ரத்தம் தெறிக்கும் ஒரு மிகப் பெரிய சினிமா உலகத்தை வெளிப்படுத்துகிறது. சர்க்கஸ் பின்னணியிலிருந்து கிழக்கு ஆசிய பின்னணிக்கு நகரும் இந்தக் கதை, இருண்ட, பரபரப்பான சூழலுடன் வெவ்வேறு காலகட்டங்களை உள்ளடக்கியது. அதிரடி காட்சிகளுக்கு அப்பால், கதையமைப்பு மற்றும் நடிகர்களின் ஆழமான நடிப்பே இந்த உலகத்தின் இதயத் துடிப்பாக இருப்பதையும் டீசர் சுட்டிக்காட்டுகிறது.


இந்த புயலின் மையத்தில் பிரமாண்டமாக நிற்கிறார் ராக்கிங் ஸ்டார் யாஷ். அவரது இந்த மாற்றம் முழுமையான புதிய  அவதாரம் என்றே சொல்லலாம். ஒல்லியான, பரவசமான தோற்றத்திலிருந்து, போர்க்களத்தில் உருவான வலிமையான உடலமைப்பு வரை, அவரின் ஒவ்வொரு லுக்கும் அவரது கடுமையான பயிற்சியையும், கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.


ஆனால் இது வெறும் உடல் மாற்றம் மட்டுமல்ல. ஒவ்வொரு தோற்றத்திலும் யாஷ் காட்டும் உடல் மொழியும் நுணுக்கமான நடிப்புத் திறனும், அவரது முந்தைய பாத்திரங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தை முன்வைக்கின்றன. இதுவரை டாக்ஸிக் பயணத்தில் காணாத ஒரு தைரியமான புதிய அத்தியாயத்தை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது.


டீசர் குறித்து  தயாரிப்பாளர்களின் விளக்கம் ஒரு வரியில் முடிகிறது :“It’s gonna get crazyyyy.”


திரையில் காணப்படும் வேகத்தையும், அதிரடியையும் பார்த்தால், மார்ச் 19, 2026 அன்று டாக்ஸிக் உலகம் அந்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றும் என்பது உறுதியாகத் தெரிகிறது.


இந்த டீசர் தமிழ், கன்னடம்,இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.


யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, உலகளாவிய வெளியீட்டுக்கு தயாராகிறது.


கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட 'டாக்ஸிக்' திரைப்படம் - ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.



*Intense & Gritty: ‘Toxic’ Teaser Unleashes a Vibrant Cinematic Universe with Rocking Star Yash’s Unrecognizable Transformation*


As the most awaited Indian film of 2026, Toxic: A Fairytale for Grown-Ups has kept its finger off the trigger for months, building immense anticipation through high-impact imagery. Following the seismic "Introducing Raya" birthday glimpse featuring Rocking Star Yash, and the stylish character posters of Nayanthara’s "Ganga," Kiara Advani’s "Nadia," Huma Qureshi’s "Elizabeth," Rukmini Vasanth’s "Mellisa," and Tara Sutaria’s "Rebecca," the official teaser has finally been fired—and the shot hits the bullseye.


The Toxic teaser reveals a massive, cinematic world that is both vibrant and brutal. Moving from a circus setting to an East Asian-inspired backdrop, the story spans different time periods with a dark, edgy atmosphere. Yet, beneath the brutal exterior and high-octane visuals, the teaser offers a glimpse into something deeper: a meticulous focus on storytelling and powerhouse performance that serves as the beating heart of this gritty universe.


At the center of this cinematic storm stands Rocking Star Yash, undergoing a transformation that is nothing short of a total reinvention. His physical evolution serves as one of the film’s most powerful statements, showcasing a range of appearances—from a lean, agile silhouette to a massive, battle-hardened physique—all forged through relentless discipline.


However, this evolution goes far deeper than mere aesthetics. Yash infuses each distinct look with precise body language and sharp mannerisms, signaling an intense, layered performance that marks a total departure from his previous roles. These transformations are unlike anything witnessed in the film’s journey so far, signaling a bold new chapter for the superstar.


The makers punctuated the teaser's release with a simple, high-stakes warning: "It’s gonna to get crazyyyy." Judging by the sheer scale and grit on display, March 19, 2026, is a promise that the world of Toxic will more than live up to.


The teaser is available in Kannada, Hindi, Telugu, Tamil and Malayalam.


Written by Yash and Geetu Mohandas, and directed by Geetu Mohandas, Toxic: A Fairytale for Grown-Ups has been shot simultaneously in Kannada and English, with dubbed versions releasing across Hindi, Telugu, Tamil, Malayalam, and more, positioning the film on a global stage. Produced by Venkat K. Narayana and Yash under KVN Productions and Monster Mind Creations, Toxic is set to hit the theatres on March 19, 2026



Link: https://youtu.be/IOADonyCAcc

Thursday, 19 February 2026

லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் 4 இடியட்ஸ்

 *லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் 4 இடியட்ஸ்*

அன்பே சிவம், புதுப்பேட்டை கோகுலத்தில் சீதை, உள்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை நினைத்து போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த நிறுவனம் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ். அதன் நிறுவனர்கள் கே முரளிதரன் சுவாமி நாதன் ஆகியோர் மறைவுக்கு பின் அந்த நிறுவனம் படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்தது. தற்பொழுது கே முரளிதரன் அவர்களின் புதல்வர்களான எம் கோகுல் கிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஸ்ரீ வதசன் இருவரும் இணைந்து படத்தயாரிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர் லக்ஷ்மி மூவி மேக்கர்சின் இருபத்து ஏழாவது தயாரிப்பாக 4 இடியட்ஸ் (ஃபோர் இடியட்ஸ்) என்ற திரைப்படத்தை புதுமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசனின் இயக்கத்தில் உருவாக்கியுள்ளனர். சஜோ சுந்தர் முருகேசன் இயக்குநர் ஹரி நடிகர் பிரகாஷ் ராஜ் பொம்மரிலு பாஸ்கர் ஆகியோர் இயக்கிய படங்களில் இணை இயக்குநராக பணி புரிந்திருக்கிறார். இத்திரைப்படத்தில் விஜய் டிவியில் காமெடியில் கலக்கும் புகழ்

கதாநாயகனாகவும், காமெடி வில்லனாக வலம் வரும் ரவி மரியா

வில்லனாகவும், மும்பை குயின் பிரக்யா நயன் கதாநாயகியாகவும் நடிக்க

வின்செண்ட் அசோகன், கும்கி அஷ்வின் திடியன், இந்திரன் பாவா லஷ்மணன் மகாநதி சங்கர் சி எம் பாலா, விஜய் யோன் போன்றோர் குணசித்திர நடிப்பை வழங்கியுள்ளனர் 

பிளாக் காமெடி ஜானரில்

உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு இணைத்தயாரிப்பாளராக திருப்பூரை சார்ந்த வி கே முருகேசன் மற்றும் ஜியோ ஏன் என் செல்வராஜ் ஆகியோர் இணைந்திருக்கின்றனர் வண்ணமயமான ஒளிப்பதிவைவழங்கியிருக்கிறார் யூகே செந்தில் குமார்

இசையின் மூலம்

திரைக்கதைக்கு உயிரோட்டம் செய்திருப்பவர் புதுமுகம் சுபாஷ் முனிரத்தினம் கதையின் சுவை கெடாமல் படத்தொகுப்பை செய்திருக்கிறார். எஸ் என் பாசில் விறுப்பான விறுப்பான கதைக்கு தேவையான விதத்தில் கலை இயக்கம் செய்திருப்பவர் கலை இயக்குநர் முது. பிரபாகரன் அழகான வசனங்களின் மூலம் அழகு சேர்த்திருக்கிறார் டாவின்சி சரவணன் ஒப்பனையில் முத்திரை பதித்திருக்கிறார் பி மாரியப்பன் 

*குடும்பமாக பார்த்து ரசிக்கும் வகையில் யூ ஏ 13 சான்றிதழ்*

வழங்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் டிரைவர் மற்றும் இசை வெளியீடு

இனிதே நடைப்பெற்றது இரண்டு துள்ளலான பாடல்கள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையோடு சினிமா ரசிகர்களை மகிழ்விக்க விரைவில் திரைக்கு வருகிறது 4 இடியட்ஸ்

Toxic: Yash Stands Firm in a Bloody Battlefield in New Poster; Teaser Out Feb 20

 Toxic: Yash Stands Firm in a Bloody Battlefield in New Poster; Teaser Out Feb 20*





The makers of Toxic: A Fairytale for Grown-ups have unveiled a new poster announcing that the film’s teaser will be released on February 20 at 9:35 AM. The stark visual offers an early indication of the film’s dark tone, suggesting a world shaped by violence and moral ambiguity. It features Yash as Raya at the centre of a blood-streaked blizzard, his face obscured as he drinks straight from a bottle, surrounded by the wreckage of unseen violence in an intoxicating universe. 


The teaser announcement comes as Toxic continues to be the most awaited film in India, driven by a phased rollout of character reveals and controlled marketing beats. With limited narrative details disclosed so far, the campaign has encouraged audience speculation around the film’s visual language and character dynamics, positioning February 20 as the first opportunity for an intimate  glimpse into the film’s world. To maintain the impact of the narrative, the teaser will be released in a single language, allowing the film's stark imagery and atmosphere to speak to the audiences.


Part of that anticipation stems from the film’s carefully unveiled ensemble. Kiara Advani appears as Nadia, framed as restrained and emotionally weighted; Huma Qureshi is introduced as Elizabeth, commanding and lethal; Nayanthara emerges as Ganga, a character whose arrival recalibrates the film’s power equations. Tara Sutaria plays Rebecca, presented as desirable yet unreadable, while Rukmini Vasanth steps in as Mellisa, exuding controlled authority. The final character reveal was Yash as Raya, whose declaration - “Daddy’s home…" doubles as both an arrival in the narrative and a statement on his return to theatres. 


Written by Yash and Geetu Mohandas and directed by Geetu Mohandas, Toxic: A Fairytale for Grown-Ups has been simultaneously shot in Kannada and English, with dubbed versions in Hindi, Telugu, Tamil, Malayalam, and several other languages, underscoring the film’s global ambition.


The film boasts a brilliant technical lineup, with National Award-winning cinematographer Rajeev Ravi behind the lens, music composed by Ravi Basrur, editing by Ujwal Kulkarni, and production design by TP Abid. The action is mounted on a massive scale, choreographed by Hollywood action director JJ Perry, alongside National Award-winning action directors Anbariv and Kecha Khamphakdee.


Produced by Venkat K. Narayana and Yash under the banners of KVN Productions and Monster Mind Creations, Toxic is slated for a worldwide theatrical release on 19 March 2026, strategically coinciding with Eid, Ugadi, and Gudi Padwa.

ராயாவின் வருகை உறுதியானது : ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன் அறிவிப்பு

 *ராயாவின் வருகை உறுதியானது : ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு*





*வன்முறையும் மர்மமும் நிறைந்த  உலகம் ‘டாக்ஸிக்’ டீசர் பிப்ரவரி 20 முதல்* 


'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் டீசர் பிப்ரவரி 20, காலை 9.35 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். 


தனித்துவமான போஸ்டர், படத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில்  வன்முறையும் இருண்மையும் நிறைந்த உலகத்தை காட்டுகிறது. ரத்தம் கசிந்த பனிப்புயல் போன்ற சூழலில், நடுவில் ராயாவாக யாஷ் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. முகம் தெளிவாக தெரியாத நிலையில், நேரடியாக பாட்டிலிலிருந்து குடிக்கும் அவர், இரத்தம் தோய்ந்த தரையில்,  கண்களுக்கு எட்டாத வன்முறையின் சிதைவுகளால் சூழப்பட்ட நிலையில், ஆபத்தான ஒரு பிரபஞ்சத்தில் நிற்பதாக அந்த போஸ்டர் காட்டுகிறது.


இந்த டீசர் அறிவிப்பு, “டாக்ஸிக்” திரைப்படம் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக தொடர்ந்து இருப்பதற்கான மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. கதாபாத்திரங்களை ஒவ்வொரு கட்டமாக வெளியிடும் உத்தியும், திட்டமிட்ட மார்க்கெட்டிங் உத்திகளும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இதுவரை கதையைப் பற்றிய விவரங்கள் மிகக் குறைவாகவே வெளியிடப்பட்டுள்ளதால், படத்தின் காட்சியமைப்பு மற்றும் கதாபாத்திரங்களின் உறவுகள் குறித்து ரசிகர்கள் யூகிக்கத் தொடங்கியுள்ளனர். பிப்ரவரி 20, இந்த உலகத்துக்குள் முதல் நெருக்கமான பார்வை கிடைக்கும் நாளாக பார்க்கப்படுகிறது. கதையின் தாக்கத்தை காக்கும் வகையில், டீசர் ஒரே மொழியில் வெளியிடப்படவுள்ளது.  இதனால் படத்தின் அழுத்தமான காட்சிகளும் சூழலும் தான் நேரடியாக ரசிகர்களிடம் பேசும்.


இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பின் ஒரு பகுதி, கவனமாக வெளியிடப்பட்ட நட்சத்திர பட்டாள அறிவிப்பிலிருந்து உருவானது.  கியாரா அத்வானி, உணர்ச்சி சுமை கொண்ட கதாப்பாத்திரத்தில், நாடியாவாக நடித்துள்ளார். ஹூமா குரேஷி, அதிகாரமும் அபாயமும் கலந்த எலிசபெத் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். நயன்தாரா, கங்காவாக அதிகாரமிக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  தாரா சுதாரியா, விரும்பத்தக்க மற்றும் புரிந்து கொள்ள முடியாத ரெபெக்காவாகவும், ருக்மிணி வசந்த் அதிகாரத்தை வெளிப்படுத்தும் மெலிசாவாகவும் நடித்துள்ளனர். இறுதியாக வெளியான கதாபாத்திர அறிமுகம் யாஷ். ராயாவாக, அவர் கூறும் “Daddy’s home…” என்ற வசனம், கதையில் அவரது வருகையையும், திரையரங்குகளுக்கு அவர் திரும்பி வருவதை அறிவிக்கும் ஒரு அறிவிப்பாகவும் அமைந்துள்ளது.


யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுத, கீது மோகன் தாஸ் இயக்கிய 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.


தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி - தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) -  தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்-  கெச்சா காம்பக்‌டி   (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.


கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட 'டாக்ஸிக்' திரைப்படம் - ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் பரிசளித்த 'ஹாட்ஸ்பாட் 2'தயாரிப்பாளர்கள்

 *இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் பரிசளித்த 'ஹாட்ஸ்பாட் 2'தயாரிப்பாளர்கள்*





கே. ஜே. பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் 'ஹாட்ஸ்பாட் 2 ' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. சுவாரசியமான கதாபாத்திரங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மேஜிக்கால் ரசிகர்களின் பேராதரவுடன் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த படத்தின் தயாரிப்பாளர்களான சுரேஷ்குமார் - அனில் ரெட்டி - ராபின் ஆகியோர் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி வெற்றியை கொண்டாடினர்.


'ஹாட் ஸ்பாட் 2 'திரைப்படம் தற்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் பிரைம் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் வெளியாகிறது. 


ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றதைப்போல்.. டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றது. இதனால் 'ஹாட் ஸ்பாட் 2 'திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த  ஆதரவை பெற்று வெற்றி பெற்றதை போல் இப்படம் எதிர்வரும் 20 ஆம் தேதி முதல் டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக் வெளியீடு! இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்

 *SR PRODUCTIONS தயாரிப்பில்,  “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக் வெளியீடு! இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார் !!*





*ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் நடிக்கும் “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார் !!*


மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய  இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் 18” (Under 18) படத்தின் டைட்டில் லுக், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 


மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக   “அண்டர் 18” (Under 18) உருவாகி வருகிறது. புதிய தலைமுறை பார்வையுடன், நிஜத்தன்மை மிக்க கதைக்களத்தை தேர்வு செய்துள்ள தயாரிப்பாளர் ஜெகதீஸ், தரமான உள்ளடக்கமுள்ள படங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை தயாரிக்கிறார்.


குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும், எமோஷனல் டிராமாவாக “அண்டர் 18” (Under 18) படத்தின் கதை சொல்லவுள்ளது.


இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, தமிழகத்தின் அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படத்தை அவர் உருவாக்கி வருகிறார். சமூக யதார்த்தமும், குடும்ப உணர்வுகளும் கலந்து உருவாகும் இந்த படைப்பு, ரசிகர்களை ஆழமாகத் தொடும் வகையில் உருவாகவுள்ளது. 


இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணையவுள்ளனர். 


“Under 18” படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஓசுர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையான இடங்கள், நிஜமான சூழல் மற்றும் இயல்பான காட்சியமைப்பு ஆகியவற்றுடன் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.


தொழில்நுட்ப குழு


தயாரிப்பு : SR PRODUCTIONS 

தயாரிப்பாளர் : ஜெகதீஸ்

இயக்கம் : கார்த்திக் பெருமாள் சாமி

ஒளிப்பதிவு (DOP) : வேல்ராஜ்

இசை : சாம் சி.எஸ்

பாடல்வரிகள் : இளங்கோ கிருஷ்ணன், கார்த்திக் நேத்தா

பப்ளிசிட்டி டிசைன் : V.M. சிவகுமார்

புரடக்சன் எக்ஸிக்யூட்டிவ் : வே.கி. துரைசாமி

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : விஷ்ணு சக்ரவர்த்தி

புரமோசன்ஸ் : யோகேஷ் கிருஷ்ணா

PRO - சதீஷ் (AIM)

ஒரு கிடாயின் கருணை மனு" இயக்குநரின் அடுத்த படைப்பில் யோகி பாபு

 *"ஒரு கிடாயின் கருணை மனு" இயக்குநரின் அடுத்த படைப்பில் யோகி பாபு*





*யோகி பாபுவின் "கெணத்த காணோம்" ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*


தமிழ் சினிமா எப்போதும் நல்ல கருத்துள்ள கதைகளுடன் பிரிக்க முடியாத பிணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது. சினிமா ஆர்வலர்கள் தொடர்ந்து யதார்த்தத்துடன் வேரூன்றிய படங்களைக் கொண்டாடுகிறார்கள். குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற நடிகர் யோகி பாபு, நகைச்சுவையிலிருந்து கதாநாயகன் வேடங்களுக்கு சிரமமின்றி மாறுவதன் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை செதுக்கியுள்ளார். இவை பார்வையாளர்களிடம் ஆழமாக எதிரொலித்தன. இப்போது, அவர் "கெணத்த காணோம்" மூலம் நம்மை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று (பிப்ரவரி 19, 2025) வெளியிடப்பட்டது. ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.


படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா சமீபத்தில் காலமானதால், இந்த வெளியீடு முக்கியத்துவம் கொண்டுள்ளது. இவர் இயக்கிய "ஒரு கிடாயின் கருணை மனு" மற்றும் "சத்ய சோதனை" படைப்புகள் இந்திய சினிமாவில் தலைசிறந்த மைல்கற்களாக உள்ளன.


கெணத்த காணோம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வெளிப்படையான நகைச்சுவைக்கு பதிலாக சூழ்நிலை சார்ந்த, கதாபாத்திரம் சார்ந்த, வேடிக்கை நிறைந்த நாடகத்தை குறிக்கும் ஒரு அடித்தளமான, பழமையான அழகியலை முன்வைக்கிறது. கிராமவாசிகளின் கூட்டத்தின் மத்தியில் யோகி பாபு மையத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது கூப்பிய கைகளின் சைகை மற்றும் தீவிரமான வெளிப்பாடு, குழப்பம் மற்றும் விரக்தியிலிருந்து இயல்பாகவே வெளிப்படும் நகைச்சுவையை பரிந்துரைக்கின்றன. 


மண் சார்ந்த வண்ணங்கள், கரடுமுரடான டைட்டில் டிசைன் ஆகியவை கிராமப்புற அமைப்பை மேலும் வலுப்படுத்துகின்றன, இது நகைச்சுவை மற்றும் நாடகம் அன்றாட குழப்பம், சமூக இயக்கவியல் மற்றும் நுட்பமான அபத்தங்கள் மூலம் பின்னிப் பிணைந்த ஒரு கதையைக் குறிக்கிறது.


யோகி பாபு கதாநாயகனின் பாத்திரத்தை வகிக்கும் அதே வேளையில், மீதமுள்ள நட்சத்திர நடிகர்களில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். ராமர் படத்தொகுப்பை மேற்பார்வையிடுகிறார், பி.எல். சுபேந்தர் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சுதேஷ் சண்டை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். பி. காத்தவராயன் மற்றும் டி.பி. சசி குமார் தயாரிப்பு நிர்வாகிகளாகவும், ஏ.ஆர். அமல்ராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர். இந்தப் படத்தை ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.