*நடிகர் விஜய் விஷ்வா வின் VV ENTERTAIANMENTS உடன் CRETAI MADURAI க்ளீன் மதுரை” உலக சாதனை முயற்சியில் 2000+ மாணவர்கள் பங்கேற்பு – மதுரையில் இது ஒர் வரலாற்றுச் சிறப்பு நிகழ்வு*
மதுரையை சுத்தமான மற்றும் பசுமையான நகரமாக மாற்றும் நோக்கில், கிரெடாய் மதுரை (CREDAI Madurai), VV எண்டர்டெயின்மென்ட்ஸ் உடன் இணைந்து, Grand Universe Book of Records ஆதரவுடன் “க்ளீன் மதுரை” என்ற உலக சாதனை முயற்சி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை 31 ஜனவரி 2026 தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
நடிகர் விஜய் விஸ்வா தலைமையிலான VV எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம், இதற்கு முன்பு சுனிதா வில்லியம்ஸ் உருவ வரைபட மனித சங்கிலி உலக சாதனை, தற்காப்பு கலைகளில் அதிகமான மாணவர்கள் பங்கேற்றதற்கான உலக சாதனை, மதுரை சித்திரை திருவிழாவில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் சாமி வேடம் அணிந்து பங்கேற்றதற்கான உலக சாதனை மற்றும் “Stop Violence Against Women” உள்ளிட்ட பல்வேறு உலக சாதனைகளைப் படைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, VV எண்டர்டெயின்மென்ட்ஸ் புதிய முயற்சியாக க்ளீன் மதுரை என்ற சமூக விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்பும் வகையில், மிகப்பெரிய மனித சங்கிலி (Human Chain) உருவாக்கப்பட்டு உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்று, மதுரைக்கு பெருமை சேர்த்தனர்.
மகாத்மா பள்ளிகள், CEOA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வேதிக் வித்யாஷ்ரம் சினியர் செகண்டரி ஸ்கூல், வேலம்மாள் போதி காம்பஸ் – அனுப்பனாடி, துரோனா குளோபல் ஸ்கூல், வல்லபா வித்யாலயா, E.B.G. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இதயம் ராஜேந்திரன் ரெசிடென்ஷியல் ஸ்கூல், ஸ்ரீ அரபிந்தோ மீரா யுனிவர்சல் ஸ்கூல், ஸ்ரீ ஆரோபன இந்தியன் ஸ்கூல், ஸ்ரீ அரபிந்தோ மீரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, MVH ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் சென்டர், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கிரடாய் மற்றும் VV எண்டர்டெயின்மெண்ட்ஸ் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக , மகாத்மா கல்வி நிறுவனங்களின் நிறுவ திருமதி.பிரேமலதா பன்னீர்செல்வம் மதுரை கிரடாய் சேர்மன் ராமகிருஷ்ணா, தலைவர் முத்து விஜயன், செயலாளர் யோகேஷ், கிரடாய் தமிழ்நாடு செயலாளர் ஸ்ரீகுமார், மதுரை கிரடாய் துணைத்தலைவர் ஜெயச்சந்திரன் , உறுப்பினர்கள் பாலசங்கர் , சயது உமர் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளி முதல்வர் திருமதி.பத்மாசனி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்து சிறப்புரையாற்றினர்.
இந்த “க்ளீன் மதுரை” முயற்சியின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது.
நிகழ்ச்சியை ஆதித்யா மகேந்திரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
VV ENTETAINMENTS. AND CREDAI MADURAI தொடர்ந்து மதுரையின் சுகாதாரமான சூழலுக்கு தன்னார்வலர்களுடன் இணைந்து இது போன்ற நிகழ்வுகளை முன்னெடுக்கும் என நிர்வாகிகள் கூறினர்.







No comments:
Post a Comment