Featured post

Mylanji Movie Review

Mylanji Tamil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mylanji படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல  Sriram Karthick, Krisha Kuru...

Friday, 13 February 2026

My Lord Movie Review

My Lord Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம my lord படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம், ஜெய பிரகாஷ், ஆஷா சரத், கோபி நயினார்  னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை direct பண்ணிருக்கறது  raju murugan . சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



ration கடை ல ஆரம்பிச்சு government hospital வரைக்கும் எல்லா queue ளையும் நின்னு வேலைய முடிக்கிற muthusirppi யா நடிச்சிருக்க sasikumar ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அவங்களுக்கு இருக்கற power னால எங்கேயுமே queue ல நிக்காம சீக்கிரமா போற central minister ஆனா aasha sarath ஒரு பக்கம். இப்படி கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத இந்த ரெண்டு பேரும் எப்படி எதுக்காக சந்திக்கறாங்க ன்றது தான் இந்த கதையோட oneline story னு சொல்லலாம். 


கோவில்பட்டி ல இருக்கற ஒரு தீப்பட்டி factory ல வேலை பாக்குறாங்க suseela  வா நடிச்சிருக்க saithra . இவங்களோட அப்பா இறந்துபோய்டுவாரு, அப்போ இவங்கள அன்போட பாத்துக்கறது muthusirpi தான். அதுனால சுசீலா இவரை விரும்ப ஆரம்பிக்குறா. ஆனா தன்னோட பொறுப்புல இருக்கற suseela  வை நல்ல எடத்துல கல்யாணம் பண்ணி குடுக்கணும் னு கஷ்டப்படுறாரு. இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேந்துடுறாங்க. இன்னொரு பக்கம் aasha sarath கிட்ட நெறய பணம் இருந்தாலும் கோவில் ல குடுக்கற தீர்த்த தண்ணிய கூட குடிக்கமுடியாத அளவுக்கு இவங்க உடம்பு மோசமாயிடும். இவங்கள சரிசெய்ய இவங்களோட பையன் muthusirpi யா தேட ஆரம்பிக்குறாரு. எதுக்காக தேடுறாரு இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதை னு சொல்லலாம். 


இந்த படத்தோட மெயின் ஆனா விஷயமே kidney திருட்டு தான். இதுல வர scenes எல்லாமே audience யா யோசிக்க வைக்குது னு தான் சொல்லணும். உதாரணத்துக்கு கிராமத்துல இருக்கறவங்கள ஏமாத்தி kidney யா திருடுறது, உயிரோட இருக்கறவங்களுக்கு death certificate குடுக்கிறது, வள்ளலார் ஓட தத்துவங்களை பத்தி பேசுறது, hospital ல பூஜை பண்ணுறது, பணத்தை விட மனிதநேயம் தான் பெருசு னு சொல்லுறது னு நெறய விஷயங்கள் இந்த படத்துல இருக்கு.  ஒரு சாதாரண மனுஷன் கிட்ட ஒரு நாள் தீர்ப்பு குடுக்கற அதிகாரம் குடுத்தா என்ன ஆகும் ன்றதா ரொம்ப interesting அ குடுத்திருக்காங்க. 

ஜோக்கர், குக்கூ படங்களை நீங்க பாத்துருப்பீங்க. இந்த படங்களை எடுத்த director தான் இந்த படத்தையும் direct பண்ணிருக்காரு. இவரோட கதைல ஒரு அழுத்தமான பதிவு இருக்கும் அதே மாதிரி தான் இந்த படத்துலயும் குடுத்திருக்காரு. nandhan, tourist family னு தொடர்ந்து hit படங்களை குடுத்த sasikumar, இந்த படத்துல அட்டகாசமா  நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். susila வா நடிச்சிருக்க chaitra வும் அவங்க இருந்த scenes ல super அ நடிச்சிருக்காங்க.  முக்கியமா இவங்க சாமியாடுற scenes  எல்லாம் நல்ல இருந்தது. journalist  அ வர guru somasundram தான் இந்த படத்துக்கு பக்க பலமா இருக்காரு. aasha  sarath ஓட வில்லத்தனம் மிரட்டலா அமைச்சிருக்கு. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது sean rolden ஓட music அப்புறம் songs ரெண்டுமே அட்டகாசமா இருந்தது. இந்த படத்துல வர dialogues முக்கியமா court ரூம் ல நடக்கற scene எல்லாமே இந்த படத்துக்கு plus point தான். படத்தோட cinematography யும் இந்த கதைக்கு பக்கவா பொருந்தி இருந்தது. 


ஒரு interesting  ஆனா கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre ல பாக்க miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment