Saturday, 2 November 2019

முழுவதும் தானியங்கி முறையில் சமையல் செய்யும் ‘ரோபோசெஃப்’

ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டிருக்கும்அந்த அறைபெண்களின் உழைப்பை அதிகம் கேட்கக்கூடிய இடமாக இருக்கிறதுபெண்களின் சிந்தனையை அதிகளவில் ஆக்கிரமித்திருக்கும் அறையாகவும் திகழும் இந்த சமையலறையிலிருந்து பெண்களுக்கு விடுதலையளிக்கவேண்டும் என்று உணவுத்துறை விஞ்ஞானிகள்ஏனைய தொழில்நுட்ப துறையினருடன் இணைந்து இன்றளவிலும் போராடி வருகிறார்கள்அவர்கள் மிக்சிகிரைண்டர்ஜுஸ் மேக்கர்காபி மேக்கர்காய்கறிகளை வெட்டும் கருவிஇன்டக்ஷன் ஸ்டவ் என தனித்தனியாக கருவிகளைக் கண்டுபிடித்து பெண்களுக்கு உதவி செய்தாலும்அவர்கள் சமையலறையில் செலவிடும் நேரத்தைக் குறைக்க முடிவதில்லை.

வீட்டுச் சாப்பிட்டிற்காக ஏங்குபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறதுபிடித்த உணவுகளை சாப்பிடுவதற்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிட்டாலும் அதில் கிடைக்கும் சுவைநாம் எதிர்பார்ப்பதைவிட குறைவாகத்தான் இருக்கிறது.


சுவையாக இருக்கிறது என்று நம்பி பிரபலமான உணவகங்களுக்கு சென்றால்அங்கு ஒரு நாள் கிடைக்கும் சுவையான உணவுப் பொருள்மறுமுறை அதே சுவையுடன் கிடைப்பதில்லைஇதற்காக அங்குள்ள சமையல் கலைஞர்களை குறைச்சொல்வது நேரவிரயம் தான்.
சுப நிகழ்வுகளுக்கு விருந்தினர்களை அழைத்துஅனைவருக்கும் சுவையான உணவு வகைகளை பரிமாற திட்டமிட்டுபிரபலமான சமையல் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்கிறோம்ஆனால் அவர்களின் கைப்பக்குவம் அன்றைய தினம் எதிர்பார்த்ததைப் போல் அமையவில்லைஇந்நிலையில் உடனடியாக ஒரே நேரத்தில் அனைவருக்கும் சுவையான உணவு வகைகளை தயார் செய்யவேண்டும் என்றால்...அது நடைமுறையில் சாத்தியமில்லை என்ற போக்கு தான் நீடிக்கிறது.

இந்நிலையில் மக்கள்சுவையாகவும்ஆரோக்கியமாகவும்சுகாதாரமுறையில் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும் என்றும்அவை விரைவில் கிடைக்கவேண்டும் என்றும்சுவை என்பது ஒரே அளவில் எப்போதும் மாறாததாக இருக்கவேண்டும் என்றும் எண்ணுகிறார்கள்.
இந்த எண்ணத்தை செயலாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்படுவது தான் ‘ரோபோசெஃப்’. இந்தியாவில் முதல் சமைக்கும் எந்திர மனிதன்.
இது குறித்து இந்ந இயந்திர மனிதனை வடிவமைத்த குழுவின் தலைவரும்ரோபோசெஃப் நிறுவனத்தின் உரிமையாளருமான சரவணன் சுந்தரமூர்த்தி பேசுகையில்,“மென்பொருள் நிபுணராக நான் பதினோரு ஆண்டுகள் பணியாற்றிவிட்டுஉணவுத்துறையில் ஏதேனும் சாதனை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில்கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்துஇந்த ரோபோசெஃப் என்ற இயந்திர மனிதனை வடிவமைத்திருக்கிறோம்இந்த இயந்திர மனிதன் அறுநூறு வகையான ரெசிபிகளை சமைக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறோம்அதில் இந்தியன்சைனீஸ்வியட்நாமீஸ்,  தாய்லாந்து நாட்டு உணவுவகைகள் என  பல நாட்டு உணவுகளையும் சமைக்கும் வகையில் தயாரித்திருக்கிறோம்இதன் மூலம் தினமும் 3,000 நபர்களுக்கு சமைத்துவிநியோகிக்கிறோம்.
நாம் பசியின் போதோ அல்லது பயணங்களின் போதோ சாப்பிடவேண்டும் என்று எண்ணிபிரபலமான உணவகங்களில் சாப்பிடச் சென்றாலும்அங்கு உணவின் தர நிலை என்பது எப்போதும் ஒரேமாதிரியாக இருப்பதில்லைஇன்று ஏராளமானவர்கள் சமையலுக்கான நேரத்தை ஒதுக்குவதை விரும்புவதில்லைசமையல் என்பது அதிக நேர உழைப்பை கேட்கும் விசயமாக பார்க்கப்படுகிறதுஒவ்வொரு வீட்டிலும் அந்த வீட்டின் இல்லத்தரசி சமையலுக்காக தினமும் குறைந்தபட்சம் ஆறு மணிநேரத்தை ஒதுக்கவேண்டியதிருக்கிறது.
உணவகங்களில் காலையில் உணவு பரிமாறவேண்டும் என்றால் அங்குள்ள ஊழியர்கள் அதிகாலை மூன்று மணயளவில் எழுந்துகாலை உணவை தயாரிக்கவேண்டியதிருக்கும்அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பணியை தொடர்ந்து செய்வதால்சலிப்பு ஏற்படுகிறதுஅது சுவையிலும் எதிரொலிக்கிறதுஇதனால் காலை உணவிற்கான சுவையை எதிர்பார்த்து வரும் பயனாளர்களுக்கு ஏமாற்றமளிக்கிறதுஇது தான் யதார்த்தம்இதனை மாற்றியமைக்கவேண்டும் என்றும்ஒரே மாதிரியான சுவையுடன் அனைவருக்கும் , அவரவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைக்க வேண்டும் என்பதும்அதனை முழுவதும் தானியங்கி அடிப்படையில் தயாராகவேண்டும் என்பதும் தான் ரேபோ செஃப்பின் வடிவமைப்பின் உந்துதலாக இருந்ததுமனிதர்களின் உதவியின்றி இயந்திரத்தால் எவ்வளவு தூரம் சமையலில் ஈடுபடுத்த முடியும் என்பதை தொடர்ந்து ஆய்வு செய்தோம்வடிவமைத்த பின்னர் சமையலுக்கு செலவிடும் நேரம் குறைந்திருப்பதை உறுதி செய்தோம்ஒரே மாதிரியான சுவையை அனைத்து விதமான உணவு வகைகளிலும் அளிக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்தினோம்உதாரணத்திற்கு மதுரை சிக்கன் பிரியாணியை எங்களுடைய ரோபோ செஃப் சமைத்தால்மதுரைஇந்தியா மட்டுமல்லாமல் உலகின் வேறு எங்கு சுவைத்தாலும் ஒரே மாதிரியான சுவையைத்தான் தரும்இது ரோபோசெஃபின் மிகப்பெரும் பலன் என்று கூறலாம்.
ஆறாண்டிற்கு முன்னர் எங்களுடைய குழுவினர் உணவுத்துறையில் ஈடுபட திட்டமிட்டோம்நாங்கள் நடத்திவரும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ரோபோடீக் பிரிவு எனப்படும் இயந்திர மனிதனை உற்பத்தி செய்யும் பிரிவும் உண்டுநாங்கள் இயந்திரவியல் துறையில் தானியங்கி முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்முப்பரிமாண அச்சு இயந்திர கருவியை முழுமையாக தானியங்கி முறையில் வடிவமைத்திருக்கிறோம்இந்நிலையில் தானியங்கி தொழில்நுட்பத்தை எப்படி மக்களின் தேவைக்கான துறையில் அறிமுகம் செய்வது என்று எண்ணினோம்இன்றைய சூழலில் தானியங்கி என்ற தொழில்நுட்பம் கார்ப்பரேட் நிறுவனங்களிலும்எண்டர்பிரைசஸ் நிறுவனங்களிலும் மட்டும் பயன்பாட்டில் இருக்கிறதுஇந்நிலையை மாற்றி ஏன் இதை வீடுகளுக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்ற கோணத்தில் யோசித்தோம்ஆனால் இதன் தொடக்க நிலையில் ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டன.
என்னுடைய துறையைச் சார்ந்த நண்பர்கள்தானியங்கி எனப்படும் ரோபோடீக் துறையில் வல்லவராக இருக்கும் உங்களால் முழுக்க முழுக்க சமையல் செய்யும் எந்தி மனிதனை உருவாக்க முடியுமாஎன சாதாரணமாகவும்நகைச்சுவையாகவும் கேட்டார்கள்அதன் பிறகு இதற்கான முயற்சியைத் தொடங்கினோம்தற்போது நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் ரோபோசெஃப் பதினெட்டாவது ஹார்ட்வேர் வெர்ஷன்ஒவ்வொரு முறையும் பிரத்யேகமான முறையில் மீண்டும் மீண்டும் ரீடிசைன் செய்து கொண்டேயிருந்தோம்இந்த துறையில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களே இது குறித்து ஆய்வு நிலையிலேயே இருக்கும் போது உங்களால் மட்டும் எப்படி சாத்தியப்படும்என்றார்கள்ஆனால் ஒன்றை நினைத்து அதில் முழு மனதுடன் பணியாற்றி வெற்றிகிடைக்கும் என்ற மனநிலையில் குழுவாக இணைந்து கடினமாக பணியாற்றியதால் இதனை உருவாக்க முடிந்தது.  இந்த தருணத்தில் இதற்காக உழைத்த என்னுடைய குழுவினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ரோபோசெஃப்பை பொறுத்த வரை நாங்கள் இரண்டு வகையான ரோபோவை அறிமுகப்படுத்துகிறோம்ஒன்று வணிக நோக்கம் கொண்டது


Robo Chef | India's First Robotic Kitchen Press Confrence

https://www.youtube.com/watch?v=vNCTRUzxfdU

No comments:

Post a comment