Featured post

இராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து வசந்த பவன் நடத்திய

 இராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து வசந்த பவன் நடத்திய இரத்த தான முகாம்! இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, இரத்ததான வங்கியுடன் இணைந்து ...

Saturday 31 December 2022

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல்

 சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "XIX Chennai District Masters Athletic Championship 2022" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium), டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது


இப்போட்டியை சென்னை மாவட்ட நிர்வாகத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா, மூத்த துணைத் தலைவர்கள் திரு கலைச்செல்வன், திரு சாலமன் மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது


இந்த போட்டியின் முதல் நாளில் (டிசம்பர் 30, 2022) திரைப்பட இயக்குனர் திருமதி கிருத்திகா உதயநிதி, திரைப்பட நடிகர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் திரு. ஆதவ் அர்ஜுனா, தொழிலதிபர் திரு சூர்யபிரகாஷ் போன்றவர்கள் கலந்து கொண்டு போட்டிக்கான பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.


இந்த போட்டியின் இரண்டாம் நாளில் (டிசம்பர் 31, 2022), தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. எஸ். ரகுபதி, தமிழ்நாடு சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு துறை அமைச்சர் மாண்புமிகு திரு. சிவ. வீ. மெய்யநாதன், திரு K P கார்த்திகேயன் IAS (Member Secretary, SDAT), திரைப்பட தயாரிப்பாளர் G.K.ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 


தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியை தொடங்கி வைத்து, நீண்ட நேரம் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்து பேசியது விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும், விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.


60+ வயதினருக்கான 100 மீட்டர் ஆண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் திரு M.செண்பகமூர்த்தி 13.8 நொடிகளில் முதலாவதாக வந்து வெற்றி பெற்றார்


இரண்டு நாட்களாக நடந்த இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஒட்டப்பந்தயம், தாண்டுதல், எறிதல் போன்ற பலவகை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் ஓசுரில் வரும் ஜனவரி 6,7,8 தேதிகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்

2022 has been a special year professionally, as three of my films, "Viruman",

2022 has been a special year professionally, as three of my films, "Viruman", "Ponniyin Selvan-1" and "Sardar", were embraced with open arms and showered with great success by my fans, movie lovers and my extended family from all forms of press & media.  
With all humility I share the appreciation for this commercial victory with my producers, directors, co-stars and technicians in my films while at the same time, the artist in me is thrilled and proud to have portrayed such unique and challenging characters especially, Sardar and Vandiyathevan.

I’m equally proud of the commendable job done by my brothers and sisters at Uzhavan Foundation, be it the conservation of water sources to recognizing innovative farmers we aim to create increased visibility to bring in new opportunities for them.

I Promise to keep pushing boundaries and continue to entertain my ardent fans and audience with quality films in 2023 and the many years to come.

My love, and respects to all of you and I thank all my fans and cinema audience world over for your wonderful and constant support & encouragement.


I wish all of you a very Happy New Year!


Karthi Sivakumar

வந்தியதேவன் மற்றும் சர்தார் போன்ற பாத்திரங்களில் நடித்ததில்

 வந்தியதேவன் மற்றும் சர்தார் போன்ற பாத்திரங்களில் நடித்ததில் பெருமையடைகிறேன் - நடிகர் கார்த்தி


நடிகர் கார்த்தியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!


நடிகர் கார்த்தி தனது புத்தாண்டு வாழ்த்துகளில் கூறியிருப்பதாவது :
2022 ஆம் ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன்-1 மற்றும் "சர்தார்" ஆகிய மூன்று திரைப்படங்களும் எனது ரசிகர்கள், திரையுலகப் பிரியர்கள், எனது குடும்பம் மற்றும் அனைத்து வகையான பத்திரிகை மற்றும் ஊடகங்களால் மாபெரும் வெற்றிபெற்று, தொழில் ரீதியாக சிறப்பான ஆண்டாக அமைந்தது.

இந்த வணிக வெற்றிக்கான பாராட்டுகளை எனது படங்களில் எனது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதே நேரத்தில், என்னுள் இருக்கும் கலைஞன் வெளிப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, வந்தியதேவன் மற்றும் சர்தார் போன்ற தனித்துவமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களில் நடித்ததில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். 

உழவன் அறக்கட்டளையில் எனது சகோதர சகோதரிகள் ஆற்றிய பாராட்டுக்குரிய பணிக்காக நான் பெருமைப்படுகிறேன். விவசாயிகளை அங்கீகரிப்பதற்காக நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது, அவர்களுக்கு புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருவதற்கு அதிக தெரிவுநிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

2023 மற்றும் பல வருடங்களுக்கு எனது தீவிர ரசிகர்களையும், பார்வையாளர்களையும் தரமான படங்களுடன் தொடர்ந்து மகிழ்விப்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் மரியாதையும் மற்றும் உங்கள் அற்புதமான மற்றும் நிலையான ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் எனது ரசிகர்கள் மற்றும் உலக சினிமா பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி!


உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!


இவ்வாறு நடிகர் கார்த்தி சிவகுமார் கூறினார்.

முதல்மு றையாக பான் இந்தியா இசையில் தடம் பதிக்கும் டி ஆர்*

 முதல்மு றையாக பான் இந்தியா இசையில் தடம் பதிக்கும் டி ஆர்*


*'வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்' பாடல் மூலம் தமிழ் மற்றும் இந்தி இசை உலகில் முத்திரை பதிக்கிறார்*


தனது உற்சாக மற்றும் உள்ளம் உருக்கும் இசை மூலம் பல படங்களுக்கு பிளாட்டினம் டிஸ்க் வாங்கிய இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், கவிஞர் என்று பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான டி ராஜேந்தர் பான் இந்தியா இசையில் முதல் முறையாக ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிடுகிறார். 


இந்த தேச பக்தி ஆல்பத்தை தனது டி ஆர் ரெக்கார்டஸ் மூலம் தை மாதத்தில் வெளியிடவுள்ளார். 


இது குறித்து பேசிய அவர், "பிறக்கிறது ஆங்கில புத்தாண்டு 2023. புத்தாண்டு இது புத்துணர்வு தரும் ஆண்டாக, புதுமைமிக்க ஆண்டாக, பூரிப்பு தரும் ஆண்டாக, மக்களுக்கு மன மகிழ்ச்சி தரும் ஆண்டாக, மன அமைதி தரும் ஆண்டாக  இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். 


புத்தாண்டு மலர்கின்ற இந்த தருணத்திலே எனது டி ஆர் ரெக்கார்ட்ஸ் என்ற ஆடியோ மற்றும் மியூசிக் வீடியோ மலர இருக்கின்றது என்கிற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். 


ஒரு தலை ராகம், வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், ராகம் தேடும் பல்லவி, நெஞ்சில் ஒரு ராகம், உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம், உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், சாந்தி எனது சாந்தி, எங்கள் வீட்டு வேலன், பெற்றெடுத்த பிள்ளை, ஒரு வசந்த கீதம், தாய் தங்கை பாசம், மோனிஷா என் மோனாலிசா, சொன்னால் தான் காதலா, காதல் அழிவதில்லை, வீராசாமி... இப்படி என் படவரிசைகளில் எத்தனையோ பாடல்கள் இசையில் ரெக்கார்ட் பிரேக் பண்ணியிருக்கின்றன. 


கிளிஞ்சல்களுக்காக பிளாட்டினம் டிஸ்க் வாங்கினேன், பூக்களை பறிக்காதீர்கள், பூ பூவா பூத்திருக்கு, பூக்கள் விடும் தூது, கூலிக்காரன் இவை அனைத்தும் ரெக்கார்ட் பிரேக். இப்படி ரெக்கார்ட் பிரேக் செய்த நான், என்னுடைய கம்பெனிக்கு டி ஆர் ரெக்கார்ட்ஸ் என்கிற பெயர் வைத்துள்ளேன். 


நான் படத்திற்காக பாட்டெழுதியுள்ளேன், கழகத்திற்காக, கட்சிக்காக, ஏன் காதலுக்காக, பாசத்துக்காக கூட பாட்டெழுதியுள்ளேன். இப்பொழுது முதன் முதலாக இந்த பாரத தேசத்திற்காக ஒரு பாட்டு 'வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்' என்கிற பாடலை அகில இந்திய கான்செப்டில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கியுள்ளேன். தை திங்கள் பிறந்ததும் இதை வெளியிட இருக்கின்றேன்," என்று கூறியுள்ளார். 


மேலும், தனது புதிய முயற்சிக்கு நாடெங்கிலும் உள்ள மக்கள் தங்களது பேராதரவை வழங்குவார்கள் என்று டி ஆர் நம்பிக்கை தெரிவித்தார். 


***


T Rajendhar to venture into pan-India music

T Rajendhar to venture into pan-India music*


*TR to make his mark in Tamil and Hindi music world through his song 'Vande Vande Mataram, Vaazhiya Namadhu Bharatham'*


A Director, Actor, Music Composer, Lyricist, Singer and more, truly multi-faceted personality T Rajendhar had won platinum discs for his music albums for movies. He is known for composing many energetic as well as soul stirring songs. 


Now TR is all set to unveil a pan-Indian music album. This patriotic album 'Vande Vande Mataram, Vazhiya Namadhu Bharatham' is all set to be released on 18 January. 


Speaking about this new venture, TR said: "I pray to the Almighty that this New Year 2023 turns out to be a great and successful year for all with joy, mind peace and happiness. 


As the New Year dawns, I am happy to share the news that my new venture TR Records Audio and Music Video is all set to be launched.


Oru Thalai Raagam, Vasantha Azhaippugal, Rayil Payanangalil, Raagam Thedum Pallavi, Nenjil Oru Raagam, Uyirullavarai Usha, Thangaikor Geetham, Uravai Kaatha Kili, Mythili Ennai Kaathali, Oru Thaayin Sabatham, En Thangai Kalyani, Samsaara Sangeetham, Santhi Enadhu Santhi, Enga Veetu Velan, Pettredutha Pillai, Oru Vasantha Geetham, Thaai Thangai Paasam, Monisha En Monalisa, Sonnal Thaan Kaadhala, Kaadhal Azhivadhillai, Veerasami are some of my movies in which the music albums shattered several records. 


I received a platinum disc for Kilinjalgal. Pookalai Parikadheergal, Poo Poova Poothirukku, Pookal Vidum Thoodhu, Cooliekkaran all were record breaking hits. Having broken several such records, I am now starting my own company TR Records.


I had written songs for the film, for organizations, for the party, for love and affection. Now for the first time I have created a song 'Vande Vande Mataram, Vazhiya Namadhu Bharatham' for our nation. The song is created with pan Indian concept and will be released in Tamil and Hindi.


The song will be released in the Tamil month of 'Thai'."


T Rajendhar concluded that his new venture TR Records would taste success with the support of people. 

Friday 30 December 2022

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் வழங்கும் வெற்றிமாறன்

 *ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில்   'விடுதலை' முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவு*


ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் 'விடுதலை' பார்ட் 1 & 2 குறித்தான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகம் இருக்கிறது. தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி மற்றும் பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். 'இசைஞானி' இளையராஜா இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பார்வையாளர்களிடையே பேசு பொருளாக உள்ளது. 


தற்போது 'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. 'விடுதலை' பார்ட் 1 படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் படம் உலகம் முழுவதும்  வெளியாக இருக்கும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 


ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், எல்ரெட் குமார் ஏற்கனவே அறிவித்தபடி 'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. 


'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழங்குகிறது. படத்தின் பாடல்கள், ட்ரைய்லர் மற்றும் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.


'விடுதலை' திரைப்படம் அதன் பிரம்மாண்டத்திற்காகவும் ரசிகர்களிடையே பேசப்படுகிறது. கண்களைக் கவரும்படியான மிகப்பிரம்மாண்டமான மற்றும் உண்மையான படப்பிடிப்பு தளங்கள் 'விடுதலை' படக்குழுவின் உழைப்பைக் காட்டுகிறது. 


விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

RS Infotainment Elred Kumar Presents A Vetrimaaran Directorial

 RS Infotainment Elred Kumar Presents

A Vetrimaaran Directorial

Vijay Sethupathi-Soori starrer Viduthalai Part 1 & Viduthalai Part 2 shooting wrapped up

Everything about RS Infotainment Elred Kumar’s upcoming production ‘Viduthalai Part 1 & Viduthalai Part 2’ has created inevitable ripples of sensation. Crafted by iconic filmmaker Vetrimaaran, one of the well-esteemed emblems of Tamil Cinema to the prodigious star cast comprising Vijay Sethupathi, Soori, and many others, followed by the absolute Musical Gold Touch of Maestro Isaignani Ilaiyaraaja, the ‘Viduthalai’ franchise has been the talk of the town.


The makers are elated to announce that the shooting of both ‘Viduthalai Part 1 & Viduthalai Part 2’, are wrapped up successfully. Currently, the post production work of Viduthalai Part 1 is briskly proceeding toward completion, and the official announcement about the film’s worldwide theatrical release will be out shortly.


As confirmed earlier by producer Elred Kumar of RS Infotainment, the film Vidhuthalai Part 1 & 2 will have a release in Tamil, Telugu, Malayalam, and Kannada.


Viduthalai Part 1 & 2, presented by Red Giant Movies , will have the official word on the audio, trailer, and theatrical release dates revealed soon.


Viduthalai is constantly stealing the spotlights for its grandeur. From the gigantic and realistic set works to the visually captivating locations, the team has been involved in scrutinizing efforts to nurture this project.


The star cast comprises Vijay Sethupathi, Soori, Bhavani Sre, Prakash Raj, Gautham Vasudev Menon, Rajeev Menon, Chethan, and many familiar artistes. With Isaignani Ilaiyaraaja composing music and Velraj handling cinematography, Peter Hein has choreographed high-octane action sequences for the film.

அன்புள்ள பத்திரிக்கை, ஊடகம், இணையதள,

 அன்புள்ள பத்திரிக்கை, ஊடகம், இணையதள,  சமூக வலைதள நண்பர்களுக்கு வணக்கம் ...கோவை சரளா மற்றும் அஷ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் இன்று திரையங்குகளில் வெளியாகி  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் " செம்பி " படத்தின் மூலம் எனது மகன் சூரிய பிரகாஷ் நடிகராக தனது கலையுலக பயணத்தை துவங்கியுள்ளார்.


நான் பணியாற்றி படங்களுக்கு ஆதரவு கொடுத்ததை போல தங்களின் விமர்சனங்களில் அவரை பற்றி ஒரு சில வார்த்தைகள் எழுதி  என் மகன் சூரிய பிரகாஷின் திரையுலக வாழ்கைக்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


அன்புடன் 

மௌனம் ரவி 

மக்கள் தொடர்பாளர்.

Unveiling The World of Natural Star Nani’s Next (#Nani30), Production No 1 Of Vyra

 Unveiling The World of Natural Star Nani’s Next (#Nani30), Production No 1 Of Vyra Entertainments On January 1st, 2023


 Natural Star Nani is one rare actor who has a fan base among family audiences as well as the masses. His ongoing film Dasara is going to present him in a never seen before mass character. The actor who is attempting unique stories has announced his milestone 30th project.


#Nani30 marks production No 1 of Vyra Entertainments. Mohan Cherukuri (CVM) with his friends Dr Vijender Reddy Teegala, and Murthy K S started this banner with their passion and a vision to make good content movies and make a difference with their story-telling on the big screen.  


The trio is into various own ventures and has their main interest in movies from their childhood. They have set up multiple projects in the pipeline with their first to be Nani's 30 and are thankful to Nani for the opportunity given to them.


With Nani on board to play the lead role, this surely is going to be a distinctive film. They will unveil the world of #Nani30 on January 1st at 4:05 PM.


In this black and white poster, Nani can be seen sitting on a chair and browsing on his phone.


The director and other important details of #Nani30 will be revealed on the New Year 


Cast: Nani


Technical Crew:

Producers: Mohan Cherukuri (CVM), Dr Vijender Reddy Teegala, and Murthy K S

Banner: Vyra Entertainments

PRO: Sathish Kumar (AIM) Tamil - Vamsi-Shekar Telugu

மனதை உலுக்கும் அழுத்தமான படைப்பு - "கொடுவா" திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

 மனதை உலுக்கும் அழுத்தமான படைப்பு - "கொடுவா" திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! 


நிதின்சத்யா நாயகனாக கலக்கும் "கொடுவா" படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார் !!!  
Dwarka Productions LLP சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் பெருமையுடன் வழங்கும், நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையின் பின்னணியில், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் "கொடுவா". இப்படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர். 


சத்தம் போடாதே, சென்னை 28 உள்ளிட்ட படங்களின் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த நிதின்சத்யா சென்னை 28 (2) படத்திற்கு பிறகு நாயகனாக நடிக்கும் திரைப்படம் "கொடுவா". இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையில் வாழும் இளைஞன் அவனது காதல், குடும்பம், அவன் சந்திக்கும் பிரச்சனை, பழிவாங்கல் என ஒரு அழுத்தமான ஜனரஞ்சக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.  


மிக பரபரப்பான திரைக்கதையுடன் அனைவரையும் கவரும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுரேஷ் சாத்தையா. இப்படத்திற்காக படக்குழு இராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றி  உண்மையான இறால் வளர்ப்பு பண்ணையில் தங்கி படம் பிடித்துள்ளது.  இப்படத்தின் கதாநாயகன் நிதின்சத்யா இராமநாதபுரம் இறால் பண்ணைகளில் பயிற்சி எடுத்துக் கொண்டு  அந்த மண்ணைச் சேர்ந்த மனிதனாகவே மாறி நடித்துள்ளார். நடிகை சம்யுக்தா சண்முகநாதன் நடிக்க உடன் ஆடுகளம் முருகதாஸ், சுப்பு பஞ்சு, ஸ்வயம் சித்தா, வினோத் சாகர், நயன சாய், சுபத்ரா, ஆடுகளம் நரேன், சந்தான பாரதி, சுதேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நேற்று யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட டைட்டில் டீசர் மற்றும் இன்று ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 


படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.


தொழில் நுட்ப குழு 

தயாரிப்பு - பிளேஸ் கண்ணன் (Dwarka Productions LLP)

இயக்கம் - சுரேஷ் சதையா 

இசையமைப்பாளர் - தரண் குமார்

ஒளிப்பதிவு - கார்த்திக் நல்லமுத்து 

படத்தொகுப்பு - V J சாபு ஜோசப் 

கலை இயக்கம் - சுரேஷ் கல்லரி

மக்கள் தொடர்பு - சதீஷ் - சிவா (AIM)

An Intense Heart-touching film - "Koduvaa" First Look is out now!!

 An Intense Heart-touching film - "Koduvaa" First Look is out now!!!


Music Director Yuvan Shankar Raja revealed the Title Teaser of NitinSathyaa starrer “Koduvaa”
Dwarka Productions LLP Blaze Kannan and Sreelatha Blaze Kannan are producing a new film titled ‘Koduvaa’ starring NitinSathyaa in the lead role. This film, directed by Suresh Sathaiah has an intense story premise set against the backdrops of prawn farming. While Yuvan Shankar Raja launched the film's Title Teaser, music director Actor and Music Director GV Prakash Kumar & actress Aishwarya Rajesh have released the film’s first look.


Actor NitinSathyaa grabbed everyone’s attention with his realistic performance in Chennai 600028 and continued to impress the fans with good projects. Following Chennai 600028 II, he is now playing the lead character in the film ‘Koduvaa’. The story is about a youngster’s life at a shrimp farm in Ramanathapuram, interwoven with romance, family, conflicts, and revenge, which are well-knit together as an entertaining package.


Filmmaker Suresh Sathaiah has crafted this film with a riveting screenplay that will engage audiences from all walks of life. The crew has shot the entire film across the real locations of shrimp farms in and around the Ramanathapuram district. Actor NitinSathyaa plays the lead role in this movie. He underwent training at Shrimp farms to give a native and natural look to his respective character in this movie. Samyuktha Shanmuganathan Plays the Female Lead.


The film’s title teaser was revealed by Yuvan Shankar Raja on December 29, 2022, and the first look poster unveiled by GV Prakash & Aishwarya Rajesh today (December 30, 2022) have received a fantabulous response from the fans.


With the film’s shoot already wrapped up, the post production work is briskly nearing completion. The official announcement about the film’s trailer and the audio launch will be made by the production house soon.


Star Cast


NitinSathyaa

Samyuktha

Vinod Sagar

Swayam Siddha

Nayanasai

Subbu Panchu

Subathra

Aadukalam Murugadoss

Santhana Bharathi

Aadukalam NarenTechnical Crew


Banner: Dwarka Productions LLP

Producer: Blaze Kannan

Director: Suresh Sathaiah

Music Director: Dharan Kumar

DOP: Karthik Nallamuthu

Editor: VJ Sabu Joseph

Art Director: Suresh Kallery

PRO:  Sathish - Siva (AIM)

Thursday 29 December 2022

பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த 'டிரைவர் ஜமுனா' படக் குழு

 *பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த 'டிரைவர் ஜமுனா' படக் குழு*


தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை 'டிரைவர் ஜமுனா' படக் குழு நன்கொடையாக வழங்கியது. இதனை அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் பயனாளிக்கு வழங்கி கௌரவித்தார்.
18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரி தயாரித்து, இம்மாதம் முப்பதாம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகை வாகனத்தை இயக்கும் ஓட்டுநராக நடித்திருக்கிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நாற்பதிற்கு மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் படத்தில் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் கலந்துரையாடல் நடத்தி, ஓட்டுனராக பணியாற்றிய போது நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.


சமூகத்தில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் வாகன வாடகை வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் தொழிலும் ஒன்று. இன்று இந்த தொழிலிலும் பெண்கள் நுழைந்து பயிற்சி பெற்று, திறமை மிக்க ஓட்டுனர்களாக வலம் வருகின்றனர். சுய தொழில் செய்து குடும்பத்தின் மேன்மைக்காக அயராது பாடுபடும் பெண்களை கௌரவிக்கும் வகையில், இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நாற்பதிற்கும் மேற்பட்ட பெண் ஓட்டுநர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவருக்கு புதிய ஆட்டோ ஒன்றினை படக் குழுவினர் பரிசாக வழங்கினர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த பெண் ஓட்டுனருக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இது இருந்தது.


சுய முன்னேற்றத்தை விரும்பும் பெண்களுக்கு அடையாளமாக இந்த பரிசு இருந்தது என பலரும் சமூக வலைதளங்களின் மூலமாக பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். திரில்லர் ஜானரில் தயாரான 'டிரைவர் ஜமுனா' திரைப்படம், பெண்களிடத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிகினிங் படத்துக்கு ஆர்.பார்திபனின் பாராட்டு!

 #பிகினிங் படத்துக்கு ஆர்.பார்திபனின் பாராட்டு! 


Beginning of this day “hi” !

Beginning’ ஜகன் விஜயா படை-படைப்பாக்கத்தில் 

நண்பர் லிங்குசாமியின்  தம்பிசாமி போஸ் வெளியிடும் split frame-ல் இரு காட்சிகளை காட்டி, இருக்கையில் இருப்புக் கொள்ளா தவிப்பை உண்டாக்கி, முடிவில் இரு கை ஓசையெழுப்பச் செய்கிறார். சினிமா விரும்பிகள் ஒவ்வொருவரும் இரு டிக்கட் வாங்கிப் பார்க்கலாம் ( release from Jan 26 ). 

இயக்குனருக்கு நிறைய வாய்ப்புகள் வரும் அடுத்ததில் இன்னும் நேர்த்தி கூட்டுவார்! 

ஒரு flash back

ஆடுகளம்’படத்தில் நடிக்க திரு வெற்றிமாறன் வந்து அழைப்பு விடுக்க நான் மறுப்பை விடுக்க காரணம்…

நான் திரு தனுஷிடம் beginning தினுசான கதை ஒன்றை கூறியிருந்தேன் இருவரும் இணைந்து நடிக்க! ஒரு frame-ல்  இரு கதைகள் complicated ஆக இருக்குமென்று மென்று முழுங்கி பின் ஓங்கி முழங்கி சொல்லப்பட்டது. ஆக!!!!!

“ஆகா miss பண்ணிட்டமே”எனத் தோன்றினாலும்

இன்றைய இளம் இயக்குனர்கள் 

இன்றைய இளம் இயக்குனர்கள் புதிய புதிய யுத்திகளுடன் வருவதால் நாமும் புத்தியை இன்னும் கூர்மை கத்தியாக்கி கோதாவில் இறங்க உத்வேகம் வருகிறது. 

From the Beginning 

தின்றதை மறந்து பசி எடுப்பதைப் போல,

வென்றதை மறந்து மேலும் வெல்ல முயல்வோம். 


— Johnson,pro.

லவ் டுடே’ படத்தை போல் ‘கடைசி காதல் கதை’ படமும் இளைஞர்களை கவரும்! - பத்திரிகையாளர்கள் பாராட்டு

 ‘லவ் டுடே’ படத்தை போல் ‘கடைசி காதல் கதை’ படமும் இளைஞர்களை கவரும்! - பத்திரிகையாளர்கள் பாராட்டு


அருமையான மெசஜ் சொல்லும் ஜாலியான படமாக உருவாகியுள்ள ‘கடைசி காதல் கதை’! - டிசம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ்இதுவரை யாரும் யோசிக்காத கருவை சிறப்பாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் ஆர்.கே.வித்யாதரன்! - ‘கடைசி காதல் கதை’ படத்தை பாராட்டும் பத்திரிகையாளர்கள்


ஒரு திரைப்படம் இளைஞர்களுக்கு பிடித்துவிட்டால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறுவது உறுதி. அப்படி ஒரு படமாக சமீபத்தில் வெளியான் பாடம் ‘லவ் டுடே’. அறிமுக நடிகர்கள் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அப்படத்தை தொடர்ந்து இளைஞர்களை வெகுவாக கவரக்கூடிய படமாக உருவாகியுள்ள படம் ‘கடைசி காதல் கதை’.


முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை வித்தியாசமாக இருப்பதோடு, அதற்கு திரைக்கதை அமைத்து காட்சிகளை கையாண்ட விதம் இளைஞர்களை கவரக்கூடிய விதத்தில் இருப்பதோடு, படம் தொடங்கியது முதல் முடியும் வரை மிக ஜாலியாக காட்சிகளை நகர்த்தி செல்வதோடு, இரண்டு மணி நேரம் எப்படி போனது என்பது தெரியாத வகையில் படம் விறுவிறுப்பாக நகர்கிறது.


காதல் தோல்வியால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் இளைஞர்கள் எடுக்கும் தவறான முடிவுகளை வித்தியாசமாக கையாண்டிருக்கும் இயக்குநர் அதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி சொல்லியிருப்பதோடு, இளைஞர்களும், காதலர்களும் கொண்டாடும் வகையில் சொல்லி படத்தை ரசிக்க வைக்கிறார்.


இந்த நிலையில், படத்திரிகையாளர்களுக்காக சிறப்பு காட்சிக்கு படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் படம் முழுவதையும் ஜாலியாக பார்த்து ரசித்ததோடு, குலுங்கி குலுங்கி சிரித்து ரசித்தனர். 


படம் முடிந்த பிறகு படம் குறித்து கூறிய நிருபர்கள், படம் மிக ஜாலியாக இருக்கிறது. ‘லவ் டுடே’ படத்திற்கு பிறகு இளைஞர்களை கொண்டாட வைக்கும் படமாக ‘கடைசி காதல் கதை’ உருவாகியுள்ளது. படத்தில் இடம்பெறும் இரட்டை அர்த்த வசனங்களை ரசிக்கும்படி கையாண்டிருக்கும் இயக்குநர் படம் முழுவதையும் மிக ஜாலியாக நகர்த்தி சென்றாலும், இறுதியில் காதலர்களுக்கு மட்டும் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் அருமையான மெசஜ் ஒன்றையும் சொல்கிறார். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும், என்று தெரிவித்தனர்.


மேலும், படத்தில் சொல்லப்படும் மையக்கரு இதுவரை எந்த படத்திலும் இடம்பெறாத ஒரு விஷயமாக இருப்பதோடு, விபரீதமானதாகவும் இருக்கிறது. ஆனால், அதை மிக அருமையாக கையாண்ட இயக்குநர் ஆர்.கே.வித்யாதரனின் திரைக்கதை, வசனம் மற்றும் காட்சி அமைப்புகள் அனைத்தும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதோடு, இறுதியில் அனைத்துக்குமான தீர்வாக சொல்லப்படுவது காதலர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து தரப்பினருக்குமானதாக இருக்கிறது. ஒரு நல்ல படம், நிச்சயம் அனைவரும் பார்க்கலாம், என்று கூறி இயக்குநரை பத்திரிகையாளர்கள் பாராட்டினார்கள்.


அறிமுக நடிகர் ஆகாஷ் பிரேம்குமார், அறிமுக நடிகை ஈனாக்‌ஷி கங்குலி,  நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ், விஜே ஆஷிக், நோபல், மைம் கோபி, சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ், அனு, பிரியதர்ஷினி, முதுன்ய, நிஷார், ஸ்வப்னா, கிருத்திகா, சாம்ஸ் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.


எஸ் கியூப் பிக்சர்ஸ் சார்பில் ஈ. மோகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சேத்தன் கிருஷ்ணா இசையமைக்க, சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.ஆர்.பிரகாஷ் படத்தொகுப்பு செய்ய, கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.கே.வித்யாதரன் இயக்கியுள்ளார்.

சந்தீப் கிஷன் நடிக்கும் 'மைக்கேல்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு

 *சந்தீப் கிஷன் நடிக்கும் 'மைக்கேல்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு*சந்தீப் கிஷன் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் பான் இந்திய திரைப்படமான 'மைக்கேல்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ' நீ போதும் எனக்கு..' எனத் தொடங்கும் முதல் பாடல் மற்றும் அதன் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.


இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மைக்கேல்'. இதில் சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். ராஜன் ராதாமணாளன் வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு, காந்தி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை ஆர். சத்திய நாராயணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை தினேஷ் காசி அமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை கரண் சி புரொடக்‌ஷன்ஸ் எல் எல் பி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி இருக்கிறது. 'நீ போதும் எனக்கு..' எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் கபிலன் எழுத பின்னணி பாடகர் பிரதீப் குமார் பாடியிருக்கிறார்.


இந்த பாடலின் காணொளியில் நாயகன் சந்தீப் கிஷனும், நாயகி திவ்யான்ஷா கௌஷிக்கும் சந்தித்துக் கொள்கிறார்கள். திவ்யான்ஷா கௌஷிக் தனது வீட்டின் நுழைவாயிலை திறந்து சந்தீப் கிஷனுக்கு காதலிப்பதற்கான அறிகுறிகளை வழங்குகிறார். இதனை தொடர்ந்து பாடல் தொடங்குகிறது. காதலியிடம்  அத்துமீறலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கும் சந்தீப்பிடம்.. வாய்மொழியாக அழைப்பு விடுக்க, இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இவர்கள் இருவரின் காதல் ரசாயன கலவை.. ரசிகர்களை கண்ணிமைக்க மறந்து, ரசிக்க வைக்கிறது. இந்த பாடலில் இடம்பெறும் உதடுடன் உதடு பொருத்தி கொடுக்கும் முத்தக்காட்சியில்.. இசையும், பாடகரின் குரலும், கலைஞர்களின் காதலுடன் கூடிய நடிப்பும்... ஒரே புள்ளியில் சந்தித்து மாயாஜால நடனமாட.. பார்வையாளர்களை உற்சாகப்படுத்துகிறது.


இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.


https://youtu.be/oBPpmK8koXo

Naga Chaitanya, Venkat Prabhu, Srinivasaa Chitturi, Srinivasaa

 Naga Chaitanya, Venkat Prabhu, Srinivasaa Chitturi, Srinivasaa Silver Screen’s Bilingual Film Custody Worldwide Grand Release On May 12, 2023Naga Chaitanya and talented maker Venkat Prabhu’s Telugu-Tamil bilingual movie Custody is being mounted with rich production values and first-class technical standards and one of the most expensive movies in Naga Chaitanya's career. Srinivasaa Chitturi is producing this large-scale commercial entertainer on Srinivasaa Silver Screen banner, while Pavan Kumar presents it. Krithi Shetty is the leading lady opposite Naga Chaitanya.


The makers released the title and the first look poster of the movie for Naga Chaitanya’s birthday and they got an overwhelming response. Naga Chaitanya’s ferocious avatar as a police spellbound one and all.


Meanwhile, the film’s release date has been announced. Custody will release worldwide in a grand manner on May 12, 2023, to capitalize on the long summer holidays. The movie will have a simultaneous release in Telugu and Tamil.


Aravind Swamy is playing the antagonist in the movie, where Priyamani, Sarathkumar, and Sampath Raj will be seen in pivotal roles.


The movie has music by the legendary father-son duo of Isaignani Ilaiyaraaja and Yuvan Shankar Raja.


Cast: Naga Chaitanya, Krithi Shetty, Aravind Swami, Sharat Kumar, Priyamani, Sampath Raj, Premji Amaren, Premi Vishwanath, Vennela Kishore, and others


Technical Crew:

Story, Screenplay, Direction: Venkat Prabhu

Producer: Srinivasaa Chitturi

Banner: Srinivasaa Silver Screen

Presents: Pavan Kumar

Music: Ilayaraja, Yuvan Shankar Raja

Dialogues: Abburi Ravi

PRO: Suresh Chandra & Rekha D'One 

Digital Media: Vishnu Thej Putta

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸின் ஸ்ரீனிவாசா

 *ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸின் ஸ்ரீனிவாசா  சித்தூரி வழங்கும் நாகசைதன்யா, வெங்கட்பிரபுவின் பைலிங்குவல் படமான 'கஸ்டடி' உலகம் முழுவதும் மே 12, 2023-ல் வெளியாக இருக்கிறது*


நாக சைதன்யா மற்றும் திறமையான இயக்குநரான வெங்கட்பிரபு இணைந்திருக்கும் தமிழ்- தெலுங்கு பைலிங்குவல் படமான 'கஸ்டடி' மிகப் பெரிய பொருளாதார செலவில் முதல் தரத்திலான தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. நடிகர் நாக சைதன்யாவின் நடிப்பு பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான். மிகப்பெரிய அளவிலான இந்த கமர்ஷியல் எண்டர்டெயினர் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி படத்தைத் தயாரிக்கிறார். படத்தை பவன் குமார் வழங்குகிறார். கிரீத்தி ஷெட்டி படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். நாகசைதன்யா பிறந்தநாளன்று படக்குழு படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை வெளியிட்டனர். போலீஸ் அதிகாரியாக நாகசைதன்யாவின் இந்த அதிரடியான தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. 


இப்போது உலகம் முழுவதும் 'கஸ்டடி' திரைப்படம் மே மாதம் 13,2023-ல் நீண்ட கோடை விடுமுறையை திட்டமிட்டு வெளியிட இருக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் வெளியாக இருக்கிறது. 


அரவிந்த்சாமி படத்தில் வில்லனாக நடிக்க ப்ரியாமணி, சரத்குமார் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 


இசையின் லெஜண்ட்டான அப்பா- மகன், இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கின்றனர். 


*நடிகர்கள்:* நாக சைதன்யா, கிரீத்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார், ப்ரியாமணி, சம்பத் ராஜ், ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், வெண்ணிலா  கிஷோர் மற்றும் பலர். 


*படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*


கதை, திரைக்கதை, இயக்கம்: வெங்கட்பிரபு,

தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,

பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,

வழங்குபவர்: பவன் குமார்,

இசை: இளையராஜா, யுவன் சங்கர் ராஜா,

வசனம்: அபூரி ரவி,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா - D'One,

டிஜிட்டல் மீடியா: விஷ்ணு தேஜ் புட்டா

சோனி லிவ் ஓடிடி தளத்தில் Chutzpah Films Production-ன் 'ஸ்டோரி ஆஃப் திங்ஸ்'

 *சோனி லிவ் ஓடிடி தளத்தில் Chutzpah Films Production-ன் 'ஸ்டோரி ஆஃப் திங்ஸ்' ஜனவரி6, 2023-ல் ப்ரீமியர் ஆக இருக்கிறது*


சிறந்த உள்ளடக்கம் கொண்ட கதைகளை பார்வையாளர்களுக்கு வழங்கி வருவதன் மூலம் சோனி லிவ், ஓடிடி உலகில் தனது தனித்தன்மையை நிரூபித்துள்ளது. அதன் உயர்தரமான விஷூவல், ஒலியின் தரம், கதையின் தன்மை என சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் மூலம் தொடர்ச்சியாக தன்னுடைய பார்வையாளர்களைத் தக்க வைத்து வருகிறது. இப்பொழுது மற்றொரு பிரம்மாண்டமான படைப்பான 'ஸ்டோரி ஆஃப் திங்ஸ்' வருகிற ஜனவரி 6, 2023-ல் ப்ரீமியர் ஆக இருக்கிறது. 

'ஸ்டோரி ஆஃப் திங்ஸ்' என்பது மனிதர்களைச் சுற்றி நடக்கும் கதைகளின் தொகுப்பு மற்றும் பொருட்களுடனான அவர்களின் தொடர்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆந்தாலஜி அடிப்படையிலான திரைப்படம்.  இது மனித கதைகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையிலான உண்மை மற்றும் அதற்கு அப்பால் இருக்கும் வெளியை நோக்கி நகரும் கதையாக அமையும். 


இந்த கதைத் தொகுப்புகளுக்கு 'Cellular', 'Weighing Scale', 'Compressor', 'Car' & 'Mirror' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையும்  மனித உணர்ச்சிகளை ஆராய்கிறது மேலும் அங்கு பொருள் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறது. 


'Mirror' கதையில் வினோத் கிஷன் & அன்ஷிதா ஆனந்த், 'Cellular' கதையில் அதிதி பாலன், கெளதமி தடிமல்லா மற்றும் அர்ஜூன் ராதாகிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'Car' கதையில் சாந்தனு பாக்யராஜ், சித்திக் KM மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடித்துள்ளனர். பரத் நிவாஸ் & லிங்கா 'Weighing Scale' கதையில் நடித்துள்ளனர். ரித்திகா சிங் & ரோஜூ 'Compressor' கதையில் நடித்துள்ளனர். 


ஜார்ஜ் K ஆண்டனி இயக்கியுள்ள இந்தப் படத்தை Chutzpah Films தயாரித்துள்ளது. 


*படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*


ஒளிப்பதிவு: ஹர்ஷவர்தன் வாக்தாரே,

தயாரிப்பு வடிவமைப்பு: செல்வகுமார் V,

காஸ்டிங் இயக்குநர்: சரண்யா சுப்ரமணியம் (Sharanya Spots Talent),

உடைகள் வடிவமைப்பு: பினிதா ராமநாதன்,

இசை & பின்னணி இசை: மேட்லி ப்ளூஸ் (பிரஷாந்த் டெக்னோ, ஹரிஷ் வெங்கட்),

ஒலி வடிவமைப்பு: சச்சின் சுதாகரன், ஹரிஹரன். M (சிங்க் சினிமா),

ஒலிக்கலவை: அரவிந்த் மேனன், கதம் சிவா,

படத்தொகுப்பு: ஜார்ஜ் K ஆண்டனி,

கலரிஸ்ட்: சுரேஷ் ரவி (Mango Post),

VFX: Mango Post,

ஜூனியர் புரொட்யூசர்: ஹரிணி மணி,

போஸ்ட் புரொடக்சன் ஹெட்: ஸ்ரீராம் ராஜேந்திரன்,

ட்ரைய்லர் எடிட்டர்: செந்தூரன் V,

லைன் புரொடக்சன்: Happy Unicorn Pvt Ltd,

டைட்டில் டிசைன்: அர்ஜூன் ஜவஹர்,

பப்ளிசிட்டி டிசைன்: 1928 × One Club Entertainment,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா- D'One