Featured post

Varisu Movie Review

Varisu Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம varisu படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vamshi Paidipally, இ...

Saturday, 30 November 2019

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது


'புரியாத புதிர்', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்து, பாராட்டுக்களைக் குவித்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த படத்தின் படப்பிப்பு இன்று (நவம்பர் 28) துவங்கியது. தற்காலிகமாக தயாரிப்பு எண் 1 என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை Third Eye Entertainment நிறுவனம் தயாரிக்க, பிந்து மாதவி, தர்ஷணா பனிக் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர்.

 Third Eye Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளர் தேவராஜூலு இப்படம் குறித்து கூறியதாவது...
"இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனித்தன்மை வாய்ந்த கதைகளை தேர்வு செய்து, விறுவிறுப்பான படங்களாகக் கொடுப்பதில் வல்லவர். அவரது இயக்கத்தில் நான் படம் தயாரிக்க இதுவே முதல் காரணம். மேலும் தன் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய களத்தில் கட்டமைக்கபட்ட கதை ஒன்றை விவரித்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாகப் பட்டது. பெண்களை மையப் படுத்திய இந்தப் படம் முழுக்க முழுக்க, திரில்லர் வகையைச் சேர்நதது. ரசிகர்களை இருக்கை நுனிக்கே இழுத்து வந்து விடும் காட்சிகள் நிரம்பவே உண்டு. கதையை அவர் சொன்ன விதம், விஷுவல் காட்சிகளுடன் முழுப் படத்தையும் எப்போது பார்ப்போம் என்ற ஆவலை என்னுள் ஏற்படுத்தியது. பிந்து மாதவி மற்றும் தர்ஷணா பனிக் இருவரும் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தான் உருவாக்கிய பாத்திரங்களுக்குப் பொறுத்தமான நடிக நடிகையரை சரியாகத் தேர்ந்தெடுப்பார் என்று நம்புவதுடன், அவர்களுடன் இணைந்து பணியாற்றும் அனுபவத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்" என்றார்.

No comments:

Post a Comment