Featured post

அனைவருக்கும் வணக்கம்... நண்பன் விஜய் கொரடூரில் புதியதாக

 அனைவருக்கும் வணக்கம்... நண்பன் விஜய் கொரடூரில் புதியதாக கட்டியிருக்கின்ற சாய் பாபா கோவிலுக்கு அவரது தாயாருடன் இன்று சென்றேன். நான் ராகவேந்த...

Saturday 13 April 2024

அனைவருக்கும் வணக்கம்... நண்பன் விஜய் கொரடூரில் புதியதாக

 அனைவருக்கும் வணக்கம்...


நண்பன் விஜய் கொரடூரில் புதியதாக கட்டியிருக்கின்ற சாய் பாபா கோவிலுக்கு அவரது தாயாருடன் இன்று சென்றேன்.

நான் ராகவேந்திரர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும்பொழுது அவர் கோவிலுக்கு வந்ததோடு மட்டுமல்லாமல் பாடலையும் பாடி வாழ்த்தினார்.


இன்று நான் இந்த கோவிலுக்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பன் விஜய்கு எனது மனபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 


கோவிலுக்குள் சென்றவுடன் தூய தெய்வீகமான அதிர்வுகள் ஏற்பட்டதை உணர்ந்தேன். அனைவரும் இந்த கோவிலுக்கு சென்று சாய்பாபாவை தரிசிக்கிமாறு கேட்டுக்கொள்கிறேன்.


அன்புடன் 

ராகவா லாரன்ஸ்.


@Pro. Manavai Bhuvan

Friday 12 April 2024

11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் தமிழ்

 11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் " சிறகன் " 

ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது ஹைபர் லிங்க் நான் லினியர் கிரைம் திரில்லர் படம் " சிறகன் " ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது 


MAD பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் துர்கா பேட்ரிக் தயாரித்துள்ள படத்திற்கு " சிறகன் " என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர்.


கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் GD, ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், ரயில் ரவி, சானு ஆகியோர் முக்கிய கதாபாத்திரகளில் நடித்துள்ளனர்.


ஒளிப்பதிவு : சேட்டை சிக்கந்தர்

இசை : ராம் கணேஷ். K 

பாடல்கள் : வெட்டி பையன் வெங்கட், சந்தோஷ் ஆறுமுகம்.

கலை : ஹரிபிரசாத் பால் 

கூலாங்கல் படத்திற்கு சிறந்த சவுண்ட் எபெக்ட்ஸ் விருது வாங்கிய ஹரிபிரசாத் MA இந்த படத்திற்கும் சவுண்ட் மிக்ஸிங் செய்துள்ளார்.

மக்கள் தொடர்பு : மணவை புவன் 

தயாரிப்பு : துர்கா பேட்ரிக் 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார் - வெங்கடேஷ்வராஜ். S ( இவர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் MF. Tech - மாஸ்டர் இன் பிலிம் அண்ட் எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடிஸ்  துறையில் பட்டம் பெற்றவர் ) 


படம் பற்றி இயக்குனர் வெங்கடேஷ்வராஜ். S பகிர்ந்தவை..


ஹைபர் லிங்க் நான் லினியர் முறையில் கிரைம் திரில்லர் ஜானரில் 11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது தான்.


மற்ற கிரைம் திரில்லர் படங்களை விட இதை ஒரே இரவில் நடக்கும் ஒரு ஏதார்த்தமான கிரைம் திரில்லர் படமாக  உருவாக்கியிருக்கிறோம்.


பஞ்சன் சிறகன் எனும் வகையை சார்ந்த பட்டாம்பூச்சியின் இடது புறம் வெள்ளை மற்றும் கருப்பு நிறமும், வலது புறம் காக்கி நிறமும் இருக்கும் அதற்கும் இந்த படத்தின் திரைக்கதைக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை இருப்பதாலும்,

இந்தவகை பட்டாம்பூச்சியின் வாழ்க்கை எப்படி ஒரே நாளில்  துவங்கி ஒரே நாளில் முடிகிறதோ அதே போல் இந்த படத்தின் திரைக்கதையும் ஒரே இரவில் நடந்து முடிவதால்

இந்த படத்திற்கு " சிறகன் " என்று பெயர்வைத்தோம்.


படப்பிடிப்பு முழுவதும் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்றது என்றார்.


மற்றும் இந்த படத்தில் பணியாற்றியுள்ள இயக்குனர் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் 27 வயது என்பது குறிப்பிடத்தக்கது.


சமீப காலங்களில் சிறந்த கதையம்சம் கொண்ட நல்ல திரைப்படங்களை வெளியிட்டு வரும் உத்ரா புரொடக்சன்ஸ் ஹரி உத்ரா இந்த படத்தை ஏப்ரல் 20 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

வர்ஷங்களுக்கு சேஷம்' படத்தில், தனித்துவமான நடிப்பின் மூலம்

 *'வர்ஷங்களுக்கு சேஷம்' படத்தில், தனித்துவமான நடிப்பின் மூலம் கவனத்தைக் கவரும் நிவின் பாலி*

நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான 'வர்ஷங்களுக்கு சேஷம்' ஏப்ரல் 11ஆம் தேதியன்று வெளியானது.  இந்திய திரையுலகின் பரந்த பரப்பில் திறமையான நட்சத்திரங்களின் பங்களிப்பால் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக நிவின் பாலியின் தனித்துவமான நடிப்பு.. கவனத்தை கவர்கிறது. 'வர்ஷங்களுக்கு சேஷம்' படத்தில் அவரது திரை தோற்றம்... அவர் ஆற்றல்மிக்க  நடிகர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன் மட்டுமல்லாமல் இத்திரைப்படம்.. சினிமா ரசிகர்களின் ரசனையை புதிய உயரங்களுக்கு உயர்த்துகிறது. இந்தத் திரைப்படம், 70 கள் மற்றும் 80களில் ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்களின் வாழ்வியலை பற்றியதாகும். சினிமா ரசிகர்களின் மையமாக திகழும் கோடம்பாக்கம்.. பல திரைப்பட தயாரிப்பாளர்களின் வெற்றியையும், புகழையும், தோல்விகளையும் கண்டது. இந்த நகரம்தான் படத்தின் கதைக்கள பின்னணி. 


படத்தின் இரண்டாம் பாதியில் நிவின்பாலி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு உயிர்ப்புள்ள நடிப்பை வழங்குவதை காண்கிறோம். 'வர்ஷங்களுக்கு சேஷம்' படத்தில் நிவின் பாலியின் கதாபாத்திரம் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. ஒரு சூப்பர் ஸ்டாராகவும், சிறந்த நடிகராகவும் அவர், தனது கதாபாத்திரத்தின் சாரத்தை சிரமமின்றி உட்கிரகித்து ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு வெளிப்பாட்டையும் உணர்வுபூர்வமாகவும், உய்த்துணர்வாகவும் வழங்கி, பார்வையாளர்களை மயக்கி அவர்களை.. அவரது பயணத்துடன் இணைத்துக்கொள்கிறார்.


'வர்ஷங்களுக்கு சேஷம்' படத்தில் நிவின் பாலியை வேறுபடுத்தி காட்டுவது நுணுக்கம் மற்றும் நுட்பத்துடன் கூடிய எண்ணற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன்... முப்பது நிமிடங்களுக்கும் குறைவான திரை தோன்றலில் நிவின்பாலி பார்வையாளர்களை எளிதாக கவர்கிறார். பச்சாதாபம் மற்றும் புரிதல் உணர்வுடன் பார்வையாளர்களை தனது கதாபாத்திரத்திற்குள் உள்ளிழுத்து விடுகிறார். அவர் அந்த கதாபாத்திரத்தின் சிக்கலான தன்மைகளையும், சூழல்களையும் அனாயசமான நடிப்பால் எளிதில் கடந்து செல்கிறார். அவரது கதாபாத்திரத்தின் பாதிப்பு மற்றும் அதன் வலிமையை சம அளவில் வெளிப்படுத்துகிறார். இது பல ஆண்டுகளாக கொண்டாடப்படுவதற்கும், போற்றப்படுவதற்கும், நினைவு கூறப்படுவதற்கும் தகுதியான ஒரு நடிப்பாகத் திகழ்கிறது. 


நிவின் பாலியின் அட்டகாசமான நடிப்புக்கு கூடுதலாக 'வர்ஷங்களுக்கு சேஷம்' வலிமையான மற்றும் அழுத்தமான கதைகளத்தையும், திறமையான சக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் ஒரு ஹைடெக்கான சினிமா அனுபவத்தையும் வழங்குகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம்.. ரசிகர்களிடத்தில் நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

Nivin Pauly – Stealing the spotlight in "Varshangalkku Shesham

 *Nivin Pauly – Stealing the spotlight in "Varshangalkku Shesham"*

The family entertainer, directorial venture by Vineeth Sreenivasan "Varshangalkku Shesham" starring, Nivin Pauly, Pranav Mohanlal, and Dhyan Sreenivasan got released on 11th April. In the vast expanse of Indian cinema, where talent often shines bright, there are few stars that illuminate the screen with such brilliance as Nivin Pauly. His latest outing in "Varshangalkku Shesham" not only reaffirms his status as a powerhouse performer but also elevates the film to new heights of cinematic excellence. The film is a journey through the life of aspiring film makers of 70’s and 80’s. Kodambakkam the hub of cinema lovers, the city that witnessed the success, fame and failure of many film makers is the backdrop of the film.


In the second half of the film we find Nivin Pauly, breathing life into the character with such conviction. Nivin’s portrayal in "Varshangalkku Shesham" is nothing short of mesmerizing. As a superstar and great performer, he effortlessly embodies the essence of his character, infusing every gesture, every expression with raw emotion and authenticity leaving the audience spellbound and emotionally invested in the journey.


What sets Nivin Pauly apart in "Varshangalkku Shesham" is his ability to convey a myriad of emotions with subtlety and nuance. In a screen time lasting less than 30 minutes, Nivin captivated the audience, drawing the audience into the inner turmoil of his character with a sense of empathy and understanding. He navigates through the complexities of the role with ease, revealing the vulnerability and strength of his character in equal measure. It is a performance that deserves to be celebrated, cherished, and remembered for years to come.


In addition to Pauly's stellar performance, "Varshangalkku Shesham" benefits from strong direction, a compelling storyline, and a talented supporting cast. Together, they create a cinematic experience that is both poignant and unforgettable, leaving a lasting impact on the viewer long after the credits roll.

வார்2' படத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம்

 *'வார்2' படத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம் வெளியானது!*


'ஆர்.ஆர்.ஆர்.’ படம் மூலம் பான் இந்திய ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது பாலிவுட்டிலும் மாஸாக அறிமுகமாகிறார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு 'வார்' திரைப்படம் வெளியானது. இதன் சீக்வல் 'வார் 2' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில்தான் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பாலிவுட்டின் முதல் படத்திலேயே வில்லனாக நடிக்கிறார். 


ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸின் (YRF Spy Unvierse) ஒரு பகுதியாக ‘வார்2’ திரைப்படம் இருக்கும். இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கான படப்பிடிப்புத் தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக, அவர் மும்பை வந்துள்ளார். மேலும், ஜூனியர் என்.டி.ஆரை வரவேற்கு விதமாக படத்தில் இருந்து மாஸான அவரின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். இதில் கியாரா அத்வானியும் நடிக்கிறார். படம் 14, ஆகஸ்ட் 2025ல் வெளியாகிறது.

Sivakarthikeyan Productions to release the Heart-warming tale of

 *Sivakarthikeyan Productions to release the Heart-warming tale of ‘Kurangu Pedal’*

 

Actor Sivakarthikeyan’s prestigious banner of Sivakarthikeyan Productions has unwaveringly encouraged, materialized and presented many content-driven films.  It is now delighted to present yet another heart-warming experience to movie aficionados by releasing director Kamalakannan’s ‘Kurangu Pedal’. The film transports viewers back to a nostalgic summer in the 1980s, along the picturesque banks of the river Cauvery in the enchanting districts of Salem and Erode in Tamil Nadu. This heartwarming tale delves into the bond between a determined Son, Maariappan, eager to master the art of cycling, and his Father . 

Inspired by the short story "Cycle" penned by the talented Rasi Azhagappan, this film is a poignant exploration of family dynamics and the pursuit of dreams.Filmmaker Kamalakannan has garnered praise from industry leaders for his innovative approach and distinct style in the realm of filmmaking. Kamalakannan, the director of films like Madhubaanakadai and Vattam, has been honored with prestigious awards throughout his career. In 2012, he was recognized as the Best Debutant Director with a Special Mention at the Aravindan Puraskaram. The following year, he was awarded the title of Best Producer by the Tamil Nadu Progressive Writer's Association. In 2009, he also received the esteemed Best Societal Award from the Coimbatore Rotary Club. His dedication to the art of cinema and his contributions to society have truly set him apart as a visionary in the industry. 

Music director Gibran ever popular for his soulful melodies and mesmerising back ground score has composed soulful music for this film.  His music reflects the world of the kids and his efforts to recreate the sounds of 80s is heard to be believed.  


Santhosh Velumurugan, VR. Ragavan, M. Gnanasekar, Rathish, and Sai Ganesh have been carefully selected to play pivotal roles in this cinematic masterpiece. Renowned child expert Nandakumar, with over 15 years of experience, meticulously trained these young talents for 45 days. Adding to the stellar cast, the talented actor Kaali Venkat shines in a crucial role as the father figure. Prasanna Balachander and Jenson Diwakar, known for their work with Nakkalites, bring depth to their important characters in this film.Technical Crew 


Producer - Sivakarthikeyan, Savitha Shanmugam and SuMee Baskaran

Banner - Sivakarthikeyan Productions

Production - Montage Pictures 

Co-Producer - Sanjay Jayakumar, Kalai Arasu

Music - Ghibran Vaibodha 

Editor - Shivanandeeswaran

Sound - Antony B J Ruban

Cinematography - SuMee Baskaran

Colorist - G Balaji

இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமியின் கவிதை நூல் மாசி வீதியின்

 *இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமியின் கவிதை நூல் மாசி வீதியின் கல்சந்துகள்.*#மாசி_வீதியின்_கல்_சந்துகள் என்ற இத்தொகுப்பினைக் குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இப்படிச் சொல்கிறார்.


இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று

கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு

தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால்

எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவது

தன்னைச் சுற்றிய உலகின் சமகாலப் போக்குகளையும், அபத்தங்களையும் பற்றியது.

பெறுவதும் தருவதும் என்று ஒரு கவிதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள

எல்லாக் கவிதைகளையும் திறக்கும் கடவுச் சொல் இதுவே.


வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்,

பக்கம் : 256

விலை ; ரூ.320 

( GPay / PhonePay 9940446650 )


இந்தியாவுக்குள் அஞ்சல் இலவசம்.

ராக்கிங் ஸ்டார்' யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்

 *'ராக்கிங் ஸ்டார்' யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து உலகளவில் புகழ்பெற்ற காவியமான ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கிறது.*திரைப்படத் துறையில் அனுபவமிக்க பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து  சர்வதேச பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த  கதையாக இப்படம் தயாராகிறது. 


மும்பை, இந்தியா- ஏப்ரல் 22, 2024 -  பொழுதுபோக்கு துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நமித் மல்ஹோத்ராவின் தயாரிப்பு நிறுவனமான பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனமும், 'ராக்கிங் ஸ்டார்' யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து, இந்திய காவியமான இராமாயணத்தை வித்தியாசமான படைப்பு திறனுடன் இந்திய பார்வையாளர்களுக்கு மட்டுமுல்லாமல் சர்வதேச பார்வையாளர்களுக்காகவும் உருவாக்குகிறது. 


தொலைநோக்கு சிந்தனையைக் கொண்ட தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா பல அகாடமி விருதுகளை வென்ற விசுவல் எபெக்ட்ஸ் நிறுவனமான DNEG எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பல ஆண்டுகளாக இந்த தொன்மை வாய்ந்த கதையை பெரிய திரையில் கொண்டு வருவதற்காக பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். உலகளாவிய சூப்பர் ஸ்டார் யாஷ்ஷை சந்தித்து தனது லட்சியங்களை குறித்து விவாதித்திருக்கிறார்.‌ அதன் போது யாஷ்ஷின் உணர்வும் இவருடன் ஒத்திருந்ததை அறிந்தார். மேலும் இரண்டு முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை உலகிற்கு கொண்டு வருவதற்கான லட்சியத்துடன் இருப்பதையும் கண்டுபிடித்தனர். 


பிரபல இயக்குநர் நித்தேஷ் திவாரி-  DNEG நிறுவனத்துடன் இணைந்து, இதுவரை கண்டிராத பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் ஆகியோருடன் இணைந்துள்ளார். இவர்கள் இணைந்து இந்திய புராணங்கள் மற்றும் கதை சொல்லும் மரபுகளில் காலத்தால் அழியாத அணுகுமுறையை உலக அரங்கில் வெளிப்படுத்த... ஒரு மகத்தான பயணத்தை தொடங்கியுள்ளனர். 


இது தொடர்பாக நமித் மல்ஹோத்ரா பேசுகையில், '' அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் பல ஆண்டுகாலம் வாழ்ந்து.. மற்ற நிறுவனங்களை விட கடந்த பத்து ஆண்டுகளில் இணையற்ற வணிக வெற்றியையும், அதிக ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஒரு வணிகத்தையும் உருவாக்கினோம்.‌ எனது தனிப்பட்ட பயணமும் என்னை வழிநடத்தியது. ராமாயணத்தின் வியக்கத்தக்க அளவிலான கதைக்கு நியாயம் வழங்க நான் தயாராக இருக்கிறேன். அதை உரிய கவனிப்புடனும், மரியாதையுடனும் அணுகுகிறேன். 


தொடக்கத்தில் இருந்தே எனது சவால்கள் இரண்டு மடங்குகளாக இருந்தன. ஒரு கதையின் புனித தன்மையை மதிப்பது.. அதனுடன் வளர்ந்த நம் அனைவராலும், இதனை ஆச்சரியப்படும் வகையில் அதை உலகிற்கு கொண்டு வருவது.. இந்தக் கதையை சர்வதேச பார்வையாளர்கள் பெரிய திரை அனுபவமாக ஏற்றுக்கொள்வர். 


நமது கலாச்சாரத்தின் தனித்துவமான சிறந்த விசயங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான ஆசையை... யாஷ்ஷை சந்தித்தபோது அவரிடமும் இருந்ததை நான் உணர்ந்தேன். கர்நாடகாவிலிருந்து 'கே ஜி எஃப் 2' வின் நம்ப முடியாத சர்வதேச வெற்றிக்கான அவரது பயணத்தால் ஈர்க்கப்பட்டு, எங்களின் எல்லா கதைகளிலும் மிகப்பெரிய உலகளாவிய தாக்கத்தை உருவாக்க உதவும் இவரை தவிர, சிறந்த கூட்டாளரை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.


கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் உயிரை சுவாசிக்கும் அவரது மறுக்க முடியாத திறனுடன் யாஷ் ஒரு சர்வதேச அடையாளமாக உருவெடுத்துள்ளார். அவர் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் தீவிர ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு முதல் தனது அனைத்து படங்களின் ஆக்கபூர்வ தயாரிப்பாளராக யாஷ் பல புதுமைகளையும், அனுபவத்தையும் கொண்டு வருகிறார். அவர் ஈடுபடும் ஒவ்வொரு திட்டமும் பார்வையாளர்களிடம் ஆழமான அளவில் எதிரொலிக்கிறது.'' என்றார். 


ராக்கிங் ஸ்டார் யாஷ் பேசுகையில், '' இந்திய சினிமாவை உலக அளவில் வெளிப்படுத்தும் வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் ஆசை. அதை  நான் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சிறந்த வி எஃப் எக்ஸ் ஸ்டுடியோக்களில் ஒன்றுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தேன். இந்நிறுவனத்தின் பின்னணியில் சக இந்தியர் ஒருவர் இருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. நமித் மல்ஹோத்ராவும், நானும் சந்தித்து, பல்வேறு அமர்வுகளில் பல கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். இதன் போது தற்செயலாக இந்திய சினிமாவுக்கான தொலைநோக்குப் பார்வையில் எங்களின் கருத்தாக்கம் சரியாக இணைந்தது. நாங்கள் பல்வேறு திட்டங்கள் குறித்து தீவிரமாக விவாதித்தோம். இந்த விவாதங்களின் போது ராமாயணமும் இடம்பெற்றது. நமித் தன்னுடைய வேலைக்கான அட்டவணைகளில் இதனை ஒரு பகுதியாக கொண்டிருந்தார். ராமாயணம் ஒரு பாடமாக என்னுடன் ஆழமாக எதிரொலிக்கிறது. அதற்காக என் மனதில் ஒரு அணுகுமுறையும் இருந்தது. ராமாயணத்தை இணைந்து தயாரிப்பதற்கான குழுவில் இணைவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடையே உற்சாகத்தையும், ஆர்வத்தையும் தூண்டும் ஒரு இந்திய திரைப்படத்தை உருவாக்கும் எங்களது கூட்டுப் பார்வை மற்றும் அனுபவத்தை ஒன்றிணைத்திருக்கிறோம். 


ரசிகர்களை ஆர்வத்துடன் உற்சாகப்படுத்தும் படைப்பு மற்றும் சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது.மேலும் அனுபவமிக்க இரண்டு தயாரிப்பாளர்களும் இப்படத்திற்காக இணைந்திருக்கின்றனர். 


நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் தயாரிப்பில், நித்தேஷ் திவாரி இயக்கத்தில், ராமாயணம் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகிறது.


இது தொடர்பாக நமித் மல்ஹோத்ரா கூறுகையில், '' இதுவரை எந்த திரைப்படமும் சாதிக்க முடியாத வகையில் இந்திய கலாச்சாரத்தை உலகிற்கு முன் வைக்கும் இந்திய படம் இது. கடந்த 30 வருடங்களாக ஒரு கேரேஜ் ஸ்டார்ட் அப்பை அதன் துறையில் உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான நிறுவனமாக உருவாக்கி வரும் மூன்றாம் தலைமுறை திரைப்பட தயாரிப்பாளராக எனது அனுபவங்கள் அனைத்தும் இந்த தருணத்திற்கு இட்டுச் சென்றதாக உணர்கிறேன். நமது வியாக்கியானம் சமரசமின்றி சொல்லப்பட்டு, இந்திய இதயங்கள் தங்கள் கலாச்சாரத்தை இப்படி உலகம் முழுவதும் கொண்டு வருவதை கண்டு பெருமிதம் கொள்ளும் வகையில் இப்படம் தயாராகும். இந்த காவிய கதையை அக்கறையோடும், கவனத்தோடும், உறுதியோடும் சொல்ல எங்களது திரைப்படத் தயாரிப்பாளர்கள்- நட்சத்திரங்கள்- தொழில்நுட்ப குழுவினர்கள் -முதலீட்டாளர்கள்.. வரை உலகில் மிகச்சிறந்த திறமையாளர்களை சேகரித்து வருகிறோம். நாங்கள் ராமாயணத்தை திரைப்படமாக உருவாக்குவதைப் பற்றி நான் ஆச்சரியப்படும் அளவிற்கு பெருமிதம் கொள்கிறேன். மேலும் உலகெங்கிலும் உள்ள சினிமா திரைகளில் சிறந்த இந்திய கலாச்சாரம் மற்றும் கதை சொல்லலை சர்வதேச பார்வையாளர்கள் விரைவில் அனுபவிப்பார்கள்.'' என குறிப்பிட்டார். 


''ராமாயணம் நம் வாழ்வில் பின்னப்பட்டிருக்கிறது. எங்களுக்கு அது நன்றாகத் தெரியும் என்று நம்புகிறோம். ஆனாலும் இராமாயணத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும் போது புதிய ஞானத்தை வெளிப்படுத்துகிறது. புதிய அறிவை தூண்டுகிறது. தனித்துவமான பார்வைகளை வழங்குகிறது.'' என குறிப்பிடும் யாஷ் தொடர்ந்து பேசுகையில், '' என்றும் சிரஞ்சீவி தன்மையுடன் இருக்கும் இந்த காவியத்தை வெள்ளி திரையில் பிரம்மாண்ட காட்சி மொழியாக மொழிபெயர்த்து அதன் அளவை... அதன் வீரியத்தை... அதன் அடர்த்தியை... கௌரவிப்பதே எங்கள் நோக்கம். அதன் மையத்தில் இது கதை, உணர்ச்சிகள் மற்றும் நாம் விரும்பும் நிலையான மதிப்புகளின் நேர்மையான மற்றும் உண்மையுள்ள சித்தரிப்பாக இருக்கும். இது ராமாயணத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு பயணம். படைப்பாற்றல், துணிச்சலான ஆய்வு மற்றும் எங்களின் உறுதிப்பாட்டின் சான்றாகும். மேலும் இதன் போது எங்களுடைய நேர்மையான கதை சொல்லும் உத்தியும், உறுதியான நிலைப்பாடும் இடம்பெறும்.‌ '' என்றார். 


பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோ பற்றி....


தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தலைமையில் இயங்கும் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோ- ஒரு சுயாதீன திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம், புதுமையான மற்றும் அற்புதமான உலகளாவிய உள்ளடக்கத்தை உருவாக்குவதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. 


பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோ தற்போது மூன்று பெரிய மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இந்திய காவியமான இராமாயணம் எனும் திரைப்படத்தை 'ராக்கிங் ஸ்டார்' யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனத்துடனும், 'அனிமல் ஃபிரண்ட்ஸ்' எனும் திரைப்படத்தை லெஜன்ட்ரி எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ரியான் ரெனால்ட்ஸின் தயாரிப்பு நிறுவனத்துடனும், அனிமேட்டட் திரைப்படமான 'கார்ஃபீல்ட்' எனும் திரைப்படத்தை சோனி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்திற்காக அல்கான் என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடனும் இணைந்து தயாரித்து வருகிறது. 


மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பற்றி...


'ராக்கிங் ஸ்டார்' யாஷ் தொடங்கி இருக்கும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் - ஒரு சுயாதீன திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் படைப்பாற்றல் திறன்களை வளர்ப்பதற்கும், வித்தியாசமான உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது. 


இந்நிறுவனம் தற்போது இரண்டு பெரிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது. 'டாக்ஸிக் -  எ ஃபேரி டேல் ஃபார் க்ரௌன்- அப்ஸ்' எனும் திரைப்படத்தை கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. மேலும் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து 'ராமாயணம்' படத்தை தயாரிக்கிறது.

Rocking Star Yash’s Monster Mind Creations

 *Rocking Star Yash’s Monster Mind Creations and Namit Malhotra’s Prime Focus Studios Join Forces To Produce Global Epic Ramayana**Filmmaking powerhouses collaborate to bring ‘the greatest story ever told’ to audiences worldwide*MUMBAI, INDIA – April 22nd, 2024 – In a groundbreaking collaboration that has set the entertainment industry abuzz, Namit Malhotra’s production company Prime Focus Studios and Rocking Star Yash’s Monster Mind Creations have joined forces to create the definitive version of epic Indian saga Ramayana for global audiences. 


Visionary producer Namit Malhotra, who is also the Global CEO of multiple Academy Award-winning visual effects company DNEG, has been developing his plans to bring this age-old tale to the big screen for several years. In discussing his ambitions with global superstar Yash, Namit found a kindred spirit and the two filmmaking powerhouses quickly discovered a shared ambition to bring India’s rich cultural heritage to the world.  


Together with renowned director Nitesh Tiwari, and with DNEG onboard to deliver a never-before-seen visual cinematic experience, Namit and Yash have embarked on a monumental journey to showcase the timeless appeal of Indian mythology and storytelling traditions on the world stage.


Namit Malhotra said: “After years spent living between the US, the UK, and India, building a business that has achieved unparalleled commercial success and more Oscar wins in the last ten years than any other company, my personal journey has led me to the point that I feel ready to do justice to the incredible story of Ramayana, treating it with the due care and reverence that it deserves.” 


“My challenges from the start have been two-fold: to respect the sanctity of a tale which is held in such high regard by all of us who grew up with it, while also bringing it to the world in such a way that this incredible story is embraced by international audiences as a compelling big screen experience,” continued Namit. “In Yash I recognise a similar aspiration to share the best of our culture with the world. Inspired by his journey from Karnataka to the incredible international success of K.G.F: Chapter 2, I can’t think of a better partner to help create a major global impact with this, the greatest of all our stories.”With his undeniable ability to breathe life into characters and stories, Yash has emerged as a global icon, garnering a fervent fanbase both in India and internationally. As a creative producer of all of his films since 2014, Yash brings a wealth of innovation and experience, ensuring that every project that he is involved with resonates with audiences on a profound level.


Yash said: “It has been my long-term aspiration to make films that will showcase Indian cinema on a global level. In pursuit of that, I was in LA to ally with one of the best VFX studios, and to my amazement, the driving force behind it was a fellow Indian.

Namit and I had various ideation sessions, and coincidentally, our synergy on the vision for Indian cinema aligned perfectly. We brainstormed various projects, and during these discussions, the subject of Ramayana came up. Namit had a part of it in the works; Ramayana, as a subject, deeply resonates with me and I had an approach in my mind for it. By joining forces to co-produce Ramayana we are bringing together our collective vision and experience to create an Indian film that will ignite excitement and passion in audiences across the world.” 


Together, the two producers epitomize the perfect blend of creative and technical excellence and experience that is getting fans eagerly excited for this ambitious and exciting production. With Namit Malhotra and Yash at the helm and Nitesh Tiwari in the director’s chair, Ramayana is shaping up to be an unforgettable cinematic experience.


“This is an Indian film presenting Indian culture to the world in a way that no other film has ever been able to achieve,” added Namit Malhotra. “As a third-generation filmmaker who has spent the last thirty years building a garage start-up into the world’s largest and most celebrated company in its field, I feel that all of my experience has been leading to this moment. Our interpretation will be told without compromise and presented in such a way that Indian hearts will swell with pride to see their culture brought to the rest of the world in this way. We are assembling the very best global talent - from our filmmakers, to our stars, to our crews, to our backers and investors - to tell this epic story with the care, attention, and conviction that it deserves. I am incredibly proud of what we are creating, and I cannot wait for the world to experience the very best of Indian culture and storytelling on cinema screens across the globe.” “Ramayana is woven into the fabric of our lives. We believe we know it well, yet each encounter unveils fresh wisdom, ignites new knowledge, and offers unique perspectives,"concludes Yash. “Our vision is to translate this timeless epic onto the silver screen in a grand spectacle, honouring its scale. But at its core, it will be an honest and faithful portrayal of the story, the emotions, and the enduring values we hold so dear. This is a journey to share the Ramayana with the world, a testament to our commitment to creative exploration, bold visions, and honest storytelling."


****


About Prime Focus Studios


Led by producer Namit Malhotra, Prime Focus Studios is an independent production company dedicated to the creation of innovative and exciting global content.


Prime Focus Studios is currently co-producing three major motion pictures: Indian epic Ramayana with Rocking Star Yash’s Monster Mind Creations; Animal Friends with Legendary Entertainment and Ryan Reynolds’ production company Maximum Effort; and the forthcoming animated movie Garfield, with Alcon Entertainment for Sony Pictures.   About Monster Mind Creations


Founded by Rocking Star Yash, Monster Mind Creations is an independent production house dedicated to nurturing creative talent and bringing forth exceptional content.


Monster Mind Creations is currently co-producing two major films: "Toxic: A Fairy Tale for Grown-Ups" in collaboration with KVN Productions and "Ramayana" alongside Prime Focus Studios.

Thursday 11 April 2024

ORU NODI’ – First Tamil Film to release TEASER and TRAILER on

 *‘ORU NODI’ – First Tamil Film to release TEASER and TRAILER on the same day in two different mediums*


Stylish actor ARYA released today the TEASER of the film ‘ORU NODI’, presented by G. Dhananjeyan, of Creative Entertainers and Distributors (CEAD). CEAD is known for producing films like ‘Kaatrin Mozhi’ and has distributed theatrically super hit films ‘Ivan Thanthiran’, ‘Kolaigaran’ and ‘Kodiyil Oruvan’.  CEAD is also involved in releasing films digitally and has released several films in popular OTT platforms including titles like ‘Irudhi Pakkam’, ‘Kayamai Kadakka’, ‘The Parole’, ‘Erumbhu’ ,‘Mathimaran’ and recently ‘Marakkuma Nenjam’.


While the Teaser is released today online by Saregama Music company, for the first time in Tamil Cinema, the TRAILER of the film is released simultaneously in over 150 screens across Tamil Nadu. The objective of the release of two different formats is to give a glimpse of the film through teaser to online audiences and give a complete view on the film through a trailer to theatrical audience, two weeks prior to the film’s release.

‘Oru Nodi’ promises something special and a new kind of cinematic experience to audience. It features Thaman Kumar in the lead role, who received appreciation for his film as Hero in ‘Thottal Thodarum’ and also featured in a good role in films like ‘Ayothi’. The film is a debut directorial venture of B. Manivarman and produced by Madurai Azhagar Production Company and White Lamp Pictures.


‘Oru Nodi’, promises to be a ground-breaking addition to Tamil cinema and boasts an impressive cast, including Thaman Kumar, M. S. Bhaskar, Vela Ramamoorthy, Pala. Karuppiah, Deepa Shankar, and Siva Ranjini in pivotal roles. The cinematography is skilfully handled by KG Ratheesh, with SJ Ram overseeing the film's art direction. The debut Music Director, Sanjay Manickam, and Editor S Guru Suriya have proficiently contributed to the film.


‘Oru Nodi’ introduces a new genre to Tamil audiences, showcasing the love and sincerity of a new-age producer, a fresh director, a budding actor supported by an eminent film producer converging to create a new era of mystery crime thriller in Tamil cinema. The film promises intense knots of mystery and well-placed scenes.


‘Oru Nodi’ is currently under censor certification process and the release date is fixed by the team as 26th April. PVR Cinemas is releasing the film in City-Chenglepat areas, Popular Exhibitor Shri Tirupur Subramaniam is releasing in Coimbatore territory. In Overseas territory, TentKotta is distributing the film. The distributors of other territory to be finalized in due course. The audio launch of the film is scheduled in the coming days.

With ‘Oru Nodi’, the audiences can look forward to a captivating story that will grab their attention and meet their expectations.

PRO: Sri Venkatesh


https://youtu.be/Z1XyH-vBmiA

ஒரே நாளில் டீசர் மற்றும் டிரைலரை வெளியிட்ட ஒரு நொடி

 *ஒரே நாளில் டீசர் மற்றும் டிரைலரை வெளியிட்ட ஒரு நொடி படக்குழுவினர் இரண்டு வெவ்வேறு தளங்களில் டீசர் மற்றும் டிரைலரை வெளியிட்ட ‘ஒரு நொடி’ பட குழுவினர்*


அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் டீசரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தின் டீசர் சரிகமா மியூசிக் நிறுவனத்தால் இன்று YouTube வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தின் ட்ரைலரும் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் ஆன்லைன் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு ரசிகர்களை இரண்டு விதங்களில் ஒருசேர கவர முடியும் என்பதே நோக்கம் ஆகும். 


பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். தயாரிப்பு மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ்.


வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் ‘ஒரு நொடி’ படத்தில் ‘தொட்டால் தொடரும்’ பட நாயகனும் ‘அயோத்தி’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவருமான தமன் குமார் முற்றிலும் புதிய பாத்திரம் ஒன்றில் நாயகனாக நடிக்க, அவருடன் எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர்,  ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். ஒளிப்பதிவு இயக்குநராக கே.ஜி.ரத்தீஷ் பொறுப்பேற்க, கலை இயக்குனர் பணியை  கவனிக்கிறார் எஸ்.ஜே. ராம். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கமும் படத்தொகுப்பாளர் எஸ் குரு சூர்யாவும் படத்துக்கு தங்கள் பங்களிப்பை பலமாக செய்திருக்கிறார்கள். 


முதல் படத்திலேயே முத்திரை பதிக்க விரும்பும் இயக்குநர், ஆர்வமும் நேர்மையும் மிக்க புதிய தயாரிப்பாளர், வளர்ந்து வரும் இளம் நடிகர் பட்டாளம் என்று ஆர்வம் மிக்க  இந்தக் கூட்டணி 'ஒரு நொடி' படத்தின் மூலம் திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதை ஒன்றை புதிய கோணத்தில் சொல்லக் காத்திருக்கிறது. ரசிகர்கள் யூகிக்க முடியாத மர்ம முடிச்சுகள் படத்தின் இன்னொரு பலம்.


'ஒரு நொடி' படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் முழுமையடைந்து, சென்சார் சான்றிதழ்காக காத்திருக்கிறது. இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தை சென்னை மற்றும் செங்கல்பட்டில் பி.வி.ஆர். சினிமாஸ் நிறுவனமும், கோயபத்தூரில் திருப்பூர் சுப்ரமணியமும், வெளிநாடுகளில் டென்ட்கொட்டா நிறுவனமும் வெளியிடுகின்றனர். இப்படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிட இருக்கிறார்கள்.


ஒரு நொடி படத்தின் கதை ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


https://youtu.be/Z1XyH-vBmiA

தென்னிந்திய நடிகர் திரு. ராம் சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது

 தென்னிந்திய நடிகர் திரு. ராம் சரணுக்கு  கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.
திரு ராம் சரண் அவர்கள் மெகா ஸ்டார் என மக்களால்  கொண்டாடப்படும் நடிகர் திரு சிரஞ்சீவி திருமதி. சுரேகா சிரஞ்சீவி அவர்களுக்கு மகனாக 1985 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிறந்தார்.  புகழின் வெளிச்சம் தன் மகன் மீது படாமல் இருக்க ராம் சரணை சென்னையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் படிக்க வைத்தார். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு கல்லூரியில் சேர்ந்தார் ராம் சரண். கல்லூரி நாட்கள் தொட்டே  திரைத்துறை மீது பேரார்வம் கொண்டிருந்தார்.


தன்னை தேர்ந்த நடிகராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் குதிரையேற்றம், நடனம் உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என அனைத்தையும் நன்கு கற்றுத் தேர்ந்தார். திரு. ராம்சரண் அவர்கள் 2007 ஆம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் அறிமுகமானார்.

அந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.


தொடர்ந்து ராஜமௌலி  இயக்கத்தில் மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்தார். அதுவும் மாபெரும் வெற்றியை பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். நடிகர் என்றதோடு மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், சமூக சேவகர், தொழில் முனைவோர் என்று பல அவதாரங்களை எடுத்தார்.


2022 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்தியாவை தாண்டி ஜப்பான் முதலான உலக நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.  மக்கள் மத்தியில் மெகா பவர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வந்தார். 


மகதீரா மற்றும் சிறுத்தை ஆகிய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக  இவருக்கு பிலிம் பேர் மற்றும் காமதேனு  விருதுகள் வழங்கப்பட்டன. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில்  சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும் நாட்டுக்கூத்துப் பாடலுக்கு ஆஸ்கர் விருதும் பெற்று உலகப்புகழ் அடைந்தார். 


போர்ப்ஸ் இதழின் சிறந்த 100 செலப்ரிட்டி பட்டியலில் இவரும் இடம்பிடித்தார். திரைத்துறையைத் தாண்டி சமூக சேவையில் தன் தந்தையுடன் இணைந்து பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டார். 


ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர், குண்டூர் என பல மாவட்டங்களை தாண்டி தெலுங்கானா மாநிலம் வரை தொண்டு செய்ய தன்னார்வ அமைப்புகளை தொடங்கினார். இரத்ததான முகாம்கள் பலவற்றை நடத்தியுள்ளார்.  கொரோனா காலத்தில் மக்களுக்கு மிகவும் தேவையாக இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வரை இலவசமாக தேவைப்படுவோருக்கு வழங்கியுள்ளார். திரைத்துறை, சமூகநலன் சார்ந்த பணி ஆகியவற்றில் இவரது சேவையைப் பாராட்டி இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் பெருமை கொள்கிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.  


All about Vels University


1992 ஆம் ஆண்டில் வெறும் 36 மாணவர்களுடன் டாக்டர் ஐசரி.கே.கணேஷ் அவர்களால் தொடங்கப்பட்ட கல்வி நிலையம் தற்போது 43 கல்வி நிறுவனங்கள் 42 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 7 ஆயிரத்து 500 ஊழியர்களுடன்  வேல்ஸ் குழுமம் கல்வி சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.  தமிழ்நாடு கடந்து ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், தில்லி மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பல் மருத்துவம், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை வேல்ஸ் கல்விக் குழுமம் நிர்வகித்து வருகிறது. 


மேலும், சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளிலும் பள்ளிகளை நிறுவி உலக நாடுகளில் பெருமையுடன் பயணித்து வருகிறது வேல்ஸ் கல்விக் குழுமம்.

Vels University honors South Indian Mega Star Ram Charan with Doctor of

Vels University honors South Indian  Mega Star Ram Charan with Doctor of Literature (Honoris Causa)

Vels University, known for its commitment to academic excellence and social service, is proud to confer an honorary doctorate degree to Mr. Ram Charan, the acclaimed South Indian actor, in recognition of his outstanding contributions to the film industry and society at large.


Mr. Ram Charan, born on March 27, 1985, is celebrated as a prominent figure in the South Indian film industry. The son of esteemed actor Thiru. Siranjeevi and Thirumathi. Surekha Siranjeevi, he embarked on his journey into the world of cinema with a passion for acting deeply ingrained in him from a young age. After completing his schooling at a prestigious institution in Chennai, he pursued higher education while nurturing aspirations for a career in the film industry. His dedication and commitment to honing his craft led him to make his debut in 2007 with the film "Chirutha," which was met with resounding success, marking the beginning of a remarkable journey.

Mr. Ram Charan's stellar performance in Rajamouli's "Magadheera" catapulted him to superstardom,  nationally, earning him widespread acclaim and adulation. Beyond his accomplishments as an actor, Mr. Ram Charan has diversified his interests, venturing into film production, social service, and entrepreneurship. His versatility and multifaceted talents have garnered him numerous awards and accolades, including recognition as a Mega Star by his fans.

In 2022, Mr. Ram Charan achieved yet another milestone with the release of "RRR," a film directed by Rajamouli, which not only captivated audiences in India but also garnered global recognition, firmly establishing him as a force to be reckoned with in the world of cinema.

His contributions extend beyond the realm of entertainment, as Mr. Ram Charan actively engages in social service initiatives, working alongside his father to uplift and empower communities across various regions, from Andhra Pradesh to Telangana. Particularly noteworthy is his philanthropic efforts during the COVID-19 pandemic, where he provided free oxygen cylinders to those in need, exemplifying his commitment to serving humanity.

Vels University, known for its dedication to academic excellence and societal welfare, is honored to recognize Mr. Ram Charan's exemplary achievements and contributions. By conferring upon him the honorary doctorate degree, the university acknowledges his stellar achievements in the film industry and his unwavering commitment to social service, inspiring countless individuals to pursue their dreams while making a positive impact on society.


All about Vels 

In 1992, the seedling of the pharmacy college was sown by Dr. Ishari K Ganesh, M.Com, MBA, B.L, (M.L), Ph.D, and that seed has grown into 43 educational institutions (Including two medical colleges, two dental colleges, two Nursing college) with 42 thousand students and 7 thousand 500 hundred employees, significantly transforming into a prestigious institution The VELS Groups.

Vels Institution stands as a testament to vision and commitment. The ethos of Vels is rooted in its core mission: to forge new pathways of learning and to empower individuals towards self-reliance. With a steadfast dedication to quality education and holistic development the vels has become a beacon of opportunity for countless students and educators alike.Through its diverse educational initiatives, Vels continues to inspire and uplift communities, fostering a culture of excellence and innovation. As we commemorate our journey thus far, we reaffirm our commitment to shaping a brighter future for generations to come.