Featured post

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி

 *பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி மூவீஸின் கல்கி 2898 AD திரைப்படம்  1000 கோடி  வசூலைக் கடந்து வரலாறு படைத்துள்ளத...

Tuesday 31 January 2023

அமரீகம் துபாயில் தமிழர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழா

 *அமரீகம் துபாயில் தமிழர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழா.* 


*விழாவில் இயக்குநர்/கவிஞர் சீனு ராமசாமி  எழுதிய "புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை" கவிதை புத்தகம் அறிமுகம்.*துபாய் தமிழ் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் வரவேற்பு ஆற்றினார். 

1330 திருக்குறள் படி, 1330 பேர் பொங்கல் விட்டு, நேர்மை சுடர் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் முன்னிலையில், வி.ஐ.டி பல்கலைகழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் தேசிய விருது பெற்ற இயக்குநர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதிய சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற 

"புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை" என்ற  கவிதை புத்தகம் அறிமுகம் நடைப்பெற்றது. 


அவ்விழாவில் மாஸ் ஈவென்ட்ஸ் திரு முருகேசன் நன்றி உரைத்தார்.

Poducerbazaar.com in association with BetterInvest.club launches a new

Poducerbazaar.com in association with BetterInvest.club launches a new initiative to provide funding to Production houses based on sale contracts of OTT, Audio label, Web Series, Tele Serials and Satellite TV Networks*


It is a common practice for OTTs and Audio labels to pay the money in installments to producers after signing an agreement with them to acquire the relevant rights of their movies, web series, tele serials etc. Television networks buying the satellite rights of films have also started following this method. The practice of paying in multiple tranches is also set to be adapted for the sale of Television serials and web series in near future. 


The pain point Production houses face because of this deferred payments is that, the Production houses require funds at present to complete the projects in their pipeline. To add upon this, availability of structured finance in Media & Entertainment space is very minimal. 


To overcome this and help Production houses, ProducerBazaar.com (formerly Oracle Movies) has partnered with a new-age financial entity called BetterInvest.club to launch a new initiative.

 

Through this initiative, the Production house who has signed an agreement with the Rights buyer (OTTs, Audio labels, Satellite TV Networks) will be provided immediate financing within 7 to 10 working days. Also, BetterInvest discounts the sale agreements between the Production houses and the Rights buyer without demanding any assets as collateral. 


ProducerBazaar.com and BetterInvest.club have started this funding facility for producers in other languages including Telugu, Malayalam, Kannada and Marathi as well. So far 4 Tamil movies have been financed in this way.


Talking about this unique venture, Pradeep Somu, founder and CEO of BetterInvest.club, said, "Structured financing is still not accessible for the Media and Entertainment Industry. We, at BetterInvest, provide bridge capital to Production houses by discounting sale contracts of OTTs, Audio labels and Satellite TV Networks at a nominal interest rate. This is set to change how the Media and Entertainment industry has been financed and helps Production houses with better control over their business.”


GK Tirunavukarasu, Co-Founder, ProducerBazaar.com, said, "Producers have to deal with various financial constraints between one project and the next, resulting in delays in the release of project and monetization of the same. This new initiative will be a huge boon to all Producers." 


Production houses with a pipeline of movies, web series, television serials and have signed contracts with OTTs, Audio labels, Satellite TV Networks can now avail the services of BetterInvest.club and ProducerBazaar.com, to effectively manage the working capital requirements.


It is noteworthy that Producerbazaar.com, which was jointly started by tech expert Senthil Nayagam and Tirunavukarasu, is involved in various activities for the development of the film industry.

ஓடிடி ஒப்பந்தங்கள் அடிப்படையில் திரைப்படம், வெப் சீரிஸ், தொலைக்காட்சி

ஓடிடி ஒப்பந்தங்கள் அடிப்படையில் திரைப்படம், வெப் சீரிஸ், தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்களுக்கு நிதி உதவி செய்ய புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கும்*

*ProducerBazaar.com மற்றும் BetterInvest.club* 

ஓடிடி தளங்கள் அல்லது இசை நிறுவனங்கள் உடன்  ஒப்பந்தம் செய்யும் பொழுது அதற்கான தொகையை தவணை முறையில் வழங்குவது திரைத்துறையில் பின்பற்றப்பட்டு வரும் வழக்கம் ஆகும். திரைப்பட ஒளிபரப்பு உரிமையை வாங்கும் தொலைக்காட்சி நிறுவனங்களும் இப்போது இந்த முறையை பின்பற்ற ஆரம்பித்துவிட்டன. இதனால் திரைப்பட, வலைத்தொடர் (web series) மற்றும் தொலைக்காட்சி தொடர் உள்ளிட்டவற்றின் தயாரிப்பாளர்களின் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வெளிவருவதற்கு நிதி ரீதியாக தாமதமாகும் சூழல் ஏற்படுகிறது.


இந்த சிக்கலை தயாரிப்பாளர்கள் எதிர்கொண்டு தொடர்ந்து அவர்கள் தயாரிப்பில் ஈடுபட உதவும் வகையிலும், முறைப்படுத்தப்பட்ட கடன் வசதி போதிய அளவில் திரை உலகில் இல்லை என்பதை கருத்தில் கொண்டும் ProducerBazaar.com (முன்னதாக OracleMovies) BetterInvest.club என்கிற நிதி நிறுவனத்துடன் கை கோர்த்து ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. 

 

இந்த முயற்சியின் மூலம் ஓடிடி தளம், இசை நிறுவனம் அல்லது தொலைக்காட்சி சேனலுடன்  ஒப்பந்தம் செய்துள்ள தயாரிப்பாளருக்கு 7 முதல் 10 நாட்களுக்குள் நிதி வழங்கப்படும். இந்த நிதியை பெறுவதற்கு எந்த ஒரு பிணையும் தேவை இல்லை. மேற்கண்டவற்றுடன் தயாரிப்பு நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தம் மட்டுமே போதுமானது. 


தற்போது வரை 4 படங்களுக்கு இவ்வாறு நிதி உதவி செய்யப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பிற மொழி தயாரிப்பாளர்களுக்கும் நிதி வழங்கும் வசதியை ProducerBazaar.com மற்றும் BetterInvest.club துவங்கியுள்ளனர். 


இந்த முயற்சி குறித்து, BetterInvest.club நிறுவனர் பிரதீப் சோமு கூறுகையில், "மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கு முறைப்படுத்தப்பட்ட நிதியுதவி கிடைப்பதில்லை. பெட்டர்இன்வெஸ்டில், ஓடிடிகள், ஆடியோ லேபிள்கள் மற்றும் சேட்டிலைட் நெட்வொர்க்குகள் உடன் தயாரிப்பாளர்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள் அடிப்படையில் தயாரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் நிதி வழங்குகிறோம். திரைப்படத் துறைக்கு நிதியளிக்கப்பட்டு வந்த விதத்தை இது மாற்றி அமைப்பதோடு தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வணிகத்தின் மீது சிறந்த கட்டுப்பாட்டை வைத்திருக்க உதவுகிறது," என்றார். 


ProducerBazaar.com நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜி கே திருநாவுக்கரசு கூறுகையில், "திரைப்படங்கள் முடிவடையும் தருவாயில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு பணத் தட்டுப்பாடு ஒரு தடையாக இருந்து வருகிறது. பல படங்களை அடுத்தடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களிடமும் இது காணப்படுகிறது. பெட்டர்இன்வெஸ்டின் இந்த திட்டம் தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களின் வணிகங்களை திட்டமிடுவதற்கு சுதந்திரத்தை வழங்குகிறது," என்று தெரிவித்தார். 


தொழில்நுட்ப வல்லுநர் செந்தில் நாயகம் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் இணைந்து தொடங்கியுள்ள ProducerBazaar.com திரைத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.Monday 30 January 2023

அதிரடியில் மிரட்டும் நேச்சுரல் ஸ்டார் நானியின்

 அதிரடியில் மிரட்டும் நேச்சுரல் ஸ்டார் நானியின்  "தசரா" திரைப்பட டீசர் !!


இந்தியத் திரை பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர்,  நேச்சுரல் ஸ்டார் நானி, ஸ்ரீகாந்த் ஒதெலா, சுதாகர் செருகுரி, SLV சினிமாஸின் "தசரா" படத்தின்  ரத்தமும் சதையுமான அதிரடி   டீசரை வெளியிட்டனர்

உலகின் மக்கள் அனைவரும் எளிதில் உணர்ந்துகொள்ளும் வகையிலான உணர்வுகளைப் பேசும் படம் மொழிகளைக் கடந்து ஜெயிக்கிறது. உணர்வுகளை ஆழமாகப் பேசும் மண் சார்ந்த திரைப்படமானது எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும்போது அது அனைத்திந்தியர்களுக்கான படமாக மாறிவிடுகிறது. நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகி வரும் "தசரா" அதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. ரத்தமும் சதையுமாக ஒரு மண் சார்ந்த வாழ்வைக் காட்டும் தசரா படத்தின் டீசரை,  இந்தியத் திரை பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர்,  துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் வெளியிட்டனர்.தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும்  தசரா திருவிழா, இந்தியா முழுவதும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது.  இந்த  கொண்டாட்டங்களில் ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பது ஒரு பகுதி. இந்த  தசரா திரைப்படம் தீமைக்கெதிரான நன்மையின் வெற்றியை சித்தரிக்கும். இந்தியாவெங்குமுள்ள அனைத்து பார்வையாளர்களையும் கவரும் வகையில் அசத்தலாக இருக்கிறது தசரா டிரெய்லர்.


நடிகர்களின் முழுமையான மாற்றம் மற்றும் நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் மக்களின் உலகத்தை,  அவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களைக் காட்டுவது என, தசரா  டீஸர் ஒரு புதிய அனுபவத்தை வழங்குகிறது. முதல் பிரேமில் தரணி (நானி) ஒரு பெரிய ராவணன் சிலைக்கு முன்னால் நிற்பது  காட்டப்படுகிறது. தெலுங்கானாவின் கோதாவரிக்கானி சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள வீரலப்பள்ளி கிராமத்தில் நடக்கும் கதை.  சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கத்தில் உள்ள மக்கள் கஷ்டத்தை மறக்க  மது அருந்துவது வழக்கம். அந்த மக்களின் வாழ்க்கை வண்ணமயமாக இல்லை. அங்கு வாழும் தரணியின் உலகம் மிகவும் காட்டுத்தனமானது. சில தீய சக்திகள் கிராமத்தில் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் போது தரணியின் கோபம் பொங்கி எழுகிறது.


இந்தப் படம் நடிகர் நானியின் படமட்டுமல்ல,  இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலாவின் கனவுப்படைப்பு.  இருவருமாக இணைந்து ஒரு பிரம்மாண்டமான படைப்பை நமக்குத் தந்துள்ளார்கள். ஸ்ரீகாந்த் ஒதெலாவின் உருவாக்கம்  ஒரு அறிமுக இயக்குநரைப் போல் இல்லை. காட்சி மற்றும் கதை சொல்லும் பாணி  கதாநாயகன் மற்றும் எதிரிகள் பங்குபெறும் ஆக்சன் காட்சிகள் அனைத்தும் மிரட்டலாக உள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் அசத்தலாக முன்னெப்போதும் பார்த்திராத அனுபவத்தைத் தருகிறதுடீஸர் உண்மையில் ஒரு புதிய உலகைக் காட்டுகிறது.  நானியின் வெறித்தனத்தனமான தோற்றம், அவருடைய குணாதிசயம்,  பேச்சு, பாவனை, உடல்மொழி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நானி கத்தியின் குறுக்கே விரலை வைத்து நெற்றியில் ரத்தம் பூசுவது அவரது கலக மனப்பான்மையைக் காட்டுகிறது.  ஷைன் டாம் சாக்கோவும் சாய் குமாரும் நெகட்டிவ் வேடங்களில் தோன்றியுள்ளனர்.  


ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ISC யின் தலைசிறந்த ஒளிப்பதிவில், சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கத்தின் நிலத்திற்குள் நாமே நுழைந்தது போல் உள்ளது.  ரகிதா ரகிதாவின் ஒலி அமைப்புடன், சந்தோஷ் நாராயணனின் துடிப்பான பின்னணி இசை காட்சிகளை வேறொரு நிலைக்கு உயர்த்துகிறது. எடிட்டர் நவின் நூலி உடைய டீஸர் கட் சிறப்பாக உள்ளது.  SLV சினிமாஸின் பிரமாண்ட தயாரிப்பு நம்மை மிரளச் செய்கிறது. படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக அவினாஷ் கொல்லா, நிர்வாக தயாரிப்பாளராக விஜய் சாகந்தி பணியாற்றுகின்றனர்.  


இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்துகிறது.“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 மார்ச் 2023 வெளியாகிறது.


நடிகர்கள் : நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய் குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர்.


தொழில்நுட்பக் குழு: 


இயக்கம் - ஸ்ரீகாந்த் ஒதெலா

தயாரிப்பு -  சுதாகர் செருகுரி

தயாரிப்பு நிறுவனம் - ஸ்ரீ லக்‌ஷ்மி  வெங்கடேஸ்வரா சினிமாஸ்

ஒளிப்பதிவு -  சத்யன் சூரியன் ISC 

இசை - சந்தோஷ் நாராயணன் 

எடிட்டர் - நவின் நூலி 

தயாரிப்பு வடிவமைப்பாளர் - அவினாஷ் கொல்லா 

நிர்வாகத் தயாரிப்பாளர் - விஜய் சாகந்தி 

சண்டைப்பயிற்சி - அன்பறிவு 

மக்கள் தொடர்பு -  சதீஷ்குமார் - சிவா (AIM)


https://youtube.com/watch?v=cRKe0aKpV2w&si=EnSIkaIECMiOmarE

மைக்கேல்' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

 * 'மைக்கேல்' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!*


Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் 

சந்தீப் கிஷன் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் 'மைக்கேல்'  ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 
இந்நிகழ்வினில்..


தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது..,


"படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழு சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்."
தயாரிப்பாளர் SR பிரபு பேசியதாவது.,

" சந்தீப் தான் மாநகரம் திரைப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். இந்த படத்தில் இருக்கும் அனைவருடனும் தனித்தனியாக நான் பணியாற்றி இருக்கிறேன். தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது பாணியில் ரஞ்சித்  ஜெயக்கொடி பயணிக்கிறார்.  அவர் அதிகமாக நேரம் எடுத்து தனித்துவமான திரைப்படத்தை உருவாக்குகிறார். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். சந்தீப் உடைய எனர்ஜிக்கு ஏற்ற படங்கள் இன்னும் வரவில்லை என்று தான் கூற வேண்டும். அவர் இன்னும் பல வெற்றிப்படங்களைக் கொடுக்க வேண்டும்.  இப்படத்தில் பங்குபெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். "நடிகை ரெஜினா கசாண்ட்ரா  பேசியதாவது..,

" எனக்கும் சந்தீப்புக்குமான நட்பு மிகவும் ஆழமானது. சந்தீப் தொடர்ந்து நல்ல கதைக்கரு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் பார்க்க மிக நன்றாக இருக்கிறது. இந்த படத்தைப் பார்க்க நான் ஆவலாய் இருக்கிறேன். சாம் உடைய சிறப்பான இசை மற்றும் ரஞ்சித் உடைய உழைப்பு இந்த படத்தைச் சிறப்பாக  மாற்றியுள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். "ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது..,


" ரஞ்சித் ஜெயக்கொடி  உடைய முந்தைய படங்களிலிருந்த நேர்த்தியை விட இந்த படத்தில் அதிகம் இருக்கிறது. அவர் ஒவ்வொரு படத்திலும் தரத்தை மேம்படுத்திக் கொண்டே வருகிறார். சந்தீப் அனைவருடனும் ஒரே மாதிரி பழகக் கூடியவர், அவருடன் நான் அடுத்த படம் பண்ணுகிறேன். படக்குழு அனைவரும் கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். "இசையமைப்பாளர் சாம் CS பேசியதாவது..,


" ரஞ்சித், லோகேஷ்  போன்ற இயக்குநர்களுடன்  பயணிக்கும் போது  எனக்குச் சுதந்திரம் அதிகமாகக் கிடைக்கிறது, நிறைய புது விஷயங்களைச் செய்ய முடிகிறது. இந்த படம் எமோஷனை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம். இந்த படத்தில்  அம்மா செண்டிமெண்ட் ஆழமாக இருக்கிறது. ரஞ்சித் உடைய அனைத்து படத்திலும் எமோஷன்  இருக்கிறது. உலகின் சிறந்த படங்கள் அனைத்திலும் எமோஷன் இருக்கும். இந்த படத்தில் ஆக்சன், எமோஷன், காதல் என அனைத்தும் இருக்கிறது.  இந்த படம்  உங்கள் அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். "
நடிகை தீப்சிகா பேசியதாவது..,

" இந்த படத்தில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  எனக்கு இந்த வாய்ப்பளித்த ரஞ்சித்  அவர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் சாம் CS  உடைய இசைக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.  அவர் சிறப்பான இசையைக் கொடுத்து இருக்கிறார்.  படம் சிறப்பாக வந்து  இருக்கிறது. உங்களது ஆதரவு தேவை. "நடிகை திவ்யான்ஷா பேசியதாவது..,

" எங்களது உழைப்பிற்குக் கிடைத்த காதலாக இதை நான் பார்க்கிறேன்.  படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்  அனைவரும், ரஞ்சித் உருவாக்கிய அற்புதமான கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.  சாம் CS சார் அதை மேம்படுத்தியுள்ளார். நீங்கள் அனைவரும் படம்  பார்த்து உங்கள் ஆதரவை தர வேண்டும். "


இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது..,

" எனக்கு எந்த சிக்கலும் இல்லாமல், படத்தை இப்பொழுதும் இருக்கும் தரத்திற்கு எடுத்து வர, தோள் கொடுத்தவர்  தயாரிப்பாளர்கள் தான். அவர்களால் தான் இந்த மைக்கேல்  படம் இப்படி உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் மைக்கேல் கதாபாத்திரம் அனைத்தும் எமோஷன்களையும்,  வார்த்தைகள் இல்லாமல் கொடுக்க வேண்டும், அதை சந்தீப் சிறப்பாகக் கொடுத்து இருக்கிறார். ஆக்சன் காட்சிகள் இந்த படத்தில் ஆழமாகவும், ராவாகவும் இருக்கக் கடின உழைப்பைச் சண்டை இயக்குநர் கொடுத்துள்ளார்.  சாம் CS  எப்பொழுதும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பார், அவர் இந்தப்படத்திலும் சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரது பங்கும் தான் இந்த   படத்தை  மேம்படுத்தியுள்ளது.  விஜய் சேதுபதி என் மீது அதிகமான அன்பு வைத்துள்ள, என்னுடைய நல்ல நண்பர்.  இந்த படத்தில்  ஒரு கேமியோ கதபாத்திரத்தில் நடிக்க எல்லா மொழிகளுக்கும் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். நான் விஜய் சேதுபதி சாரிடம் கேட்ட போது, அவர் உடனே ஒத்துக்கொண்டார்.  கௌதம் சார் படங்களைப் பார்த்துத் தான் நான் வளர்ந்தேன். அவரிடம் ஒரு கம்பீரம் இருக்கிறது.  அவர் கதையைக் கேட்டு எங்களை முழுமையாக நம்பினார். மைக்கேல் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்குப் படம் பிடிக்கும் என்று நம்புகிறோம்.நடிகர் சந்தீப் கிஷன் பேசியதாவது.,

" இந்த படத்திற்கு ஒரு சிறிய எதிர்பார்ப்பு இருக்கிறது, அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தயாரிப்பாளர் பரத் தான் எங்களுக்கு உத்வேகம்  அளித்து, எங்களது இந்த கனவை இப்பொழுது மைக்கேலாக மாற்றியுள்ளார். சாம் CS-க்கு இன்னும்  பெரிய வரவேற்பு கிடைக்க வேண்டும், அவர் பெரிய இடத்தை அடைய வேண்டும், அவர் உடைய உழைப்பு அளப்பரியது. ரஞ்சித் ஒரு மனிதராக நல்ல குணம் கொண்டவர், அவருடன் பயணித்ததில் மகிழ்ச்சி. மைக்கேல் படம் எனக்குக் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி.    மொழி தாண்டி  இந்த படத்தில் சிறப்பான நடிப்பைக் கதாநாயகி  வழங்கியுள்ளார்.  கௌதம் சாரிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன்.  இப்போது அவருடன் இணைந்து திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.  விஜய் சேதுபதி நல்ல குணம் கொண்ட தங்கமான மனிதர்,  பிஸியான நேரத்தில் அவர் எங்களுக்காக அவருடைய தேதிகளை ஒதுக்கி, இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருக்கு எங்களது நன்றிகள். நட்புக்காக லோகேஷ் இந்த படத்திற்குள் வந்தார். பின்னர் அவர் படத்தைப் பார்த்தார், அவருக்குப் படம் பிடித்து இருந்தது. இந்த படத்துக்கு உங்களது ஆதரவு தேவை. இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி.இப்படத்தில் சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தோஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். ராஜன் ராதா மணாளன் வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு, காந்தி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர். சத்திய நாராயணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை தினேஷ் காசி அமைத்திருக்கிறார். 


ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படம் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சண்முகா சினிமாஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.

ஒடிடியை விட தியேட்டர் ரிலீஸ் தான் எளிது ; பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித்

 *ஒடிடியை விட தியேட்டர் ரிலீஸ் தான் எளிது ; பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித்*

“இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்னு இருக்கு இருக்குன்னு நினைத்தால்..” ; அழைப்பு விடுத்த யோகிபாபு*

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார்.இவர்களுடன் ஜி.எம் குமார், அருள்தாஸ், ‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன், கேபிஒய் ஜெயச்சந்திரன், இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி, லில்லி ஜான், ராக்ஸ்டார் ரமணியம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே செல்வா படத்தொகுப்பை கவனித்துள்ளார். கபிலன், இளைய கம்பன், ஜெயமூர்த்தி, அறிவு ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.


வரும் பிப்ரவரி-3ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான பா.ரஞ்சித், படத்தின் நாயகன் யோகிபாபு, சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை, பிராங்க்ளின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


படத்தின் நாயகன் யோகிபாபு பேசும்போது, :

இந்த படத்தில் இயக்குனர் ஷான் என்னை காமெடி பண்ண விடவே இல்லை. பா.ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த சமயத்தில் திடீரென இருபது நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். அந்த சமயத்தில் நான் சுந்தர்.சியின் கலகலப்பு படத்திற்காக தேதிகள் கொடுத்திருந்ததால் அந்த வாய்ப்பு மிஸ் ஆனது. ஆனால் பரியேறும் பெருமாள் படம் மூலமாக நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பை என்னை அழைத்து தந்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நன்றி.

இந்த படம் தந்தை மகள் கதை என்பதால் ஒரு அப்பாவின் வலி என்ன என்பதை உணர்த்தும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக ஒரு அப்பாவாக நானும் அதை உணர்கிறேன். இந்த படத்திற்காக இயக்குனர் ஷான் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்.

சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்து எவ்வளவோ அவமானங்களை தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.. நான் எப்போதுமே காமெடி நடிகன் தான். அதேசமயம் இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்று தெரிகிறதே என நினைத்து என்னை நம்பி அழைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். தாராளமாக வாங்க” என்று இளம் படைப்பாளிகளுக்கு அழைப்பு விடுத்தார் யோகிபாபு.


இயக்குனர் ஷான் பேசும்போது,

 “இந்த படத்தின் கதையை எழுதியவுடன் நிறைய பேரிடம் சொல்லவில்லை. ஆனால் அப்படி கேட்டவர்கள் பலரும் இந்த கதையை தயாரிக்க வேண்டும் என்றால் நீலம் புரொடக்சன்ஸ் மட்டுமே சரியான இடமாக இருக்கும் என்று கூறினார்கள். அந்த சமயத்தில் தான் இயக்குனர் பா.ரஞ்சித் தனது உதவி இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் துவங்கி அதில் பரியேறும் பெருமாள் என்கிற திரைப்படத்தை தயாரித்து வந்தார்.

அப்போதிருந்து அவரை சந்திக்க முயற்சித்து பல வருட காத்திருப்புக்கு பின் ஒரு வழியாக அவரிடம் எனது கதையை கொண்டு சேர்த்தேன். கதையைப் படித்தவர் முதலில் எனது உதவி இயக்குனர்களுக்குத்தான் முன்னுரிமை தருகிறேன். அதனால் வேறு தயாரிப்பாளர்களிடமும் கூட இதை கூறுமாறு என்னிடம் சொன்னார். தேவைப்பட்டால் என்னுடைய உதவி இயக்குனர் என்று கூட நீ சொல்லிக்கொள் என அனுமதியும் அளித்தார்.

அதைக்கேட்டு எனக்கு அவரிடம் பணிபுரியும் உதவி இயக்குனர்கள் மீது பொறாமையாக இருந்தது. இவரிடமே உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கலாமோ என்று கூட நினைத்தேன். அவரிடம் அப்போதைக்கு சரி என்று சொன்னாலும் இந்தத் திரைப்படத்தை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தான் இந்தக்கதையை பண்ண வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஒருவழியாக என்னுடையை கதையை தயாரிக்க முன் வந்தார் இயக்குனர் பா. ரஞ்சித்.

இந்த படத்தில் நடிப்பதற்காக யாரை அணுகலாம் என நினைத்தபோது, பரியேறும் பெருமாள் படத்தில் யோகிபாபுவின் நடிப்பை பார்த்துவிட்டு அவரை ஒப்பந்தம் செய்யலாம் என பா.ரஞ்சித்திடம் கூறினேன். யோகிபாபுவை ஒப்பந்தம் செய்யும் பொறுப்பை அவர் என்னிடமே ஒப்படைத்து விட்டார். அந்த சமயத்தில் தென்காசியில் கர்ணன் படப்பிடிப்பில் இருந்த யோகிபாபுவை நேரில் சந்தித்து இந்த கதையை கூற முயற்சித்தேன். யோகிபாபுவிடம் நான் கதை சொல்ளவேண்டும் என உதவி செய்யும் விதமாக இயக்குனர் மாரி செல்வராஜ், அவருக்காக காட்சிகளை படமாக்காமல் தள்ளிவைத்து யோகிபாபுவின் பொன்னான 3 மணி நேரத்தை எனக்காக ஒதுக்கி தந்தார்.

அதேசமயம் இந்த கதையை யோகிபாபுவிடம் கூறும்போது நீங்கள் தான் கதையின் நாயகன் என சொன்னதும் முதலில் அவர் தயங்கினார்.. என்னுடைய நல்ல நேரமோ என்னவோ அவரது உதவியாளர், இவர் வைத்திருப்பது சீரியசான கதை என்று சொன்னதுமே ஆர்வமாகி உடனே கதை கேட்டு நடிக்கவும் ஒப்புக்கொண்டார்.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க நாங்கள் சரியான ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது சூப்பர் சிங்கரில் பாடிக்கொண்டிருந்த ஸ்ரீமதி எங்கள் கண்களில் பட்டார். அவரது தந்தையிடம் சென்று படத்தில் நடிக்க அனுமதி கேட்டோம். முதலில் மறுத்தவர் பின்னர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் என்றதும் உடனடியாக ஒப்புக்கொண்டு தனது மகளை நடிக்க சம்மதித்தார்.

சென்சாரில் இந்த படத்தை பார்த்த அதிகாரிகள் இந்த கதையை சரியாக கையாண்டு உள்ளீர்கள் என பாராட்டினார்கள். ஒரு தயாரிப்பாளராக பா.ரஞ்சித்தை பொருத்தவரை பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான விஷயங்கள் படத்தில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். அப்படி இருந்தால் சென்சாருக்கு முன்பாக அவரே அதையெல்லாம் நீக்கிவிடுவார்.

படம் முடிந்துவிட்டாலும் படத்தை பார்க்காமலேயே அதன்மீது யோகிபாபு வைத்திருக்கும் நம்பிக்கைதான் அவர் இந்த நிகழ்வில் தனது பிஸியான நேரத்தையும் ஒதுக்கி கலந்து கொண்டு பொறுமையாக அமர்ந்திருப்பதற்கான காரணம்..

இந்த படத்திற்கு ஆரம்பத்தில் அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்வார் என நான் சொன்னபோது முதலில் பா.ரஞ்சித் தயங்கினார். ஆனால் நிலைமை மாறி அதிசயராஜுக்கு இனி வாய்ப்புகள் இருந்தால் நானே சொல்லி விடுகிறேன் என பா.ரஞ்சித்தே கூறும் அளவிற்கு அற்புதமான ஒளிப்பதிவை இந்த படத்தில் கொடுத்துள்ளார் அதிசயராஜ்.” என்றார்.


இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும் இயக்குனருமான பா.ரஞ்சித் பேசும்போது,

“இந்த படத்திற்கு யோகிபாபுவை அழைத்து நடிக்க வைக்கலாம் என இயக்குனர் ஷான் என்னிடம் கூறியபோது முதலில் தயங்கினேன். காரணம் எனக்கு யோகிபாபுவை பரியேறும் பெருமாள் படம் பார்த்ததிலிருந்து அந்த கதாபாத்திரம் ரொம்பவே பிடித்திருந்தது. அதேசமயம் பிசியான நடிகர்களின் பின்னால் போய் நிற்பது எனக்கு கொஞ்சம் டென்ஷனான விஷயம். அதனால் யோகிபாபுவிடம் நான் பேசமாட்டேன், அவர் இந்த கதை பிடித்து சம்மதித்து வந்தால் எனக்கு எந்த மறுப்பும் இல்லை என்று ஷானிடம் கூறினேன். பரியேறும் பெருமாள் படத்தில் பார்த்த யோகிபாபு கதாபாத்திரத்தின் நீட்சியாக தான் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. இந்த படத்திலும் அதே போல நன்றாக நடித்துள்ளார்.

இந்த கதையை படிக்க சொன்னபோது பலரும் இந்த படம் குறித்து நெகட்டிவ் ஆகவே என்னிடம் கூறினார்கள். அப்போதே இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்து விட்டேன். இந்த படத்தில் முக்கியமான ஒரு பிரச்சனையை கூறினாலும் அதை கழிவிரக்கத்துடன் கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கழிவிரக்கம் பேசாத படமாக இது இருக்க வேண்டும் என விரும்பினேன். நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலமாக படம் தயாரிக்கும்போது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது..

இரண்டரை வருடங்களுக்கு முன்பு சின்ன படங்களுக்கு ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இப்போது சின்ன பட்ஜெட் படங்களை அவ்வளவு எளிதில் ஓடிடியில் விற்க முடியாது. பெரிய படங்களைத்தான் அவர்கள் வாங்குகிறார்கள். எனக்கு கொஞ்சம் பின்புலம் இருப்பதால் ஒடிடியில் வெளியிடுவது எளிதுதான். அதேசமயம் நிலைமை அப்படியே மாறி தியேட்டரில் வெளியிடுவதை விட ஓடிடியில் படங்களை வெளியிடுவது கஷ்டம் என ஆகிவிட்டது. அதேபோல சிறிய படங்களுக்கும் மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒடிடியில் வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்கிற மனப்பான்மை உருவாகிவிட்டது” என்று கூறினார்.

Sunday 29 January 2023

Prabhu Solomon's critically acclaimed hit 'Sembi' to stream on

 Prabhu Solomon's critically acclaimed hit 'Sembi' to stream on Disney+ Hotstar from February 3


Disney+ Hotstar, India's leading streaming platform is all set to stream director Prabu Solomon's 'Sembi' from Feb 3rd

The powerful and gripping drama, featuring actress Kovai Sarala, child artiste Nila and 'Cooku with Comali' fame Ashwin Kumar in the lead is about an elderly tribal woman called Veeraththaai (Kovai Sarala) who demands justice for her 10-year-old granddaughter Sembi (Nila) who is assaulted by a gang of paedophiles drunk on power and position.


Considered one of Prabhu Solomon's finest, 'Sembi' has come in for a lot of accolades from various quarters and is believed to be one-of-a-kind for it features veteran comedienne Kovai Sarala in a never-before-seen role. 


Kovai Sarala's performance in this film has been hailed by several critics as being outstanding, with many rating it as her career's best. Ten-year-old child artiste Nila, who delivers a stellar performance as 'Sembi', is the soul of this film who conquers the hearts of those who watch it.


Cinematographer Jeevan's breath-taking visuals and Nivas K Prasanna's intense background score elevate the experience of ‘Sembi’

 

About Disney+ Hotstar:

Disney+ Hotstar (erstwhile Hotstar) is India’s leading streaming platform that has changed the way Indians watch their entertainment - from their favorite TV shows and movies to sporting extravaganzas. With the widest range of content in India, Disney+ Hotstar offers more than 100,000 hours of TV Shows and Movies in 8 languages and coverage of every major global sporting event.

தன்னுடைய ரசிகர் மன்ற பொருளாளர் கே.வினோத்தின் மறைவிற்க்கு நடிகர்

 *தன்னுடைய ரசிகர் மன்ற பொருளாளர் கே.வினோத்தின் மறைவிற்க்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்*


வினோத் வயது 29. அப்பா பெயர் குமார், அம்மா பெயர் சாந்தி. சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் இவர் ஓட்டுனராக பணிபுரிகிறார். தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராக உள்ளார். வினோத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையறிந்த நடிகர் கார்த்தி


 திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

நடிகர் கார்த்திகேயாவின் 'பெதுருலங்கா 2012' படத்தின் படப்பிடிப்பு

 *நடிகர் கார்த்திகேயாவின் 'பெதுருலங்கா 2012' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது*


ஹீரோ கார்த்திகேயாவின் நகைச்சுவை நிறைந்த எண்டர்டெயினர் படமாக உருவாகி இருக்கும் 'பெதுருலங்கா 2012' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது. இந்த கிரேஸி என்டர்டெய்னர் திரைப்படம் மார்ச் மாதம் திரைக்கு வர உள்ளது. மிக விரைவில் படத்தின் டீசர் வெளியாக உள்ளது.


இந்த நியூ ஏஜ் ட்ராமா கதையில் கார்த்திகேயா சிறப்பான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். அதேபோல, 'டிஜே தில்லு' புகழ் நேஹா ஷெட்டியும் இப்படத்தில் அழகான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்த அழுத்தமான திரைக்கதையை உருவாக்க யுகந்தம் கான்செப்ட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


அறிமுக இயக்குநர் கிளாக்ஸ் இயக்கியுள்ள இப்படத்தை ரவீந்திர பெனர்ஜி முப்பனேனி தயாரித்துள்ளார். லௌக்யா எண்டர்டெயின்மெண்ட்ஸ் இந்தப் படத்தை ஆதரிக்க,  சி யுவராஜ் இதை வழங்குகிறார்.


அஜய் கோஷ், ராஜ் குமார் பாசிரெட்டி, கோபராஜு ரமணா, 'ஆட்டோ' ராம் பிரசாத், எல்.பி.ஸ்ரீராம், சுரபி பிரபாவதி, கிட்டய்யா, அனிதாநாத், திவ்யா நர்னி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.


*தொழில்நுட்பக் குழு விவரம்*:


சண்டைப் பயிற்சி: அஞ்சி, பிருத்வி ராஜ்,

ஆடை வடிவமைப்பாளர்: அனுஷா புஞ்சலா,

படத்தொகுப்பு: விப்லவ் நியாசதம்,

பாடல் வரிகள்: சிறிவெண்ணிலா சீதாராமசாஸ்திரி, கிட்டு விஸ்ஸபிரகதா, கிருஷ்ண சைதன்யா,

தயாரிப்பு வடிவமைப்பாளர்: சுதீர் மச்சார்லா,

இணை தயாரிப்பாளர்கள்: அவனீந்திர உபத்ரஸ்தா & விகாஸ் குன்னாலா, நிர்வாக தயாரிப்பாளர்: துர்காராவ் குண்டா,

ஒளிப்பதிவு: சாய் பிரகாஷ் உம்மடிசிங்கு, சன்னி குரபதி,

இசை: மணி சர்மா,

நடனம்: பிருந்தா மாஸ்டர், மொயின் மாஸ்டர்,

தயாரிப்பாளர்: ரவீந்திர பெனர்ஜி முப்பனேனி,

எழுத்து & இயக்கம்: கிளாக்ஸ்.

Hero Kartikeya's 'Bedurulanka 2012' wraps up its shoot

 Hero Kartikeya's 'Bedurulanka 2012' wraps up its shoot


Hero Kartikeya's hilarious entertainer 'Bedurulanka 2012' today wrapped up its shoot. The crazy entertainer is on its way to hit the screens in March.


Very soon, the film's exciting teaser is going to be released. 

'DJ Tillu' fame Neha Sshetty has got a lovely role in the movie. 


Kartikeya has a terrific role in this new-age dramedy. The Yugantham concept has been used to build a gripping screenplay. 


Directed by debutant Clax, the film is produced by Ravindra Benerjee Muppaneni. Loukya Entertainments is backing this project and C Yuvaraj is presenting it.


Ajay Ghosh, Raj Kumar Basireddy, Goparaju Ramana, 'Auto' Ram Prasad, LB Sriram, Surabhi Prabhavathi, Kittayya, Anithanath, Divya Narni and others are doing the film.


Crew:


Fights: Anji, Prithvi Raj; Costume Designer: Anusha Punjala; Editing: Viplav Nyasadam; Lyrics: Sirivennela Seetharamashastry, Kittu Vissapragada, Krishna Chaitanya; Production Designer: Sudheer Macharla; Co-producers: Avaneendra Upadrasta & Vikas Gunnala; Executive Producer: Durgarao Gunda; Cinematography: Sai Prakash Ummadisingu, Sunny Kurapati; Music: Mani  Sharma; Dance: Brinda Master, Moin Master; Producer: Ravindra Benerjee Muppaneni; Written & Directed by Clax.

Saturday 28 January 2023

Thalapathy Vijay’s ‘Varisu’ collects close to 300 crores worldwide and successfully

Thalapathy Vijay’s ‘Varisu’ collects close to 300 crores worldwide and successfully enters 3rd week with housefull shows.  


Sri Venkateswara Creations 'Varisu' starring Thalapathy Vijay that recently released as a Pongal treat, is now running successfully in theatres. Directed by Vamshi Paidipalli, and produced by Dil Raju and Shirish, the film opened up to positive response from the audience anad critics as well, not only in Tamil but also in Telugu. The film has an ensemble cast starring Rashmika Mandanna, R Sarathkumar, Prakash Raj, Prabhu, Jayasudha, Srikanth Meka, Shaam, Sangitha, Samyuktha Shanmugham, Yogi Babu and others. Thaman S composed the music for the film. 7 Screen Studios distributed the film.Even after 17 days in Hosur Lakshmi Devi theatre, ‘Varisu’ is running with housefull shows. The Pondicherry PVR theater is screening twice as many screens for ‘Vaarisu’ than any other film. So far Ulaganayagan Kamal Haasan’s ‘Vikram’ had the highest footfall in Trichy Mariam Theatre which has now been overtaken by Thalapathy Vijay’s ‘Vaarisu’ and is now being enjoyed by a larger audience.


Similarly, Thiruniravur Vela Cinemas and Aranthangi VS Theater have also seen a large number of fans and audience for Varisu. At Erode Pallipalayam Jayalakshmi Cinemas theaters, the number of audience for Varisu has remained steady for the third week. On the 16 days of its release, the film has collected 193.94 crores in India alone, 10.01 million dollars abroad and a total of 275.69 crores worldwide. It is also expected that the collection of ‘Varisu’ will cross 300 crores soon. 

Prime Video held a special screening of Engga Hostel, the Tamil reboot of popular

 *Prime Video held a special screening of Engga Hostel, the Tamil reboot of popular Hindi drama Hostel Daze, in Chennai*

Created by The Viral Fever (TVF) and directed by Sathish Chandrasekhar ‘Engga Hostel’ is streaming live on Prime Video 

After the success of the Hindi series Hostel Daze, Prime Video is all set to bring its Tamil reboot, Engga Hostel. Ahead of its premiere on the streaming service, Prime Video hosted a special screening in Chennai in the presence of the cast and crew of the series. Along with director Sathish Chandrasekaran, actors Sacchin Nachiappan, Avinaash Ramesh, Samyuktha Viswanathan, Saranya Ravichandran, Goutham Raj, and Dravid Selvam marked their attendance. The special screening was a star-studded affair with the Tamil dignitaries attending the screening to showcase their support to the team. *The screening was attended by the Indian filmmaker Rajiv Menon, the talented actress Aditi Balan, actor Dannie, KK (Soorarai Pottru fame) and Dheena (Vijay TV fame), among others.*


The audience was enthralled by the story and found it utterly relatable. The guests also showered praises on the performances and direction of the series. With the series receiving thunderous response from the attendees, it is safe to say that Engga Hostel has received full marks.  


Created by The Viral Fever, the Tamil version of the  series also focuses on the relatable and curious lives of six engineering students. The story captures the fun, relatable situations as the students struggle with identity, friendship, love, life, and academics. Prime members in more than 240 countries and territories can now stream Engga Hostel  on the service.