அடையாறில் அமைந்துள்ள Advanced GroHair நிறுவனத்தின் இரண்டாவது கிளினிக்கை நடிகை யாஷிகா ஆனந்த், Advanced GroHair நிறுவனத்தின் உரிமையாளர் சரண்வேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தலைமுடி
பராமரிப்பில் தனி முத்திரை பதித்து வரும் Advanced GroHair நிறுவனம்,
சென்னையின் மையப்பகுதிகளுள் ஒன்றான அடையாறில் தனது புதிய கிளையை
தொடங்கியுள்ளது.
இன்று
சமூகத்தில் அனைவருக்கும் உள்ள பிரச்னை தலைமுடி தான். தினமும் உதிரும்
தலைமுடியை நினைத்து கவலைப்படாதவர்களே இல்லை; மற்றவர்களின் முடியைப்
பார்த்து பொறாமைப்படாதவர்களும் இல்லை. ஒருவரின் மிடுக்கான தோற்றத்துக்கு
அத்தியாவசியமாக இருக்கும் தலைமுடியின் உதிர்வு, பிரேக்-அப்பை விட அதிக
மனவலியைக் கொடுக்கிறது. நீளமோ, குட்டையோ... 'தயவு செய்து கொட்டாதே ப்ளீஸ்'
என முடியிடம் கெஞ்சி, கொஞ்சிப் பேசுபவர்களும் உண்டு.
இத்தகைய
முடி உதிர்வைத் தடுக்கவும், வழுக்கை தலைக்கு தீர்வு காணவும், Advanced
GroHair நிறுவனம் மிகச்சிறந்த தீர்வுகளை வழங்கி வருகிறது. ஆண்களுக்கும்,
பெண்களுக்கும் முடி தொடர்பான அனைத்து சிகிச்சைகளையும் Advanced GroHair
கிளினிக் வழங்குகிறது. மிகுந்த அனுபவம் மிக்க, *உலகத்தரம் வாய்ந்த மருத்துவ
நிபுணர்கள்* மற்றும் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு, தனது
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருகிறது.
இந்த
நிலையில், அடையாறில் அமைந்துள்ள Advanced GroHair நிறுவனத்தின் இரண்டாவது
கிளினிக்கை, பிரபல திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த், Advanced GroHair
நிறுவனத்தின் உரிமையாளர் திரு.சரண்வேல் மற்றும் அடையார் ஃபரன்சைசி
திரு.நிர்மல் ஆகியோர் திறந்து வைத்தனர்.
புதிய
கிளினிக்கில், மைக்ரோ-பிளேடிங், ஸ்கால்ப் மைக்ரோ-பிக்மென்டேஷன்,
லிப்-பிக்மென்டேஷன், ஐப்ரோ லேமினேஷன், லேஷ் லிப்ட் மற்றும் லேமினேஷன்,
லேசர் தெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.