Featured post

அனைவருக்கும் வணக்கம்... நண்பன் விஜய் கொரடூரில் புதியதாக

 அனைவருக்கும் வணக்கம்... நண்பன் விஜய் கொரடூரில் புதியதாக கட்டியிருக்கின்ற சாய் பாபா கோவிலுக்கு அவரது தாயாருடன் இன்று சென்றேன். நான் ராகவேந்த...

Wednesday 31 January 2024

பீப்பிள் மீடியா பேக்டரியின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உலகம் முழுவதும்

 *பீப்பிள் மீடியா பேக்டரியின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உலகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெளியாகிறது!*ரசிகர்களுக்குப் பிடித்தமான நிகரற்ற பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக வட்டாரத்தில்  நம்பகமான நட்சத்திரமாக உருவாகியுள்ள நடிகர் சந்தானம் மீண்டும் ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு படம் மூலம் திரைப்பட ஆர்வலர்களையும் ரசிகர்களையும் வசீகரிக்க உள்ளார். 'வடக்குப்பட்டி ராமசாமி' படம் அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சந்தானம்- இயக்குநர் கார்த்திக் யோகி இதற்கு முன்பு 'டிக்கிலோனா' படம் மூலம் ஹிட் கொடுத்தனர். அந்த இணை இப்போது மற்றொரு தனித்துவமான பொழுதுபோக்கு படத்துடன் மீண்டும் வருகிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குக் காரணம்.  இப்படம் நாளை (பிப்ரவரி 2, 2024) உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் நிலையில், 600 திரைகளில் படம் வெளியிடப்படும் என்று படத்தின் விநியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 


மேலும், இந்தப் படத்தின் மூலம் சந்தானத்தின் வெற்றிப் பாதை புதிய உச்சத்தை எட்டும் என்றும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்-விநியோகஸ்தர் ராகுல் தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்கு நகைச்சுவை மட்டுமல்லாது சிறந்த கதையையும் படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை தரும். 


'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தில், சந்தானம் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மாறன், தமிழ், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், ரவிமரியா, சேசு, சுரேஷ், பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்ப குழு:*


எழுத்து, இயக்கம்: கார்த்திக் யோகி,

தயாரிப்பாளர்: டி.ஜி.விஸ்வ பிரசாத்,

பேனர்: பீப்பிள் மீடியா ஃபேக்டரி,

இணைத் தயாரிப்பாளர்: விவேக் குச்சிபோட்லா,

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: வி.ஸ்ரீ நட்ராஜ்,

இணைத்தயாரிப்பாளர்கள்: சுனில் ஷா & ராஜா சுப்ரமணியன்,

நிர்வாகத் தயாரிப்பாளர்: விஜய ராஜேஷ்,

இசையமைப்பாளர்: சீன் ரோல்டன்,

ஒளிப்பதிவாளர்: தீபக்,

படத்தொகுப்பாளர்: டி.சிவானந்தீஸ்வரன்,

கலை இயக்குநர்: ஏ.ராஜேஷ்,

ஸ்டண்ட்: மகேஷ் மேத்யூ

நடன இயக்குநர் - எம். ஷெரீப்.

People Media Factory’s ‘Vadakkupatti Ramasamy’ to get released across

People Media Factory’s ‘Vadakkupatti Ramasamy’ to get released across 600 screens worldwide Santhanam, the unrivaled entertainer and reliable star of the trade circle, is once again set to captivate film enthusiasts with a pure comedy entertainer. The film 'Vadakkupatti Ramasamy' has generated immense excitement since its announcement. Credit goes to the dynamic duo of Santhanam-Karthik Yogi, who previously delivered the blockbuster 'Dikkiloona' and are now back with yet another unique entertainer. As the film is set to hit screens worldwide tomorrow (Feb 2, 2024), Romeo Pictures Raahul, the film's distributor, is thrilled to announce its release across 600 screens globally.


Producer-Distributor Raahul from Romeo Pictures states that Santhanam's success trajectory will reach new heights with this film. The movie not only aims to tickle the audience's funny bones with its comedy elements but also offers an intriguing plot that will keep them engaged from start to finish.


In 'Vadakkupatti Ramasamy', Santhanam and Megha Akash take on the lead roles, supported by a talented star-cast including Nizhalgal Ravi, M.S. Bhaskar, Maaran, Tamil, Naan Kadavul Rajendran, John Vijay, Ravi Mariya, Seshu, Suresh, Prasanth, and others.


Technical Crew Written & Directed By - Karthik Yogi 

Producer - T.G.Vishwa Prasad

Banner - People Media Factory 

Co-Producer  - Vivek kuchibhotla 

Creative Producer - V.Shree Natraj 

Associate Producers - Sunil Shah & Raja Subramanian 

Executive Producer - Vijaya Rajesh 

Music Composer - Sean Roldan

Cinematographer - Deepak 

Film Editor - T. Shivanandeeswaran

Art Director - A. Rajesh 

Stunt - Mahesh Mathew 

Choreographer - M. Sheriff

Abraham Ozler Movie Review

 Abraham Ozler Movie Review

Hello Viewers, இன்னைக்கு நம்ம show-ல எந்த படத்தப்பத்தின review பாக்கப்போறோம்னா இயக்குநர் “Midhun Manuel Thomas” இயக்கத்துல வெளி வந்துருக்குற “Abraham Ozler”-ன்ற மலையாள படத்த பத்தி தான் பாக்கப்போறோம். இந்த படம் last 11th January release ஆகியிருக்கு. இது ஒரு psychological medical crime thriller genre படம். இந்த படத்துல நடிகர் Jayaram உடன் Anaswara Rajan, Arjun Ashokan,  Senthil Krishna, Anoop Menon, Jagadish, Dileesh Pothan ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்கள்ல நடிச்சு இருக்காங்க. நடிகர் Mammootty இந்த படத்துல extended cameo role பண்ணியிருக்காங்க. இந்த படத்துக்கு Theni Eswar Cinematography பண்ணியிருக்காரு. Editing Shameer Muhammed and Music Midhun Mukundan பண்ணியிருக்காங்க. இது நடிகர் Jayaram-க்கு ஒரு come back film-ன்னு சொல்லலாம்.

இந்த படம் Abraham Ozler என்கிற Thrissur-ல இருக்கும் ஒரு ACP கதாப்பாத்திரத்தை பற்றிய படம். அவர் அவருடைய மனைவி மற்றும் மகளை மூன்று வருடங்களுக்கு முன்பு இழந்தது முதல் ஒரு சோகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவர் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளி வரு முயற்சியில் இருக்கும் போது ஒரு IT employee Hospital treatment-ல இருந்த போது கொலை செய்யப்பட்ட case இவரிடம் ஒப்படைக்கப்படுது. அதற்கு பிறகு அதே பாணியில் தொடர் கொலைகள் நடக்க, Ozler and his team தாங்கள் ஒரு serial killer-ஐ தேடிக்கொண்டு இருப்பதாக உணர்கிறார்கள். இதற்கு பின்னால் இருக்கும் அந்த கொலைகாரனை பிடிக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் தான் இந்த படம்.

இந்த படத்தில் எழுதப்பட்டிருக்கும் வசனம் வலிந்து செயற்கையாக படத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப thrill கொடுப்பதற்காக எழுதப்பட்டது போல் உள்ளது. இதையே தான் இந்த இயக்குனரின் முந்தைய படமான Garudan படத்திலும் உணர முடிந்தது. உங்களுக்கு அந்த படம் ஒரு நேர்த்தியான படமாக இருந்தால் நிச்சயமா இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். படத்தோட second half-ல வர்ற flashback subplot முடிவதற்கு ரொம்ப நேரம் எடுத்துக்கொள்கிறது. இதில் என்ன பிரச்சனைன்னா நாம புதுசா எதுவும் அதுல தெரிந்து கொள்ளவில்லை. அதுல உள்ள எல்லாமே படத்தோட நிகழ் காலத்துல வாய் வழியாவே சொல்லப்பட்டு விட்டது. 

இந்த படத்துல medical profession பத்தி authentic-ஆ ஏதோ சொல்லப்போகுதுன்னு நெனைச்சா, கொலைகாரனுடைய motive சொல்லாம thriller movie-க்கு உண்டான வேற ஏதோ சொல்லிட்டு இருக்காங்க. அஞ்சாம் பாத்திரா படம் கூட revenge story தான். ஆனா அங்க backstory ரொம்ப crisp ஆகவும், impressive twists ஓட இருக்கும். அதே மாதிரி ஒரு structure இதுலயும் இருக்கு. ஆனா அது predictable-ஆ இருக்கு. எங்கயும் நாம wow-ன்னு சொல்ற மாதிரி இல்ல. Theni Eswar உடைய Cinematography பெரும்பாலும் color palette use பண்றது அப்புறம் shadowy lighting மூலமா emotions depict பண்ற மாதிரி இருக்கு. Mukundan உடைய பின்னணி இசை படத்தோட thrill-க்கு பலம் சேர்க்குது.

நடிகர் Jayaram rugged look-ல தன்னோட body language கட்டுப்படுத்தி நடிச்சது பொருத்தமா இருந்துச்சு. இவர் இந்த கதாப்பாத்திரத்துல பண்ணது இந்த கதாப்பாத்திரம் மேல நமக்கு ஒரு curiosity create பண்ணுச்சு. Senthil Krishna and Arya Salim Ozler team-ல இருக்குற subordinates’ roles பண்ணியிருக்காங்க. Anaswara rajan நடித்த கதாப்பாத்திரம் கதைக்கு முக்கியமா இருந்தும் அவருக்கு நடிப்பதற்கான scope இல்லை. Jagadish பண்ணின விளைவுகள பத்தி யோசிக்காத character ரொம்ப impressive-ஆ இருந்துச்சு. ஆனா அவரோட சின்ன வயசு character-ல நடிச்சவர பாத்தப்போ Dileesh Pothan நல்லா பண்ணியிருப்பாருன்னு தோணுச்சு. ஆனா அவரே இந்த படத்துல வேற ஒரு character பண்ணியிருக்காரு. 

மற்ற நடிகர்கள் நல்லா நடிச்சு இருந்தாங்க. Arjun Ashokan பண்ணிய extended cameo character sequel-க்காக வச்ச மாதிரி இருந்துச்சு. Mammootty நடிச்ச cameo role கூட extended தான். அவரோட star value second half-ல ரொம்ப அதிகமா use பண்ண மாதிரி தோனுச்சு. ஏன்னா படத்தோட title character இவர் கிட்ட இருந்து ஒரு clue accept பண்ற மாதிரி இருந்ததால. 

இந்த படம் ஒரு தடவ பாக்கலாம். அங்க இங்க கொஞ்சம் நல்லா இருக்கு. ஆனா அதிகமான cameos and story guess பண்ற மாதிரி இருந்ததால அந்த அளவுக்கு சிறப்பா இல்ல. Second half-ல வர்ற backstory ரொம்ப exhausting-ஆ இருந்துச்சு. படத்தோட கடைசியில Ozler கடைசியா தூங்கும் போது audience-க்கு அவர் தூங்க முடியாம இருந்த இருந்தாருன்றது கிட்டத்தட்ட மறந்து போச்சு. 

இந்த review உங்களுக்கு பிடிச்சு இருந்தா like பண்ணுங்க, share பண்ணுங்க, இந்த channel-அ subscribe பண்ணுங்க. மீண்டும் உங்களை அடுத்து வேறொரு படத்தோட review உடன் சந்திக்கிறேன். Bye!!

Anyone But You Movie Review

 Anyone But You Movie Review

Hello Viewers, இன்னைக்கு நம்ம show-ல எந்த படத்தப்பத்தின review பாக்கப்போறோம்னா இயக்குநர் “Will Gluck” இயக்கத்துல வெளி வந்துருக்குற “Anyone but You”-ன்ற Hollywood படத்த பத்தி தான் பாக்கப்போறோம். இந்த படம் last Christmas festival-க்காக 22nd December, 2023 release ஆகியிருக்கு. இது ஒரு romantic comedy genre படம். இந்த படம் William Shakespeare உடைய Much Ado About Nothing-ன்ற comedy play-வ adapt பண்ணி எடுத்துருக்காங்க. இந்த படத்துல Sydney Sweeney and Glen Powell முக்கிய கதாப்பாத்திரங்கள்ல நடிச்சு இருக்காங்க. இவங்கள தவிர supporting roles-ல Alexandra Shipp, GaTa, Hadley Robinson, Michelle Hurd, Dermot Mulroney, Darren Barnet, Bryan Brown, Rachel Griffiths ஆகியோர் நடிச்சு இருக்காங்க. இந்த படத்துக்கு Danny Ruhlmann cinematography பண்ணியிருக்காரு. Editing Tia Nolan, Music Este Haim & Chris Stacey பண்ணியிருக்காங்க. இந்த படத்த Ilana Wolpert உடன் இணைந்து எழுதி இயக்கியிருக்காரு director Will Gluck.

2010-கள்ல Hollywood-ல mid budget movies வர்றது எப்படி rare-ஆ இருந்துச்சோ அது மாதிரி romantic comedy genre அழிந்து வரும் genre ஆகிடுச்சு. அதுக்கப்புறம் 2018-ல இந்த படத்தோட ஹீரோ Glenn Powell,  Zoey Deutch உடன் இணைந்து நடித்த “Set it Up” படம் இந்த genre-க்கு புத்துயிர் கொடுப்பதா இருந்துச்சு. அதுக்கப்புறம் அஞ்சு வருஷம் கழிச்சு இந்த படம் வந்திருக்கு. இந்த படத்துல Charm, Wit, Swoony romance இருக்கு. அதை விட முக்கியமா lead actors-க்குள்ள star Chemistry இருக்கு. அது சமீபத்துல இந்த genre-ல வெளி வந்த மற்ற படங்கள்ல இல்லாம இருந்துச்சு.

இந்த படம் Shakespeare உடைய “Much Ado About Nothing” தழுவி எடுக்கப்பட்டு இருக்கு. Glen Powell, Ben-ன்ற கதாப்பாத்திரத்துல Goldman Sachs employee-ஆ நடிச்சு இருக்காரு. இவர் ஒரு நாள் Bea-ன்ற law student-அ சந்திக்குறாரு. இருவருக்கும் ஈர்ப்பு ஏற்பட்டு ஒரு பகல் மற்றும் இரவு ஒன்னா spend பண்றாங்க. அடுத்த நாள் Ben வீட்ல எழுந்த Bea, Ben கிட்ட எதுவும் சொல்லாம போயிடுறாங்க. சொல்லாம வந்தது தப்புன்னு Ben கிட்ட தனக்கு இருக்கும் ஈரப்ப சொல்லலாம்ன்னு திரும்ப வரும் போது Ben தன்னோட நண்பன் கிட்ட Bea பத்தி தப்பா பேசுனத கேட்டுடுறாங்க. 

அதன் பிறகு சில மாதங்கள் கழிச்சு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திச்சுக்குறாங்க. இந்த முறை இவங்க ரெண்டு பேரோட sisters ஒருத்தரை ஒருத்தர் date பண்றாங்க. அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு இவங்க wedding-க்கு Australia-ல Ben and Bea சந்திச்சுக்குறாங்க. இவங்க ரெண்டு பேருக்குள்ள again பிரச்சனை வர்றதால இவங்க ரெண்டு பேரையும் ஒன்னா சேர்க்க wedding party plot போடுறாங்க. இவங்களும் சரின்னு சொல்லி அவங்க திட்டம் போட்ட மாதிரி ஒத்துமையா இருக்குறதா நடிக்க ஆரம்பிக்க கடைசியில இவங்களுக்குள்ள உண்மையான காதல் மலருது. இது தான் இந்த படத்தோட கதை.

இந்த படத்தோட director Will Gluck உடைய முந்தைய படமான “The Scarlet Letter” இதுலயும் ஒரு classic story நிகழ் கால characters and themes மூலமா உயிர் கொடுக்கப்படுது. Ben தன்ன சுத்தி ஒரு emotional wall built பண்ணி வாழ்ந்துட்டு இருக்கான். Bea ஒரு நல்ல பொண்ணு. இவளுக்காக இவ parents பாத்து வச்ச வாழ்க்கையா தாண்டி போக பயப்படுற ஒரு பொண்ணு. இவங்க ரெண்டு பேரும் இவங்க வாழ்க்கையில எல்லார் கூடையும் பேசுறாங்க. ஆனா உண்மையா communicate பண்ணிக்குறது கிடையாது. இவங்க ரெண்டு பேரு கதாப்பாத்திரத்துக்குள்ளும் இருக்குற chemistry ரொம்ப நல்லாவே work ஆகியிருக்கு. படத்துல நிறைய wacky moments இருந்தாலும் Ben and Bea ஒருவரை ஒருவர் உண்மையாக பார்த்துக்கொள்ளும் சிறந்த தருணங்களும் இருக்கு. இந்த படத்தோட இன்னொரு பலம் director use பண்ணியிருக்குற creative visual ways in a Adult comedy film.  ஒருத்தர நாம விரும்புறோம்னா அவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கணும் நாம அவங்க வாழ்க்கையில இருந்தாலும் இல்லைனாலும்ன்றத ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க. கண்டிப்பா இந்த படத்த பாக்கலாம். 

இந்த review உங்களுக்கு பிடிச்சு இருந்தா like பண்ணுங்க, share பண்ணுங்க, இந்த channel-அ subscribe பண்ணுங்க. மீண்டும் உங்களை அடுத்து வேறொரு படத்தோட review உடன் சந்திக்கிறேன். Bye!!

Main Atal Hoon Movie Review

Main Atal Hoon Movie Review 

 Hello Viewers, இன்னைக்கு நம்ம show-ல எந்த படத்தப்பத்தின review பாக்கப்போறோம்னா இயக்குநர் “ரவி ஜாதவ்” இயக்கத்துல வெளி வந்துருக்குற “Main Atal Hoon”-ன்ற ஹிந்தி படத்த பத்தி தான் பாக்கப்போறோம். இந்தப்படம் மறைந்த முன்னாள் பாரதப்பிரதமர் “அடல் பிஹாரி வாஜ்பாய்” பற்றிய journalist சாரங் தர்ஷானேவால் எழுதப்பட்ட “அடல்ஜி” என்ற biography base பண்ணி எடுக்கப்பட்ட ஒரு biopic. இந்தப்படத்துல “பங்கஜ் திரிபாதி, பியுஷ் மிஷ்ரா, தயா ஷங்கர் பாண்டே, பிரமோத் பதக், ராஜா சேவக்” ஆகியோர் நடிச்சிருக்காங்க. இந்தப படத்துக்கு ஒளிப்பதிவு “லாரன்ஸ் டி குன்ஹா” பண்ணியிருக்காங்க. இசை “மான்டி ஷர்மா” மற்றும் படத்தொகுப்பு “பண்டி நாகி”.

இந்த படம் நம்ம நாட்டுல வலது சாரி அரசியலின் எழுச்சிக்கு காரணமாக இருந்த ஒரு அன்பின் அரணை புரிந்து கொள்வதற்கான ஒரு great opportunity-ன்னு சொல்லலாம். ஒரு இளம் கவிஞரா யமுனை நதிக்கரைகளின் ஓரம் வளர்ந்து வந்த வாஜ்பாய் காதலுக்கு eternal symbol-ஆ இருக்கக்கூடிய தாஜ்மஹால்க்கு பின்னாடி உள்ள தொழிலாளர்களின் வலியை பார்த்தாரு. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்ச அன்னைக்கு ஒரு டீ விற்பவர் நம்ம வாஜ்பாயிடம் அப்போதைய பிரதமர் நேருவின் பேச்சு முழுக்க English-ல இருந்ததால தனக்கு எதுவும் புரியலன்னு சொன்னாரு. வாஜ்பாய் இந்தியாவின் மாற்று கருத்துக்கான குரலாக வெளி வந்தார். அந்த குரல் பல வருடங்களுக்கு பெருகிக்கொண்டு வந்தது. இருந்தாலும், இந்த படத்தோட கதை ஆரம்பத்துல சுவாரஸ்யமா தொடங்குனாலும், போகப்போக அவருடைய பேச்சுக்கள் மற்றும் சாதனைகளை சொல்ற வெறும் உரைநடையா தான் இருக்கு. இது எல்லாம் நமக்கு internet-ல தேடினாலே கிடைக்கக்கூடிய விஷயங்கள் தான்.

படத்தோட பெரும் பகுதி ஒரு பிரபலமான தலைவருடைய புகழ நிறைவா சொல்லாத மாதிரி தான் இருக்கு. ஏன்னா அவர் ஒரு ஜனநாயகவாதியாவும், ஹிந்துத்துவாவின் சித்தாந்தவாதியாவும் இருப்பது ஒன்றுக்கு ஒன்று முரண் இல்லை என்பது போல தான் வாழ்ந்தாரு. அவருடைய பழமைவாத சிந்தனையில இருந்து எப்படி உலகத்தப்பத்தின ஒரு பரந்த பார்வையா மாறுனதுன்றது தெளிவா சொல்லப்படவே இல்லை. அதை விட இந்த கதை கொஞ்சம் safe ஆன zone-ல போகுது. அதே மாதிரி காந்தியை பற்றி வாஜ்பாய்க்கு என்ன அபிப்ராயம் இருந்ததுன்றது தெளிவாவே இல்லை. அவருடைய நல்ல நண்பரான சிக்கந்தர் பக்த் பத்தி சொல்லப்படவே இல்லை. வாஜ்பாய் அவர்கள் அரசியல்ல எப்படி நண்பர்களை உருவாக்கி கொண்டார் மற்றும் அவருடைய தாராளவாத கொள்கைகளால அவருடைய தாய் நிறுவனமான RSS-குள்ளயே எப்படி எதிரிகளை சம்பாதிச்சாரு என்றதும் சொல்லப்படலை.

வாஜ்பாய் கதாப்பாத்திரத்துல நடிச்சுருக்குற பங்கஜ் திரிபாதி அந்த கதாப்பாத்திரத்துக்கு உயிர் கொடுக்குற மாதிரி அவரால எந்த அளவு முடியுமோ அந்த அளவு சிறப்பா நடிச்சு இருக்காரு. வாஜ்பாய் மாதிரியே இவரும் தன்னுடைய பேச்சாற்றலால் பார்ப்பவர்களை hold பண்றாரு. அது வெறுமனே வாஜ்பையுடைய mood and  mannerism-த்தோடு மட்டும் இல்லாம ஒரு நெருக்கடியான சூழ்நிலையில வாஜ்பாயோட அமைதி மற்றும் சாந்தம் எப்படி இருந்துச்சோ அதையும் திரையில தடையின்றி பிரதிபலிச்சிருக்காரு. இதனால தான் வாஜ்பாயுடைய critics கூட அவரை Teflon coated-ன்னு விவரிச்சாங்க. வாஜ்பாயுடைய வயதான காலங்கள்ல வரும் பங்கஜ் திரிபாதி அதற்காக உடல் எடை கூட்டாமல் இருந்தாலும் அவருடைய நடிப்புல இது எல்லாம் நம்ம மனசுல தோணாம போயிடுது.

இருந்தாலும் இந்த படத்தோட weak writing-னால அவரே நிறைய தடுமாறியிருக்காரு. கற்பனைக்கு எட்டாத sound and production design அவருக்கு எந்த விதத்திலும் உதவல. இயக்குனர் ரவி ஜாதவ், வாஜ்பாயின் மூத்த சகாக்கள் சிலர் வாஜ்பாயை விவரித்ததால், சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் வரும்போது அவர் பேசிய இரட்டைப் பேச்சை ஆராயாமல் மிதமான முகமூடியின் பின்னால் பதுங்கியிருக்கிறார். இந்த படத்துல ஒரு பழமைவாதக் கட்சியில் உள்ள ஒரு தாராளவாதியின் முரண்பாடான கருத்துகளை படம் எடுத்துரைக்கும் நிகழ்வுகள் ரெண்டு இடங்கள்ல வருது. ஒன்னு, பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு வாஜ்பாய் மேற்பரப்பைத் தரைமட்டமாக்குவது பற்றி பேசும் லக்னோ பேச்சு, ஆனால் வெவ்வேறு வகுப்புவாத கலவரங்கள் வெடித்ததில் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தாரு. இன்னொன்னு வாஜ்பாய் தான் திருமணம் ஆகாதவர் ஆனால் பிரம்மச்சாரி இல்லை என்று சொன்னதை அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பதிவு பண்ணியிருக்காரு. ராஜ் குமாரி கவுலுக்கும், வாஜ்பாய்க்கும் இடையிலான பிணைப்பை சித்தரிக்க ஏக்தா கவுல் நன்றாக இசையமைத்திருக்கிறார்., ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும், இயக்குநர் ஜாதவ் கவிதை இதயத்திற்கும் அரசியல் மனதிற்கும் இடையே உள்ள பிளவுகளை ரொம்ப rare-ஆ தான் explore பண்ணியிருக்காரு.

திரையில் வரும் கதாப்பாத்திரங்கள் என்ன பேசுகிறார்கள். என்ன சித்தரிக்கிறார்கள் என்பது ரொம்பவே கண்காணிக்கப்படுற இந்த காலத்துல, வாஜ்பாய் அவர்களுக்கு அசைவ உணவு மேலயும் , liquor மேலயும் இருந்த soft corner சேர்க்கப்படல. மேலும் அவரோட பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முற்போக்கான கண்ணோட்டத்தை வடிவமைக்க அவரது வெளிநாட்டு வருகைகள் எவ்வாறு உதவியது என்பதை படம் கணக்கில எடுத்துக்கல. அத விட மிக முக்கியமா, பால்ராஜ் மதோக் மற்றும் தத்தோபந்த் தேங்காடி போன்ற ஜனசங்கத்திலும் சங்க பரிவாரத்திலும் இருந்த அவரது எதிர்ப்பாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் இடம் கொடுக்கல. மேலும் ராமர் கோயில் இயக்கம் பற்றி பேசும்போது, மண்டல் கமிஷன் அறிக்கை குறித்து வெளிப்படையாக மௌனம் சாதிக்குது இந்த படம்.

தயா சங்கர் பாண்டே மற்றும் பிரமோத் பதக் ஆகியோர் தீன் தயாள் உபாதாயா மற்றும் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியாக தாங்கள் நடித்த கதாப்பாத்திரங்களில் நியாயம் காட்டினாலும், லால் கிருஷ்ண அத்வானியாக ராஜ சேவக்கின் நடிப்பு disappointment தருது. இயக்குனர் ரவி யாதவ் இந்த திரைப்படத்தின் இரண்டாவது மிக முக்கியமான கதாப்பாத்திரத்தை கேலிச்சித்திரமாகக் குறைக்கிறார், மேலும் அத்வானியின் மூத்த மற்றும் அவரது நண்பருமான வாஜ்பாயுடன் இருந்த சிக்கலான உறவுக்கு, குறிப்பாக அவர் படத்தின் குரலாக இருக்கும் போது, writing justice பண்ணலன்னு தான் சொல்லணும். அத்வானி ஏன் வாஜ்பாயை ஓரத்தில் இருந்து முக்கிய பொறுப்புக்கு கொண்டு வந்தார் என்பது பற்றி பேசப்படல. பிரமோத் மகாஜன், சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் போன்ற கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் cheap mimicry பண்ண மாதிரி தான் இருந்துச்சு. அதிலும் particular-ஆ interval-க்கு அப்புறம் திரிபாதி வர்ற episodes BJP உடைய தேர்தல் அறிக்கையில் இருந்ததை tick பண்ற மாதிரி தான் இருந்துச்சு. இவங்க வெளிப்படையாவே கந்தஹார்ல நடந்த plane hijack பதிவு பண்ணாம விட்டுட்டாங்க. 

இந்த படத்தோட narrative  பெரும்பாலும் காங்கிரஸின் ஜனநாயக விரோத வழிகள் குறித்த வாஜ்பாயின் கடுமையான விமர்சனத்தில் தான் dominate பண்ணுது. அதே நேரத்தில் நேருவின் பங்களிப்பை அவர் அங்கீகரிக்கும் போது அவருடைய கருணை புரிகிறது. இந்த படம் நமக்கு கருத்தியல் பிளவு நுண்துளைகளாக இருந்த காலங்களை remind பண்ணுதுன்னே சொல்லலாம். நம்பத்தகுந்த எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாய் அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் சில சுவாரஸ்யமான  தருணங்களை திரைப்படம் கவனக்குறைவாக வழங்குவதால், திருத்தம் சரியான நேரத்தில் உள்ளது. Emergency-க்கு பிறகு அவரது அனல் பறக்கும் வார்த்தைகளினால் இந்திரா காந்தியை crony capitalism மற்றும் அதிகாரத் திமிர் என்று அவர் குற்றம் சாட்டியது இப்போ current scenario-க்கும் பொருத்தமா தான் இருக்கு.

Malaikottai Vaaliban Movie Review

 Malaikottai Vaaliban Movie Review 

Hello Viewers, இன்னைக்கு நம்ம show-ல எந்த படத்தப்பத்தின review பாக்கப்போறோம்னா இயக்குநர் “Lijo Jose Pellissery” இயக்கத்துல வெளி வந்துருக்குற “Malaikottai Vaaliban”-ன்ற மலையாள படத்த பத்தி பாக்கப்போறோம். இந்த படம் Republic Day weekend-க்கு 25th January, 2024 release ஆகியிருக்கு. இது ஒரு fantasy action drama genre படம். இந்த படத்துல முதல் முறையா மலையாள superstar Mohanlal, acclaimed director Lijo Jose Pellissery உடன் சேர்ந்து இந்த படத்த கொடுத்திருக்காரு. இந்த படத்துல இவரோட சேர்ந்து Sonalee Kulkarni, Hareesh Peradi, Danish Sait, Manoj Moses, Katha Nandi ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்கள்ல நடிச்சு இருக்காங்க. இந்த படத்துக்கு Madhu Neelakanan cinematography பண்ணியிருக்காரு. Editing Deepu S. Joseph மற்றும் Music Prashant Pillai பண்ணியிருக்காங்க. இந்த படத்துக்கு கதை எழுதி இயக்கியிருக்காரு director Lijo Jose Pellissery. 

இது ஒரு fantasy action படம்ன்றதால படத்தோட Titular character பத்தின படம் இது. மலைக்கோட்டை வாலிபன் யாராலும் வீழ்த்த முடியாத ஒரு வீரன். இவர் ஒரு நிலப்பகுதியில இருந்து இன்னொரு நிலப்பகுதிக்கு போயி அங்கு உள்ள மாபெரும் வீரனை வீழ்த்துறாரு. ஆனால் இவர் Rangapattinam Rangarani-ன்ற dancer மற்றும் ஒரு கொடூர பிரபுவான Chamathakan ஆகியோரை சந்திச்ச அப்புறம் இவர் வாழ்க்கையில திருப்பம் ஏற்படுது. இவர்களின் வாழ்க்கைகள் எப்படி சிக்கிக்கொண்டு அதற்கு பின் நடந்த நிகழ்வுகள் தான் மையக்கதை. 

இந்த படத்துக்கு Madhu Neelakanan உடைய cinematography உயிர் கொடுக்குது. Camera work மிக அற்புதமாக இருந்துச்சு. Director உருவாக்குன fantasy உலகத்துக்குள்ள audiences-அ அழகிய shots மூலமா கொண்டு போகுது. Cinematography உடன் சேர்ந்து அவரு use பண்ணின colors ஒன்றோடு ஒன்னு இணைந்து போகுது. இதோடு சேர்த்து editing-ல use பண்ணின dissolves director உருவாக்குன இந்த fairy tale-க்கு இன்னொரு layer சேர்க்குது. Prashant Pillai உடைய music ரொம்பவே பாராட்டப்பட வேண்டிய ஒன்னு. அது songs-ஆ இருக்கட்டும், background score-ஆ இருக்கட்டும் classical, western, Arabic, melodies-ன்னு பல genres கலந்த கலவையா இருக்கு. இந்த படத்தோட art work-க்கு காரணமான Art director Gokul das and costume work பண்ணின Ratheesh Chammravattom and Sujith Sudhakaran இந்த fictional world-அ நிஜமா கொண்டு வந்து இருக்காங்க. இவங்களையும் பாராட்டியே ஆகணும்.

இந்த படத்துல என்ன மிகப்பெரிய பிரச்சனைன்னா இது ஒரு slow paced movie. படத்தோட first scene-ல இருந்து படம் முழுக்க ரொம்ப slow-ஆ போகுது. Second half-ல கொஞ்சம் வேகம் கூடினாலும் மீண்டும் அதே slow pace-க்கு வந்துடுது. இதுக்கு editing-ல use பண்ணின விரிவான slow motion கூட காரணமா இருக்கு. இது கூட படத்தோட writing also mention பண்ணி ஆகணும். ஒரு சில இடங்கள்ல action sequence வரும் போது குழப்பங்கள் வருது. இதுக்கு காரணம் இவங்க ஒழுங்கா establish பண்ணாதது கூட சொல்லலாம். Story-ஆ இந்த idea work ஆகுற மாதிரி இருந்தாலும் அது script ஆன விதத்துல சிறப்பா இல்ல. படத்துல இன்னொரு விஷய பாராட்டப்பட வேண்டியது என்னன்னா second half-ல ஒரு பெரிய action sequence ஓட படம் முடியாம அந்த கதாபாத்திரங்கள் மீண்டும் அவங்களோட இயல்பு வாழ்க்கைக்கு போறாங்க. ஆனா படம் ஏன் இன்னும் போயிக்கிட்டு இருக்குன்னு elaborate பண்ணதுல director ரொம்பவே time எடுத்துக்குறாரு.

சந்தேகமே இல்லாம இது நடிகர் Mohanlal உடைய சமீபத்திய படங்கள்ல வந்ததுல best performance-ன்னு சொல்லலாம். இவர் இந்த கதாப்பாத்திரத்துக்கு உயிர் கொடுத்ததுமில்லாம அது நம்பகத்தன்மையா இருப்பது போல பண்ணியிருக்காரு. மற்ற கதாப்பாத்திரங்கள்ல நடித்த Hareesh Peradi, Manoj Moses, Katha Nandi ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவங்க.

Sonalee Kulkarni படம் முழுக்க ரொம்ப சிறப்பா நடிச்சிருந்தாலும் ஒரு scene-ல மட்டும் கொஞ்சம் ஓவரா நடிச்ச மாதிரி இருந்துச்சு. Danish Sait-க்கு மலையாளத்துல இது முதல் படமா இருந்தாலும் ஒரு maniacal antagonist-ஆ அவர் character-க்கு justice பண்ணியிருக்காரு. ஒரு சில இடங்கள்ல கொஞ்சம் ஓவராவும் நடிச்சு இருக்காரு.

இந்த படம் fantasy genre படங்கள்ல ஒரு bold attempt-ன்னு சொல்லலாம். Director Lijo Jose Pellissery தன்னுடைய ஒவ்வொரு படங்கள்லயும் experiment பண்ணி பாப்பாரு. படத்துல ஒரு சில குறைகள் இருந்தாலும் நிச்சயம் இது theatre-ல பாக்க worth-ஆன படம் தான். 

இந்த review உங்களுக்கு பிடிச்சு இருந்தா like பண்ணுங்க, share பண்ணுங்க, இந்த channel-அ subscribe பண்ணுங்க. மீண்டும் உங்களை அடுத்து வேறொரு படத்தோட review உடன் சந்திக்கிறேன். Bye!! 

Migration Movie Review

Migration Movie Review

 Hello Viewers, இன்னைக்கு நம்ம show-ல எந்த படத்தப்பத்தின review பாக்கப்போறோம்னா இயக்குநர் “Benjamin Renner” இயக்கத்துல வெளி வந்துருக்குற “Migration”-ன்ற Hollywood animation படத்த பத்தி தான் பாக்கப்போறோம். இந்த படம் last year Christmas weekend-க்கு 22nd December, 2023 release ஆகியிருக்கு. இது ஒரு adventure comedy genre படம். இந்த படத்துக்கு  Kumail Nanjiani, Elizabeth Banks, Keegan-Michael Key, Awkwafina, Danny Devito ஆகிய நடிகர்கள் voices கொடுத்து இருக்காங்க. Christian gazal இந்த படத்துக்கு editing பண்ணியிருக்காரு. John Powell இந்த படத்துக்கு Music போட்டு இருக்காரு. இந்த படத்துக்கு Mike White திரைக்கதை எழுதி இருக்காரு. இப்படத்தின் கதையை Mike White உடன் எழுதி இயக்கியிருக்காரு director Benjamin Renner. 

Migration திரைப்படத்துல 8 வயசுக்கு மேல இருக்குறவங்களுக்கு பாக்குறத்துக்கான எந்த ஒரு point of interest இல்லை. இந்த படத்தோட கதை பாத்தோம்னா Mallards பத்தினது. இவங்க ஒரு ducks குடும்பம். குடும்ப தலைவர் Mack ரொம்பவே cautious-ஆ இருக்கக்கூடியவர், adventurous அம்மா Pam, Teen son Dax, adorable ஆன duckling daughter Gwen. அப்புறம் இந்த kids உடைய grumpy uncle Dan. இந்த குடும்பம் New England-ல உள்ள குளத்தை விட்டு எங்கயும் போனது கிடையாது. அதுக்கு என்ன காரணம்னா வெளி உலகத்துல தங்களுக்கு என்ன ஆகிடுமோன்ற பயம் தான். இப்போ இன்னொரு duck குடும்பம் இந்த குளத்துல land ஆகி temporary-ஆ கொஞ்ச நேரம் இடைவெளிக்காக இருக்குறாங்க. இவங்க வருஷா வருஷம் Jamaica-க்கு trip போவாங்க. அப்படி ஒரு trip போகும் போது தான் இங்க வந்து தங்கி இருக்காங்க. அந்த குடும்பத்துல உள்ள ஒரு பெண் duck மேல Dax-க்கு crush உருவாகிடுது. இப்போ Mack உடைய குடும்பம் அவரை தாஜா பண்ணி நாமளும் குடும்பத்தோட Caribbean போகலாம்னு இருக்காங்க. Mack இதுக்கு முதல்ல தயங்குனாலும் அப்புறம் ஒத்துக்கிட்டாரு. 

அனுமாநித்த மாதிரியே இவங்க வழி தவறி போயி New York city-ல தொலைந்து போறாங்க. இவங்க அங்க ஒரு group of pigeons-அ சந்திக்குறாங்க. அந்த pigeons-அ வழிநடத்துறாரு Chump. Chump mallards கிட்ட தனக்கு ஒரு Jamaican parrot Delroy-அ தெரியும். அது உங்களுக்கு அங்க போக உதவி பண்ணும்னு சொல்றாரு. ஆனா அந்த Delroy இப்போ Manhattan restaurant-ல உள்ள ஒரு chef கிட்ட கூண்டுக்குள்ள அடைப்பட்டு இருக்கு. Mallards Delroy-அ விடுவிச்சு அவன் கூட Jamaica-க்கு போக கிளம்பி போறாங்க. ஆனா இவங்க போற வழியில நிறைய பிரச்சனைகள சந்திக்குறாங்க. அதன் பிறகு என்ன ஆச்சு அதான் மீதிக்கதை. இந்த படத்தோட திரைக்கதை எழுதி இருந்த Mike White and கதை எழுதி இருந்த Benjamin Renner ஆகியோரின் முந்தைய படங்கள் ஜொலித்திருந்தாலும் இதுல பேச்சுக்காகவாது ஏதாவது interesting-ஆ இருக்கும்னு நெனச்சா ரொம்ப formulaic-ஆ இருக்கு. அதுவும் visuals கூட மறக்ககூடியதா தான் இருக்கு. 

சிறு குழந்தைகளுக்கு வேண்டுமானால் இந்த படத்தின் குறுகிய நேரமும், எளிமையான கதையும் பிடிக்கு வண்ணம் இருக்கலாம். அவங்களுக்கு கூட entertainment-காக இன்னும் கொஞ்சம் இருந்து இருக்கலாம்னு தோணுது. Migration ஒரு time pass-க்காக வேண்டுமானால் பார்க்கலாம். 

இந்த review உங்களுக்கு பிடிச்சு இருந்தா like பண்ணுங்க, share பண்ணுங்க, இந்த channel-அ subscribe பண்ணுங்க. மீண்டும் உங்களை அடுத்து வேறொரு படத்தோட review உடன் சந்திக்கிறேன். Bye!!

Naa Saami Ranga Movie Review

Naa Saami Ranga Movie Review

 Hello Viewers, இன்னைக்கு நம்ம show-ல எந்த படத்தப்பத்தின review பாக்கப்போறோம்னா இயக்குநர் “விஜய் பின்னி” இயக்கத்துல வெளி வந்துருக்குற “Naa Saami Ranga”-ன்ற தெலுங்கு படத்த பத்தி தான் பாக்கப்போறோம். இந்த படம் சங்கராந்தி festival-க்காக last 14th January release ஆகியிருக்கு. இது ஒரு period action drama genre படம். இது Nagarjuna Akkineni-க்கு 99-ஆவது படம். இந்த படத்தோட announcement-அ last year August 29, 2023 Nagarjuna birthday அன்னைக்கு production team title glimpse ஓட அறிவிச்சாங்க. இது social media-ல ரொம்பவே viral ஆச்சு. இந்த படம் 2019-ல மலையாளத்துல வெளி வந்த வெற்றிப்படமான “Porinju Mariam Jose”-ன்ற படத்த தழுவி எடுக்கப்பட்டு இருக்கு. இந்த படத்துல Nagarjuna, Allari Naresh, Raj Tarun, Ashika Ranganath and Shabeer Kallarakkal ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்கள்ல நடிச்சு இருக்காங்க. இந்த படத்துக்கு Joshiy-ன்றவரு மூலக்கதை எழுதி இருக்காரு. Cinematography Dasaradhi Sivendra பண்ணியிருக்காரு. Editing Chota K Prasad and Music legendary M.M. Keeravani sir பண்ணியிருக்காங்க. RRR படத்துல வந்த Naatu Naatu பாடலுக்கு Oscar வாங்கின அதே lyricist and singers இந்த படத்துல Naa Saami Ranga title song கொடுத்து இருக்காங்க. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதி direct பண்ணியிருகாரு Vijay Binny. இவர் ஒரு choreographer turned director.

இந்த படம் மலையாளத்துல வெளி வந்த original படம் அளவுக்கு உணர்வுகளை தூண்டுற படமாவே வந்து இருக்கு. இது போகி அன்னைக்கு release ஆனதுனால படத்தோட கதை நடக்குற காலக்கட்டத்துக்கு மிக அழகா பொருந்தி இருக்குன்னு சொல்லலாம். இது படத்தோட கதை சொல்லல்க்கு வலு சேர்த்துருக்கு இந்த படத்தோட hero-வா Nagarjuna Akkineni நடிச்சு இருக்குறதுனால கமர்ஷியல் வட்டத்துக்குள்ள நிச்சயம் super-ஆ வந்து இருக்கு.  அதிலும் அவரோட ரசிகர்களுக்கு ரொம்பவே புடிக்கக்கூடிய படமாவும் இருக்கு. இந்த படத்துல drama and action ரொம்ப அழகா blend ஆகியிருக்குன்னு சொல்லலாம். இது படம் பாக்குற audience-அ முழுவதுமா படத்துடன் engagement-ஆ இருக்க வச்சிருக்கு. அதிலும் குறிப்பா கிராம வாழ்க்கைய இவங்க portray பண்ண விதம் ரொம்ப authentic-ஆவும் வசீகரமாவும் இருக்கு. படத்துல முக்கியமான கதாப்பாத்திரங்கள்ல நடிச்ச நடிகர்கள் அவங்களோட powerful performances-ல படத்தோட emotions-க்கு வலு சேர்த்து இருக்காங்க.

இயக்குனர் விஜய் பின்னிக்கு நாம பாராட்டு சொல்லியே ஆகணும். ஏன்னா அவர் போதுமான வரைக்கும் original Malayalam படத்தோட கதைய தெலுங்கு audiences and Nagarjuna உடைய mass appeal-க்கு பொருந்துற மாதிரி adapt பண்ணியிருக்காரு. கிராம வாழ்க்கையில இருக்குற சிக்கல்களையும், நுணுக்கங்களையும், உறவுகளுக்குள்ள இருக்குற ஆழத்தையும் நல்லாவே explore  பண்ணியிருக்காரு. Shivendra Dasarathi உடைய ஒளிப்பதிவும், கீரவாணி உடைய இசையும் படத்தோட ஒட்டு மொத்த அனுபவத்துக்கு வலு சேர்த்து இருக்குன்னு சொல்லலாம்.

படத்தோட Kishtayya and Varalakshmi கதாப்பாத்திரங்களுக்குள்ள வர்ற காதல் மிக அழகா portray பண்ணியிருக்காங்க. நாகர்ஜுனா Kishtayya கதாப்பாத்திரத்துல ஒரு stellar  performance-அ கொடுத்துருக்காரு. அவரோட கதாப்பாத்திரத்துக்குள்ள ஆழத்தையும், வசீகரத்தையும் புகுத்தியிருக்காரு. ஒரு சில காட்சிகள்ல அதிலும் முக்கியமா அந்த cycle chain புடிச்சு இருக்குற காட்சியில நமக்கு shiva படத்துல வந்த பழைய நாகர்ஜுனாவ பாத்த மாதிரி இருந்துச்சு. Ashika Ranganath வரலக்ஷ்மி கதாப்பாத்திரத்துல பார்ப்பதற்கு ரொம்ப அழகாவும் அவங்களோட நடிப்புல impress பண்றாங்க. அவங்க ரெண்டு பேருக்கு இடையே வர்ற காதல் காட்சிகள் பார்ப்பதற்கு இதமாகவும் பார்வையாளர்கள் முகத்துல புன்னகையும் வர வைக்குது. Kishtayya, Anji, Bhaskar கதாப்பாத்திரங்களுக்குள்ள இருக்குற emotional bonds படத்தோட கதைக்கு வலு சேர்க்குது. Anji கதாப்பாத்திரத்துல நடிச்சு இருக்குற Allari Naresh படத்த elevate பண்ணியிருக்காரு. மற்ற கதாப்பாத்திரங்கள்ல வர்ற நடிகர்கள் Mirnaa Menon, Rukshar Dhillon, Shabeer Kallarakkal, Ravi Varma, Nassar, Rao Ramesh, Madhusudhan rao ஆகியோர் அவங்கவங்க கதாப்பாத்திரங்கள்ல excel பண்ணியிருக்காங்க. Das கதாப்பாத்திரத்துல வர்ற Shabeer Kallarakkal அவருடைய பயமுறுத்தும் நடிப்பால தனியாவே தெரியுறாரு. 

Naa Saami Ranga, Akkineni Nagarjuna-க்கு ஒரு successful comeback-ன்னு சொல்லலாம். இந்த படத்தோட successful கலவையான mass appeal, compelling narrative and emotional depth நிச்சயமா ஒரு பாக்க வேண்டிய படமாவே வந்து இருக்கு. இது இந்த Sankranti season-க்கு audiences-க்கு ரொம்பவே பிடிக்கக்கூடிய படமாவே இருக்கும். மொத்தத்துல இது ஒரு Wholesome family entertainer-ன்னு சொல்லலாம்.

இந்த review உங்களுக்கு பிடிச்சு இருந்தா like பண்ணுங்க, share பண்ணுங்க, இந்த channel-அ subscribe பண்ணுங்க. மீண்டும் உங்களை அடுத்து வேறொரு படத்தோட review உடன் சந்திக்கிறேன். Bye!!

Night Swim Movie Review

Night Swim Movie Review

Hello Viewers, இன்னைக்கு நம்ம show-ல எந்த படத்தப்பத்தின review பாக்கப்போறோம்னா இயக்குநர் “Bryce McGuire” இயக்கத்துல வெளி வந்துருக்குற “Night Swim”-ன்ற Hollywood படத்த பத்தி தான் பாக்கப்போறோம். இந்த படம் last 5th January release ஆகியிருக்கு. இது ஒரு supernatural horror genre படம். இந்த படத்துல Wyatt Russell and Kerry Condon நடிச்சு இருக்காங்க. இவங்க கூட Amelie Hoeferle, Gavin Warren, Jodi Long, Nancy Lenehan, Ben Sinclair ஆகியோர் supporting roles-ல நடிச்சு இருக்காங்க. Charlie Sarroff இந்த படத்துக்கு Cinematography பண்ணியிருக்காரு. Editing Jeff McEvoy, Music Mark Korven பண்ணியிருக்காங்க. இந்த படத்த எழுதி இயக்கியிருக்காரு director Bryce McGuire. இது இவர் 2014-ல எடுத்த Night Swim-ன்ற short film base பண்ணி எடுக்கப்பட்ட படம். 

இந்த படத்தோட முக்கிய கதாப்பாத்திரமான Ray Waller ஒரு முன்னாள் baseball player. இவருக்கு நிறைய sclerosis problem-ல இவரால இந்த game ஆட முடியாம போயிடுது. இவருடைய மனைவி Eve கடைசியா வாழ்க்கையில ஒரு இடத்துல settle down ஆகணும் நினைக்குறாங்க. தங்களோட இரண்டு பிள்ளைகளுக்காக ஒரு நீடித்து இருக்க கூடிய வீடு இருக்கனும்னு ஆசை படுறாங்க. இவங்களுக்கு teenage வயசுல Izzy-ன்ற மகளும், Elliot-ன்ற மகனும் இருக்கான். இவனுக்கு மற்ற குழந்தைகளோடு ஒத்து போக ரொம்ப சிரமமா இருக்கு. இவனோட அக்காவ காட்டிலும். இந்த குடும்பம் twin cities-க்கு வெளிய ஒரு பழைய வீடு பாத்து புடிச்சு போயி அதை வாங்கிடுறாங்க. அந்த வீட்டுக்கு பின்புறம் இருக்குற use பண்ணாத அழுக்கு படிந்த swimming pool சுத்தம் பண்ண முற்படுறாங்க. இந்த swimming pool Ray better ஆவதற்கு கொஞ்ச காலம் உதவுது. Eve-க்கு தன்னுடைய கணவனின் நடத்தையில் தெரியும் மாற்றங்களை கண்டு கவலை கொள்றாங்க. இவங்க பிள்ளைகள் swimming pool-ல ஏதோ ஒன்னுனால தாக்கப்படுறாங்க. இவங்களோட பூனை காணாம போயிடுது. ஒரு நாள் pool party-ல இந்த வீட்டோட realtor இதுக்கு முன்னாடி இங்க இருந்த Fuller family-ல Rebecca -ன்ற பொண்ணு எப்படி swimming pool-ல மூழ்கி இறந்து போனான்னு சொல்றாங்க. 

Eve அந்த fuller family-அ track பண்ணி போனா அவங்க Rebecca-வின் அம்மா Kay-வ சந்திக்குறாங்க. Kay, Eve கிட்ட அந்த swimming pool-ல இருக்குற தண்ணி ஒரு காலத்துல healing-க்கு பயன்பட்டது. அத மறுபடி use பண்ணனும்னா பலி கொடுக்கணும் சொல்றாங்க. Kay தன்னுடைய மகன் Tommy-ஐ குணப்படுத்த Rebecca-வ sacrifice பண்ணதா சொல்றாங்க. Eve இப்போ ரொம்ப பயம் கொள்றாங்க. ஏன்னா இந்த pool-ல தான் அவளோட husband குணமாகிட்டு வர்றாரு. ஒரு வேளை தன்னுடைய குழந்தைகள்ல ஒன்ன அந்த pool sacrifice-க்காக எடுத்துக்கும்னு அச்சம் கொள்றாங்க. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சுன்றது தான் மீதிக்கதை.

இந்த படத்தோட முதல் பாதி ரொம்பவே நல்லா இருக்கு. உங்க வீட்ல ஒரு Swimming pool இருந்து அதுல நீங்க night-ல swim பண்ணி இருந்தா உங்களால உணர முடியும்.  ஆனா இந்த படத்தோட பெரும்பாலான காட்சிகள் பகல்ல தான் நடக்குது. அதிலும் Izzy and அவளோட crush இருக்குற scene ரொம்பவே திகிலூட்டுவதா இருக்கு. ஆனா ஒரு கட்டத்துக்கு அப்புற படம் கொஞ்சம் சுமாரா போகுது. Haunted swimming pool ஒரு inciting concept-ஆ இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல அதுவே ரொம்ப அதிகமான மாதிரி இருக்கு. இந்த படத்தோட பிரச்சனையே இதுல ரொம்ப சொல்லப்படுது. அதுவே distracting-ஆ போக காரணமா இருக்கு. இது ஒரு சில இடங்கள்ல வெறும் தண்ணிய பத்தின பயம்ன்ற அப்போ தான் ரொம்ப effective-ஆ இருக்கு. இந்த படத்துல ambition உடைய dark side, sacrifice உடைய உண்மையான nature இது எல்லாம் இருக்கு. இந்த படத்தோட இயக்குனர் கிட்ட ஒரு horror படத்துக்கான யுத்தியும், கற்பனையும் நிறைய இருக்கு. நிச்சயமா இந்த winter time-ல பாக்க கூடிய ஒரு திகில் படம் தான் இது.   

இந்த review உங்களுக்கு பிடிச்சு இருந்தா like பண்ணுங்க, share பண்ணுங்க, இந்த channel-அ subscribe பண்ணுங்க. மீண்டும் உங்களை அடுத்து வேறொரு படத்தோட review உடன் சந்திக்கிறேன். Bye!!

Saindhav Movie Review

Saindhav Movie Review

Hello Viewers, இன்னைக்கு நம்ம show-ல எந்த படத்தப்பத்தின review பாக்கப்போறோம்னா இயக்குநர் “Sailesh Kolanu” இயக்கத்துல வெளி வந்துருக்குற “Saindhav”-ன்ற தெலுங்கு படத்த பத்தி தான் பாக்கப்போறோம். இந்த படம் சங்கராந்தி festival-க்காக last 13th January release ஆகியிருக்கு. இது ஒரு action crime drama genre படம். இது நடிகர் Venkatesh Daggubati-க்கு 75-ஆவது படம். இந்த படத்தோட announcement-அ last year January 23, 2023 அன்னைக்கு நடிகர் Venkatesh and director Sailesh Kolanu ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணப்போறதா அறிவிச்சாங்க. இந்த படத்துல நடிகர் Venkatesh உடன் Nawazuddin Siddiqui, Shraddha Srinath , Andrea Jeremiah, Arya and Ruhani Sharma  ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்கள்ல நடிச்சு இருக்காங்க. நடிகர் Nawazuddin Siddiqui-க்கு இது தான் தெலுங்குல நடிச்சு இருக்குற முதல் படம். இந்த படத்துக்கு ஒளிப்பதிவு S Manikandan பண்ணியிருக்காரு. Editing Garry BH and Music Santhosh Narayanan பண்ணியிருக்காங்க. இந்த படத்த எழுதி இயக்கியிருக்காரு இயக்குனர் Sailesh Kolanu. 

இந்த சங்கராந்திக்கு வெளியான படங்கள்ல இது மூணாவது பெரிய படம். இந்த படத்தோட director Sailesh Kolanu “HIT” series-க்கு பேர் போனவர். இந்த படத்தோட கதை crime and deep emotions-ல grand narrative-ஆ பின்னப்பட்டிருக்கு. நடிகர் வெங்கடேஷ் OTT series Rana Naidu and Drushyam and Narappa படங்கள் மூலம் சற்று வயதான கதாப்பாத்திரங்கள்ல நடித்து வெற்றி பெற்றதால, இதுல Hollywood actors  Denzel Washington and Liam Neeson- க்கு உறவான territory-ல நுழைஞ்சு இருக்காரு. இதுல அவர் action and emotion கலந்த கதாப்பாத்திரத்த பண்ணியிருக்காரு. ஒரு single parent-ஆ தன்னுடைய மகளை பாதுகாக்குற & அக்கறை உள்ள இந்த character-ல சிறப்பா நடிச்சு இருக்காரு. அதிலும் அந்த புதிரான Saiko-ன்ற கதாப்பாத்திரத்துல மிரட்டி இருக்காரு.

படத்தோட முதல் பாதியில சந்திரப்ரஸ்தா என்ற ஊரும் சைந்தவ், அவர் மகள் காயத்ரி மற்றும் அவர்களின் அண்டை வீட்டார் மநோகியா ஆகியோர் வாழ்க்கையை establish செய்வதில் போகிறது. சைந்தவ் துறைமுகத்தில் crane operator-ஆக Customs officer மூர்த்தியின் மேற்பார்வையில் வேலை பார்த்து ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அங்கங்கு engaging elements இருந்தாலும், முழுவதுமாக narrative கட்டிப்போடுவதாக இல்லை. இந்த படத்தோட plot and characters ஒரு action drama-வுக்கு உண்டான அளவு இன்னும் கொஞ்சம் develop பண்ணியிருக்கலாம். இந்த படம் interval அப்போ தான் சூடு பிடிக்கிறது. அதிலும் படத்தோட director அங்கு tension-ஐ உயர்த்துவதிலும் Saiko என்கிற Character-ஐ elevate செய்ததிலும் வெற்றி பெறுகிறார். படத்தின் இரண்டாம் பாதி Saiko-வின் மர்மமான கடந்த காலத்தை ஆழமாக பதிவு செய்வதும் அவனுக்கும் அந்த cartel-க்கும் ஆன மோதலில் போகிறது.


தெலுங்கு சினிமாவில் தன்னுடைய முதல் படத்தில் Vikas Malik-ஆக நடித்திருக்கும் Nawazuddin Siddiqui தன்னுடைய body language and bilingual dialogues மூலம் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார். ஒரு கொடூரமான gangster-ஆக அதே நேரத்தில் Jasmine character மேல இருக்குற infatuation-னால படத்துக்கு depth and entertainment சேர்க்கிறார். மற்ற கதாப்பாத்திரங்கள்ல நடித்த நடிகர்கள் எல்லாரும் decent-ஆன performances கொடுத்து இருக்காங்க. 

Santhosh Narayanan-இன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை decent-ஆக இருக்குது. அதிலும் action sequences-ல rock anthems-ஆக transform ஆகும் போது சிலிர்க்குது. Manikandan’s cinematography, Garry’s editing, Kolla Avinash’s art direction படத்தோட production value-க்கு contribute பண்ணுது. Action choreography இன்னும் கொஞ்சம் better-ஆ பண்ணியிருக்கலாம்.

மொத்தத்துல Saindhav படம் action and emotional depth blend பண்ண விதத்துல attempt பண்ணியிருந்தாலும் சரியாக பண்ணவில்லைன்னு சொல்லலாம். அங்கங்க படம் engaging-ஆ இருந்தாலும், telugu cinema வளர்ந்து வருவதற்கான testament -ஆ இந்த படம் இருக்கு.

இந்த review உங்களுக்கு பிடிச்சு இருந்தா like பண்ணுங்க, share பண்ணுங்க, இந்த channel-அ subscribe பண்ணுங்க. மீண்டும் உங்களை அடுத்து வேறொரு படத்தோட review உடன் சந்திக்கிறேன். Bye!!

The Beekeeper Movie Review

The Beekeeper Movie Review

Hello Viewers, இன்னைக்கு நம்ம show-ல எந்த படத்தப்பத்தின review பாக்கப்போறோம்னா இயக்குநர் “David Ayer” இயக்கத்துல வெளி வந்துருக்குற “The Beekeeper”-ன்ற Hollywood படத்த பத்தி தான் பாக்கப்போறோம். இந்த படம் last 12th January release ஆகியிருக்கு. இது ஒரு action thriller genre படம். இந்த படத்துல நடிகர் Jason Statham  உடன் Emmy Raver-Lampman, Josh Hutcherson, Bobby Naderi, Minnie Driver, Phylicia Rashad, Jeremy Irons ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிச்சு இருக்காங்க. Gabriel Beristain இந்த படைத்துக்கு cinematography பண்ணியிருக்காரு. Editing Geoffrey O’Brien and Music Dave Sardy பண்ணியிருக்காங்க. இந்த படத்த David Ayer இயக்கியிருக்காரு.

Jason Statham இந்த படத்துல Adam Clay-ன்ற கதாப்பாத்திரத்த பண்ணியிருக்காரு. இவர் Massachusetts countryside-ல ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துட்டு வர்றாரு. இவருடைய occupation என்னன்னா Bees raise பண்ணி அதோட honey-ய sale பண்றது. இவருக்கு ஒரு வயதான female best friend இருக்காங்க. இவங்க பேரு Eloise Parker. இவங்க ஒரு farmhouse-ல வாழ்ந்துட்டு வர்றாங்க. இவங்களோட barn-ல தான் Adam Clay rent-க்கு குடியிருக்காரு. Adam Clay-வ பொறுத்த வரைக்கும் Eloise ஒருத்தங்க தான் இவரோட வாழ்க்கையில இவர் மேல அக்கறை செலுத்தியிருக்காங்க. ஒரு நாள் Eloise online-ல தவறுதலா Phishing scam-க்கு respond பண்ணிடுறாங்க. அந்த scam பண்ற data mining company இவங்க account-ல இருந்து 2 million dollars amount திருடிடுறாங்க. இது இவங்களோட சொந்தப்பணம் கிடையாது. இது இவங்க நடத்திட்டு வந்த ஒரு charity organization உடைய பணம். இதனால Eloise மிகுந்த மன வேதனையில தற்கொலை பண்ணிக்குறாங்க. இப்போ Adam Clay தன்னுடைய  Beekeeper uniform-அ தூக்கி போட்டுட்டு தன்னோட ex commando gear போட்டுட்டு சட்டத்தால செய்ய முடியாதத இவர் செய்ய புறப்படுறாரு.

நமக்கு Eloise Parker, Adam Clay மேல எந்த அளவு அக்கறை செலுத்துனாங்கன்னுலாம் பெருசா சொல்லப்படல. Adam Clay கடந்த காலத்துல secret commando-வா இருந்ததுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தாருன்றத எப்படி பெருசா சொல்லலையோ அதே மாதிரி தான் இதுவும். Eloise parker-க்கு ஒரு மகள் இருக்காங்க. அவங்க பேரு Verona Parker, ஒரு FBI agent-ஆ வர்றாங்க. இது Director David Ayer உடைய முந்தைய படங்களான Suicide Squad, Fury உடைய brainchild-ன்னு சொல்லலாம். Jason Statham படங்கள்னாலே கண்டிப்பா action இருக்கும். இவரோட படங்கள் பாக்குற audiences seat முன்னாடி வந்து பாப்பாங்க. ஏன்னா இவரு அந்த அளவு action film lovers-க்கு ஒரு favorite hero. மற்ற படங்களைப்போல இதுலயும் அவர் தன்னோட வேலைய சிறப்பா பண்ணியிருக்காரு. படத்துல வர்ற bad guys எல்லாரு ரொம்ப சிறப்பா cast பண்ணியிருக்காங்க. அதிலும் குறிப்பா scam group leader-ஆ வர்ற David Witts, Data mining company உடைய vice president-ஆ வர்ற Josh Hutcherson, முன்னாள் CIA director-ஆ வர்ற Jeremy Irons இவங்க எல்லாரும் சிறப்பா அந்தந்த கதாப்பாத்திரங்களுக்கு பொருந்தியிருக்காங்க. 

எல்லா விதமான Vigilante action films எப்படி முடியுதோ அதே மாதிரி தான் இதுவும் முடியுது. அதாவது இங்க systemic-ஆ எந்த பிரச்சனையும் இல்லை. அதுல இருக்குற சில கெட்டவங்களால தான் பிரச்சனை ஏற்படுதுன்னு எல்லா படங்கள போல இதுலயும் சொல்ல வர்றாங்க. நிச்சயமா இந்த படம் Jason Statham-க்காகவே பாக்கலாம்.

இது ஒரு fantasy தான் white collar crooks எப்படி innocent people-அ ஏமாத்துறாங்க. எந்த விதமான தண்டனைக்கும் பயப்படாம. அவங்க கொல்லப்படும் போது நமக்கு ஒரு திருப்தி ஏற்படுது. நம்ம வாழ்க்கையிலே கூட நிறைய வயதானவர்கள் பண மோசடியால ஏமாற்றப்பட்டு இருப்பாங்க. அவங்களுக்கு எல்லாம் நியாயம் கிடைச்சா எப்படி இருக்குமோ அப்படி ஒரு feel இந்த படம் தருது. Action film lovers தாராளமா இந்த படத்தை பாக்கலாம்.

இந்த review உங்களுக்கு பிடிச்சு இருந்தா like பண்ணுங்க, share பண்ணுங்க, இந்த channel-அ subscribe பண்ணுங்க. மீண்டும் உங்களை அடுத்து வேறொரு படத்தோட review உடன் சந்திக்கிறேன். Bye!!

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்திருக்கும் ‘தி கோட் லைஃப்’ படத்தின்

 *நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்திருக்கும் ‘தி கோட் லைஃப்’ படத்தின் ‘பிகினிங் லுக்’ போஸ்டரை சூப்பர்ஸ்டார் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்!*சூப்பர்ஸ்டார் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் வரவிருக்கும் படமான ‘தி கோட் லைஃப்’ படத்தின் அடுத்தடுத்தப் போஸ்டர்களை இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் வெளியிட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நடிகர் பிரபாஸ் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரையும் நடிகர் ரன்வீர் சிங் ‘தி லுக் பிஃபோர்’ என இரண்டாவது பார்வை போஸ்டரையும் பகிர்ந்த நிலையில், இப்போது நடிகர் துல்கர் சல்மான், பிருத்விராஜின் படத்தில் இருந்து ‘பிகினிங் லுக்’ போஸ்டரை வெளியிட்டுள்ளார். முன்னதாக வெளியிடப்பட்ட தீவிரமான போஸ்டர்களுக்கு முற்றிலும் மாறாக, இந்த தோற்றம் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிருத்விராஜின் ’தி கோட் லைஃப்’ படத்தின் மூன்றாவது போஸ்டர் புத்துணர்ச்சியூட்டுவதாகவும், பார்வையாளர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் வகையிலும் வசீகரம் நிறைந்ததாகவும் உள்ளது. 


விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர். படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். இதன் தயாரிப்பு தரம், கதை சொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும். 


இந்திய சினிமாவின் மிகப் பெரிய பாலைவனப் படமான ’தி கோட் லைஃப்’ திரையரங்குகளில் ஏப்ரல் 10, 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.


*விஷுவல் ரொமான்ஸ் பற்றி:*


விஷுவல் ரொமான்ஸ் என்பது கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். 7 ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில், இந்த நிறுவனம் சிறந்த படைப்புகளைக் கொடுத்து முக்கியமான தயாரிப்பு நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ‘100 இயர்ஸ் ஆஃப் க்ரிசோஸ்டம்’ என்ற 48 மணிநேரம் நீடித்த ஒரு ஆவணப்படத் தயாரிப்பின் மூலம் விஷுவல் ரொமான்ஸ் சினிமா உலகில் ஒரு மைல்கல்லை எட்டியது. இந்தப் படம் பரவலாகப் பாராட்டப்பட்டது மட்டுமல்லாது, கின்னஸ் புத்தகத்திலும் இது இடம்பெற்றுள்ளது. இது சினிமா மீது விஷுவல் ரொமான்ஸின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இயக்குநர் பிளெஸி இந்தப் படத்தில் சிறப்பான கதையை சொல்லியுள்ளார். ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் ஆறு கேரள மாநில திரைப்பட விருதுகள் உட்பட, இந்திய சினிமாவின் தலைசிறந்த விருதுகளை பிளெஸி பெற்றுள்ளார். பிளெஸி ஐப் தாமஸின் திறமையான இயக்கத்தின் கீழ், விஷுவல் ரொமான்ஸ் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதுவிதமான சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்.

Tuesday 30 January 2024

International recognition for Actor DSG

 International recognition for Actor DSG!Malaysia is one of the most developed and industrialized countries in East Asia and Dato Sri Gnanaraja also known as DSG Raja, one of the leading businessmen from Kuala Lumpur, the capital of Malaysia, made his way through his own efforts and hard work. He is one of the leading agriculture industrialists in Malaysia. He has been making a mark in various corporate fields and is very successful in all his endeavours. He is currently the President & CEO of AGRO MALAYSIA.


DSG Raja holds a degree in Bachelor Of Laws from the University Of Hertfordshire(UK).


Recently, he forayed into the film industry as well. He established a film production company called 'DSG Creations' founded in 2017 and through it he is doing works of film production, film releases and marketing in Kollywood. As a part of that, in 2023, he played the role of 'Thangaraj @ Gold Raja' in the mega hit film 'Mark Antony' directed by Adhik Ravichandran starring Vishal and S.J. Suryah. While acting in this film, subsequent film opportunities started coming in the Tamil film industry.


Following this, the actor has now received international recognition. Officials of the New York World Bank's head of investments and private project financing committee interacted with DSG Raja through a video conference in Malaysia and was later appointed as a board of advisor to sit on the Advisory Board of the Capital One Group under World Bank's International Finance Corporation based in New York. The invitation was given by the officials of the World Bank - Joint Fund for International Finance, which is operating in New York, USA. This was an important recognition in his public career. It will be the diamond in the crown of his life. 


The actor has exciting collaborations about his Tamil film projects and official announcements will be made soon.

டத்தோஸ்ரீ"ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜா அவர்களுக்கு கிடைத்த

 *"டத்தோஸ்ரீ"ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜா அவர்களுக்கு கிடைத்த பன்னாட்டு அங்கீகாரம்!* கிழக்காசிய நாடுகளில் வளர்ச்சியடைந்த மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்று மலேசியா. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவரும் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவருமான "டத்தோஸ்ரீ"ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜா அவர்கள் தனது சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும்  முன்னேறியவர். அங்கு முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக உள்ளார். பல்வேறு துறைகளில் தடம் பதித்து சாதித்து வருகிறார். தற்போது மலேசிய வேளாண்மை மற்றும் உணவுத்துறையின் (AGRO MALAYSIA) தலைவராகவும் உள்ளார்.


அதனைத் தொடர்ந்து தற்போது சினிமா துறையிலும் தடம் பதித்து சாதித்து வருகிறார். 'DSG CREATIONS' என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் கோலிவுட்டில் படத் தயாரிப்பு, பட வெளியீடு,சந்தைப் படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக 2023-ஆம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும்  S.J.சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தில் 'தங்கராஜ் The Gold' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தமிழ்த் திரையுலகில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.


இந்நிலையில் அவருக்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலக வங்கியின் பன்னாட்டு நிதிக்கான கூட்டு நிதியம் மற்றும் தனியார் திட்ட நிதிக் குழு தலைமை அதிகாரிகள் காணொளி காட்சி மூலம் "டத்தோஸ்ரீ"ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜாவை மலேசியாவில் தொடர்பு கொண்டு உரையாடி, பின்னர் கேபிடல் ஒன்(Capital One) ஆலோசனைக் குழுமத்தின் தலைவராக நியமித்தார்கள். இது அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தில் இயங்கி வரும் உலக வங்கி - பன்னாட்டு நிதிக்கான கூட்டு நிதியத்தின் அதிகாரிகள் அளித்த கௌரவ பொறுப்பாகும். இது அவரது பொதுவாழ்க்கையில் முக்கியமான அங்கீகாரம் ஆகும். இது அவரது வாழ்கை எனும் மணிமகுடத்தில் வைரமாக இருக்கும்.


நடிகரின் புதுவிதமான கூட்டணியுடன் கூடிய தமிழ்ப் படங்கள் மற்றும் அதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

Monday 29 January 2024

முதல் படம் 25வது ஆண்டு !

 முதல் படம் 25வது ஆண்டு ! 

முதல் தாயாரிப்பாளரிடம் ஆசி பெற்ற டைரக்டர் எஸ்.எழில்! 


சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்த

 “துள்ளாத மனமும் துள்ளும்” இன்றோடு 25வது ஆண்டு நிறைவடைகிறது. தனக்கு முதல் படம் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி அவர்களை நேரில் சந்தித்து இனிப்பு மற்றும் பூச்செண்டு கொடுத்து ஆசி பெற்றார். 


“இது தொடர்பாக விஜய் சாரை சந்திக்க நேரம் கேட்ட போது உடனடியாக என்னை வரச் சொன்னார். வாழ்த்து சொன்னதோடு, அவரது பழைய படங்கள், இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் உள்ளிட்ட பல விஷயங்களை விரிவாக என்னிடம் பகிர்ந்து கொண்டார். ரொம்ப நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார்.

மற்றும் சிம்ரன் போனில் வாழ்த்தினார்..

என்ற தகவலையும் டைரக்டர் எழில் சொன்னார். 


எழில் அடுத்து இயக்கி வரும் படம், இன்ஃபினிட்டி கிரியேஷ்ன்ஸ் பி.ரவிசந்திரன் தயாரிக்கும் விமல் நடிக்க #தேசிங்குராஜ2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி டிரண்ட் ஆனது. 

#25YearsOfThulladhaManamumThullum. 

#vijay #simran 


#InfinityCreations Producer #PRavichandran #DesinguRaja2 


@Actorvemal @VIDYASAGARMUSIC

@pujita_ponnada @jana_nathan #RBalakumar @johnsoncinepro


கலக்கலான சம்மர் கொண்டாட்டம் Loading!


#DesinguRaja2FirstLook #தேசிங்குராஜா2

ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும்,

 *ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும்,  நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தில் இந்தி சினிமாவில் புகழ் பெற்ற பாபி தியோலின் 'உதிரன்' கதாபாத்திரத்தின் வெறித்தனமான புது போஸ்டர் இப்போது வெளியாகியுள்ளது!*நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும், பிரம்மாண்டமான படமான 'கங்குவா'வின் புரோமோ டீசர் சூர்யாவின் பிறந்தநாளன்று படக்குழு வெளியிட்டது.  


ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் 'சிங்கம்', 'பருத்தி வீரன்', 'சிறுத்தை', 'கொம்பன்', 'நான் மகான் அல்ல', 'மெட்ராஸ்', 'டெடி', சமீபத்தில் வெளியான 'பத்துதல' போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்துத் தென்னிந்தியத்  திரையுலகில்  தயாரிப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். 


ஸ்டுடியோ கிரீன், சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படம் துவங்கியதில் இருந்தே இதன் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக வட்டாரங்களிலும் இந்தப் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 


இந்த நிலையில் படக்குழுவினர் இந்தப் படத்தில் நடிகர் பாபி தியோலின் 'உதிரன்' கதாபாத்திரத்தின் புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்தப் போஸ்டர் பார்த்தவுடனேயே ரசிகர்களைக் கவர்ந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.  போஸ்டரில் தலையில் மான் கொம்போடு வித்தியாசமான உடையில் கூட்டத்திற்கு மத்தியில் மிரட்டலான தோற்றத்தில் உள்ளார் பாபி தியோல். பாலிவுட்டில் பல படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டிய பாபி தியோல் 'கங்குவா' படத்திலும் அசத்தலான நடிப்பைக் கொடுக்க உள்ளார். இந்தப் படத்தின் ஒவ்வொரு புரோமோஷனல் மெட்டீரியலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அடுத்த நிலைக்கு உயர்த்துவதாகவே உள்ளது.


'கங்குவா'வின் உலகம் புதுவிதமாக அமைந்து பார்வையாளர்களுக்கு திரையரங்குகளில் புதிய காட்சி அனுபவத்தை அளிக்கும். மனித உணர்வுகள், திறமையான நடிப்பு மற்றும் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய அளவிலான அதிரடி காட்சிகள் படத்தின் முக்கிய மையமாக இருக்கும். இந்த பான்-இந்தியன் படமான ‘கங்குவா’வின் பணிகள் உற்சாகமாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. மேலும், சமீபத்தில் நடிகர் சூர்யா  தனது படப்பிடிப்பை முடித்துள்ளார்.


சூர்யா மற்றும் திஷா பதானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்திருக்க, ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.


2024 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட ஸ்டுடியோ கிரீன் சிறந்த விநியோக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நடிகர் சூர்யா ரசிகர்களின் உற்சாகத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் படம் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்களை படக்குழு அடுத்தடுத்து கொடுக்க இருக்கிறது. 


*தொழில்நுட்பக் குழு*:


எடிட்டர்: நிஷாத் யூசுப்

ஆக்‌ஷன்: சுப்ரீம் சுந்தர்,

வசனங்கள்: மதன் கார்க்கி,

எழுத்தாளர்: ஆதி நாராயணா,

பாடல் வரிகள்: விவேகா - மதன் கார்க்கி,

தலைமை இணை இயக்குநர்: ஆர்.ராஜசேகர்,

ஆடை வடிவமைப்பாளர்: அனு வர்தன் (சூர்யா) & தட்ஷா பிள்ளை,

ஆடைகள்: ராஜன்,

நடனம்: ஷோபி,

ஒலி வடிவமைப்பு: டி உதயகுமார்,

ஸ்டில்ஸ்: சி.எச். பாலு,

விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா,

கிரியேட்டிவ் விளம்பரங்கள்: BeatRoute,,

டிஜிட்டல் விளம்பரம்: டிஜிட்டலி,

VFX: ஹரிஹர சுதன்,

3டி: பிரைன்வைர் ​​டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்,

தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: ஆர்.எஸ். சுரேஷ்மணியன்,

தயாரிப்பு நிர்வாகி: ராமதாஸ்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு: ஈ.வி. தினேஷ் குமார்,

நிர்வாகத் தயாரிப்பாளர்: ஏ.ஜி.ராஜா,

ஸ்டுடியோ கிரீன் CEO: 

G. தனஞ்ஜெயன் 

இணை தயாரிப்பாளர்: நேஹா ஞானவேல்ராஜா,

தயாரிப்பு: கே.இ. ஞானவேல்ராஜா

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் 'ரோமியோ

 விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் 'ரோமியோ' படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது!


விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'ரோமியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நல்ல தரமான படங்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வெளியிடும் ரெட் ஜெயண்ட்நிறுவனம், இப்படத்தை இந்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. 


விநாயக் வைத்தியநா


தன் இயக்கும் இந்த “ ரோமியோ” வில், விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி என பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் தனது யூடியூப் சீரிஸ் ​​'காதல் டிஸ்ஷன்சிங்' மற்றும் 'ஐ ஹேட் யூ, ஐ லவ் யூ'-ன் மூன்றாவது எபிசோட்  ஆகியவற்றிற்காக புகழ் பெற்றவர்.


'ரோமியோ' தெலுங்கில் “லவ் குரு” என்ற பெயரில் வெளியாக உள்ளது.


'பத்துதல' படத்தின்  அட்டகாசமான காட்சியமைப்பிற்காகப் பாராட்டப்பட்ட ஃபரூக் ஜே பாஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


பரத் தனசேகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


எஸ் கமல நாதன் கலை இயக்குநராகவும், விஜய் ஆண்டனி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

Red Giant Movies acquires Tamil Nadu Theatrical Rights of Vijay Antony’s

 Red Giant Movies acquires Tamil Nadu Theatrical Rights of Vijay Antony’s upcoming blockbuster, “Romeo”Actor Vijay Antony’s upcoming film, “Romeo”, presented by Meera Vijay Antony and produced by Vijay Antony Film Corporation has got a big attraction now. 


Red Giant Movies that has consistently encouraged and released good, content-rich films, has acquired the Tamil Nadu Theatrical Rights of this film, and is planning it as a grand summer release. 


“Romeo” features Vijay Antony and Mrinalini Ravi in the lead roles, and is directed by Vinayak Vaithianathan. 


In addition to Vijay Antony and Mrinalini Ravi, the film also stars Yogi Babu, VTV Ganesh, Thalaivasal Vijay, Ilavarasu, Sudha, Sreeja Ravi, and many other talented actors in pivotal roles.


Vinayak Vaithianathan, the director of the film, has also gained recognition for his YouTube series “Kadhal Distancing” and Episode 3 of “I Hate You, I Love You”.


The film has been simultaneously made in Telugu, under the title “Love Guru”.


Farook J Basha, who was appreciated for his brilliant visuals in Pathu Thala is handling cinematography for this movie. A new talented music director Barath Dhanasekar has been introduced in this movie to compose music. S Kamala Nathan is the art director & Vijay Antony himself is the editor of the movie.

டைரக்டர் எஸ்.எழிலின் எழில்25 விழா - “தேசிங்குராஜா2” ஃபர்ஸ்ட்

 *டைரக்டர் எஸ்.எழிலின் எழில்25 விழா - “தேசிங்குராஜா2” ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா !!*

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்த “துள்ளாத மனமும் துள்ளும்” படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் எஸ்.எழில். நடிகர் விஜய்க்கு திருப்புமுனையாக இருந்த இந்த படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகி 25 வருடங்கள் ஆகிறது. இதை, எழில்25 விழாவாகவும், அவர், இன்ஃபினிட்டி கிரியேஷ்ன்ஸ் பி.ரவிசந்திரன் தயாரிக்கும் விமல் நடிக்க இப்போது டைரக்ட் செய்து வரும் #தேசிங்குராஜ2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவாகவும் நடந்தது. 


இந்த நிகழ்வில் எழிலின் குருநாதர் *இயக்குநர் ஆர்.பார்த்திபன் பேசும்போது,* 


“இந்த 33 வருடங்களில் என்னிடம் கிட்டத்தட்ட 100 உதவி இயக்குநர்கள் பணிபுரிந்து இருந்தாலும் அவர்களின் ஸ்பெஷலானவர் எழில். அதனால் தான் எஸ்.எழில் என அவரது பெயரிலேயே ஸ்பெஷல் இருக்கிறது. துள்ளாத மனமும் துள்ளும் என்கிற படம் பண்ணுவார் என்று தெரியாத அளவிற்கு என்னிடம் இருந்த போது அமைதியாக இருந்தார். கொஞ்ச நாள் கழித்து அவருடன் இணைந்து யுத்த சத்தம் என்கிற படம் பண்ணும் அளவிற்கு எடுத்து இந்த மேடையில் இன்று அலங்கரித்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தை தயாரிக்கும் இன்ஃபினிட்டி ரவிச்சந்திரனுக்கு என்னுடைய பாராட்டுக்கள். விமலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இன்ஃபினிட்டி என்றால் முடிவில்லாத என்று அர்த்தம். அவ்வளவு பெரிய வெற்றியை, தொடர்ந்து விமலும் இந்த தயாரிப்பாளரும் பெற எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்” என்றார்.


*இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி பேசும்போது,*


“எழில் என்கிற பெயருக்கு ஏற்றபடி உண்மையிலேயே எழிலானவர். தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்திலே குறைவதுண்டோ என்று ஒரு பாடல் உண்டு. அதுபோல எழில் தங்கமான ஒரு சகோதரர். அவரை எந்த பக்கம் உரசினாலும் தங்கம் தான் தெரியும். குறையே இல்லாத ஒரு சகோதரர் என்றால் அது எழில் தான். படங்களை இயக்குவதில் ஒரு இடைவெளி விழுந்தபோது எங்களுடைய இயக்குனர் சங்கத்தில் சில காலம் பொருளாளராக இருந்தார். யூனியனுக்கு வந்துவிட்டாலே கிட்டத்தட்ட ரிட்டையர்ட் ஆனது போல தான். அந்த சமயத்தில் ஒரு கதை சொல்லி இது எப்படி இருக்கு என்று கேட்டார். மிகச் சிறப்பாக இருந்தது. அந்த படம் தான் மனம் கொத்தி பறவை. 


என்னிடம் சொல்லி 45வது நாளில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் காபியை முடித்து ஆச்சரியப்படுத்தினார். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்போது அவரிடம் இதே போன்ற ஜானரில் படங்களை பண்ணுங்கள் என்று கூறினேன். நம்முடன் இருக்கும் சகோதரர்கள் இப்படி மீண்டும் ஒரு வெற்றியை தொடும்போது நாங்களும் இதேபோல வந்து கொண்டிருக்கிறோம், மீண்டும் படம் பண்ணுவோம் என்று சொல்லக்கூடிய நம்பிக்கையை கொடுத்தவர் எழில்.


பார்த்திபன் சொன்னது போல எழிலை பொறுத்தவரை அவர் இருக்கும் இடமே தெரியாது. பார்த்திபனாலேயே யூனியனில் எனது எதிரணியில் நிற்க வேண்டிய ஒரு சூழல் அவருக்கு ஏற்பட்டது. அப்படி எதிரணியில் இருந்தாலும் கூட அந்த நட்புக்காக நேர்மையாக என்ன செய்ய முடியுமோ அதை செய்தார். இப்போது தான் எடுத்துள்ள படத்தில் ஒரு சிறிய காட்சியை போட்டுக் காட்டினார். இப்போ உள்ள எல்லா ட்ரெண்டிலிருந்தும் மாறி ஒரு புது விதமான ஜானரில் இருக்கிறது. ஒரு ஜானரில் இருந்து இன்னொரு ஜானருக்கு மாறுவது கஷ்டமான விஷயம். யார் மனதும் நோகாமல் அரசியலையே காமெடியாக சித்தரித்து உள்ளார். அரசியல் படங்கள் இயக்கியபோது சில கதாபாத்திரங்களை பார்த்துவிட்டு எனக்கு எதிர்ப்பு வந்தது. ஆனால் இவர் இயக்கியுள்ள படத்தில் யாரை பற்றி குறிப்பிட்டுள்ளதாக மக்கள் நினைப்பார்களோ அவரே இந்த படத்தை பார்த்துவிட்டு சிரிப்பார். தேசிங்கு ராஜா-2 விமல் வாழ்க்கையில் இன்னொரு மைல்கல்லாக இருக்கும். எழிலின் வெற்றிப் பயணம் முடிவில்லாதது” என்று கூறினார்.


*நடிகர் ஜெயம் ரவி பேசும்போது,*


“எழில் சாரின் 25 வருட திரையுலக பயணத்தை ஒரு விழாவாக எடுத்து சிறப்பிக்க வேண்டும் என நினைத்த ‘தேசிங்கு ராஜா-2’ படத்தின் தயாரிப்பாளருக்கும் கதாநாயகன் விமலுக்கும் முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஒரு நல்ல எண்ணத்துக்காகவே இந்த படம் நன்றாக ஓடும். எழில் சார் இதற்கு தகுதியானவர் தான். அவர் இயக்கிய படங்கள் பல ஹீரோக்களுக்கு வெற்றியையும் அவர்கள் பயணம் செய்வதற்கான ஒரு வழியையும் அமைத்துக் கொடுத்தது. அதே மாதிரி தான் எனக்கும். அவருடைய பயணத்தில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என நினைக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.


அவர் படத்தில் நடித்தபோது படத்தின் ஸ்கிரிப்ட்டை நான் படிக்கவே மாட்டேன்.. அவர் சொல்வதை மட்டும் தான் கேட்பேன்.. அவர் சொல்வதைக் கேட்டால் ஒரு படத்தை பத்து தடவை பார்த்தது போல இருக்கும்.. ஆனால் அவர் சொல்லும்போது நாம் காது கொடுத்து கேட்க வேண்டும். அது ரொம்ப கஷ்டம். அந்த அளவுக்கு அவர் குரலே மெதுவாக இருக்கும். என்னுடைய திரையுலக பயணத்தில் எனக்கு ரொம்ப பிடித்த படம் தீபாவளி. லிங்குசாமி சாரின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த முதல் படம் அது. அப்போது எனக்காக இந்த படத்தை தயாரிக்கிறீர்களா இல்லை எழில் சாருக்காகவா என்று கூட அவரிடம் கேட்டேன். 


எழில் சார் இதுபோன்று விரைவாக படங்களை இயக்க வேண்டும். அதையெல்லாம் நாங்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எஸ்.எழில் என்றாலே எதற்கும் ‘நோ’ சொல்லாத எல்லாத்துக்குமே ‘எஸ்’ சொல்லுகின்ற எழில் என்றுதான் நான் சொல்வேன். தயாரிப்பு நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என நினைக்கின்ற முக்கியமான இயக்குநர்களில் எழிலும் ஒருவர். அதனால் தான் இந்த அளவிற்கு அவருக்கு பெரிய வெற்றிகள் கிடைத்துள்ளது. 25 வருடம் என்பதெல்லாம் சாதாரணம். இன்னும் அவர் 50, 75 என நிறைய பயணிக்க வேண்டும்.. நாங்கள் எல்லோரும் கூடவே இருக்கிறோம்” என்று கூறினார்.


*தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது,* 


“இன்றைய சூழலில் ஒரு நடுத்தர பட்ஜெட் படத்தை எடுப்பதும், அதை மார்க்கெட் செய்வதும் எவ்வளவு சிரமம் என்கிற சூழ்நிலையில் அந்த படத்தின் இயக்குனரை வாழ்த்தி ஒரு படத்தை கொண்டு வருவது என்கிற நல்ல மனதுக்காகவே தயாரிப்பாளர் ரவிச்சந்திரனுக்கு வாழ்த்துகள். எழிலை 25 வருடங்களுக்கு முன்பு இருந்து எனக்கு நல்ல பழக்கம். அவர் எப்படி ஒரு நல்ல கமர்சியல் டைரக்டர் ஆனார், தயாரிப்பாளர்களின் இயக்குநர் ஆனார், நடிகர்களுடன் நல்லுறவில் இருக்கிறார் என்றால் இதற்கெல்லாம் அடிப்படையான முக்கியமான காரணமே நான் தான். 25 வருடங்களுக்கு முன்பு எனது படத்தில் துணை இயக்குனராக வேலை பார்த்தார் எழில். அந்த படத்தில் தான் எப்படி படம் எடுக்க கூடாது என சினிமாவை முழுதாக கற்றுக்கொண்டார். அப்படிப்பட்ட ஒரு படத்தை நான் எடுத்தேன். 


2010ல் எழில் சொன்ன கதையை கேட்டு எப்படி செல்வமணி பிரமித்தாரோ, அதேபோன்று மூன்று மாதங்களுக்கு முன்பு என்னிடம் எழில் சொன்ன கதையைக் கேட்டு  எப்படி இவ்வளவு பிரமாதமான ஒரு கதையை சொல்கிறார் என திகைத்து போய் விட்டேன். 25 படங்கள் என்பதையெல்லாம் மறந்துவிட்டு பார்த்தால் அவருடைய முதல் பட கதை போல இருக்கு.. எந்த ஒரு ஆக்சன் கமர்சியல் ஹீரோவும்  மறுக்க முடியாத கதை. மீடியம் பட்ஜெட்டில் பண்ண முடியாத, பெரிய ஹீரோக்கள் கிடைத்தால் மட்டுமே இதை பண்ணலாம் என காத்திருக்கிறார் எழில். அவரது அடுத்த படமாக கூட அதை பண்ணலாம்.


தமிழ் சினிமாவில் விக்ரமன், எழில் ஆகியோருக்கு பிறகு இசையில் நடக்கும் மேஜிக் நடக்கவே இல்லை. அந்த காலகட்டத்தை தாண்டி போய் விட்டோம். மீண்டும் அவர்கள் தான் அந்த மேஜிக்கை நடத்த முடியும். இதையெல்லாம் தாண்டி அப்டேட்டில் இருப்பவர் இயக்குனர் எழில். எல்லா விஷயமும் தெரிந்த, மனிதாபிமானம் உள்ள, நட்புள்ள, அன்பான மனிதர் எழில் தொடர்ந்து ஜெயிக்க வேண்டும். சினிமாவில் நல்லவர்கள் எல்லாம் ஜெயிக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அப்படி ஒரு நல்லவரான தம்பி விமலுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாகி அவரை முன்னணி நடிகராக உயர்த்திக் கொண்டு வர வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏனென்றால் விமல் ஜெயிக்க வேண்டும் என்பது என்னுடைய பேராசை” என்று கூறினார்


*தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசும்போது,* 


“தமிழ் சினிமாவில் எழில் ஒரு வெற்றியாளர். சினிமாவில் வெற்றி ரொம்பவே முக்கியம். தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை குவித்தவர். உடன் பணியாற்றும் கலைஞர்களுடன் இனிமையாக பழகும் தன்மை கொண்டவர். இந்த 25 வருடங்களில் அவர் செய்த சாதனைகள் பல என்றாலும் கூட அவருடைய நட்பை தான் முக்கியமாக நினைக்கிறேன். இன்று இத்தனை கலைஞர்கள் இங்கே வந்திருக்கிறார்கள் என்றால் அவருடைய நட்பு தான் காரணம். சினிமாவில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். நட்பை சாதிப்பது தான் ரொம்ப கஷ்டம். இன்று பல படங்கள் முடியும்போது ஹீரோவும் இயக்குனரும் பேசிக் கொள்வதில்லை. அவர்களுக்கு இடையே இன்னொரு ஆள் தேவைப்படுகிறது. 25 வருடம் கழித்தும் கூட அவரை இங்கே பல கதாநாயகர்கள் பாராட்ட வருகிறார்கள் என்றால் அதுதான் எழிலில் சாதனையாக நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.


*தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது,* 


“எழில் சாரின் படங்களில் நடித்த அத்தனை ஹீரோக்களும் வந்திருந்து இந்த விழா இன்னும் பெரிதாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இப்போது பெரிய அளவில் உள்ள விஜய், அஜித், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன்  உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு அவர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். அந்த படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் காமெடி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்றால் அதற்கு இயக்குனர் எழிலும் ஒரு காரணம்தான். 25 வருடங்களில் 13 படங்கள்  பண்ணியிருக்கிறார். இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும். 5 கோடி பட்ஜெட்டுக்குள் 45 நாட்களுக்குள் ஒரு படத்தை முடித்து தருகிறேன் என சொல்லும் இயக்குனர் எழில் போன்றவர்கள் இந்த திரையுலகில் இருப்பது ஆச்சரியமான விஷயம்” என்றார்.


*இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரன் பேசும்போது,* 


“கடந்த இரண்டு வருடங்களாக மாலை நேரங்களில் நடக்கும் எந்த விழாவிலும் நான் கலந்து கொள்வதில்லை. சமீபத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கூட கலந்து கொண்டு உடனே கிளம்பி விட்டேன். அப்படிப்பட்ட ஒரு கொள்கையுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் என்னால் எழில் கூப்பிட்டபோது மறுக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒரு படப்பிடிப்பிலிருந்து சீக்கிரமே கிளம்பி வந்தேன்.


துள்ளாத மனமும் துள்ளும் படம் இயக்கிய காலகட்டத்தில் அவருடன் நான் பழகி இருக்கிறேன். வெற்றி பெற்ற சமயத்திலும் இடையில் தோல்விகளை கண்ட போதும் மீண்டும் வெற்றியை தொட்ட போதும் எப்போதுமே ஒரே மாதிரி பழகும் ஒரு நல்ல இதயம் கொண்டவர். என் மகன் விஜய் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் துள்ளாத மனமும் துள்ளும் படம் அவரது வாழ்க்கையில் ஒரு மைல்கல். இதுபோன்று ஒரு பத்து படங்கள் இருக்கின்றன. துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் கதையை சொல்வதற்காக தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி என்னிடம் இயக்குநர் எழிலை அனுப்பி வைத்தார். அவர் கதை சொல்லிவிட்டு அங்கே செல்வதற்குள்ளாகவே நான் போன் செய்து விஜய்யின் தேதிகள் எப்போது வேண்டும் என ஆர்.பி சவுத்ரியிடம் கேட்டேன். 


நான் கதை கேட்கும்போது விஜய்யின் அப்பா என்கிற எண்ணத்தில் கதை கேட்க மாட்டேன். ஒரு சாதாரண பப்ளிக்கின் மன நிலையில் தான் கதை கேட்பேன். ஒரு சின்சியரான உதவி இயக்குநரின் பார்வையில் சில கேள்விகளை கேட்பேன். அப்படி நான் கேட்ட கேள்விகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு அதற்காக படத்தில் பதில் சொன்னவர் இயக்குநர் எழில். இத்தனை வருடங்களாக அவர் இந்த திரையுலகில் இருக்கிறார் என்றால், யார் ஒருவர் தாயை மிகவும் உயர்வாக மதிக்கிறாரோ அவரை கடவுள் உயரத்திற்கு கொண்டு செல்வார். இது என் வாழ்க்கையில் நான் பார்த்தது.


இப்போது திரைக்கதைக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை. ஒரு ஹீரோ கிடைத்தால் போதும் எப்படி வேண்டுமானாலும் படம் பண்ணிவிடலாம். ஹீரோவுக்காக படம் ஓடி விடுவதால் நாம் பெரிய இயக்குநர் என நினைத்துக் கொள்கிறார்கள். மனதில் இருப்பதை சொல்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். படங்களை இன்னும் கதை சிறப்பாக திரைக்கதையுடன் பண்ணினால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்பதற்காக இதை சொல்கிறேன். இன்றைய இயக்குநர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்கின்ற பக்குவம் இல்லை தைரியம் இல்லை. அதேபோல ஒரு கதை சொன்னதும் அந்த இயக்குநரை எழுந்து நின்று கட்டிப்பிடித்தேன் என்றால் அது இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்தான். ஆனாலும் துப்பாக்கி கதையைக் கேட்ட பிறகு ஒரு உதவி இயக்குநராக அந்த படத்தில் ஸ்லீப்பர் செல்ஸ் குறித்து ஒரு கேள்வியை கேட்டேன். அப்போது பதில் சொல்லாத அவர் என்னுடைய கேள்விக்கு படத்தில் பதிலளித்திருந்தார். அவருடைய பக்குவம் அது. 


எழிலிடம் இதேபோன்று ஒரு கேள்வியை துள்ளாத மனம் துள்ளும் கதை சொன்ன சமயத்தில் கேட்டபோது அந்த படத்தில் அதற்கான பதிலை சொன்னார். அந்த படம் வெள்ளி விழா கொண்டாடியது. அப்போது விஜய் என்ன பெரிய பெரிய சூப்பர் ஸ்டாரா ? இல்லையே.. அந்த கதை அவரை தூக்கிச்சென்றது. அந்தப் படத்திற்கு பிறகு தான் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமானார்கள். அந்தப் படத்தில் யார் நடித்திருந்தாலும் அது சில்வர் ஜூப்ளி கண்டிருக்கும். காரணம் திரைக்கதை.


இளைஞர்கள் நல்ல கதையுடன் வாருங்கள். உங்களுக்கான பொறுப்புணர்வு இருக்க வேண்டும். சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்றால் இன்றைய இயக்குநர்கள் தங்கள் படத்தின் ஹீரோக்களை அப்படி வடிவமைக்க வேண்டும். காரணம் இன்றைய இளைஞர்கள் ஹீரோக்களை பின் தொடர்கிறார்கள். படத்தில் ஒரு மூன்று நிமிடம் ஆவது நல்ல விஷயத்தை சொல்லுங்கள் என உங்கள் காலை தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.

 

விமல் ஆரம்ப காலத்தில் நல்ல படங்களை செய்து கொண்டிருந்தார். இடையில் கொஞ்சம் மேலே கீழே என மாறியது. சினிமா என்றால் அப்படித்தான்.. சமீபத்தில் ஓடிடியில் விமல் நடித்த விலங்கு என்கிற வெப் சீரிஸ் பார்த்தேன். இவ்வளவு பெரிய நடிகனை சினிமா இப்படி விட்டு வைத்திருக்கிறது ? இவ்வளவு பெரிய நடிகரை நானே ஏன் இத்தனை வருடமாக விட்டு வைத்தேன் என வருத்தப்பட்டேன். அப்படி ஒரு நல்ல நடிகரை வைத்து படம் இயக்கி இருக்கிறார் எழில். இந்த படம் அனைவருக்கும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்” என்று பேசினார்


*இயக்குனர் விக்ரமன் பேசும்போது,* 


“எழில் 25 என்பதை பார்க்கும்போது தேசிங்கு ராஜா 25வது வாரம் என்பது போலத்தான் தெரிகிறது. துள்ளாத மனமும் துள்ளும் படத்தைப் பார்த்துவிட்டு இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என அவரது எடிட்டரிடம் சொன்னேன். இதை கேட்டுவிட்டு மறுநாளே என் வீடு தேடி வந்தார். அதேபோல சவுத்ரி சாரிடம் சூப்பர் குட் பிலிம்ஸில் இந்த படம் நாட்டாமை படம் போல ஹிட் படமாகும் எனக் கூறினேன். அதேபோல ஹிட்டானது. எழிலை பொறுத்தவரை காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு இப்போதும் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். விரைவில் எழில் 50 என்று சொல்லும் அளவிற்கு இன்னும் பல படங்களை அவர் இயக்க வேண்டும்” என்று கூறினார்.


*இசையமைப்பாளர் வித்யாசாகர் பேசும்போது,* 


“எழிலின் முதல் படத்திற்கு நான் இசையமைத்திருந்தால் இப்போது அவரது 25வது வருடத்தில் இந்த படத்திற்கும் நான் இசையமைக்கிறேன் என இன்னும் பெருமையாக இருந்திருக்கும். பூவெல்லாம் உன் வாசம் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் எனக்கு கிடைத்தது ஒரு நல்ல இயக்குனர் மட்டுமல்ல நல்ல நண்பரும் தான்.. ஒரு இடைவெளிக்கு பிறகு அவரது 25வது வருடத்தில் உருவாகும் தேசிங்குராஜா 2 படத்திற்கு இசையமைக்கிறேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். வாழ்க்கையின் கால்வாசி நாட்களை தனக்கு பிடித்தமான திரை துறையிலேயே அவர் சாதித்துள்ளார். பெரிய பட்ஜெட் படங்கள் என இல்லாமல் நிறைய தயாரிப்பாளர்களுடன் இணைந்து நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளார்” என்றார்.


*இயக்குனர் கே பாக்யராஜ் பேசும்போது,* 


“எழிலை இந்த திரையுளவிற்கு முதன் முதலில் கொண்டு வந்த தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி சாருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குனர் எழிலின் படங்களை தெரிந்த அளவிற்கு அவரைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் அவரைப் பற்றி ஒவ்வொருவரும் சொல்லும்போது நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவை குறையாமல் பார்த்துக் கொள்வது தான் அவருடைய மிகப்பெரிய பலம் என்று நினைக்கிறேன். அவர் எல்லோரிடமும் தன்மையாக பழகியதால் தான் இத்தனை ஹீரோகளுடன் இணைந்து படம் இயக்க முடிந்தது என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. 


நகைச்சுவையை யோசித்து உருவாக்குவது என்பதை விட நம்மை சுற்றிலும் உள்ளவர்களை கவனித்தாலே பல விஷயங்கள் கிடைக்கும். கிழக்கே போகும் ரயில் படப்பிடிப்பின் போது மேட்டுப்பாளையம் அருகில் ராதிகாவை வைத்து பின்னணியில் ரயில் போவது போல ஒரு காட்சி படம் பார்க்க ரிகர்சல் எல்லாம் பார்த்து முடித்து விட்டோம். ஆனால் ரயில் வந்த போது அந்த சத்தத்தில் பின்னணியில் ஒலித்த பாடல் கேட்காமல் ராதிகா நடனமாடாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். நாங்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்துவிட்டோம். அப்போதுதான் ரயில் சத்தத்தில் பாடல் கேட்காதே என்பதை உணர்ந்ததும் எல்லோருக்குமே சிரிப்பு வந்து விட்டது. மறுநாள் காத்திருந்து அதே காட்சியை ரயிலுக்கு சற்று தொலைவில் இருந்தபடி பாடமாக்கினோம். இயக்குநர் எழிலிடம் அதிகமாக பழகவில்லை என்றாலும் எல்லோரிடமும் அவர் நன்றாக பழகுகிறார் என்பதைக் கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறினார்.


*இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசும்போது,* 


“நான் படித்த பள்ளிக்கூடம், நான் குடியிருந்த கோவில் சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸில் இருந்து  வந்தவர் தான் இயக்குநர் எழில். இப்போது ஆர்.பி சவுத்ரி சார் மலையாளத்திலும் தெலுங்கிலும் படங்களை தயாரித்து வருகிறார். அதுவும் புதுமுக இயக்குநர்கள் தான். அவரிடம் எத்தனையாவது இயக்குநரை அறிமுகப்படுத்துகிறீர்கள் கேட்டபோது அதெல்லாம் தெரியாது என்று கூறினார். 98 படங்களை தயாரித்து தற்போது நூறாவது படத்தை நெருங்கி கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு பள்ளியில் இருந்து வந்தவர் என்பதால் இயக்குனர் எழிலை பாராட்டுவதற்காகவே இங்கே வந்தேன்.  படைப்பாளிகளுக்கு என்றும் வயதாவது இல்லை. இயக்குனர் எழில் எப்போதும் மனதளவில் 25 வயதானவராகவே இருக்கட்டும். அப்போதுதான் இளமையான படங்களும் காட்சிகளும் வரும். படம் பண்ணும்போது வயதாகிவிடும். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியது இல்லை. இந்த வயதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் நடித்து வருகிறார். அவர் வயது பற்றி எல்லாம் கவலைப்பட்டதே இல்லை.. வயதானாலும் சினிமாக்காரர்கள் இளமையாக தான் இருப்போம்” என்று கூறினார்.


*இயக்குநர் பேரரசு பேசும்போது,* 


“எழில் சார் திரை உலகிற்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டதை பார்க்கும்போது, இத்தனை வருடங்கள் ஓடிவிட்டதா என்கிற ஆச்சரியம் ஏற்படுகிறது. அதே சமயம் எழில் எப்போதுமே இளமையாகவே காட்சியளிப்பவர். துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியான போது உதவி இயக்குனராக பணியாற்றிய நான் அவ்வளவு கஷ்டத்திலும் கூட அந்த படத்தை இரண்டு முறை பார்த்தேன். ஒரு திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அந்த படம். சீரியஸ், சென்டிமென்ட் கலந்து படம் பண்ணிய ஒரு இயக்குநர் எப்படி திடீரென காமெடிக்கு மாறினார் என்பதே ஒரு ஷாக்காக இருக்கிற.து ரசிகர்களை சென்டிமென்ட் படம் எடுத்து அழ வைத்துவிடலாம். திரில்லர் படம் எடுத்து பயமுறுத்தி விடலாம். ஆனால் அவர்களை சிரிக்க வைப்பது என்பது கஷ்டமான ஒன்று. அந்த விஷயத்தில் எழிலை காமெடி கிங் என்றே சொல்லலாம். 


கே.எஸ்.ரவிகுமார் சொன்னது போல சூப்பர் குட் பிலிம்ஸ் தான் எனக்கும் தாய் வீடு. எழிலும் அங்கே இருந்து வந்தவர் என்பதால் எங்களுக்குள் ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. எங்களது இயக்குநர் சங்கத்திலும் பொருளாளராக பணியாற்றியவர் எழில். முன்னாள் பொருளாளர் இப்போது பிஸியாக இருப்பதால் நாங்களும் இதுபோல பிஸியாக மாறுவோம் என்கிற நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. அவரது ஐம்பதாவது வருடத்திலும் அவர் இதே போல பிஸியாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.


*இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,* 


“எழில் என்றாலே அழகான பெயர். இளமை புதுமை என்று அர்த்தம். என்னையே ஒரு நடிகனாக்கி இருக்கிறார் என்றால் பாருங்கள். அதுதான் அவருடைய காமெடி சென்ஸ். உங்களுடைய படத்தில் நடிக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். என்னை வச்சு செய்து விட்டார். வாழ்க்கையில் மறக்க மாட்டேன். இப்போதும் இப்போதும் தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி சாரை ஒரு தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கிறேன் என்று எழில் என்னிடம் கூறினார். 25 ஆண்டுகளாக படம் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதே பெரிய விஷயம். நான் நடிக்க ஆரம்பித்தால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நடிக்கட்டும் என விட்டுவிட்டு ரிலாக்ஸ் ஆக அமர்ந்து விடுவார். அந்த அளவுக்கு ஒரு நடிகரின் மீது நம்பிக்கை வைப்பவர். நடிகர் விமல் மிகச்சிறந்த நடிகர்.. தொடர்ந்து இயக்குனர் எழிலுடன் பயணித்தால் அவரை இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு எழில் சென்று விடுவார்” என்று கூறினார்.


*நடிகர் ரவிமரியா பேசும்போது,* 


“இந்த விழாவை நான் தான் எடுத்திருக்க வேண்டும். எழில் இயக்கிய ஆறு படங்களில் நான் தான் வில்லனாக நடித்துள்ளேன். தீபாவளி படத்திற்குப் பிறகு அவருக்கு ஒரு இடைவெளி விழுந்த சமயத்தில் இயக்குநர் சங்கத்தில் அமைதியான ஒரு இடத்தில் வந்து அமர்ந்தார். இந்த சங்கத்திற்குள் வந்தவர்களை சேவை என்கிற போதை எழுந்திருக்கவே விடாது. ஆனாலும் எழில் சார் ஒரு பக்கம் சங்கத்து பொறுப்புகளையும் பார்த்துக் கொண்டு ஒரு படைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இயக்குநர் சங்க 40வது வருட விழாவில் நான் நகைச்சுவையாக பேசுவதை பார்த்துவிட்டு இயக்குனர் எழில் யார் உங்களை வில்லனாக மாற்றியது, நீங்கள் சரியான காமெடி புராடக்ட் என கூறி சிவகார்த்திகேயனை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய மனம் கொத்தி பறவை படத்தில் தான் என்னையும் ஒரு காமெடி நடிகராக அவர் மாற்றினார். என்னிடம் என்ன திறமைகள் இருக்கின்றன என்பது முழுவதும் அவருக்கு தான் தெரியும். தொடர்ந்து அவருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். ஒரு படம் விட்டு ஒரு படம் அவரது இயக்கத்தில் நடிப்பது என எங்கள் இருவருக்குமே ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. 


ஒரு படத்தில் முதல் பாகத்தில் ஒரு ஹீரோவும் இரண்டாவது பாகத்தில் அதே ஹீரோவோ அல்லது வேறு ஹீரோவோ கூட நடிப்பார்கள். ஆனால் தேசிங்கு ராஜா முதல் பாகத்திலும் நான் தான் வில்லன். இந்த இரண்டாம் பாகத்திலும் நானே வில்லன். சிலர் சொல்வது போல எழில் சார் படப்பிடிப்பில் ஜாலியாக அமர்ந்திருப்பார் நாங்கள் பாட்டுக்கு நடித்துக் கொண்டிருப்போம் என்பதில் உண்மையே இல்லை. எந்த அளவிற்கு நடிகனிடம் வேலை வாங்க வேண்டுமோ அதை சரியா வாங்குவார். இல்லையென்றால் தொடர்ந்து இவ்வளவு வெற்றி படங்களை ஒருவரால் கொடுக்க முடியாது. 


*இயக்குநர் சரண் பேசும்போது,* 


“எழில் 1300 வெள்ளிக்கிழமைகளைத் தாண்டி இந்த இடத்தில் நிற்கிறார். ஒரு இயக்குனர், ஒரு ஹீரோ இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முக்கியமானது. ஏதோ ஒரு வெள்ளிக்கிழமையில் திடீரென ஒரு ஹீரோவோ, இயக்குனரோ டக்கென உருவெடுப்பார்கள். அவர்களுடன் போட்டி போட வேண்டிய சூழலும் ஏற்படும். கதை தோற்கலாம், ஆனால் இயக்குநர் தோற்கமாட்டார் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னார். அது ஒரு அருமையான வார்த்தை. எழில் மட்டுமல்ல எல்லா இயக்குநர்களுக்கும், இடையில் ஒரு தேக்க நிலை வரும். அதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு செல்வது என்பது மிக மிக முக்கியம். பிறகு படம் பண்ணுபவர்களுக்கு எஸ்.ஏ ராஜ்குமார் வித்யாசாகர் இசையில் படம் பண்ணும் வரம் கிடைக்க வேண்டும். இரண்டு வரமும் இவருக்கு கிடைத்திருக்கிறது” என்றார்.


*தவசி பட இயக்குநர் உதய் சங்கர் பேசும்போது,* 


“நானும் எழிலும் உதவி இயக்குநராக இருந்த போதே பழக்கம். எழில் தான் பணியாற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரிடமும் நட்பாக இருப்பவர். இந்த தேசிங்கு ராஜா 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.


*இயக்குனர் சுசீந்திரன் பேசும்போது,* 


“எழில் சார் கொடுத்த அந்த வாய்ப்பால்தான் இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன். நான் உட்பட கிட்டத்தட்ட 10 இயக்குநர்களுக்கு மேல் எழில் சாரிடம் இருந்து வந்திருக்கிறோம். காரணம் அவருடன் கூட இருந்தாலே நிறைய கற்றுக் கொள்ளலாம். படப்பிடிப்பில் எவ்வளவு டென்சனாக இருந்தாலும் ஒரு கேப்டனாக அதை கூலாக கையாளுவார். அவருடன் நான் பணியாற்றிய தீபாவளி படம் மூலமாக தான் வெண்ணிலா கபடி குழு படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 


இன்று சூரி ஒரு கதாநாயகனாக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் எழில் சார் தான்.. தீபாவளி படத்தில் தனக்கு கொடுத்திருந்த கதாபாத்திரத்தில் இரண்டு காட்சிகளில் பிரமாதமாக நடித்திருந்தார் சூரி. அவர் நடிப்பை பார்த்து விட்டு தான் என்னுடைய முதல் படமான வெண்ணிலா கபடி குழுவில் அவரை நடிக்க வைத்தேன். நிறைய நடிகர்களை, தொழில்நுட்ப கலைஞர்களை எழில் சார் உருவாக்கி இருக்கிறார். நிறைய நடிகர்களுக்கு அவருடைய மதிப்பு தெரியவில்லை. நாம் சொல்லும் பத்து சீன்களுக்கும் சிரிப்பார். ஆனால் ரசிகர்கள் எதை ரசிப்பார்கள் என்பதை கணித்து அதை மட்டுமே தேர்வு செய்வார். 25 வருடமாக தொடர்ந்து படம் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்பது பெரிய விஷயம். என் பையன் வளர்ந்து கல்லூரி படிக்கும் போது, என் தந்தை ஒரு காலத்தில் இயக்குனராக இருந்தார் என சொல்லாதபடி அப்போதும் நான் இயக்குநராக படம் இயக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எழில் சார் அதை சாதித்து விட்டார்” என்றார்.


*இயக்குநர் தமிழ்வாணன் பேசும்போது,* 


“எழில் இயக்குநர் ஆவதற்கு முன்பிருந்தே அவருடன் நெருங்கி பழகி இருக்கிறேன். அவருடைய இரு சக்கர வாகனத்தில் தான் துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் கதையை பல கம்பெனிகளுக்கு சென்று கூறி இருக்கிறோம். எல்லா இடத்திலும் கதை சூப்பர் என்று சொன்னாலும் கூட வெவ்வேறு காரணங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. நீங்கள் எல்லாம் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத நடிகர்களுக்கு எல்லாம் அந்த கதையை சொல்லி இருக்கிறோம். ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்து துபாய்க்கு கிளம்பும் முடிவுக்கு வந்த போது கூட என்னை வேறொரு இயக்குனரிடம் உதவியாளராக சேர்த்து விடுவதற்கு முயற்சி செய்தார் எழில்.


சில்வர் ஜூப்ளி ஹிட்டான அந்த படம் ஒன் மேன் ஷோ. அதாவது எந்தவித டிஸ்கஷனும் இல்லாமல் எழில் ஒருவர் மட்டுமே உருவாக்கிய கதை அது. இந்த படப்பிடிப்பின் போது தனது தாய் இறந்து விட்டதை நினைத்து விஜய் அழ வேண்டிய காட்சியை படமாக்கியபோது திடீரென எழில் சாரை ஒருமுறை நடித்துக் காட்டச் சொன்னார் விஜய். அடுத்த நொடியே அந்த காட்சியில் கதறி அழுதபடி நடித்த காட்டினார் எழில். அதை பார்த்து திகைத்துப் போன விஜய் இந்த அளவிற்கு என்னால் நடிக்க முடியுமா என தெரியாது.. என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன் என கூறி நடித்த அந்த காட்சி வெளியானபோது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுவாக ஒரு ஆர்ட் பிலிமுக்கு தான் அந்த படத்தின் கிளைமாக்ஸ் எழுந்து நின்று கைதட்டுவது வழக்கம். ஆனால்  ஒரு கமர்சியல் படத்திற்கு கிளைமாக்ஸில்ல் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டியது என்றால் அது துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு தான்” என்றார்..


*இயக்குநர் சந்தோஷ் பேசும்போது,* 


“எனக்கும் எழிலுக்கும் 30 வருட நட்பு இருக்கிறது. இங்கு பேசியவர்கள் அவரிடம் உதவியாளர்களாக பணியாற்றி உள்ளார்கள். நானும் எழிலும் பார்த்திபன் சாரிடம் ஒன்றாக வேலை பார்த்திருக்கிறோம். பிறகு எழிலுடன் மூன்று படங்களில் இணைந்து வேலை பார்த்திருக்கிறேன். எழில் 25 என்கிற இந்த லோகோவை கூட நான்தான் செய்து கொடுத்தேன். துள்ளாத துள்ளும் படத்தில் முதல் ஹீரோ, ஹீரோயின் யார் என்றால் அது வடிவேலுவும் ஊர்வசியும்தான். ‘ருக்மணிக்காக’ என டைட்டில் வைத்து கிட்டத்தட்ட அதற்காக 14 டிசைன்கள் நான் தான் செய்தேன்.. நல்ல கதை தனக்கான விஷயங்களை தேடிக்கொள்ளும் என்பதற்கு துள்ளாத மனமும் துள்ளும் தான் ஒரு மிகச் சிறந்த உதாரணம். ஒரு நல்ல ஹீரோ, நல்ல ஹீரோயின், நல்ல கம்பெனி, நல்ல பாடல்கள், நல்ல காமெடி என எல்லாமே அந்த படத்தில் மொத்தமாக அமைந்திருந்தது. அன்று அவர் தொடங்கிய வாழ்க்கை இன்றுவரை அவருக்கு சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்போது வரை அவருடன் கூட இருப்பதற்காக பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.


*இயக்குநர் செல்லா அய்யாவு பேசும்போது,* 


“தேசிங்கு ராஜா படத்தில் தான் எழில் சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். உதவி இயக்குநர்களிடம் கோபப்படாத ஒரு இயக்குநர் அவர்.எந்த சூழ்நிலையிலும் நிதானம் தவறாமல் அதை பக்குவமாக கையாள கூடியவர். அவரிடம் இருந்து அதை கற்றுக் கொள்ளலாம்” என்று கூறினார்.


*நடிகர் விமல் பேசும்போது,* 


“தேசிங்கு ராஜா படத்தை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் எழில் சாருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். இந்த படத்தில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர். சின்ன கதாபாத்திரம், பெரிய கதாபாத்திரம் என யாரையும் வேஸ்ட் பண்ண நினைக்க மாட்டார். அனைவருக்குமே டயலாக் கிடைக்க வேண்டும் என நினைப்பார். அவருடன் எத்தனை படம் செய்தாலும் போரடிக்காது. எப்படி சிலரை இயக்குனர்களின் நடிகர் என சொல்வார்களோ அதேபோல எழில் நடிகர்களின் இயக்குனர், தயாரிப்பாளர்களின் இயக்குநர். அவர் ஐம்பதாவது வருடம் பொன்விழா காண வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.


*படத்தின் இரண்டாவது கதாநாயகனான ஜனா பேசும்போது,* 


“இவ்வளவு பெரிய இயக்குநரின் படத்தில் நடிக்கிறோம் என முதல் நாளே எனக்கு பதட்டமாக இருந்தது. ஆனால் எழில் சார் பெயருக்கு ஏற்றபடி எளிதாகவே இருப்பார். அதனால் அவருடன் பணியாற்றியது ஜாலியாகவே இருந்தது” என்று கூறினார்


*நடிகர் சிங்கம்புலி பேசும்போது,* 


“துள்ளாத மனமும் துள்ளும் படப்பிடிப்பு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு நண்பர் கிருஷ்ணமூர்த்தி மூலமாக எழிலின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து கொள்கிறாயா என கேட்டு அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.. ஆனால் ஒருமுறை மட்டுமே சந்தித்து இருந்ததால் எழிலின் முகமும் அவரது பெயரும் மறந்து விட்டது. படத்தின் பூஜையின் போது அவரிடமே சென்று வேறு ஒரு பெயரை கூறி விசாரித்தேன். அதன்பிறகு நாலு நாட்கள் கழித்த பிறகே அவர்தான் இயக்குநர் எழில் என எனக்கு தெரியவந்தது. அப்படி அந்த படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற முடியாமல் போனது” என்று கூறினார்.


அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியின் இறுதியில் *இயக்குநர் எழில் பேசும்போது,*


“துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு இப்படி ஒரு பங்க்ஷன் தேவையா என நான் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது அந்தப் படத்தை போலவே இந்த படத்திலும் நீங்கள் பணியாற்ற வேண்டும், அதற்காகத்தான் இந்த இரண்டு விழாக்களையும் ஒன்றாக வைத்திருக்கிறேன் என்று சொன்னார். எனக்கு சினிமாவை தவிர வேறு வேலை தெரியாது. அதனால் கொடுத்த வேலைக்கு கடுமையாக உழைப்பேன். என்னுடைய முதல் படத்தில் முதல் இயக்குனர் போல வேலை செய்து கொண்டிருந்தேன். இப்போது இந்த படத்தில் ஒரு உதவி இயக்குனர் போல வேலை செய்து கொண்டிருக்கிறேன். 


தேசிங்குராஜா படத்தின் முதல் பாகம் அதுவாகவே ஒரு இயல்பான கதையாக அமைந்தது. இரண்டாம் பாகம் என்று வரும்போது முதல் பாகம் போல அட்டகாசமாக இது வருமா என்று என்னிடம் பலரும் கேட்டார்கள். அதில் விமல் ஜாலியாக பண்ணியிருப்பாரே தவிர இந்த அளவிற்கு பக்குவப்பட்டவராக எல்லாம் பண்ணி இருக்க மாட்டார். இதில் மிகச் சிறப்பாக நடித்து வருகிறார். கூடவே ஜனாவும் மிக அற்புதமாக பண்ணிக் கொண்டிருக்கிறார். படத்தில் மூன்று கதாநாயகிகள் இருக்கிறார்கள். அவர்களும் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். விமல் ஏற்கனவே கதாநாயகனாக உருவாகிவிட்டார். ஒரு நல்ல படத்தில் நடித்தால் ஜனாவும் திறமையான ஒரு பெரிய ஹீரோவாக வருவார் என வாழ்த்துகிறேன். விமல் இந்த படத்திற்குப் பிறகு வேறு ஒரு உச்சம் தொடுவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் என்னுடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் செல்வா தான் இந்த படத்திலும் என்னுடன் இணைந்து பணியாற்றுகிறார். அதேபோல பூவெல்லாம் உன் வாசம் படத்திற்கு பிறகு வித்யாசாகர் என்னுடைய இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அந்தப் படத்தைப் போலவே இந்த படத்திலும் சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனின் மகன் ஜனா தான் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார். ஆனால் எந்த இடத்திலும் அவரை ஒரு தயாரிப்பாளர் மகன் என நினைக்க வேண்டாம் என என்னிடம் முதலிலேயே சொல்லிவிட்டார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு அமளிதுமளியாக போய்க்கொண்டிருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லோரும் இது என்ன மீன் மார்க்கெட்டா, இவ்வளவு கூட்டமாக இருக்கிறது என்று கேட்கிறார்கள். இதற்கு முன் என்னுடைய எந்த படத்திலும் இந்த அளவு கூட்டத்தை வைத்து படம் இயக்கியது இல்லை. ஆனாலும் அவர்களை வைத்து எடுத்த காட்சிகளை போட்டு பார்த்த போது அற்புதமாக வந்திருக்கிறது. இந்த படத்திற்காக ஒர்க்ஷாப் வைத்திருந்தேன். அதில் பங்கேற்றவர்கள் எல்லோரும் என்னை அழ வைத்து விட்டார்கள். அப்படி வாய்ப்பு தேடி வருபவர்களை விட்டு விடக்கூடாது என நினைப்பவன் நான். அதனாலேயே என்னுடைய உதவி இயக்குனர்களிடம் அவர்களை திருப்பி அனுப்பி விடாதீர்கள், ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை கொடுங்கள் என கூறியுள்ளேன்.


இப்போது தயாரிப்பாளர் கிடைப்பது ரொம்ப சுலபம். நிறைய தயாரிப்பாளர்கள் வருகின்றனர். ஆனால் அந்த சமயத்தில் ஒரு ஐந்து, ஆறு பெரிய தயாரிப்பாளர்கள் தான் இருந்தனர். புதிய இயக்குனர்கள் சொல்லும் கதை பிடித்திருந்தால் கூட அவர்களை நம்பி படம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் கதை நன்றாக இருந்தால் சவுத்ரி சார் படம் இயக்கும் வாய்ப்பு கொடுத்து விடுவார். அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்தார். துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் இப்போது ஒளிபரப்பானாலும் நிறைய பேர் பார்க்கிறார்கள். ஒரு படம் தலைமுறையை தாண்டியும் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அந்த வகையில் என்னுடைய காமெடி படங்களும் அடுத்தடுத்த கட்டத்திற்கு போய்க்கொண்டிருக்கின்றன.


துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் படங்கள் பண்ணிய சமயத்தில் விஜய், அஜித் இருவரும் வளர்ந்து வந்த நடிகர்கள்.. பூவெல்லாம் உன் வாசம் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனிடம் இரண்டு வீடுகள் வேண்டுமென கேட்டேன். புதிதாகவே கட்டிக்கொள் என்றார். ஆனால் செட் தான் போட்டு படம் ஆக்கினேன். இந்த படத்தில் அஜித் சார், ஜோதிகா ஜோடி அழகாக இருந்தது என இப்போது கூட சொல்கிறார்கள், அந்த படத்தில் சிவகுமாருக்கு மருமகளாகவே அவர் நடித்திருந்தார்,


இந்த விழா தொடர்பாக விஜய் சாரை சந்திக்க நேரம் கேட்ட போது உடனடியாக என்னை வரச் சொன்னார். அவரது பழைய படங்கள், இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் உள்ளிட்ட பல விஷயங்களை விரிவாக எனது பகிர்ந்து கொண்டார். ரொம்ப நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார். மனம் கொத்தி பறவை படம் பண்ணும் போது சிவகார்த்திகேயனுக்கு அது கிட்டத்தட்ட முதல் படம். எனக்கு அது ஒரு ரீ என்ட்ரி. அந்த படத்தின் பட்ஜெட்டும் என்னிடம் பெரிய அளவில் இல்லை. என்னுடைய கிராமத்திலேயே வைத்து அந்த படத்தை எடுத்தேன். இரவு நேர படப்பிடிப்பின் போதெல்லாம் அங்குள்ள திண்ணையில் தான் படுத்து தூங்குவார் சிவகார்த்திகேயன். அந்த அளவுக்கு ஒரு அர்ப்பணிப்பு உணர்வுள்ள நடிகர். அப்போதே அது அவரிடம் தெரிந்தது. அதனால்தான் இன்று அவர் இந்த உச்சத்தை பெற்றுள்ளார். 


என்னுடைய அம்மாவிற்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதனால் இயல்பாகவே எனக்கும் அது இருக்கிறது. விக்ரம் பிரபு ரொம்பவே அமைதியானவர். பிரபு சார் என்னை தனியாக அழைத்து, நம்ம ஊர் நேட்டிவிட்டி எல்லாம் தெரியாது.. நீ வச்சு வாங்கிக்க என்று சொன்னார். அதேபோல விக்ரம் பிரபுவும் நான் எது சொன்னாலும் அதை சிறப்பாக செய்வார். 


விஷ்ணு விஷால் என்னுடைய படத்தில் நடிப்பதற்கு முன்பாக சில கலைப் படங்களில் நடித்திருந்தார். அதனால் என் படத்தில் நடிக்கும்போது முதலில் இரண்டு மூன்று நாட்களுக்கு எனக்கும் அவருக்கும் செட்டாகவில்லை. இயக்குநர் செல்லாவிடம் சென்று என்னை ஓவராக பந்தா பண்ண சொல்லி சொல்கிறாரே, கொஞ்சம் மடக்கி வாசித்தால் வேண்டாம் வேண்டாம் என்கிறாரே என்று கூறியிருக்கிறார். ஆனால் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின்பு எடிட்டிங்கில் படத்தை பார்த்துவிட்டு அதன்பிறகு, நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே செய்ய ஆரம்பித்து விட்டார். படப்பிடிப்பின் கடைசி நாள் என்று என்னிடம் வந்து முதல் நாள் எடுத்த காட்சியை கூட மீண்டும் படமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த அளவிற்கு நடிப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பார்.


என் முதல் படத்திலேயே எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைப்பாளராக எனக்கு கிடைத்தது அற்புதமான விஷயம். ராஜ்குமார் நல்ல கவிஞர், கதாசிரியர். அவர் எழுதிய சில வரிகளை பார்த்து அதிர்ச்சியான வைரமுத்து அதை பீட் பண்ண வேண்டும் என எழுதியது தான் இன்னிசை பாடிவரும் என்கிற பாட்டு. துள்ளாத மனமும் துள்ளும் படப்பிடிப்பின் முதல் நாளன்றே எனக்கு விஜய் போன்ற பெரிய நடிகர்கள் இருந்ததால் படபடப்பு இருந்தது அதனால் முதல் தான் முதல் நாளே துட்டு பாடலை படமாக்கினேன்” கூறினார்.


விழாவில், எழில்25 ஆக எழில் சினிமா வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டது. 


அப்போது, எழிலின் முதல் பட இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் அவருக்கு நினைவு கேட்யம் ஒன்றை வழங்கி வாழ்த்தி பேசினார். 


தேசிங்குராஜா2” ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஒன்றும் வெளியிடப் பட்டது.


தஞ்சாவூர் நன்னிலம் ஊரிலிருந்து வந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ஊரிலிருந்து சினிமாவுக்கு பெருமை சேர்த்த டைரக்டர் எழிலின் வீடியோ தொகுப்பு ஒன்றும் வெளியிடப் பட்டது. முடிவில் எழில் தாயார்  மேடையில் கண் கலங்கி நின்றது அனைவரயும் கண் கலங்க செய்தது. அந்த நேரம் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் மேடையில் ஏறி எழில் தாயாருக்கு சால்வே அணிவித்து மரியாதை செய்து வாழ்த்தி பேசினார். எஸ்.ஏ.சந்திரசேகர் மேடையில் ஏறி மரியாதை செய்ததும், வருகை தந்திருந்த டைரக்டர்கள் கே.எஸ்.ரவிகுமார், ஆ.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், சரண், உதயகுமார், சுசீந்திரன், நாஞ்சில் அன்பழகன், கதா.க.திருமா,ரங்கனாதன்,ரவிமரியா, சிங்கம்புலி, சந்தோஷ் மற்றும் பல  டைரக்டர்கள் மேடையில் மரியாதை செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.


இவர்கள் உட்பட, ஜெயம்ரவி, ராதாரவி, கே.பாக்யராஜ், எழிலின் குரு ஆர்.பார்த்திபன், சந்தாணபாரதி, விக்ரமன், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், டி.சிவா, தனஞ்செயன், சித்ரா லட்சுமணன், ரமேஷ் பிள்ளை நடிகர் சிங்கமுத்து, மதன் பாப், #தேசிங்குராஜா2 படத்தின் இசை அமைப்பாளர் வித்யாசாகர், டான்ஸ் மாஸ்டர் தினேஷ், 


நாயகன் விமல், முக்கிய கேரக்டரில் நடிக்கும் ஜனா, நாயகிகள் பூஜிதா பொனாடா , ஹர்ஷிதா மற்றும் ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத், 


இணை தயாரிப்பாளர் ஆர்.பாலகுமார், 

நிர்வாக தயாரிப்பாளர் பி.ஹரி,

ஒளிப்பதிவாளர் செல்வா.ஆர், 

எடிட்டிடர் ஆனந்த் லிங்கா குமார்,

ஆர்ட் டைரக்டர் சிவசங்கர்

வசனகர்த்தா முருகன், 

ஸ்டண்ட் மாஸ்டர் ‘ஃபயர்’ கார்த்திக் ( Fire Karthik ), 

பி.ஆர்.ஓ: ஜான்சன் 


போன்றோர் விழாவில் பங்கேற்றார்கள்.