*எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாந்தனு, மஹிமா நடிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குண்டுமல்லி' வீடியோ பாடலை சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிட்டது*
எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் பேனரில் ராம் பிரசாத் மற்றும் ஷரண் தயாரிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் மஹிமா நம்பியார் நடித்துள்ள 'குண்டுமல்லி' என்கிற உற்சாகமான காதல் பாடலை இன்று தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிட்டது
இந்த வீடியோ பாடலின் டீசர் டிசம்பர் 25-ஆம் தேதி இரண்டு மொழிகளிலும் வெளியானது. திருமண நிச்சயதார்த்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட காதல் மற்றும் குடும்ப உணர்வுகள் நிறைந்த பாடலாக இது உருவாகியுள்ளது. பாடல் வரிகள் வசீகரமாகவும், காட்சிகள் வண்ணமயமாகவும், இசை இனிமையாகவும் உள்ளன.
சாந்தனு தனது துறுதுறு நடிப்பால் கவர்கிறார். மஹிமா நம்பியார் தனது முகபாவங்களால் மனங்களை கொள்ளை கொள்கிறார்.
இந்தப் பாடலுக்கு ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைத்து, நித்யஸ்ரீயுடன் இணைந்து தமிழ் பதிப்பை பாடியுள்ளார்.
திமுகவின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார கீதமான 'ஸ்டாலின் தான் வாராரு' பாடலுக்கு இசையமைத்தது ஜெரார்ட் ஃபெலிக்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.
கே எஸ் ஹரிஷங்கர் மற்றும் நித்யஸ்ரீ குண்டுமல்லி பாடலின் மலையாள பதிப்பை பாடியுள்ளனர். குண்டுமல்லி பாடலுக்கான தமிழ் வரிகளை விவேக் ரவியும், மலையாள வரிகளை ரஃபீக்கும் எழுதியுள்ளனர். திருமணம் செய்து கொள்ள போகும் ஜோடியின் உணர்வுகளை பாடல் வரிகள் அழகாக வெளிப்படுத்தியுள்ளன.
ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் மேற்கொள்ள, படத்தொகுப்பை கார்த்திக் மனோரமா கவனிக்க, கலை இயக்கத்தை தினேஷ் செய்துள்ளார். காயத்ரி ரகுராம் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
காண்பவர்களை உடனடியாக கவரும் வகையிலும், அவர்களது இதயங்களில் இடம் பிடிக்கும் வகையிலும் குண்டுமல்லி பாடல் உருவாகியுள்ளது.
*Saregama released the feel good romantic music video 'Gundumalli' directed by Aadhav Kannadhasan starring Shanthanu and Mahima and produced by MKRP Productions*
Feel good romantic music video 'Gundumalli' starring Shanthanu Bhagyaraj and Mahima Nambiar in the lead, directed by Aadhav Kannadhasan, produced by Ram Prasad and Sharan under the banner MKRP Productions has released in Tamil and Malayalam today by Saregama Originals.
Teaser of the song was released on 25 December in both the languages.
The attractive number is set in the backdrop of a betrothal. The lyrics are catchy, the visuals are vibrant and the music is pleasant.
While Shanthanu is handsome and energetic, Mahima Nambiar steals the show with her expressions.
Music for the song is by Jerard Felix who has also sung the Tamil version along with Nithyashree.
It is to be noted that it was Jerard Felix who had composed DMK's Assembly election campaign song 'Stalin thaan vaararu' which was a huge hit among the masses.
The Malayalam version of Gundumalli has been crooned by K S Harisankar and Nithyashree. Tamil lyrics for the song are by Vivek Ravi and the Malayalam lyrics have been penned by Rafeeq. The lines have beautifully brought out the feelings of a couple who are all set to enter wedlock.
The technical crew comprises cinematographer Madhesh Manickam, editor Karthik Manorama, art director Dinesh and choreographer Gayathri Raguram. The song has got all the qualities to strike an instant chord with the viewers.
https://youtu.be/ebBjBIj5aoA