Featured post

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா

 *நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!* ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அத...

Tuesday 31 October 2023

நல்ல கதை வந்தால் ஓகே சொல்ல காத்திருக்கும் ரம்பா

நல்ல கதை வந்தால் ஓகே சொல்ல காத்திருக்கும் ரம்பா..






வெள்ளித் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார் என அத்தனை முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நட்சத்திர நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார் .அவரோடு வந்த சிம்ரன், லைலா கோதிகா போன்ற நடிகைகள் இன்று பல முக்கிய படங்களில் நடித்து வருவதால் ரம்பாவுக்கும் நடிப்பின் மீதான மீண்டும் வந்துள்ளது. ஏற்கனவே தெலுங்கு படத்தில் வாய்ப்புகள் வந்தாலும், தமிழில் மீண்டும் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார். 


திரையுலகில் 20 வருடங்கள் 100 படங்களுக்குமேல் நடித்து திரையுலகின் நட்சத்திர நாயகியாக இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரம்பா. 90 கிட்ஸ்களின் உறக்கத்தை கெடுத்தவர், முன்னணி நடிகையாக கோலோச்சியவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றவுள்ளார். 


தனது 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா, 1993 ல் உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் கால்பதித்தார். அடுத்த 20 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்தார். 


உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக தென்னிந்திய முழுதும் நட்சத்திரமாக ஜொலித்தார். 20 வருடங்களாக திரையுலகில் கோலோச்சிய இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் திரையுலகில் தன் நடிப்பு பயணத்தை தொடரவுள்ளதாக தெரிவுத்துள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


இது குறித்து நடிகை ரம்பா கூறுகையில்… 

திரையுலகில் வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கனவுக்கன்னி அடையாளமும் புகழும் எனக்கு கிடைத்தது. அதை நினைத்து எப்போதும் எனக்கு பெருமை தான். நான் நடிக்கும் காலத்தில் மிக ஜாலியாக சுட்டிப்பெண்ணாக இருந்தேன். திருமணத்திற்கு பிறகு கூட எல்லோரும் கேட்டார்கள் என டிவிக்களில் ஷோ செய்தேன், ஆனால் குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள் எனத் தெரிந்த போது, நடிப்பதை நிறுத்தி விட்டேன். இரண்டு பெண் குழந்தைகள்,ஒரு பையன் என அழகான குடும்பம், ஒரு நடிகையாக நான் உணர்ந்ததே இல்லை, ஒரு நல்ல அம்மாவாக மனைவியாகவே இருந்தேன், இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். இப்போதும் ரசிகர்கள்  என்னை ஞாபகாமாக கேட்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  அவர்களின் அன்புதான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டியது. 


சினிமாவை தொடர்ந்து கவனித்து  கொண்டுதான் இருக்கிறேன், இப்போது சினொமாவின் டிரெண்ட் மாறியிருக்கிறது. ஆனால் சினிமா என்றுமே மாறாது. இப்போதும் சினிமா நண்பர்கள் உடன் பல விசயங்கள்  பேசிக்கொண்டு இருப்பேன், என் வயதுக்கேற்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களில்,  நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில்  பார்க்கலாம் என்றார்.

வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர்:

 வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர்: 










'ரா ..ரா .சரசுக்கு  ராரா...' பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர்

கே ராஜன் பேச்சு!


'ரா ..ரா .சரசுக்கு  ராரா...'வயது

வந்தவர்களுக்கான படம் என்றாலும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும்:தயாரிப்பாளர் ஏ. ஜெயலட்சுமி பேச்சு!


சென்சார் விதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்: 

'ரா ..ரா .சரசுக்கு  ராரா...' படத்தின்

இயக்குநர் கேசவ் தெபுர் பேச்சு!


ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும்  படம்

'ரா ..ரா ..சரசுக்கு  ராரா...'

இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். 

கேசவ் தெபுர் இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ்,

இசை ஜி. கே.வி.


9 V ஸ்டுடியோஸ் நிறுவனம்  நவம்பர் 3 ஆம் தேதி

இப்படத்தை வெளியிடுகிறது.


இப்படத்தின் அறிமுக விழா இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ ஜெயலட்சுமி பேசும் போது,


"தயாரிப்பாளர்களுக்காகத் தைரியமாகக் குரல் கொடுக்கும் கே .ராஜன் அவர்கள் இங்கே வந்திருக்கிறார். அவரது துணிச்சலுக்காக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.


வாழ்க்கையில் எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? இரண்டு மணி நேரம்  சந்தோஷமாக இருக்க வேண்டும் ,தன்னை மறந்து ஜாலியாக இருக்க வேண்டும் என்று தான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம் இப்பொழுது  கத்தி , வெட்டு குத்து, ரத்தம் என்று வரும் படங்களைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவற்றிலிருந்து மாறுபட்டு ஜாலியாக இருக்கும் படியாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இது வயது  வந்தவர்களுக்கான படம் என்றாலும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும் படியாக இருக்கும்.  படத்தை எடுக்கும் போது நாங்கள் பல பிரச்சினைகளைச் சந்தித்தோம் .இதன் படப்பிடிப்பு  வேலூரில் நடந்த போது போலீஸ் தொல்லைகள் தினம் தினம் வந்து கொண்டே இருந்தன. சாதாரண போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர், கமிஷனர் வரை எங்களுக்குத் தொல்லை  கொடுத்தார்கள். அப்போதெல்லாம் எங்களுக்குப் பாதுகாப்பாக ஆதரவாக காட்பாடி ராஜன் அவர்கள் இருந்து வந்திருக்கிறார். அதை  என்னால் மறக்க முடியாது. இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது" என்றார்.


படத்தின் இயக்குநர் கேசவ் தபுர் பேசும்போது,


"நான் இங்கே வரும்போது என்னிடம் இந்தத் தலைப்பை பார்த்து படம் கிளுகிளுப்பாக இருக்குமா என்று கேட்டார்கள். நீங்கள் நினைப்பது போல் கிளுகிளுப்பாக இருக்காது ;சந்தோஷமான கிளுகிளுப்பாக இருக்கும் என்றேன் .நான் சிறு வயது முதல் தலைவர் ரஜினி அவர்களின் ரசிகன். அவர் படங்களில் நடனக் கலைஞராகவும் நடன உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து இருக்கிறேன்.


' சந்திரமுகி ' படத்தில் இருந்து அந்தத் தலைப்பை நான் எடுத்துக் கொண்டேன் .சரசு என்றால் மோகம் மட்டுமல்ல சந்தோஷம் என்றும் குறிக்கும்.


இந்தத் தலைப்பு பற்றி நான் தயங்கிய போது கூட, தயாரிப்பாளர்தான் உறுதியாக இருந்தார்கள், இதே தலைப்பை மாற்றக்கூடாது என்று. இந்தப் படத்தை பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையேதான் எடுத்தோம் .தினசரி ஒரு பிரச்சினை வரும். அப்படி 45 நாட்களும் பிரச்சினை வந்து கொண்டே இருந்தது . பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தும் போது தான் காவல்துறை அனுமதி வாங்க வேண்டும். ஆனால் உரிமையாளரிடம் அனுமதி வாங்கிய ஒரு தனியாருக்குச் சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்தும்போது எங்களுக்கு அவ்வளவு இடைஞ்சல்கள் கொடுத்தார்கள் .இப்படி முதல் நாள் 300 நடனக் கலைஞர்களுடன் நாங்கள் தயாராகி விட்டோம் .அனுமதி வேண்டும் என்று எங்களைத் தொந்தரவு கொடுத்தார்கள். இப்படிப் படப்பிடிப்பு நடந்த எல்லா நாட்களிலும் தொல்லைகள் தொடர்ந்தன.

ஆனால் அப்போதெல்லாம் தயாரிப்பாளர் தைரியமாக அதை எதிர்கொண்டு சமாளித்தார்.


படத்தில் 60 கட்கள் சென்சாரில் கொடுத்தார்கள். அதனால் என்னை "60 கட் டைரக்டர் "என்று கூறுகிறார்கள்.


 நான் இதுவரை வந்த படங்களைப் பார்த்து தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். எத்தனையோ படங்களில் அனுமதித்த காட்சிகளை எல்லாம் எங்களுக்கு மட்டும் சென்சாரில் அனுமதிக்க முடியாது என்றார்கள்.


 படத்திற்கு நாங்கள் யூ சர்டிபிகேட் கேட்கவில்லை.ஏ சர்டிபிகேட் தான் வேண்டும் என்று கேட்கிறோம். இது அடல்ட் படம் என்று தான் கூறினோம். ஆனால்  சென்சாரில் எதுவுமே முடியாது என்று கைவிட்டு விட்டார்கள். எதுவுமே தர முடியாது என்றார்கள்.நீங்கள் வேண்டுமானால் ரிவைசிங் கமிட்டி  செல்லுங்கள் .இல்லாவிட்டால் நீதிமன்றம் செல்லுங்கள் என்றார்கள். 


ரிவைசிங் கமிட்டி சென்றோம் அங்கே நடிகை கௌதமி தான் தலைவராக இருந்தார். படத்தின் மூலம் என்ன சொல்ல போகிறீர்கள் என்றார்.லேடீஸ் ஹாஸ்டலில் தவறுகள் நடக்கின்றன அப்படி நடக்க கூடாது என்று நாங்கள் சொல்கிறோம் என்றோம்.


பல மணி நேரம் காக்க வைத்தார்கள்.

பிறகு நீங்கள் எதை வெட்ட வேண்டுமோ அதை தாராளமாக வெட்டிக் கொள்ளுங்கள் .ஆனால் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்விகள் கேளுங்கள் விளக்கம் சொல்கிறோம் என்றேன்.

அவர்கள் எதையும் கேட்பதற்குத் தயாராக இல்லை. நான்கு பக்கம் அளவில் குறிப்பிட்டு நீக்கச் சொன்னார்கள்.நக்மா என்று பெயர் இருக்கக் கூடாது என்றார்கள் .லலிதா என்று பெயர் இருக்கக் கூடாது என்றார்கள்.அந்தப் பெயர்கள் ஒரு நிறுவனத்தின் பெயர் அல்ல சாதாரணமாக இருக்கக்கூடியது தான்.

ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் அவ்வளவு அவமதித்தார்கள்.

விளக்கிப் பேசும்போது

கையைக் காட்டிப் பேசியதைத் தங்களை அவமதிப்பதாகக் கருதி மன்னிப்பு கேட்டு லெட்டர் கொடுங்கள் என்றார்கள்.  கதாநாயகன் கதாநாயகியை மேலே பார்க்கிறான் அந்தக் காட்சியைத் தூக்குங்கள் என்றார்கள் .நாங்கள் விளக்கம் சொன்னால் எதுவும் பேசக்கூடாது வெளியே போங்கள் என்று சொன்னார்கள். எங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு அங்கே எங்களை நடத்தினார்கள் .


சென்சார் விதிகள் எல்லாம் 1952 -ல் உள்ளது அப்படியே இன்றும் உள்ளன. ஆனால் திரைப்படங்களும் வாழ்க்கை முறையும் கலாச்சாரமும் எவ்வளவோ மாறிவிட்டன. ஆனால் அதை மாற்றாமல் அப்படியே வைத்து இருக்கிறார்கள் .5 ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்சார்விதிகளை மாற்ற வேண்டும் .அப்போதுதான் இவர்களுக்கு நாட்டு நடப்பு என்னவென்று புரியும். இவர்கள் அப்படிப் பெயர்களை எடுக்கச் சொன்னதால் டப்பிங் எல்லாம் மாற்ற வேண்டி இருந்ததால் தயாரிப்பாளருக்கு ஆறு லட்சம் செலவானது. ஒரு புதிய சிறிய தயாரிப்பாளருக்கு இதெல்லாம் அநியாய செலவுதான் .


ஆன்ட்டி என்றால் தப்பு என்கிறார்கள். குள்ளன் என்று  கூறக்கூடாது என்கிறார்கள். நாங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் ஏ சர்டிபிகேட் கேட்கிறோம்.யூ ஏ எல்லாம் நாங்கள் கேட்கவில்லை .


 நாங்கள் பெண்களைத் தவறாகத் சித்தரிக்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் இப்படி ஆறு நடிகைகள் நடித்திருக்க முடியுமா?

என்றோம் அவர்கள் ஆனால் ஒப்புக்கொள்ளவில்லை.


தெருக்கூத்துகளில் நாடகங்களில் இல்லாத இரட்டை அர்த்த வசனங்களா? ஆனால் திரைப்படத்தில் இருந்தால் பெரிது படுத்துகிறார்கள் .அதில் இல்லாததையா நாங்கள் கூறுகிறோம்? இன்று சினிமா வெப் சீரிஸ் எல்லாம் எவ்வளவு மாறி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.


இப்படத்தை தமிழ் தெலுங்கு என்று நேரடிப் படம் போலவே எடுத்துள்ளோம் .இன்று ஒரு படத்தை வியாபாரம் செய்வது என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.  ஹார்ட் டிஸ்க்கை எடுத்துக் கொண்டு ஐந்தாறு ஆண்டுகளாகத் தயாரிப்பாளர் அலைய வேண்டி உள்ளது. இப்படி சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட இடையூறுகளை எல்லாம் நினைத்து நான் கண்கலங்கி அழுதிருக்கிறேன். நம்மை நம்பி வந்த தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராமல் காப்பாற்றுவது நமது கடமை அல்லவா? 


தயாரிப்பாளர் தந்தை போன்றவர் .அப்படித் தந்தை ஸ்தானத்தில் உள்ளவருக்கு நான் துரோகம் செய்ய முடியுமா ?ஏமாற்ற முடியுமா?


படத்தில் நாங்கள் கருத்து சொல்லவில்லை .ஒரு அடல்ட் காமெடி படம்தான் எடுத்துள்ளோம்" என்றார்.


விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே .ராஜன் பேசும்போது,


 " இப்போதெல்லாம் பட விழாக்களுக்கு அதில் நடித்த நடிகைகள் வருவதில்லை.அந்த நிலையில் இங்கே வந்திருக்கிற இந்த நான்கு நடிகைகளை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன் .அந்த நாலு பேருக்கு நன்றி!


 புதிதாக  இவ்வளவு துணிச்சலாகத் தமிழ்ப் படம் எடுக்க வந்துள்ள தயாரிப்பாளருக்கு நான் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


 இவர்களுக்குப் போட்ட பணம் திரும்ப வந்துவிடும்.இப்பொழுது எல்லாம் போட்ட பணம் திரும்பி வந்தாலே பெரிய விஷயம்.


 கடந்த இரண்டு ஆண்டுகளில் 250 முதல் 300 படங்கள் எடுத்து வெளியிட முடியாமல் உள்ளன. 

ஏனென்றால் கியூபுக்கு 15 முதல் 20 லட்சம் கட்ட வேண்டும் .விளம்பர செலவுகள் 50 லட்சம் ஆகும். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன. இவர்கள் சொந்தப் பணத்தில் படம் எடுத்திருக்கிறார்கள் .சிறிய தயாரிப்பாளர்கள்தான் சொந்தப் பணத்தில் படம் எடுக்கிறார்கள்.


இந்தப் படத்தை வெளியிடும்  விநியோகஸ்தரும்  தைரியமாக நவம்பர் 3 ஆம் தேதி வெளியீடு என்று அறிவிப்பு செய்துள்ளார்கள்.


இது ஒரு அடல்ட் படம் இது இப்படித்தான் இருக்கும். இதை  ரசிப்பதற்கு மக்கள் இருக்கிறார்கள். இதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதற்காக ஒரு படம் எடுப்பது தவறில்லை .பல கோடி ரூபாய் வசூல் செய்யும் பெரிய ஹீரோ  படத்தில் நடித்த நடிகையை இதைவிட மோசமாக காட்டியுள்ளார்கள்.


 இயக்குநர் கேசவை நான் பாராட்டுகிறேன். அவர் தயாரிப்பாளர் மேல் வைத்த நம்பிக்கையைப் பாராட்டுகிறேன்.


அவர் இந்த படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார்? 


இந்தக் கதையைப் பார்த்து இப்படி நாட்டில் நடக்குமா? என்று கேட்பார்கள் .இப்படியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.


 அப்பா அம்மாவுக்கு மரியாதை கொடுங்கள் நம் பண்பாட்டை மறந்து விடக்கூடாது என்கிறார்.


இப்போது  பெரிய கதாநாயக நடிகர்களே மோசமாக வசனம் பேசுகிறார்கள். தலை முடியைக் காட்டி வசனம்  பேசுகிறார்கள்.இப்போது வருகிற படங்கள் எல்லாமே பழிவாங்கும் கதைகள். எதற்கெடுத்தாலும் துப்பாக்கி

எதற்கெடுத்தாலும்

 கத்தி என்று உள்ளது. சமூகத்தில் 18 வயது பையன் கத்தி தூக்கி கொண்டு திரிகிறான். இப்போது இருக்கிற படங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது .


 பெரிய கதாநாயகர்களை பின்பற்றுவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இப்படி அதிக வன்முறைகள் வெட்டு குத்து என்று நடிப்பது சிகரெட் புகைப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு பெரிய கதாநாயகன் செய்யும்போது அதைப் பின்பற்றி ஒரு கூட்டமும் அதையே செய்யும் .


அவுட்டோரில் வெளிப்புறங்களில் படம் எடுக்கும் போது நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன் முதலமைச்சரைச் சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுத்தோம் .அவுட்டோர் லொகேஷன்களில் டிராபிக், போலீஸ் என்று ஏகப்பட்ட பேர் வந்து லஞ்சம் வாங்குகிறார்கள். தினசரி 25ஆயிரம் ரூபாய்  லஞ்சத்துக்கே கொடுக்க வேண்டியிருக்கிறது.இதைத் தடுத்து முறைப்படுத்த வேண்டும்.


 தலைமைச் செயலகத்தில் சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வர வேண்டும் அப்படி அமைத்து ஒருமுறை அனுமதி வாங்கிவிட்டால் தமிழ்நாட்டில் எங்கே சென்றாலும்  பிரச்சினை இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்கும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். முதலமைச்சரும் பரிசீலிக்கிறோம் என்றார்.


நான் 2004 -ல் இதே தலைப்பை என் படத்திற்கு வைத்தேன். ஆனால் அப்போது எதிர்ப்பு இருந்ததால் நான் பின் வாங்கி, விட்டு விட்டேன். ஆனால்  ஆனால் இந்த தயாரிப்பாளர் போராடி அதே தலைப்பை வாங்கி இருக்கிறார் .அவருக்கு என் பாராட்டுக்கள்.


 இப்போது கூட இருப்பவர்களே உதவியாக இருப்பதில்லை. அவர்களே பெரிய பிரச்சினையாக இருக்கிறார்கள். நிலைமை மாறும் போது எல்லாவற்றையும் போட்டு விட்டு ஓடி விடுகிறார்கள். இதுதான் இன்றைய உலக நிலைமையாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இயக்குநர் தயாரிப்பாளர் உடன் இருப்பதும் அவரது நிலைமை புரிந்திருப்பதும் பாராட்டுக்குரியது.


சினிமா விழாக்களில் போர்த்தப்படும் இந்தப் பொன்னாடைகள் தவிர்க்கப்பட வேண்டும். அதனால் ராஜஸ்தான் காரர்களுக்குத்தான் வியாபாரம் நடக்கும்.அந்தப் பொன்னாடையால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.அவை பயனற்றவை எதற்கும் பயன்படாது.


நமது தமிழ்நாட்டின் நெசவாளிகள் பயன்பெறும் வகையில் கைத்தறி ஆடை வாங்கி போர்த்திடுங்கள். அதன்மூலம் அவர்களை வாழ வையுங்கள்.


இந்தப் படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்"


இவ்வாறு கே. ராஜன் பேசினார்.


விழாவில்

விநியோகஸ்தர்கள் ரமேஷ் சுப்பிரமணியன், அஞ்சலி முருகன்,

படத்தின் இசை அமைப்பாளர் ஜி கே வி , எழுத்தாளர் பொன். முருகன்,கலை இயக்குநர் ராமச்சந்திரன்,சண்டை இயக்குநர் ராஜாசாமி,பாடல் ஆசிரியர் சிவப்பிரகாசம், 

 படத்தில் நடித்திருக்கும் மாரி வினோத், வில்லன் விஜய் பிரசாத், நடிகைகள் காயத்ரி, சிம்ரன், தீபிகா, சாரா அக்ஷயா, படக் குழுவினருக்கு நெருக்கமான நண்பர்கள் வேலூர் வெங்கடேசன், அண்ணாமலை, சின்னையா, தாமு, காளிராஜன், காத்து கருப்பு கலை, தயாரிப்பாளர் சுப்பிரமணியன் மலைச்சாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்


 9 V ஸ்டுடியோஸ் வெளியிடும் இப்படம் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Monday 30 October 2023

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும், இயக்குநர் ராம்குமார்

 *பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது!*



நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமும் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வளர்ந்து வருகிறார். அவரது அடுத்தப் படமான ‘பார்க்கிங்’ அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் - பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகியவை படம் டிசம்பர் 1,2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். 


படம் வெளியாவதற்கு முன்பான ப்ரீ-ரிலீஸ் பிசினஸூம் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ’பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். சரியான திட்டமிடல் மற்றும் அதை செய்லபடுத்துவதன் மூலமாக முழு படப்பிடிப்பையும் குறுகிய காலத்தில் படக்குழு முடித்துள்ளது. 


‘பார்க்கிங்’ படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் (எடிட்டிங்), என்.கே.ராகுல் (கலை), டி.முருகேசன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), தினேஷ் காசி, ஃபீனிக்ஸ் பிரபு (ஆக்‌ஷன்), ஷேர் அலி (ஆடைகள்), அப்சர் (நடன இயக்குநர்), யுகபாரதி (பாடல் வரிகள்), டிடிஎம் (விஎஃப்எக்ஸ்), ராஜகிருஷ்ணன் எம்.ஆர். (ஒலிக்கலவை), சிங்க் சினிமா (ஒலி வடிவமைப்பு), யெல்லோடூத்ஸ் (வடிவமைப்பு), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.


த்ரில்லர் டிராமா ஜானரில் எடுக்கப்பட்டுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ்.சினிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Passion Studios and Soldier’s Factory present* *Filmmaker

 *Passion Studios and Soldier’s Factory  present*

*Filmmaker Ramkumar Balakrishnan directorial* 

*“Harish Kalyan starrer “Parking” all set for worldwide release on December 1, 2023* 



Actor Harish Kalyan, the most bankable and promising star of the trade circle keeps expanding his territory with every film. Ever since the announcement of his upcoming release ‘Parking’ was made, the expectations have been spiking up decorously. Now the makers of this film - Passion Studios and Soldier’s Factory are glad to announce that the film will have its worldwide theatrical release on December 1,2023. 


The pre-release business has been commendable for the film, which has turned the entire team excited. The film is directed by Ramkumar Balakrishnan, who earlier worked as assistant director to KS Sinish in Balloon. 


While Indhuja plays the female lead character in this movie, the others in the star cast include MS Bhaskar, Rama Rajendra, Prarthana Nathan, Ilavarasu, and few more prominent actors. The perfect planning and proper execution made the entire crew complete the entire shooting in a short span of time. 


‘Parking’ features musical score by Sam CS and cinematography by Jiju Sunny. 

Philomin Raj (Editing), NK Rahul (Art), T Murugesan (Executive Producer), Dinesh Kasi, Phoenix Prabhu (Action), Sher Ali (Costumes), Apsar (Choreographer), Yugabharathi (Lyrics), DTM (VFX), Rajakrishnan M.R. (Sound Mixing), Sync Cinema (Sound Design), Yellowtooths (Designs), Rajendran (Stills) are the others in the technical crew. 


Parking is a thriller drama, written and directed by Ramkumar Balakrishnan and produced by Sudhan Sundaram of Passion Studios and K.S.Sinish of Soldier’s Factory.

Ab Har Ladki Banegi LXME (Empowering women with Financial Independence)

Ab Har Ladki Banegi LXME (Empowering women with Financial Independence)

Ab Har Ladki Banegi LXME 

 

Empowering women with Financial Independence  

 

Mumbai, 30th October 2023 - Today marks a pivotal moment in the journey towards women empowerment as LXME, India’s 1st Financial Platform exclusively for women proudly launches their groundbreaking campaign, “Har Ladki Banegi LXME.”. With this campaign, they are committed to giving women back their true rights by enabling financial independence and autonomy.  

 

In a world where women’s rights and economic equality remains critical issues, “Har Ladki Banegi LXME” emerges as a beacon of hope, dedicated to reshaping the future of every woman. Our campaign is not just about financial empowerment; it’s about providing the tools, knowledge and support for women to take control of their own destinies.  


 

Priti Rathi Gupta, Founder of LXME states that, “We’re not just talking about Financial Independence, we’re talking about ensuring the right to financial security, financial wellness and financial freedom to every woman in the country. In a world where gender equality is an ongoing battle, we’re providing women with the power to script their own stories, to break free from the shackles of financial dependence and to reclaim their true rights. Our campaign is a declaration that every woman deserves the opportunity to shine, thrive and lead without compromise. It is also a call for every family, every parent to power their daughter, wife, sister and mother in this journey. 

 

Har Ladki Banegi LXME is more than a campaign, it’s a commitment to building a world where every woman has the power to shape her own destiny. We invite everyone to join us on this transformative journey towards empowering women with the financial independence they rightfully deserve. 

 

LXME is one of the foremost platforms enabling financial independence for women. Their aim is to make every woman in India aware, educated and confident enough to take charge of her own money.  

 

https://www.youtube.com/watch?v=cDVcA911fWs  

*MS Manzoor presents ‘CHIRO’ shooting starts with a ritual ceremony

 *MS Manzoor presents ‘CHIRO’ shooting starts with a ritual ceremony* 






It’s time for a shoutout to all the fantasy genre films! Million Studios’s MS Manzoor, who has created a spellbinding film ‘Weapon’ that is all set to offer a never-before cinematic experience to the film lovers, has got his ‘Production No.2’ rolling on floors now. The film titled ‘CHIRO’ is a fantasy genre that will throw an ultimate feast in the theaters with a top-notch technical bonanzas. Akshay Radhakrishnan, who is famous for his blockbuster hits in Malayalam such as pathinettam padi, valaati is playing the  lead role. Actress Prarthana Chabria, who is a certified commerical pilot, is playing the female lead role. The others in the star cast include  Rohini, Por Thozhil fame Lisha chinnu, Super Deluxe fame Nobel in pivotal characters.

The shooting of this film commenced from October 27, with a simple ritual Pooja ceremony, attended by the cast and crew. 

The film is written and directed by Wivek Rajaram, a former ad filmmaker and designer, who embarks on his directorial venture with this movie. 

Producer MS Manzoor says, “We are happy to announce that the shooting of our ambitious project ‘Chiro’ has started with a ritual ceremony. We are planning to complete the entire shoot in a single stretch schedule. We at Million Studios have always aspired to make content-driven movies with a top-notch technical aspect. Our maiden production ‘Weapon’ starring Sathyaraj and Vasanth Ravi as titular characters, is one such film that has already started garnering good response for its visual promos. ‘Chiro’ will offer a never-seen-before cinematic experience for the audiences as we are roping in the finest CG and VFX/Animation artists.”  

 

 


Technical Crew 


Cinematography: Kishan CV

Editing: Gopi Krishna 

Production Controller: Sivakumar 

Executive Producer: Sakthivel & Rizwan 

Publicity Designer: Dinesh Ashok

PRO: Suresh Chandra-Rekha D'One

எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

 *எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!*






மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ்.மன்சூர், திரைப்பட ஆர்வலர்களுக்கு இதுவரை இல்லாத சினிமா அனுபவத்தை அளிக்கும் வகையில் ’வெப்பன்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். தற்போது அவரின் தயாரிப்பில் 'சிரோ’ திரைப்படம் அடுத்ததாக உருவாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் பேண்டசி ஜானரில் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடன் உருவாக இருக்கிறது. மலையாளத்தில் ’பதினெட்டாம் பாடி’, ’வாலாட்டி’, ’பிரார்த்தனா சாப்ரியா’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் பிரபலமான அக்ஷய் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்ஷியல் பைலட்டான பிரார்த்தனா சப்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ரோகிணி, ’போர்தொழில்’ படப்புகழ் லிஷா சின்னு, ’சூப்பர் டீலக்ஸ்’ புகழ் நோபல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 27 - காலை எளிய பூஜையுடன் தொடங்கியது. இந்தப் பூஜையில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விவேக் ராஜாராம் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு விளம்பரப்படங்கள் இயக்குவது மற்றும் டிசைனராகவும் பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.


படம் குறித்து தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் கூறும்போது, “எங்கள் ‘சிரோ’ படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒரே ஷெட்யூலில் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மில்லியன் ஸ்டுடியோவில் உள்ள நாங்கள் எப்போதும் உயர்தர தொழில்நுட்ப அம்சத்துடன் நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்களையே உருவாக்க விரும்புகிறோம். எங்களின் முதல் தயாரிப்பான ’வெப்பன்’ படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் புரோமோ ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதுபோலவே, ‘சிரோ’ திரைப்படமும் மூலம் சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுப்பதற்காக சிறந்த சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ்/அனிமேஷன் கலைஞர்களை இந்தப் படத்தில் பணிபுரிய வைத்துள்ளோம்” என்றார்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*

ஒளிப்பதிவு: கிஷன் சி.வி,

எடிட்டிங்: கோபி கிருஷ்ணா,

தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: சிவகுமார்,

நிர்வாக தயாரிப்பாளர்கள்: சக்திவேல் & ரிஸ்வான்,

விளம்பர வடிவமைப்பாளர்: தினேஷ் அசோக்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி'ஒன்

நவம்பர் 17 ம் தேதி வெளியாகிறது

 நவம்பர் 17 ம் தேதி வெளியாகிறது 

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படம் " சைத்ரா "  

M. ஜெனித்குமார் இயக்கியுள்ளார்.












24 மணி நேரத்தில் நடக்கும் ஹாரர் படம் " சைத்ரா "

நவம்பர் 17 முதல் திரையரங்குகளில் 



மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ்  ( MARS PRODUCTIONS) என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K. மனோகரன் மற்றும் T. கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படத்திற்கு " சைத்ரா " என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். .


இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்,  மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார்.

பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார். 


மக்கள் தொடர்பு - மணவை புவன்

தயாரிப்பு மேற்பார்வை - தேக்கமலை பாலாஜி.

இணை தயாரிப்பு - T. கண்ணன் வரதராஜ்.

தயாரிப்பு - K. மனோகரன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் M. ஜெனித்குமார். இவர் பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.


படம் பற்றி இயக்குனர் M. ஜெனித்குமார் பாகிர்ந்தவை..


 24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது.


பீட்சா , டீமாண்டி காலணி  மாதிரியான வித்தியாசமான திரைக்கதையை வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.


 இதுவரை யாரும் பார்த்திராத  பரபரப்பான சம்பவங்களுடன் முழுக்க முழுக்க திரில்லர் கலந்த ஹாரர் படம் இது.


படப்பிடிப்பு முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் கிணறு பகுதியில் படமக்கினோம்  படம் நவம்பர் 17 ம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக இருக்கிறது.

படத்தை PVR பிக்சர்ஸ் நிறுவனம் தமிழங்கமெங்கும் வெளியிடுகிறது என்றார் இயக்குனர் M.ஜெனித் குமார்.

ஜென்டில்மேன்-2' ல் ஐம்பதுக்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளம்

ஜென்டில்மேன்-2' ல் ஐம்பதுக்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளம்,* 

*முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!* 






 மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் 'ஜென்டில்மேன்-2'. 


A.கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில்,

சேத்தன்  கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா சக்ரவர்த்தி , பிரியா லால் ஆகியோர் கதா நாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்று புறங்களில் பதினைந்து நாட்கள் நடைபெற்று நிறைவுற்றது. இதில், சேத்தன், நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால், படவா கோபி, சுதா ராணி, சித்தாரா, ஶ்ரீ லதா, கண்மணி, ' லொள்ளு சபா ' சாமிநாதன், பேபி பத்ம ராகா மற்றும் முல்லை - கோதண்டம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் படத்தின் முக்கியமான ஒரு சண்டை காட்சியும் படமாக்கப்பட்டது. ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி இதை படமாக்கினார். பிரம்மாண்ட காட்சிகள் நிறைந்த அடுத்த கட்ட படப்பிடிப்பு நவம்பர் மூன்றாம் வாரம் சென்னை ஹைதராபாத்  மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் நடைபெறும். நான்கு கட்டங்களாக  மலேஷியா, துபாய், ஶ்ரீலங்கா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடை பெற உள்ளது. 


இப்படத்தில் சேத்தன், நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால், சுமன், மனோஜ் k ஜெயன், பிராச்சிகா, ' காந்தாரா ' வில்லன் அச்சுத் குமார், படவா கோபி, முனிஷ் ராஜா, ஆர்.வி.உதயகுமார், சென்றாய்ன், மைம் கோபி ,ரவி பிரகாஷ், ஷிஷிர் ஷர்மா, வேலா ராம மூர்த்தி, ஜான் மகேந்திரன், கல்லூரி விமல், ' ஜிகர்தண்டா ' ராம்ஸ்,  பிரேம் குமார், இமான் அண்ணாச்சி, முல்லை, கோதண்டம், ஶ்ரீ ராம், ஜான் ரோஷன்,' லொள்ளு சபா ' சாமிநாதன், ஜார்ஜ் விஜய், நெல்சன், சித்தாரா, சுதா ராணி, ஶ்ரீ ரஞ்சனி, சத்ய பிரியா, கண்மணி , மைனா நந்தினி,ஶ்ரீ லதா, கருண்யா, பேபி பத்ம ராகா, பேபி அனீஷா என ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட பிரபல நடிகர் நடிகைகள் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது சிறப்பு அம்சமாகும். 


இசை அமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் எம்.எம்.கீரவாணி , கவி பேரரசு வைரமுத்து கூட்டணியின் ஏழு பாடல்கள் படத்தில் இடம் பெறுகிறது. 

அஜயன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டா தரணி கலை இயக்குநராக பணியாற்றுகிறார். படத்தொகுப்பு - சதீஷ் சூரியா, நடனம் - பிருந்தா, ஆடை வடிவமைப்பு - பூர்ணிமா ராமசாமி, ஸ்டைலிஸ்ட் செரீனா டிசெரியா, 

தயாரிப்பு மேற்பார்வை - முருகு பூபதி, சரவண குமார், ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.

More than 50 eminent actors are a part of Gentleman-2

More than 50 eminent actors are a part of Gentleman-2

*First Schedule of Gentleman-2 is wrapped up*

Mega Producer K.T.Kunjumon's Gentleman Film International is producing  "Gentleman-2" in grandeur. 

The film is directed by A. Gokul Krishna, with Chetan playing the lead character. Nayanthara Chakravarthy and Priya Lal are playing the female lead characters. The film's first leg of shooting shot in and around Chennai has been wrapped up now in 15 days.





This schedule had the complete participation of Chetan, Nayanthara Chakravarthy, Priya Lal, Badava Gopi, Sudha Rani, Sithaara, Sri Latha, Kanmani, Lollu Sabha Swaminathan, Baby Padma Raga, and Mullai-Kothandam, 


Besides, a breathtaking action sequence choreographed by stunt master Dinesh Kasi was filmed in this schedule as well. 


The next schedule that encapsulates grandness in every aspect will be commencing by third week of November, which will be filmed in Chennai, Hyderabad, and Pondicherry. The other schedules will be shot in Malaysia, Dubai, and Srilanka. 


The film features Chetan, Nayanthara Chakravarthy, Priya Lal, Suman, Manoj K Jayan, Prasikka, Kantara Villain Achyut Kumar, Badava Gopi, Munish Raja, R.V.Udhayakumar, Sendrayan, Mime Gopi, Ravi Prakash, Shishir Sharma, Vela Ramamoorthy, John Mahendran, Kalloori Vimal, Jigarthanda Rams,  Prem Kumar, Imman Annachi, Mullai, Kothandam, Sri Ram, John Roshan, Lollu Sabha Swaminathan, George Vijay, Nelson, Sithara, Sudha Rani, Sri Ranjani, Sathya Priya, Kanmani, Myna Nandini, Sri Latha, Karunya, Babu Padma Raga, Baby, Anisha and nearly 50 famous actors and actresses are a part of this star cast..


Oscar Winner M.M.Keeravani is composing music for this film, which has seven songs featuring  lyrics written by Vairamuthu. Ajayan Vincent is handling cinematography. Thotta Tharani is overseeing art works..Sathish Surya is taking care of editing. 


Brinda is choreographing dance and Poornima Ramasamy is designing costumes with Zerina as the stylist. 


G. Muruga Boopathy and Saravana Kumar are the production controllers.

டைகர் 3’யின் ஆக்சன் காட்சிகளுக்காக 2 மாதங்கள் வரை என்னை தயார்படுத்தி

 *“‘டைகர் 3’யின் ஆக்சன் காட்சிகளுக்காக 2 மாதங்கள் வரை என்னை தயார்படுத்தி கொண்டேன்” ; கத்ரீனா கைப்* 



யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் வரிசை படங்களில் முதன் பெண் உளவாளியான, கத்ரீனா கைப் நடிக்கின்ற சோயா என்கிற கதாபாத்திரம் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவல் ஒவ்வொரு ஒரு அடியிலும் ஆணுக்கு சமமாக காட்டப்பட்டு வருகிறது.. சண்டை என வந்துவிட்டால் எந்த அளவுக்கும் இறங்கி ஒரு கை பார்க்கும் அளவுக்கு அவள் கடுமையான, புத்திசாலித்தனமான மற்றும் கொடுமையான உளவாளி.


கத்ரீனா சோயா கதாபாத்திரத்தை தானாகவே சொந்தமாக உருவாக்கியிருக்கிறார் என்பதுடன் தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு டைகர் படத்திலும் அவரது கதாபாத்திரத்தை தவறாமல் உச்சநிலைக்கு எடுத்து செல்கிறார்கள். நம்பமுடியாத சண்டை காட்சிகளை செய்துள்ளதற்காக கத்ரீனா கைப் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் இதுவரை வெள்ளித்திரையில் வேறெந்த பெண்ணும் செய்திராத அளவுக்கு ஒத்தைக்கு ஒத்தை மோதும் ஆக்சன் காட்சிகளையும் செய்திருக்கிறார். ‘டைகர் 3’யில் இந்த மிகப்பெரிய ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்கு தயாராவதற்கு கிட்டத்தட்ட 60 நாட்கள் வரை அவர் பயிற்சியும் ஒத்திகையும் எடுத்துக்கொண்டு தயாராகியுள்ளார்.


கத்ரீனா கூறும்போது, “தன்னுடைய குடும்பத்தையோ அல்லது நாட்டையோ அல்லது மனித நேயத்தையோ காப்பாற்றவேண்டும் என்கிற நிலை வரும்போது ஒரு பெண்ணால் செய்ய முடியாதது என எதுவுமில்லை  என்பதைத்தான் ‘டைகர் 3’ காட்டுகிறது. வளர்ப்பவர்களாக மட்டுமல்ல கடுமையான பாதுகாவலர்களாகவும் பெண்களால் இருக்க முடியும் என்பதை மக்களிடம் சொல்வதற்கு  சோயா போன்ற ஒரு கதாபாத்திரம் முக்கியமானது மற்றும் அவசியமானதும் கூட.. என்னுடைய திரையுலக பயணத்தில் சோயா அதிகப்படியாக போற்றப்படக்கூடிய கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.” என்கிறார்.  


மேலும் அவர் கூறுகையில், “ அவளது மன உறுதியாலும் தைரியத்தாலும் எந்த ஒருவருடனும் அவள் எப்படி பொருத்திக்கொள்ள முடிகிறது என்பதை நான் ரசிக்கிறேன். அவள் ஒரு சண்டையிலிருந்து எப்போதும் பின்வாங்கியதில்லை. ஆக்சன் என வரும்போது ஆணை விட மிகச்சிறப்பாக அவளால் செயல்பட முடியும். சோயாவின் ஆக்சன் ஸ்டைல் என்பது தனித்துவமானது. இந்த டிரைலரில் நீங்கள் பார்த்த சில காட்சிகளை போல மிகவும் சிக்கலான சண்டைக்காட்சிகளை கூட அவளால் எளிதாக மேற்கொள்ள முடியும்.  சோயா மொத்த எதிரி படைகளையும் எதிர்ப்பவள் மட்டுமல்ல, அவளே அனைவருடன்  தானாகவே சண்டையிட கூடியவள்” என்கிறார்.


யஷ்ராஜ் பிலிம்ஸ் சோயா கதாபாத்திரத்தை ஒவ்வொரு படத்திலும் மிகவும் கடுமையாக உருவாக்கி இருக்கிறார்கள் என்கிற உண்மையை கத்ரீனா ரசிக்கிறார். அவர் கூறும்போது, “ஒரு ஜானராக ஆக்சனை நான் விரும்புவதுடன் ஒரு உளவாளியாக நடிக்கவேண்டும் என்கிற என் கனவும் நனவாகியுள்ளது. என்னுடைய பெருமையான அடையாளங்களில் ஒன்றாக இது இருக்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். அதனால் என்னுடைய 200 சதவீத உழைப்பை இந்த மூன்றாம் பாகத்திற்கு கொடுத்துள்ளேன். ஒவ்வொரு டைகர் படமும் சோயா கதாபாத்திரத்தை ஒவ்வொரு கட்டமாக உச்சத்திற்கு எடுத்து செல்கிறது. அதற்காக அவள் கடுமையாக போராடி இருக்கிறாள் என்பதுடன் அது ரத்தக்களறியாகவும் இருந்திருக்கிறது. அது தான் நான் எப்போதும் நேசிக்கின்ற இந்த கதாபாத்திரத்தின் உயிர்மூச்சு” என்கிறார்.    


கத்ரீனா கூறும்போது, “’டைகர் 3’யின் ஆக்சன் காட்சிகளுக்காக குறைந்தது இரண்டு மாதங்களாவது என்னை தயார்படுத்திக்கொண்டேன். ஒரு சுறுசுறுப்பானவளாக, அதிவேகம் கொண்டவளாக, மிகப்பெரிய பலம் கொண்டவளாக சோயா இருக்கவேண்டும் என நாங்கள் விரும்பினோம். சோயா செய்திருக்கும் ஆக்சன் காட்சிகளை நீங்கள் பார்க்கும்போது உண்மையிலேயே நானும் அதனுடன் சேர்ந்து சுழல வேண்டி இருந்தது என்பதையும் என்னுடைய திரையுலக பயணத்திலேயே மிகவும் கடினமான பயிற்சியாகவும் அது இருந்தது என்பதையும் இதுபோன்ற காட்சிகள் இதற்கு முன்னாள் எந்த ஒரு பெண்ணும் முயற்சித்ததில்லை என்பதையும் நீங்கள் உணர்வீர்கள்” என்கிறார். 


மேலும் அவர் கூறும்போது, “உலகிலேயே மிகச்சிறந்த சண்டைப்பயிற்சி குழுவால் செயல்படுத்தப்பட்ட இந்த ஆக்சன் காட்சிகளை பெரிய திரையில் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க இருப்பதை நினைத்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என்கிறார்.    


ஆதித்யா சோப்ராவால் தயாரிக்கப்பட்டு, மனீஷ் சர்மாவால் இயக்கப்பட்டுள்ள இந்தப்படம் வரும் தீபாவளி வெளியீடாக நவ-12 ஞாயிறன்று வெளியாக இருக்கிறது. தனது அடையாள கதாபாத்திரமான  யஷ்ராஜ் பிலிம்ஸின் ‘ஓஜி’யான சூப்பர் ஏஜென்ட்  டைகராக நடித்துள்ள சல்மான் கானுக்கு ஜோடியாக கத்ரீனா நடித்துள்ளார்.

My action prep for Tiger 3 was at least for about two months!’

 *‘My action prep for Tiger 3 was at least for about two months!’ : Katrina Kaif*



The first female spy of the YRF Spy Universe, Katrina Kaif aka Zoya from the Tiger franchise, is a character that Aditya Chopra has shown is equal to a man at every step of the way. She is a fierce, intelligent & brutal spy who can match anyone toe to toe when it comes to action.


Katrina has made Zoya her own and the makers have constantly taken her character a notch above in every Tiger film. The actress has relished at pulling off incredible stunts and hand-to-hand action set pieces that no woman has ever done on screen before. In Tiger 3, Katrina will push the envelope of action even further and reveals she has prepped for around 60 days before pulling off the larger-than-life action sequences!


Katrina says, “Tiger 3 shows that there is nothing that a woman can’t do when it comes to saving her family or a nation or humanity. A character like Zoya is important and necessary to tell people that girls can be nurturers as well as fierce protectors. Zoya is one of the most cherished roles of my career!”


She adds, “I love how she can match anyone with her grit and courage. She doesn’t back down from a fight and she can be as good as if not better than a man when it comes to doing action! Zoya’s style of action is also unique and she can pull off some very complicated action sequences with ease like the one you see a sneak peek of in the trailer! Zoya is pitted against an army of enemies and she fights all by herself!”


Katrina loves the fact that YRF has made Zoya’s character more fierce with every film! She says, “I love action as a genre and playing a spy is a dream come true! I knew that this was going to be a part of my legacy, so I always give my 200 percent for this franchise. Every Tiger film has taken Zoya’s character a notch above, and she has fought harder, and it has been bloodier. That’s the USP of the character, which I love!”


Katrina adds, “For Tiger 3, my action prep was at least for about two months. We wanted Zoya to look agile, have more speed, and greater strength. I really had to go through the grind and it was definitely the toughest training of my career so far, when you see the kind of action that Zoya has done, you will realise that such sequences may not have been attempted by a women before.”


She further says, “Executed by some of the best action teams in the world, I’m super excited for audiences to see these sequences on the big screen.”


Produced by Aditya Chopra and directed by Maneesh Sharma, Tiger 3 is set to release this Diwali, Nov 12, Sunday. Katrina is paired opposite superstar Salman Khan, who reprises his iconic role as super agent Tiger, the OG of the YRF Spy Universe.

Sunday 29 October 2023

தன்னை செதுக்கிய திரையுலக சிற்பிகளுக்கு ஜப்பான் பட டிரைலர்

 *தன்னை செதுக்கிய திரையுலக சிற்பிகளுக்கு ஜப்பான் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நன்றி தெரிவித்த கார்த்தி*















*ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழாவில் கார்த்தியின் வளர்ச்சி குறித்து நெகிழ்ந்த சூர்யா* 


*கார்த்தி-25ஐ முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை அறிவித்த கார்த்தி*


*“பருத்திவீரனை போன்று ஜப்பான் கதாபாத்திரமும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் ; ராஜூ முருகன்*


*“எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் கார்த்திக்கு ஆயிரம் முத்தங்களை பரிசாக தந்திருப்பார்” ; ஜப்பான் பட விழாவில் சுவாரஸ்யப்படுத்திய ஸ்டண்ட் இயக்குனர்* 


பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. 


கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க நடிகர் சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன் மற்றும் மலையாள நடிகர் சணல் அமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ வரும் தீபாவளி பண்டிகை வெளியீடாக ரிலீஸாக இருக்கிறது. 


இதை தொடர்ந்து இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையும் கார்த்தி25 என இரண்டு திரையுலக பயணத்தையும் ஒரு சேர கொண்டாடும் வகையில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்ட  விழா நடைபெற்றது.


இந்தநிகழ்வில் ஜப்பான் படக்குழுவினருடன் நடிகர்கள் சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, அனு இம்மானுவேல், கே.எஸ்.ரவிகுமார், ராஜ்கிரண், அர்ஜுன் தாஸ், மாஸ்டர் ரித்விக், தமன்னா, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர்கள் பா.ரஞ்சித், சிவா, லோகேஷ் கனகராஜ், பி.எஸ்.மித்ரன், ஹெச்.வினோத், சுராஜ்,, சத்யராஜ், சிபிராஜ், இயக்குனர் சதீஷ், ஜித்தன் ரமேஷ், சக்திவேலன், தயாரிப்பாளர்கள் லட்சுமன், கே.ஈ.ஞானவேல்ராஜா, இயக்குநர் ராஜேஷ், பொன்வண்ணன், பவா செல்லத்துரை, அனல் அரசு, பாண்டியன் மாஸ்டர், திலீப் சுப்பராயன், நடன இயக்குனர் ஸ்ரீதர், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகர் நந்தா, இயக்குனர் R. ரவிக்குமார், தயாரிப்பாளார் T. G தியாகராஜன், இயக்குனர் தமிழ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் இந்த 20 வருடங்களில் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இன்று எனக்கு ஸ்பெஷலான ஒரு நாள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மொத்த குழுவினரும் இப்படி ஒரு அற்புதமான தருணத்தை எனக்காக உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர். நான் எதையும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் இந்த தருணம் நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்கிற ஒரு பலமான தன்னம்பிக்கையை  எனக்கு கொடுத்திருக்கிறது. முதல் அன்பு என்பது நம் எல்லோருக்கும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கிறது. அதன்பிறகு நண்பர்கள், பின்னர் மனைவியிடம் இருந்து.. ஆனால் அதை எல்லாம் விட ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு எந்தவித நிபந்தனையும் இல்லாதது. இவர்கள் அன்பு அனைத்தையும் நான் எனது முதல் படத்திலேயே பெற்று விட்டேன். அவர்களுடைய அன்பு தான் என்னை நீண்ட தூரம் ஓட வைக்கும் உந்து சக்தியாக இருக்கிறது. 


இயக்குநர் மணிரத்னம் சாருக்கு நன்றி சொல்கிறேன்.. இந்த திரையுலகில் அவரைப் போன்ற ஒரு அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நபரை நான் பார்த்ததே இல்லை.. நடிப்பு பற்றி என்னவென்றே தெரியாத என்னைப் போன்ற ஒரு புதிய நபரான எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் அமீர் அண்ணா. என்னை முதன் முதலாக ஊக்கப்படுத்திய மனிதர் ஞானவேல் ராஜா தான். கைதி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட என்னுடைய படங்களில் சண்டை காட்சிகளில் எனக்கு தூணாக பின்னணியில் இருந்தவர் பாண்டியன் மாஸ்டர். சண்டைக் காட்சிகளின்போது ரிஸ்க்கான சூழ்நிலைகளில் அவர் கற்றுக் கொடுத்தது தான் என்னை பலமுறை காப்பாற்றி இருக்கிறது.


ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு நாட்களில் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு நன்றி. நேர்மறையின் ஒட்டுமொத்த உருவம் சிவா சார். பலரும் தாடி இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது என்று நினைத்தபோது பையா படத்தின் மூலம் என்னை வித்தியாசப்படுத்தி வெளிச்சம் போட்டு காட்டினார் இயக்குநர் லிங்குசாமி. என்னுடைய இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஒப்பனை குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் வினோத் ரொம்பவே அரிதான மனிதர். சில வார்த்தைகள் மட்டும் பேசினாலும் தெளிவான சிந்தனை கொண்டவர். காஷ்மோரா போன்ற சிறந்த படத்தை கோகுல் எனக்காக கொடுத்திருக்கிறார். திரையரங்குகளில் அந்த படம் சரியாக போகாவிட்டாலும் கூட ஆன்லைனில் வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்றது. எப்போதுமே நல்ல விமர்சனங்களுடன் எனது திரையுலக பயணத்தை செம்மைப்படுத்தி கொடுத்ததற்காக பத்திரிகை நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்


இந்த விழாவுக்கு வருகை தந்த சக நட்சத்திரங்கள் பற்றி அவ்வப்போது கார்த்தி பேசுகையில், “விஷாலின் தூண்டுதன் காரணமாகத்தான் நான் நடிகர் சங்கத்திற்குள் இழுத்து வரப்பட்டேன். அந்த வகையில் எனக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைத்தது.  ஜெயம் ரவி பிறக்கும்போதே ஒரு ஹீரோ ஆகவே பிறந்தவர். ஆர்யா ஒரு நல்ல சிகிச்சையாளர். கூலான மனிதர்.. நல்ல அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்..


இந்த நிகழ்வில்  தமன்னா கலந்து கொண்டது எனக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ். மும்பையில் இருந்து இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இங்கே வருவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோது ஒரு குழுவாக மகதீரா படம் பார்ப்பதற்கு சென்றோம். அதுபோன்ற ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக அவர் ஏங்கிக் கொண்டிருந்தார். ஆனால் சில வருடங்களுக்கு பிறகு பாகுபலி படத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்திலேயே நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நாங்கள் மூன்று படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம்.. மூன்றுமே பிளாக்பஸ்டர் வெற்றி..


இயக்குநர் ரஞ்சித்தை பொறுத்தவரை அவர் என்னிடம் மெட்ராஸ் படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்க கொடுத்தபோது அதில் நான் ஒரு பாகமாக இருக்கவில்லை. ஆனால் அந்த ஸ்கிரிப்ட்டை படித்தவுடன் அது ஈரானிய படங்களைப் போல சர்வதேச தரத்தில் இருந்தது” என்றார்.


மக்கள் கொடுத்த இந்த வெற்றியை மக்களோடு சேர்ந்து கொண்டாட வேண்டும்.. வாழ்க்கையில் இந்த உயரத்தை தந்த மக்களின் வாழ்க்கையில் சுக துக்கங்களில் பங்கெடுக்க வேண்டும் என நம் நாயகன் கார்த்தி அவர்கள் 25 சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம் நிதி உதவியும் தேவைப்படும் பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம், மக்களுக்குப் பயன்படும் மருத்துவமனைகளுக்கு ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம், மேலும் 25 நாட்களுக்கு சுமார் 25,000 பேர் பசியாற ரூபாய் 25 லட்சம் என சுமார் ஒரு கோடி வழங்க இருக்கிறேன்.


இது ஒரு நடிகன் செய்யும் உதவி அல்ல.. தன்னை வளர்த்த சமூகத்திற்கு ஒரு மனிதன் செலுத்தும் நன்றிக்கடன். இந்த சமூக செயற்பாட்டாளர்களை கண்டறிந்து உதவிய இ.ரா சரவணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.


நடிகர் சூர்யா பேசும்போது, “ஒட்டுமொத்த தமிழர் உலகமும் கார்த்தியின் பயணத்தை அவ்வளவு அழகாக மாற்றி கொடுத்திருக்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த தருணத்தில் நான் இருபது வருடங்களுக்கு பின்னோக்கிச் சென்று திரும்பி பார்க்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அழகான வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை என்று ரஜினி சார் சொல்லுவார். அந்த வகையில் கார்த்தி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். மணிரத்னம் சாருக்கு இந்த பயணத்தில் நான் நன்றி சொல்கிறேன். ஞானவேல் ராஜா கார்த்தியின் தூணாகவே இருந்திருக்கிறார். பருத்திவீரன் போன்ற ஒரு அழகான காவியத்தை இயக்குனர் அமீர் உருவாக்கிக் கொடுத்தார்.


நாங்கள் இருவருமே சில நேரங்களில் தளர்ந்து போய் இவற்றையெல்லாம் விட்டு விடலாமா என்று நினைக்கும் போதெல்லாம் எங்களுக்கு உற்சாகம் கொடுத்து எல்லைகளைக் கடந்து ஓட உந்துசக்தியாக ரசிகர்கள் நீங்கள் இருந்துள்ளனர். நீங்கள் அனைவரும் எங்களுக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறீர்கள். என்னைவிட கார்த்திக்கு தான் நாங்கள் ரசிகர்கள் என்று பலபேர் சொல்வதுண்டு. நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பு எனக்கு வேறு பல வாய்ப்புகள் இருந்தன. ஆனால் கார்த்தி தன்னுடைய பாதையை தேர்வு செய்வதில் ரொம்பவே கவனமாக இருந்தார். நான் கார்த்தியை பார்த்து பொறாமையும் வியப்பும் கொண்டிருப்பேன். 


அவர் குடும்பத்திற்கும் வேலைகளுக்கும் சமமான நேரம் ஒதுக்குவதுடன் வருடத்திற்கு இரண்டு முறையாவது பெற்றோர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் உறுதியாக இருக்கிறார். அவரது 25வது படத்தை கொண்டாடுவதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டில்லிக்கு பிறகு ரோலக்ஸ் என்பதை நானும் கூட கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று கூறினார். 


தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “இந்த படத்திற்காக தங்களது கடின உழைப்பையும் ஒட்டு மொத்த ஆதரவையும் வழங்கிய மொத்த படக்குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கார்த்தி அண்ணாவின் 25-வது திரைப்படத்தை தயாரித்திருப்பதே மிகப்பெரிய கௌரவம் என்பதுடன் எங்களது முதல் திரைப்படத்தையும் கூட அவரை வைத்தே தயாரித்து இருக்கிறோம். எப்போதெல்லாம் நான் சற்று சோர்வாக இருக்கிறேனோ அந்த சமயத்தில் அவர் என்னை உற்சாகப்படுத்துவார். இந்த தீபாவளிக்கு வெளியாகும் ஜப்பான் திரைப்படம் குடும்பங்களுடன் பொழுதுபோக்க சிறந்த படமாக இருக்கும்” என்றார். 


பவா செல்லத்துரை பேசும்போது, “இந்த சிறந்த வாய்ப்பை கொடுத்ததற்காக நான் இயக்குநர் ராஜு முருகனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராஜூ முருகன், ரவிவர்மன் போன்ற திறமையாளர்களுடன் பணியாற்றியதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், கார்த்தியின் அர்ப்பணிப்பு ரொம்பவே உன்னதமாக இருந்தது. அதை ரசிகர்கள் வெள்ளித் திரையில் நிச்சயம் பார்ப்பார்கள்” என்றார்.


நடிகர் ஜித்தன் ரமேஷ் பேசும்போது, “இந்த படம் கார்த்திக்கு சிறப்பான வெற்றிப்படமாக அமையப் போகிறது. தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர் பிரபு இருவருக்கும் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக நன்றி சொல்கிறேன். இந்த படத்தைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்கள் ஜப்பான் பட வெற்றி சந்திப்பின்போது பகிர்ந்து கொள்கிறேன். ஒட்டு மொத்த ஆதரவை கொடுத்ததற்காக மொத்த படக்குழுவிற்கு எனது நன்றி” என்று கூறினார்.


நாயகி அனு இம்மானுவேல் பேசும்போது, “25 படங்கள் நடித்த கார்த்தியின் மிகப்பெரிய வெற்றிக்காக நான் அவரை வாழ்த்துகிறேன். இதற்கு முன்பு அவர் நடித்த படங்களிலிருந்து ஜப்பான் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். நிமிடத்திற்கு நிமிடம் மாறும் மேனரிசங்கள் மற்றும் உடல் மொழியுடன் அவர் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான வசன உச்சரிப்பை வழங்கி இருக்கிறார். படப்பிடிப்பின் போது எனக்கு உடல்நிலை சரியில்லாத சூழலில் அவர் என்னை அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக இயக்குனர் ராஜூ முருகனுக்கு நன்றி” என்று கூறினார்.


இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் பேசும்போது, “கார்த்தி சாருடன் என்னுடைய முதல் படமாக ஆயிரத்தில் ஒருவன் இருந்தது. அதன்பிறகு கொம்பன், சர்தார் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தோம். தற்போது மீண்டும் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் அருமையான மெலோடி பாடல்களிலும் பின்னணி இசையிலும் சற்று தனித்தன்மை கொண்டதாக இருக்கும் வகையில் சில விஷயங்களை முயற்சித்திருக்கிறோம். சூரரைப்போற்று படத்திற்கு பிறகு புறநானூறு படத்தில் சூர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததற்காக மொத்த படக்குழுவுக்கும் எனது நன்றி” என்று கூறினார்.


இயக்குனர் ராஜேஜூ முருகன் பேசும்போது, “ஒவ்வொரு முறையும் நான் ஒரு படத்திற்கான கதையை முடித்தவுடன் அதை தனித்துவமான படமாக உருவாக்கும் பாணிக்குத்தான் செல்வேன். திரைப்படங்களில் என்னை வசீகரித்தவர் சார்லி சாப்ளின். இப்போது அந்த வழியில் கார்த்தி சார் என்னுடைய இலக்கிய சிந்தனைகளுடன் கூடிய எண்ணங்களை உற்சாகப்படுத்துவது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. நிறைய பேர் இலக்கியத்தை சினிமாவுடன் இணைத்து ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் கார்த்தி சார் வட்டியும் முதலும் புத்தகத்திலிருந்து சில முக்கியமான விஷயங்களை இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். பருத்திவீரன் படத்தைப் போன்று ஜப்பான் கதாபாத்திரமும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். எஸ்.ஆர் பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர் பிரபு இருவருமே நண்பர்களாக இருந்ததுடன் என்னுடைய எண்ணங்களுக்கு உருக்கொடுக்க ஆதரவாகவும் இருந்திருக்கின்றனர். கார்த்தி போன்ற அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நடிகருடன் அவரது 25வது படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜி.வி பிரகாஷ் குமார் எனது நெருங்கிய நண்பர். இந்த மொத்த பட குழுவினரும் கடுமையாக உழைத்துள்ளனர்” என்று கூறினார்.


நடிகர் வாகை சந்திரசேகர் பேசும்போது, “சூர்யாவுடனும் இப்போது கார்த்தியுடனும் இணைந்து பணியாற்றியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் எல்லோருக்கும் சிவகுமார் சார் ஒரு கூகுள் ஆக இருந்தார். அந்த காலகட்டத்தில் எங்களுக்கு ஏதாவது சில சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நாங்கள் அவரை தான் கேட்போம். இந்த தீபாவளியில் வெளியாகும் ஜப்பான் திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் பட்டாசாக மாறும். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த ராஜூ முருகனுக்கு நன்றி” என்று கூறினார்.


நடிகர் ஜெயம் ரவி பேசும்போது, “கார்த்தி ஒரு நடிகர் மட்டுமல்லாது நல்ல மனிதரும் கூட. நடிப்புக்கு அப்பால் அவர் திரைப்படங்களில் தன்னை ரொம்பவே ஈடுபடுத்திக் கொள்கிறார். மேலும் நடிகர் சங்கத்தின் பெருமைகளை உயர்த்தும் விதமாக மிகுந்த முயற்சியும் எடுத்து வருகிறார்” என்றார்.


தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது, ‘நான் லட்சுமன் மற்றும் கார்த்தி அனைவருமே பள்ளிக்கால நண்பர்கள். எங்களது பள்ளி நாட்களில் நாங்கள் சினிமாவிற்குள் நுழைவது பற்றி கற்பனையாக பேசிக் கொள்வோம். ஆனால் கடவுளின் கருணையால் அது நிஜமாகவே ஆகிவிட்டது. கார்த்திக்கு எப்போதுமே நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவரால் டென்ஷனை தவிர்க்க முடியும் என்பதும் தான். வாழ்க்கையில் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டை விட்டு போகும்போது அவற்றை ஜாலியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஜப்பான் படத்தின் டிரைலரில் அவர் சொல்வதைப் போல அதே தத்துவத்தை அவர் தனது நிஜ வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். மேலும் ஜப்பான் திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு பிளாக் பஸ்டர் பொழுதுபோக்கு படமாக அமையும்” என்று கூறினார்.


பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லட்சுமன் பேசும்போது கார்த்தி குழந்தைப்பருவத்தில் இருந்து எனது நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறார். நான் ஐடி துறையில் இருந்தபோது கார்த்தி மற்றும் ஞானவேல் ராஜா இருவரும் தான் என்னை சினிமாவில் நுழைவதற்கு உற்சாகப்படுத்தினார்கள். இவர்கள் இருவருமே என்னுடன் அழகான பிணைப்பை பகிர்ந்து கொண்டார்கள். நாங்கள் இப்போது சர்தார் -2வுக்காக தயாராகி வருகிறோம். அது எல்லோருக்கும் மிகப்பெரிய விருந்தாக இருக்கும்” என்று கூறினார்.


நடிகை தமன்னா பேசும்போது, “கோலிவுட்டில் எனது ஆரம்ப நாட்களில் எனக்கு ஒரு போதும் நண்பர்கள் இருந்ததில்லை. அந்த சமயத்தில் கார்த்தி எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். சென்னையை எனக்கு சிறப்பானதாக ஆக்கியதற்காக ஞானவேல் ராஜா சார், சிவா சார் ஆகியோருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இது போன்ற மனிதர்கள் தான் சென்னை எனக்கு சிறந்த இருக்கப் போகிறது என்கிற நம்பிக்கையை அளித்தார்கள். கார்த்தியுடன் பணியாற்றிய சமயத்தில் எப்போதும் சினிமாவைப் பற்றியும் அவருக்கு பிடித்தமான கதாபாத்திரங்களை பற்றியும் தான் பேசிக் கொண்டிருப்பார். அவர் வெற்றிகரமாக 25 படங்களை நிறைவு செய்து விட்டார் என்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இனி அடுத்தடுத்து வரும் படங்களிலும் இதுபோன்று மிகப்பெரிய வெற்றியை அவர் பெறவேண்டும் என நான் வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.


இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, “மெட்ராஸ் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு கார்த்தி சார் சரியாக பொருந்தியிருந்தார். இதற்காக நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று தயாரிப்பாளரிடம் கூறியபோது அவர்கள் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார்கள். இப்போது ஜப்பான் திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது நான் ரொம்பவே மகிழ்ச்சி அடைகிறேன். மொத்த குழுவிற்கும் மிகப்பெரிய வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, ‘கார்த்தி சார் எப்போதுமே சினிமாவை பற்றி நினைத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார். அவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட.. அதுமட்டுமல்ல அதுபற்றிய மிகப்பெரிய அறிவையும் அவர் கொண்டுள்ளார். ராஜூ முருகன் சாரிடம் இருந்து ஜப்பான் போன்ற ஒரு ஆச்சரியமான விருந்தை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை. ராஜூ முருகனுக்கும் கார்த்தி சாருக்கும் ஜப்பான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்காக என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று கூறினார்.


சக்தி பிலிம் பேக்டரி விநியோகஸ்தர் சக்திவேலன் பேசும்போது, “கார்த்தி இதுவரை 24 படங்கள் நடித்து இருக்கிறார். அதில் 18 படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்று இருக்கின்றன. சிவாஜி கணேசன் சார் தான், தனது முதல் படமான பராசக்தியிலேயே தான் ஒரு முழுமையான நடிகர் என்பதை நிரூபித்தவர். அதன்பிறகு பல வருடங்கள் கழித்து அப்படி ஒரு வாய்ப்பு பருத்திவீரன் படத்தில் நடித்த கார்த்திக்கு கிடைத்தது. அதுமட்டுமல்ல ஐந்து வருடங்களில் வெறும் இரண்டு படங்களில் மட்டுமே நடித்த நடிகர் யாரென்றால் அது கார்த்தி மட்டுமே. பொன்னியின் செல்வன், ஆயிரத்தில் ஒருவன் படங்களின் மூலம் அவர் வேறுவித வடிவம் பெற்றார். ஆயிரத்தில் ஒருவன் மற்றும் கஜினி ஆகிய படங்கள் தான் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழ் மொழிமாற்று படங்களில் ஒரு புதிய டிரென்டை உருவாக்கின” என்றார்.


இயக்குநர் பி.எஸ் மித்ரன் பேசும்போது, “கார்த்தி சாருடன் இணைந்து பணியாற்றிய பிறகு அவர் முன்னணி இயக்குனர்கள் பலருடன் பணியாற்றிய தன்னுடைய அனுபவத்தை கொண்டு என்னை வசீகரித்ததன் மூலம் நான் ஒரு முழுமையான இயக்குனராக மாறினேன். எந்த நேரமும் சினிமா பற்றியே யோசித்துக் கொண்டு இருக்க கூடிய நபர்களில் அவரும் ஒருவர்” என்று கூறினார்.


இயக்குநர் முத்தையா பேசும்போது, “பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்ததுடன் அந்த படத்தில் அழகான மதுரை பாஷையில் கார்த்தி சார் பேசியிருந்தது ரசிருப்பதாக இருந்தது. கொம்பன் படத்திற்காக அவரை அணுகியபோது நான் அவரிடம் ராமநாதபுரம் வித்தியாசமான ஒரு பாஷையை கொண்டது என கூறினேன். அவரும் அதற்கேற்ற மாதிரி தன்னை தயார் செய்துகொண்டு படப்பிடிப்பு தளத்தில் தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்” என்றார்.


இயக்குநர் சிறுத்தை சிவா பேசும்போது, “என்னுடைய பெற்றோர் எனக்கு சிவா என்று பெயர் வைத்தனர். ஆனால் கார்த்தி சாருடன் நான் இணைந்து பணியாற்றிய படம் எனக்கு முன்பாக சிறுத்தை என்கிற பெயரையும் சேர்த்து கொடுத்துவிட்டது. அதனால் அவர் எப்போதுமே எனக்கு ஒரு ஸ்பெஷலானவர் தான். அவர் அந்த அளவிற்கு ஒரு நேர்மையான உன்னதமான மனிதர். அவருடைய தொழிலுக்கு எப்போதுமே அவர் உண்மையாகவே இருந்திருக்கிறார். அவருடைய நிறைய விஷயங்களை தனது தொழிலுக்காகவே அர்ப்பணித்து இருக்கிறார். சிறுத்தை படப்பிடிப்பின்போது நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் அவர் அழகாக கையாண்டார். சிறுத்தை படத்தில் கார்த்தியை இயக்க ஒரு வாய்ப்பை கொடுத்ததற்காக ஞானவேல் ராஜா சாருக்கு நன்றி சொல்வதற்கு இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்” என்று கூறினார்.


ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் பேசும்போது, “என்னை கார்த்தியிடம் சிவக்குமார் சார் அறிமுகப்படுத்திபோது அவர் கிட்டத்தட்ட 100 கிலோ எடையில் இருந்தார். அவருக்கு எப்படி நான் பயிற்சி கொடுக்க போகிறேன் என்பது அப்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அவருடைய அர்ப்பணிப்பும் கடின உழைப்பும், சூர்யா சாரிடம் இருந்து கிடைத்த உற்சாகப்படுத்தலும் கூடுதல் கருவிகளாக அமைந்து விட்டன” என்றார்.


ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் பேசும்போது, ‘கார்த்தி சாருடன் நான் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அவருடைய கடின உழைப்பு எப்போதுமே எனக்கு தூண்டுதலாக இருந்திருக்கிறது. கார்த்தி சார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த இயக்குனரும் கூட. அவருடைய முதல் டைரக்ஷனை ஆவலுடன் நாங்கள் எதிர்பார்க்கக் காத்துக் கொண்டிருக்கிறோம். இப்போது புரட்சித்தலைவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விலைமதிக்க முடியாத பரிசாக ஆயிரம் முத்தங்களை கார்த்திக்கு வழங்கியிருப்பார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பல வெற்றி படங்களை கொடுத்தவர்.. பொன்னியின் செல்வன் அவருக்கு கனவு திரைப்படமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமலேயே போனது. அப்படி இருந்திருந்தால் அவரது கனவு கதாபாத்திரத்தை கண்டு மகிழ்ந்திருப்பார்” என்று கூறினார். 


இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, ‘கார்த்தியின் 25வது பட விழாவான இந்த அழகிய நிகழ்வில் இங்கே இடம்பெற்று இருப்பது மிகச்சிறப்பான ஒன்று. கார்த்திக்கும் இயக்குனர் ராஜூ முருகனுக்கும் ஜப்பான் போன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்கியதற்காக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கமர்சியலாக மட்டுமல்லாமல் கலை சார்ந்த படைப்புகளிலும் வெற்றிகளை கொடுக்கக்கூடிய ஒரு விதிவிலக்கான நடிகர் கார்த்தி. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியது உண்மையிலேயே உற்சாகமானதாக இருந்தது. சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே ஏழை எளிய மற்றும் ஆதரவற்றவர்களுக்காக நிறைய உதவிகளை செய்து சமூக கடமை ஆற்றி வருகிறார்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.


- Johnson Pro