Featured post

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2

 *வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2'* *வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், நயன்தாரா நடிக்கும் 'ம...

Wednesday 30 March 2022

இன்ஸ்பைரிங் ஆப் யூத் ஐக்கான் தமிழ்நாடு" என்ற சர்வதேச

 "இன்ஸ்பைரிங் ஆப் யூத் ஐக்கான் தமிழ்நாடு" என்ற சர்வதேச அளவிலான விருது டெல்லியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞருக்கு வழங்கப்பட்டது.


தமிழகத்தை  சேர்ந்த கவிஞர் ஜோசன் ரஞ்சித் என்ற, 23 வயது நிரம்பிய இளம் கவிஞருக்கே இந்த  "INSPIRING YOUTH ICON OF TAMIL NADU " விருது டெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. 


ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சாதித்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்களைத் தேர்ந்தெடுத்து, டாப்நோட்ச் பவுண்டேஷன், அவுட் லுக் வார இதழ், இந்தியா நியூஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இதுபோன்ற விருதுகளை வழங்கி பெருமைபடுத்தி வருகின்றன. 


அந்த வகையில் இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 70 சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


அவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞரான ஜோசன் ரஞ்சித்திற்கு, "இன்ஸ்பையரிங் யூத் ஐக்கான் ஆப் தமிழ்நாடு" (எழுச்சிமிகு இளைஞர்களுக்கான தமிழக அடையாளம்" என்ற விருது டெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி,  ராம்தாஸ் அத்வாலே, பகன் சிங் குலஸ்தே, ஜான் பர்லா, மக்களவை உறுப்பினர் ராஜ்குமார் சாகர் மற்றும் நடிகர் சன்கி பாண்டே ஆகியோர் கலந்து கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.


இந்த மாபெரும் விருது வழங்கும் விழாவில், தமிழகம் சார்பில் இவர் ஒருவருக்கு மட்டுமே விருது கிடைக்கப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு, மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என‌ அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


கவிஞர் ஜோசன் ரஞ்சித், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி

 "அன்பு உடன்பிறப்பே" என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதுவரை இவர் 4 தமிழ்க் கவிதை நூல்கள், 3 ஆங்கில நூல்கள் என, 7 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல்கள் 140 நாடுகளில் அமேசான், பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இவர் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் நிரந்தர உறுப்பினராக பணியாற்றி வருகிறார். தனிப்பட்ட முறையில் பல சமூக அமைப்புகளோடு இணைந்து, பல்வேறு சமூக தொண்டாற்றி வருகிறார் என்பது கூடுதல் தகவல்...

Sunday 27 March 2022

கலைஞர்களை மையமாகக் கொண்ட உலகளாவிய மேடையாக

 கலைஞர்களை மையமாகக் கொண்ட  உலகளாவிய மேடையாக மாஜா தளம் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடலை வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, ஏற்பாடு செய்து, தயாரித்துள்ள, ‘மூப்பில்லா தமிழே தாயே’ படக் தமிழ் கலாச்சாரம் மற்றும் பல்வேறு துறைகளைச் சுற்றியுள்ள தமிழர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது.


‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடலை இங்கு கண்டுகளியுங்கள் 


வரவிருக்கும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெள்ளிக்கிழமையன்று ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற நவீன யுக கீதத்தை வெளியிட்டார். மார்ச் 24 அன்று துபாய் எக்ஸ்போ  இல் ரஹ்மானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், வெள்ளிக்கிழமை மாஜாவின் YouTube சேனலில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டது. நீங்கள் அதை இங்கே பார்க்கலாம்.


 

இந்த தனி ஆல்பம் பாடல் உலகம் முழுக்க பல  தளங்களில் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது.


ஏ. ஆர். ரஹ்மானுடன் இணைந்து கனடா நாட்டு தொழில்முனைவோர் நோயல் கீர்த்திராஜ், சென் சச்சி மற்றும் பிரசனா பாலச்சந்திரன் ஆகிய மூவரின் சிந்தனையில் உருவானதுதான் மாஜா.


‘மூப்பில்லா தமிழே தாயே’ 

‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் பெயருக்கு ஏற்றாற்போல், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை எழுதிய இந்தப் பாடல், பழங்காலத் தமிழ்ப் பண்பாட்டையும், இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் கொண்டாடுகிறது.


ஊக்கம் மற்றும் தன்னம்பிக்கை தரும் பாடலாகக் கருதப்படும், ‘மூப்பில்லா தமிழே தாயே’ இளைய தலைமுறையினரைத் தங்கள் கலாச்சார வேர்களுடன்  இணைக்கவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்துகிறது.


"இது அனைத்து தலைமுறையினரையும் உற்சாகப்படுத்தும் மற்றும் ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன், மேலும் தமிழ் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் பெருமையுடன் பார்க்க மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கீதத்தைப் பற்றி ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, ஏற்பாடு செய்து தயாரித்த இந்தப் பாடலில் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் பூவையார் ஆகியோர் ரஹ்மானுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இவர்களுடன் ரக்‌ஷிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா ஹரிகுமார் மற்றும் நகுல் அப்யங்கர் ஆகியோரின் கூடுதல் குரல்கள் தந்துள்ளனர்.


மாஜா தயாரித்து வெளியிட்டுள்ள இப்பாடலை, Studio MOCA வின் அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் வீடியோவை மாஜாவின் YouTube சேனலில் பார்த்து ரசிக்கலாம்.

Artist-centric global platform maajja premieres AR Rahman’s new

 Artist-centric global platform maajja premieres AR Rahman’s new Tamil anthem ‘Moopilla Thamizhe Thaaye’

Composed, arranged and produced by the music director, ‘Moopilla Thamizhe Thaaye’ celebrates Tamil culture and accomplishments of Tamil folk around different fields 


Watch ‘Moopilla Thamizhe Thaaye’ here

 
Acclaimed music director AR Rahman released a new-age anthem ‘Moopilla Thamizhe Thaaye’ on Friday to mark the upcoming Tamil new year. The song, which was showcased at Rahman’s concert at Dubai Expo on March 24, premiered on maajja’s YouTube channel exclusively on Friday. You can watch it here. 


The single will be released on all global streaming platforms next week. 


maajja is the brainchild of a trio of Canadian entrepreneurs – Noel Kirthiraj, Sen Sachi and Prasana Balachandran – along with Rahman.

 

‘Moopilla Thamizha Thaaye’

‘Moopilla Thamizhe Thaaye’, as the name suggests, is written as an ode to Tamil as one of the oldest languages in the world. Penned by noted poet and lyricist Thamarai, the song celebrates Tamil culture of yore and the accomplishments across different fields by Tamil folk around the world today. 


Conceptualised as a song to inspire and motivate, ‘Moopilla Thamizhe Thaaye’ exhorts the younger generation to connect with their roots and carry forward Tamil culture and tradition.


“It’s a song that I hope will excite and inspire all generations, and implore people to look at Tamil culture and history with pride,” says the Oscar winner about the anthem. 


Composed, arranged and produced by AR Rahman, the song also features Saindhavi Prakash, Khatija Rahman, AR Ameen, Amina Rafiq, Gabriella Sellus and Poovaiyar alongside Rahman on vocals, with additional vocals by Rakshita Suresh, Niranjana Ramanan, Aparna Harikumar and Nakul Abhyankar. 


Produced and released by maajja, the video - directed by Amith Krishnan of Studio MOCA - for ‘Moopilla Thamizhe Thaaye’ is available to watch on maajja’s YouTube channel. 
*Note to editors*


maajja is written in small letters.Double aa & double jj

இரு மொழிகளில் உருவாகும், நடிகர் ராம் பொதினேனி நடிக்கும்,

 இரு மொழிகளில் உருவாகும், நடிகர்  ராம் பொதினேனி நடிக்கும்,  “தி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14, பிரமாண்டமாக வெளியாகிறது ! 
நடிகர் ராம் பொதினேனி நடிப்பில், பிரபல இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், உருவாகி வரும் “தி வாரியர்” திரைப்படம்,  வரும் ஜூலை 14 உலகமெங்கும் திரையரங்குகளில்  பிரமாண்டமாக வெளியாகிறது.  


கோலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டு திரைத்துறைகளிலும் பிரபலமான நடிகர் ஆதி பினிசெட்டி, “தி வாரியர்” படத்தில் வில்லனாக நடிக்கிறார், தென்னிந்திய திரையுலகின்  இளம் நடிகைகளில் ஒருவரான கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.


இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதற்காக தயாரிப்பாளர்கள் ஒரு அற்புதமான போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் ராம் பொதினேனி ஒரு ரயில் நிலையத்தின் நடைமேடையில், வெடிபொருட்கள் அடங்கிய பெட்டியின் மீது, கையில் காயத்துடன், அமர்ந்திருக்கிறார். கோபமான முகத்துடன் துப்பாக்கியை வைத்து கொண்டிருக்கிறார், அதே நேரத்தில் குண்டர்கள் கூட்டம் அவரை கண்டு  ஓடுவதைக் காணலாம்.


முன்னதாக RAPO19 என அழைக்கப்பட்ட இப்படத்தின் தலைப்பு சமீபத்தில்  அசத்தலான ஸ்டைலில் வெளியிடப்பட்டது. ராம் பொதினேனி போலீஸ் அதிகாரியாக துப்பாக்கி ஏந்தியபடி கடுமையான தோற்றத்துடன், அவரைச் சூழ்ந்திருக்கும் போலீஸ் அதிகாரிகளுடன் இடம்பெற்றுள்ள போஸ்டருடன், படத்தின் தலைப்பு “தி வாரியர்” என வெளியிடப்பட்டது.


மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு, படத்தின் நாயகி கீர்த்தி  ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது. அதில் அவர் விசில் மகாலட்சுமியாக நவநாகரீக தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். சமீபத்தில், மகா சிவராத்திரி தினத்தில், ஆதியின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.


படக்குழுவினர் ‘இந்த படம் எதிர்பார்ப்புகளை விஞ்சி, தென்னிந்திய சினிமாவின் மறக்கமுடியாத போலீஸ் கதைகளில் ஒன்றாக இருக்கும்’ என்று கூறியுள்ளனர். ராம் பொதினேனியின் இஸ்மார்ட் ஷங்கரின் வெற்றிக்குப் பிறகு ‘தி வாரியர்’ வருவது குறிப்பிடதக்கது. இந்த படத்தில் அக்‌ஷரா கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


Srinivasaa Silver Screen நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி மிக பிரமாண்ட  பட்ஜெட்டில் தயாராகும் “தி வாரியர்” படம், கோபிசந்த், தமன்னா நடிப்பில், இந்த நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான ‘சீடிமார்’ திரைப்படத்தின்  அட்டகாச வெற்றிக்கு பிறகு, இந்நிறுவனத்திற்கு மற்றுமொரு மகுடமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ள இந்த அதிரடி திரைப்படத்தை பவன் குமார் வழங்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுஜித் வாசுதேவ் செய்கிறார். தற்போது ‘தி வாரியர்’ படத்தின் முக்கியமான பகுதிகள் பரபரப்பாக தயாராகி வருகின்றன.

Ram Pothineni's Bi-lingual The

Ram Pothineni's Bi-lingual The Warriorr to release on July 14


The Warriorr, Ram Pothineni and ace director N Lingusamy's upcoming Telugu-Tamil bilingual film, will be having a grand worldwide theatrical release on July 14. 


Aadhi Pinisetty, who is popular in both Kollywood and Tollywood, plays the antagonist in The Warriorr, while Krithi Shetty, one of the most happening young actresses of the south, plays the heroine.
The makers have released a powerful poster to announce the release date. It features Ram Pothineni sitting on an explosive box on the platform of a railway station. With injury on his hand, he is wielding a gun with a serious look, while a bunch of goons is seen running away. 


Earlier known as RAPO19, the title of the film was revealed in style recently. Along with a poster that featured Ram Pothineni as a police officer wielding a gun with a tough look and with cops surounding him, the title of the movie was unveiled as The Warriorr. 


And, to mark Valentine’s Day, the first look poster of the film’s heroine Krithi Shetty was released on February 14. It featured her as Whistle Mahalakshmi in a trendy look. Much recently, on Maha Sivarathri day, the menacing first look of Aadhi was released.


According to the movie's team, the film will surpass the anticipations and will be one of the memorable police stories of south Indian cinema. The Warriorr comes after the success of iSmart Shankar of Ram Pothineni. Akshara Gowda will be seen in an important role in this flick. 


Produced by Srinivasaa Chitturi under Srinivasaa Silver Screen banner, The Warriorr is expected to be a feather in the production house's hat after the success of its recent sports drama Seetimaar, which had Gopichand and Tamannah Bhatia in lead roles. 


The action drama will be presented by Pavan Kumar and it is a Devi Sri Prasad musical. Cinematography is by Sujith Vaassudev. Major portions of The Warriorr are under process.

Thursday 24 March 2022

ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு...இதற்குத்தானே

 *ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு...இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விஜய்சேதுபதி*


தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு 

கொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர்தான். என்னது பீடிகை பெருசா இருக்கே என்று தோன்றலாம்.
சமூகத்துக்கு நல்ல காரியங்கள் செய்பவர்களில் பெரும்பாலானோர் விளம்பரத்தை விரும்பாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களது 

தன்னடக்கத்தை புறம்தள்ளி, அச்செயலை வெளிக்கொண்டு வந்தால்தால்தான், அதை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் சிலர் வயலில் 

இறங்குவார்கள் என்பதற்காகவே இச்செய்தி.


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளாலாரின் ஒற்றை வரியை உயிர்நாதமாகக்கொண்ட ‘மேற்குத் தொடர்ச்சி மலை’,’கடைசி 

விவசாயி’என்கிற இரட்டை காவியப் படங்களைத் தயாரித்த விஜய் சேதுபதி கடந்த மூன்று ஆண்டுகளாக, சத்தமில்லாமல் செய்து வரும் சாதனை ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டப்போது உண்மையில் சிலிர்ப்பாக இருந்தது. இது லட்சம் குடும்பங்களின் ஆனந்தக் கண்ணீர் கண்ட கதை.


யெஸ்... கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புப் பெற உந்து சக்தியாக இருந்திருக்கிறார் இந்த ‘மாமனிதன்’.அச்செயல் இன்னும் பல்கிப்பெருகி இன்னும் பல லட்சம் பேர் பயனடையக் காத்திருக்கிற ஆச்சர்யமும் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.


எப்படி சாத்தியமானது இப்படி ஒரு வேள்வி என்று கேள்வி எழுகிறதல்லவா? ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் பாக்கலாம் வாங்க...


பெயர் இ.பா.வீரராஹவன். பாண்டிச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர். 2016ம் ஆண்டு துவங்கி 3 வாட்ஸாப் குழுக்கள் மூலம் தனது சின்ன சக்திக்கேற்ற வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தருகிறார். 2019 வரை அப்படி அவரால் வேலை வாய்ப்புப் பெற்றவர்களின் எண்ணிக்கை 3,345ஐத் தொடுகிறது. சாதனை சின்னது என்றாலும் பொன்னது அல்லவா?


இத்தகவலை அறிந்த சன் டி.வி சமூக செயல்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் ’நம்ம ஊரு ஹீரோ’ நிகழ்ச்சியில் அவரை சிறப்பித்து கவுரவிக்கிறது. அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நவீன வள்ளலார் நம்ம விஜய் சேதுபதி.


இனி வீரராஹவனே தொடர்கிறார்...’’நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சாரை தற்செயலாக சந்தித்தது என் வாழ்வில் நடந்த அற்புதம் என்றே சொல்வேன். பொருளாதாரரீதியாக வலுவாக இல்லாத நான், அப்போது  மத்திய அரசு ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு பகுதிநேர சமூக சேவையாகவே அதைச் செய்து வந்தேன். 


அந்நிகழ்ச்சியின்போதும் அது முடிந்தபிறகும் என்னிடம் மிகவும் அக்கறையாகப் பேசிய விஜய் சேதுபதி சார்,” நீங்க செய்யிற இந்த சேவையை முழு நேரமாகத் தொடர என்னால முடிஞ்ச எல்லா உதவிகளையும் செய்யிறேன்’ என்று மிகவும் அழுத்தமாகச் சொன்னார். அன்னைக்கு அவர் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்கு மந்திரச் சொற்கள் மாதிரியே பட்டது. அவர் வார்த்தைகளை நம்பி, உடனே என் வேலையை ராஜினாமா செஞ்சேன்.


அந்த நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சி மார்ச் மாதம் 2019 ஒளிபரப்பு செய்யப்பட்ட பிறகு, நாட்டின் பல பகுதியில் இருந்து -  வேலை அளிக்கும் நிறுவனங்கள்கிட்ட இருந்து, வேலை தேடுபவர்களிடமிருந்து அழைப்புகள் தொலைபேசி & வாட்சப் மூலமாகவும் அதிக அளவில் வந்து சேர்ந்தது. அந்தத் தகவலை சார் கிட்ட சொன்னபிறகு பயங்கர உற்சாகமாகிட்டார். அதற்குத்தானே ஆசைப்பட்டார் விஜய் சேதுபதி?  உடனே புதுச்சேரி-தவளக்குப்பத்தில் அலுவலகம் அமைத்து இந்த சேவையை விரிவாக செய்வதற்கான அறங்காவலர் மற்றும் ஊழியர்களை தேர்வு செய்து ஒருங்கிணைத்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொண்டு நிறுவனமாக செயல்பட உதவினார் . உதவினார் என்று சாதாரணமாகக் கடந்துபோய்விட முடியாது. எனக்கும் என்னைச் சார்ந்த ஊழியர்கள் அத்தனை பேருக்கும் சரியான தேதியில் சம்பளப்பட்டுவாடா செய்துகொண்டே இருந்தார்.


சாரோட ஸ்ட்ராங்கான சப்போர்ட்டால, 14 மார்ச் 2019 ல் புதுச்சேரியில் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் - அலுவலகம் என்னை நிறுவனர் & நிர்வாக அறங்காவலராகக் கொண்டு செயல்படத்துவங்கிச்சு.

 

அதை தொடர்ந்து தமிழ்நாடு & புதுச்சேரியின் பல்வேறு பகுதியில் இருந்து சிறு,குறு, பெரு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்  தங்கள் நிறுவனத்துக்கு தேவையான மனிதவள தேவை விபரங்களை அளித்து அதனை வேலை தேடும் நபர்களிடம் கொண்டு சேர்க்க விரும்பினார். அந்த வேலைவாய்ப்பு தகவல்களை வாட்சப் & YOUTUBE மூலம் கொண்டு சேர்த்ததன் பயனாக பல்வேறு பகுதியில் உள்ள நபர்களிடமிருந்து நிறுவனங்களுக்கு அழைப்பும் அதிக அளவின் வர துவங்கியது , அந்த சேவை முற்றிலும்  கட்டணமின்றி கிடைக்கப்பெற்றது இரு தரப்பினரும் பயனடைந்தனர்.


 இன்னொரு பக்கம், இந்த சேவை மூலம் பயன்பெற்ற நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி, மனித வள குழுக்களில் (HR FORUM) பகிர துவங்கினர். அதன் பயனாக தமிழநாடு & புதுச்சேரியில் உள்ள பல HR  FORUM களில் இருந்து அழைப்பும் வந்தது சேவையும் பலருக்கு பயனடைய வாய்ப்பாக அமைந்தது இதன் அடிப்படையில் தினம்தோறும் அதிக எண்ணிக்கையிலான வேலை தேடும் நபர்களுக்கும் பயனடைந்தனர்.


தொடர்ந்து மார்ச் 20 - 2022 வரையில் நிறுவனங்களில் இருந்து தினம்தோறும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 1,00,133 படித்த தகுதியான நபர்கள் வேலை  பெற்று பயனடைந்து உள்ளனர். தற்போதைய தகவல்களின் அடைப்படையில் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தை 4 லட்சத்தி 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் 1400 க்கும் மேற்பட்ட வாட்சப் குழுக்கள் மற்றும் YOUTUBE [VVVSI CAREER GUIDELINES ] 

சேனல் வாயிலாக பின்பற்றி வருகின்றனர் . 


 மேலும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கமானது இதனுடன் சேர்த்து, தினமும் அரசு வேலை வாய்ப்பு தகவல்களை கொண்டு சேர்ப்பதிலும், அரசு வேலை தேடுபவர்களுக்கு வழிகாட்டுதல்களை அளிப்பது , அரசின் சுயதொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து சுயதொழில் முனைவோரை உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்து 73 சுயதொழில் முனைவோர்களை உருவாக்கியும் உள்ளது மற்றும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு விழிப்புணர்வு & வழிகாட்டுதல் முகாம்களையும் நடத்தியுள்ளது. இத்துடன் 17 வேலைவாய்ப்பு முகாம்களை தனியாகவும், 3 முகாம்களை அரசுடன் இணைந்தும் நடத்தி உள்ளது. முதலில் பாண்டிச்சேரியில் துவங்கப்பட்ட சத்மில்லாத இந்த யுத்தம் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களை, குறிப்பாக குக்கிராமங்கள் வரை சென்று சேர்ந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.


நீங்களோ உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ வேலை தேடும் பட்சத்தில் https://www.vvvsi.com இணைய  தளத்தில் பதிவு செய்து வாட்சப் லிங்க்  ஐ பெற்று வேலை  வாய்ப்பு  தகவல்களை தினமும் பெறலாம்  | வேலை கொடுக்கும் நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் info@vvvsi.com மின்னஞ்சல் மூலம் வேலை வாய்ப்பு தகவல்களை தெரிவிக்கலாம்.


இந்த சேவை வாயிலாக வேலைதேடும் நபர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பமும் பயனடைய தொடர்ந்து முழு உதவி செய்து வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்களுக்கும், நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் தன்னார்வலர்கள், மனிதவள வட்டார அமைப்புகள் (HR  FORUM) அனைவரும் தங்களின் நன்றியை உரித்தாக்குகின்றனர் “ என்று உணர்ச்சி ததும்ப முடிக்கிறார் வீரராஹவன்.


“ஒரு நிமிஷம்...மிஸ்டர் வீரராஹவன்...உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி...இப்படி ஒரு பத்திரிகை செய்தியை நீங்க குடுக்கிறது விஜய் சேதுபதிக்குத் தெரியுமா?


“ நிச்சயமா இல்லை சார். இந்தத் தகவலை வெளிய சொல்ல முயற்சித்தபோதெல்லாம் ரொம்ப கண்டிப்பான முறையில என்னைத் தடுத்துட்டே வந்துருக்கார். இந்த முறையும் அதையேதான் செய்வார்னு நினைச்சிதான் நானே வெளியிடுறேன். அவர் கோபிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. அவரோட மனசு எவ்வளவு பெருசுன்னு, தான் சம்பாதிக்கிற செல்வம் அத்தனையும் மக்களுக்குத்தான்னு நினைக்கிறதாலதான் அவருக்கு மக்கள் செல்வன்னு பொருத்தமா பேரு வச்சிருக்கோம்னு எல்லாருக்கும் தெரியட்டும்.

Tuesday 22 March 2022

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 11 லட்சம் மதிப்பிலான இலவச

 அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில்  11 லட்சம் மதிப்பிலான இலவச செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், மெட்ராஸ் நைட்ஸ் ரவுண்ட் டேபிள் 181 தலைவர் சுனில் பஜாஜ், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின்  நிர்வாக இயக்குனர் டிசிஎச் டாக்டர் ஆர் நாராயணபாபு, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சாந்திமலர் ஆகியோர் கலந்து கொண்டு  தொடங்கி வைத்தனர்


 22 மார்ச் மற்றும் 23 மார்ச் ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 100 பயனாளிகளுக்கு இலவச செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.11 லட்சம் மதிப்பிலான இலவச செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், மெட்ராஸ் நைட்ஸ் ரவுண்ட் டேபிள் 181 தலைவர் சுனில் பஜாஜ், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின்  நிர்வாக இயக்குனர் டிசிஎச் டாக்டர் ஆர்.நாராயணபாபு, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சாந்திமலர் மற்றும் பார்ன் டூ வின்  நிறுவனர் வர்ஷா அஸ்வானி ஆகியோர் கலந்து கொண்டனர் தொடங்கி வைத்தனர்

 மேலும்
மெட்ராஸ் நைட்ஸ் ரவுண்ட் டேபிள் 181 மற்றும் கோயம்புத்தூர் சிட்டி ரவுண்ட் டேபிள் 31 அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையுடன் இணைந்து இரண்டு நாள்  இலவச செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

 நிகழ்ச்சியின்போது பேசிய சுனில் பஜாஜ் இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு அளவீடுகளை மேற்கொண்டனர்.  அவர்களுக்கு 45 நாட்களுக்குள் செயற்கை உறுப்புகள் இலவசமாக வழங்கப்படும் எனக் கூறினார்

அரசு மருத்துவ கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் கல்லூரி எங்களிடம் 150 பயனாளிகளின் பட்டியலை வழங்கியுள்ளதாகவும்   அதில் குறைந்தபட்சம் 100  பயனாளிகளுக்கு இலவச செயற்கை கால் வழங்க இருப்பதாகவும் 181 நோயாளிகளுடன் தொடங்குவது எங்கள் இலக்கு என்று கூறியவர்

 செயற்கை கால்கள் விலை உயர்ந்தவையாக  இருக்கின்றன  எனினும் செயற்கை கால் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது ஆனால் நிதித் தடையின் காரணமாக அவற்றை வாங்க முடியவில்லை" என்று மெட்ராஸ் நைட்ஸ் ரவுண்ட் டேபிள் 181 இன் தலைவர் சுனில் பஜாஜ் கூறினார்.

TamilNadu Health Secretary Dr.J. Radhakrishnan, Dr R Narayana Babu, Pro.Dr.R.Shanthimalar, Sunil Bajaj distributed 11 lakhs

 TamilNadu Health Secretary Dr.J. Radhakrishnan, Dr R Narayana Babu, Pro.Dr.R.Shanthimalar, Sunil Bajaj distributed 11 lakhs worth Free Artificial Limbs to 100 Patients at Government Kilpauk Medical Hospital.


Madras Knights Round Table 181 and Coimbatore City Round Table 31 in association with the Government Kilpauk Medical College and Hospital organised a two-day artificial limb donation camp, starting on Tuesday.

The massive camp witnessed over 100 beneficiaries who got their measurements taken in the camp. Their artificial limbs will be delivered free of cost within 45 days.

"The Government Medical Kilpauk Hospital and College has given us a list of 150 beneficiaries, of which we are expecting at least a 100 in the camp. Our goal is to start with 181 patients and further scale up. Artificial limbs could prove costly and there are scores of people who require them, but just cannot procure them due to the financial barrier," said Chairman, Madras Knights Round Table 181, Sunil Bajaj.This is not the first project of Round Table 181. This year, they completed 181 cataract surgeries and also have a long term project in association with Saveetha hospital, called, AATRAL, to provide financial assistance to women and children with potentially curable cancer. The vision is to create a cancer free society, whereby the disease is detected early and timely treatment is given to all. Round Table 181 promotes awareness and delivers affordable medical care to the needy cancer patients, starting with breast and cervical cancer.

"Last month, as a part of women's day celebrations, we chose 27 cops as beneficiaries and have been taking care of the complete cost of their cancer treatment," said Sunil.

Apart from this, Round Table India is widely known for its 'Freedom Through Education' project where classrooms are built for underprivileged children. There are more than 4500 tablers across India.

Dr J Radhakrishnan IAS, Principal Secretary, Health and Family Welfare, TN Government, Dr R Narayana Babu, MD DCH, Directorate of Medical Education, Dr R Shanthimalar, Dean, Government Kilpauk Medical College along with Sunil Bajaj, chairman MKRT 181 & Ms.Varsha Aswani, Founder Born to Win were present at the event.