Featured post

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar

 *Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela 2 Mass Madness Begins* Natural Star Nani is on a roll, havin...

Saturday 30 December 2023

பத்திரிகையாளர்கள் பாராட்டில் ‘நந்திவர்மன்’!- டிசம்பர் 29

 பத்திரிகையாளர்கள் பாராட்டில் ‘நந்திவர்மன்’!- டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாகிறது




’நந்திவர்மன்’ படம் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும் - நாயகன் சுரேஷ் ரவி நம்பிக்கை


பத்திரிகையாளர்களை வியக்க வைத்த ‘நந்திவர்மன்’! - டிசம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது


ஏகே பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜிவி பெருமாள் வரதன் இயக்கத்தில், ‘காவல்துறை உங்கள் நண்பன்’ பட புகழ் சுரேஷ் ரவி, போஸ் வெங்கட், ஆஷா வெங்கடேஷ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நந்திவர்மன்’. 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னன் நந்திவர்மனை மையப்படுத்திய சஸ்பென்ஸ் த்ரில்லர் சாகச பயணமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இந்த நிலையில், பத்திரிகையாளர்களுக்காக இப்படத்தின் சிறப்பு திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள், பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட வேண்டிய ஒரு கதையை, குறிப்பிட்ட பட்ஜெட்டில் சிறப்பாக படமாக்கப்பட்டது தொடர்பாக இயக்குநர் பெருமாள் வரதனை வியந்து பாராட்டினார்கள். தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழு கலந்துகொண்டு படம் குறித்து பேசினார்கள்.  


படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் பேசுகையில், “இரண்டரை வருடங்களாக மிகவும் கஷ்ட்டப்பட்டு இந்த படத்தை எடுத்தோம். படத்தில் இடம்பெறும் நந்திவர்மன் பற்றிய ஐந்து நிமிட கிராபிக்ஸ் கதையை, அரங்கம் அமைத்து படமாக்க நினைத்தோம். ஆனால், அதற்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்பட்டதால் எங்களால் எடுக்க முடியவில்லை. இருந்தாலும், கிராபிக்ஸ் காட்சிகளே ரசிக்கும்படி இருக்கிறது என்று பலர் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. பல தடைகளை தாண்டி தற்போது படத்தை வெற்றிகரமாக வெளியீட்டுக்கு கொண்டு வந்துவிட்டோம், இனி பத்திரிகையாளர்கள் கையில் தான் இருக்கிறது. படத்தை நீங்கள் பார்த்தீர்கள், உங்களுக்கு என்ன எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை எழுதுங்கள், நன்றி.” என்றார்.


நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், “கன்னி மாடம் என்ற படத்தை முடித்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் நிர்கதியாக நின்றுக்கொண்டிருந்த போது என்னை காப்பாற்றியது பத்திரிகையாளர்கள் தான். தற்போது என் உதவியாளரான பெருமாள் வரதனும் அதே நிலையில் தான் உங்க முன்பு உட்கார்ந்திருக்கிறார். அவருக்கும் நீங்கள் ஆதரவளித்து கைகொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சிறு சிறு தவறுகள் இல்லாமல் படம் எடுக்க முடியாது, அந்த சிறிய தவறுகளை பெருமாள் வரதனும் செய்திருப்பார், ஆனால் அவை படத்தின் பட்ஜெட்டை சார்ந்தவையாக மட்டுமே இருக்குமே தவிர, அவருடைய திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பு தொடர்பாக இருக்காது, அதனால் அந்த தவறுகளை எழுத வேண்டாம். உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறதோ அதை மட்டும் எழுதுங்கள், இது என் அன்பான கோரிக்கை. இந்த படத்தை தயாரித்த அருண் குமார் சினிமா மீது பேரார்வம் கொண்டவர், மிக சிறப்பான தயாரிப்பாளர், தொடர்ந்து படங்கள் தயாரிக்க விரும்புகிறார். உங்கள் எழுத்துகள் மூலம் இந்த படம் வெற்றி பெற்று அவருக்கு போட்ட பணம் கிடைத்தால் என்னைப் போல, பெருமாள் வரதன் போல இன்னும் பல அறிமுக இயக்குநர்களுக்கும், சுரேஷ் ரவி போன்ற வளரும் நடிகர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனால், இந்த படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள், நன்றி.” என்றார்.


இசையமைப்பாளர் ஜெரால்டு பீலிக்ஸ் பேசுகையில், “எனக்கு இது தான் முதல் படம். எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இதில் கோவில் தொடர்பான காட்சிகள் நிறைய இருந்ததால், அது தொடர்பான இசையமைப்பது புதிதாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது. நன்றி.” என்றார்.


இயக்குநர் பெருமாள் வரதன் பேசுகையில், “என்ன பேசுவதென்று எனக்கு தெரியவில்லை. முதலில் என் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் நன்றி. பத்திரிகையாளர்கள் எழுதும் விமர்சனம் தான் இந்த படத்தை அடுக்கட்டத்திற்கு கொண்டு செல்லும்.நன்றி.” என்றார்.


படத்தின் நாயகன் சுரேஷ் ரவி பேசுகையில், “பத்திரிகை, ஊடகத்துறை நண்பர்களுக்கு வணக்கம். என்னுடைய முதல் படம் ‘மோ’ மற்றும் இரண்டாவது படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ இரண்டு படங்களுக்கும் கிடைத்த வரவேற்புக்கு நீங்க கொடுத்த பாசிட்டிவான விமர்சனம் தான் காரணம். அதுமட்டும் அல்ல, உங்க நடிப்பு நல்லா இருக்கு, என்று நீங்க என்னிடம் சொன்னபோது எனக்கு பொறுப்பு அதிகமானது. அடுத்தடுத்த படங்கள் நல்ல கதையாகவும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த வரிசையில் தான் இந்த படத்தையும் நான் தேர்வு செய்தேன். ‘நந்திவர்மன்’ டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாகிறது. நீங்க படத்தை பார்த்துட்டீங்க, இது ஒரு கதை என்பதைவிட வழக்கமான பாணியில் இல்லாத வித்தியாசமான படம். குறிப்பிட்ட பட்ஜெட்டில் எடுக்க முடியாத படம் என்றாலும், என்னிடம் கதை சொல்லும் போது மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று தோன்றியது. அதற்கு காரணம் கதையில் சொல்லப்பட்ட நந்திவர்மன் விசயங்கள் தான். ஆனால், அதை எப்படி படமாக்கப் போகிறார்கள், என்று தோன்றியது. அதன்படி தயாரிப்பாளரை சந்தித்தேன், அவருக்கு சினிமா மீது அதிகம் ஆர்வம் உண்டு. வேறு ஒரு துறையில் இருந்தாலும் சினிமாத்துறையின் மீது ஆர்வமாக இருக்கிறார். எத்தனையோ பேரிடம் பணம் இருந்தாலும், சினிமாவில் தயாரிப்பாளராக வெற்றி பெற வேண்டும், நல்ல படத்தை தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் வராது. அப்படிப்பட்ட ஆர்வம் எங்கள் தயாரிப்பாளரிடம் இருந்தது, அந்த வகையில், இந்த படக்குழுவினர் அவர் தயாரிப்பில் படம் பண்ணியது நிச்சயம் கடவுள் ஆசீர்வாதம் தான். இந்த படம் நிறைய பேருக்கு முதல் படம், தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், நடிகை ஆஷா வெங்கடேஷ் என அனைவருக்கும் இந்த படம் தான் துவக்கம். நீங்கள் படத்தில் இருக்கும் நல்ல விசயங்களை எழுதி மக்களிடம் கொண்டு சென்றால் இவர்களுக்கு உதவியாக இருக்கும். நிச்சயம் நீங்கள் நல்ல படத்தை தூக்கி விடுவீர்கள் என்று தெரியும், அது இந்த படத்திற்கு நடக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.


படத்தின் வெளியீடு நெருங்கிவிட்டதால் கோவிலுக்கு சென்றேன், அப்போது எனக்காக அல்லாமல் இருவருக்காக இந்த படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று வேட்டிக்கொண்டேன். தயாரிப்பாளர் அருண் குமார் மற்றும் இயக்குநர் பெருமாள் வரதனுக்காக வேண்டிக் கொண்டேன். சினிமாவில் சுமார் பத்து, பதினைந்து வருடங்கள் பயணித்து வருபவர் இயக்குநர் பெருமாள் வரதன். ஒரு அறிமுக இயக்குநருக்கு முதல் படம் எவ்வளவு முக்கியம் என்பதும், அந்த வாய்ப்பு பெற அவர்கள் எத்தனை வருடங்கள், எத்தனை பிரச்சனைகளை சந்தித்து வந்தார்கள், என்பதை நான் அறிவேன். நானும் ஒரு இயக்குநருடன் பயணித்திருப்பதால் அவர்களுடைய கஷ்ட்டங்கள் எனக்கு தெரியும். பெருமாள் வரதனும் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார், பல இழப்புகளையும் சந்தித்திருக்கிறார், அதனால் இந்த படம் அவருக்கு நிச்சயம் வெற்றி கொடுக்க வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். அடுத்தது என் தயாரிப்பாளர் அருண் குமார். ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு முக்கியம் என்பது பல வருடங்கள் வாய்ப்புக்காக காத்திருப்பவர்களை கேட்டால் தெரியும். நானும் பல வருடங்களாக பல நிறுவனங்களில் ஏறி இறங்கியிருக்கிறேன். அந்த வகையில், இந்த படத்தின் கதையை கேட்ட நாள் முதல் அருண் குமார், படத்தை எப்படி எல்லாம் எடுக்கலாம், எதற்கெல்லாம் செலவு செய்யலாம் என்று கதையுடன் பயணிக்க தொடங்கி விட்டார். இன்று படம் வெளியீட்டுக்கு வந்துவிட்ட பிறகும், ஒரு உதவி இயக்குநர் போல் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இந்த நேரத்தில் எங்கள் படக்குழு சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் ‘நந்திவர்மன்’ படம் மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன், நன்றி.” என்றார்.


சேயோன் முத்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்திருக்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, சுதேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். முனிகிருஷ்ணன் கலை இயக்குநராக பணியாற்ற, மதன் கார்கி, கு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளனர். சிவகார்த்திக் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிருக்கிறார். ரகுராம் ஒப்பனை பணியை கவனிக்க,

ஸ்ரீகிரீஷ் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். ஒலிக்கலவை மற்றும் வடிவமைப்பை ஹரி பிரசாத்.எம்.ஏ கவனித்துள்ளார். ரமேஷ் மற்றும் ஹரி வெங்கட் தயாரிப்பு மேலாலர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். ஆர்.பலகுமார் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Friday 29 December 2023

Rajkumar Hirani’s Dunki spreading love all over the box office! Crosses the 150 Cr.

Rajkumar Hirani’s Dunki spreading love all over the box office! Crosses the 150 Cr. mark in India and the 300 Cr. mark globally in just 7 days for a single language film*



With its heartwarming story and amazing performance of the cast, Rajkumar Hirani's Dunki has indeed touched the hearts of audiences across the world. The film has made a profound connection with audiences worldwide who are connecting unanimously. 


Attracting a huge crowd of family audience to the theaters, Dunki has impressed audiences of all age groups. This has made the film set its strong place at the worldwide box office by crossing the 150 Cr. mark in India and the 300 Cr. mark globally in just 7 days for a single language film. 


Dunki features an ensemble cast, with colorful characters portrayed by exceptionally talented actors Boman Irani, Taapsee Pannu, Vicky Kaushal, Vikram Kochhar, and Anil Grover, along with Shah Rukh Khan. A JIO Studios, Red Chillies Entertainment, and Rajkumar Hirani Films presentation, produced by Rajkumar Hirani and Gauri Khan Written by Abhijat Joshi, Rajkumar Hirani, and Kanika Dhillon, Dunki is now released on the big screen.

இந்தியாவில் 150 கோடியைத் தாண்டி, பாக்ஸ் ஆபிஸில் களைகட்டும்

 *இந்தியாவில் 150 கோடியைத் தாண்டி, பாக்ஸ் ஆபிஸில் களைகட்டும்  ராஜ்குமார் ஹிரானியின் டங்கி!  7 நாட்களில் உலகளவில்  300 கோடியைத் தாண்டி சாதனை !!*

இதயம் வருடும் ஆழமான கதை மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பால், ராஜ்குமார் ஹிரானியின் டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் வாழ்வியலைச் சொல்வதில் அவர்களுக்கு நெருக்கமான படைப்பாக அமைந்திருக்கிறது 

திரையரங்குகளுக்கு குடும்ப பார்வையாளர்கள் முதல் அனைத்து வயதினரையும் கவர்ந்துள்ளது டங்கி. இப்படம் இந்தியாவில் மட்டும் 150 கோடியைத் தாண்டியுள்ளது மேலும்  உலக பாக்ஸ் ஆபிஸில் 300 கோடியை வெறும்   7 நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளது. 

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு  'டங்கி' திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர்  21 ஆம் தேதி வெளியானது

Wednesday 27 December 2023

ஷாருக்கான் - ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான 'டங்கி' திரைப்படம், உலகம் முழுவதும்

 *ஷாருக்கான் - ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான 'டங்கி' திரைப்படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்து, இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.‌*



இந்தத் திரைப்படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் வலிமையான வாய்மொழி பரப்புரையால் படத்தின் வசூல் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.‌


இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான 'டங்கி' திரைப்படம், வெளியானதிலிருந்தே குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது. இதயத்தை வருடும் கதையுடன் அனைத்து தரப்பு பார்வையாளர்களின் இதயங்களை வென்றதுடன்.. அனைத்து வயதினரையும் கவரும் படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் என் ஆர் ஐ (NRI) பார்வையாளர்களுடன் மிகவும் தொடர்புடையதாக இருப்பதால் அவர்களிடமிருந்தும் அதிக அன்பைப் பெற்றுள்ளது. பார்வையாளர்களின் மனதில் தன் முத்திரையை பதித்தப் பிறகு 'டங்கி' திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்து, பாக்ஸ் ஆபீசில் தனது இருப்பிடத்தை உறுதி செய்தது. படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. தற்போது அதன் பெருமைக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் இந்த திரைப்படம் 250 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. 


'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு இந்த ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'டங்கி' திரைப்படம்- இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்த மூன்றாவது திரைப்படமாகும். இத் திரைப்படம் சுமார் 29.25 கோடி ரூபாய் முதல் 30.25 கோடி ரூபாய் வரை வசூலித்து, ஞாயிற்றுக்கிழமையன்று அதன் மொத்த வசூல் 102. 50 கோடியாக இருந்தது. இதன் மூலம் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் பத்தாவது படமாக 'டங்கி' இடம்பெற்றது. இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இத்திரைப்படம் 250 கோடி ரூபாயை எட்டி, 250 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறது. 


ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் 'டங்கி'யில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள்  சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் இணைந்து கதை எழுதி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

SRK- Rajkumar Hirani's Dunki crosses Rs 250 crore worldwide, marks its entry

SRK- Rajkumar Hirani's Dunki crosses Rs 250 crore worldwide, marks its entry in top-grossers’ club of 2023



_With a Strong Word of Mouth The film continues to grow from strength to strength_


Rajkumar Hirani's Dunki has significantly made its mark ever since it was released. With its heartwarming story, the film is winning the hearts of the family audience and has impressed audiences of all age groups. This film has also been receiving love from the NRI audience as its very relatable to them. After leaving its mark on the audience's mind, the film made its presence at the box office by entering the 100 Cr. club in India in just 4 days. Now, adding yet another feather to its glory, the film has crossed the collection of 250 Cr. 


Dunki is the third consecutive film for Shah Rukh Khan to enter the Rs 100 crore club in India in 2023 after Pathaan and Jawan. The film collected around 29.25 Cr. to 30.25 Cr. on Sunday taking its total collections to 102.50 Cr. Dunki becomes SRK's 10th film to enter the 100 Cr. club. While the film is growing at a good pace every day, now the film has entered the  250 Cr. club. 


Dunki features an ensemble cast, with colourful characters portrayed by exceptionally talented actors Boman Irani, Taapsee Pannu, Vicky Kaushal, Vikram Kochhar, and Anil Grover, along with Shah Rukh Khan. A JIO Studios, Red Chillies Entertainment, and Rajkumar Hirani Films presentation, produced by Rajkumar Hirani and Gauri Khan Written by Abhijat Joshi, Rajkumar Hirani, and Kanika Dhillon, Dunki is now released on the big screen.


https://x.com/redchilliesent/status/1739591836409495780?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA

இமெயில்’ படத்தின் டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி

இமெயில்’ படத்தின் டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி








SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். 


மேலும் போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ ,  ஆதவ் பாலாஜி, அக்ஷய்குமார், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, வனிதா, ரத்னா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளது இமெயில்.


இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இதன் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குநர் அமீர் வெளியிட்டார். 


 இந்தநிலையில்  நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தின் டீசரை வெளியிட்டார். 


இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான S.R.ராஜன், இரண்டாவது கதாநாயகனான ஆதவ் பாலாஜி,  மதுராஜ் மற்றும் படக்குழுவினர் பங்கு பெற்றனர்.


டீசரை ஆர்வமுடன் பார்த்து ரசித்த நடிகர் விஜய்சேதுபதி படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் அவர்களுக்கு அன்பு முத்தங்களையும் பரிசளித்து இன்ப அதிரச்சி அளித்தார். 


ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் அதேசமயம் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.


இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். 


அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் முத்தப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். 


வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.


தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது.

ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியின் உரிமத்தை

ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியின் உரிமத்தை பெற்றார் நடிகர் சூர்யா*




டி10 தொடர் இந்தியாவில் நடத்தப்பட இருக்கிறது. ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில்  சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த ஐஎஸ்பிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் போட்டிபோட்டு வாங்கி வருகின்றனர்.


அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கினர். 


இந்நிலையில், சென்னை அணியின் உரிமையை தமிழின் முன்னணி நடிகரான சூர்யா பெற்றுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 10 ஓவர்களை கொண்ட போட்டிகளாக இந்த ஐஎஸ்பிஎல் தொடர் நடத்தப்படும். இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க உள்ளவர்கள் தற்போதே முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ் நாட்டின் தெருக்களில் இருந்து விளையாட்டு வீர்ர்களை ஸ்டேடியத்திற்கு கொண்டு செல்வதே இந்த ஐ.எஸ்.பி.எல் - இந்தியன் ஸ்ட்றீட் ப்ரீமியர் லீகின் நோக்கம்.

Actor Suriya is the Owner of Team Chennai in Indian Street Premier League 2024

 Actor Suriya is the Owner of Team Chennai in Indian Street Premier League 2024



The Indian Street Premier League (ISPL), India’s pioneering tennis ball T10 cricket tournament played inside a stadium, proudly announces its latest addition to the league's galaxy of eminent team owners. Renowned Actor, Suriya takes the crease as owner of the Chennai team, affirming ISPL’s commitment to promoting cricketing talent across the country.


ISPL has been the spotlight with its recent owner revelations that include eminent personalities like Amitabh Bachchan (Mumbai), Akshay Kumar (Srinagar), Hrithik Roshan (Bengaluru), and Ram Charan (Hyderabad).


The Chennai ISPL team will give local talent a unique opportunity to showcase their cricketing skills in this exciting new format."

In an innovative approach, ISPL introduces an inclusive policy, eliminating age restrictions, except for the mandatory inclusion of at least one U-19 player in the playing XI, aiming to unearth latent talent and provide a platform for emerging cricketers.

Tuesday 26 December 2023

முடக்கறுத்தான்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

 *'முடக்கறுத்தான்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா*






2020-2021 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கரோனா(COVID-19) பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி மாபெரும் சமூக சேவையாற்றிய சித்த மருத்துவரான Dr.K.வீரபாபு அவர்கள் சமூகத்திற்காக சமூகப் பொறுப்போடு வயல் மூவீஸ் சார்பில்  எழுதி,இயக்கி,தயாரித்து, பின்னணி இசை கோர்த்து, நடித்துள்ள படம் தான் 'முடக்கறுத்தான்'.

           இந்த படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தை கருவாக வைத்து தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் Dr.K.வீரபாபு,மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

           இத்திரைப்படத்தின் முன்னோட்டம்(Trailer) வெளியீட்டு விழா  சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் Dr.K.வீரபாபு, தமிழருவி மணியன், இயக்குனர் தங்கர் பச்சான், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் திரைப்படத்தில் நடித்திருந்த நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் முதலாவதாக பேசிய வீரபாபு, தனது படத்தின் மூலம் சமூகத்திற்கு தேவையான முக்கியமான கருத்துகளையும் கோரிக்கைகளையும் அரசாங்கத்திற்கும் வைத்துள்ளதாக கூறினார். அவையனைத்தும் குழந்தைகள் சார்ந்த வேண்டுகோளாகவே இருக்கும் என்றும் படத்தின் கருவாக குழந்தைகளை கடத்தி அவர்களை வைத்து சாலைகளில் பிச்சை எடுக்கும் கும்பலை அழித்தொழிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து படத்தை தயாரித்துள்ளதாகவும் கூறினார். அடுத்த கோவிட்-19(COVID19) பெருந்தொற்று ஏற்படுவதற்குள் அதை சந்திப்பதற்கு சித்த மருத்துவ முறையிலும் நோயாளிகளுக்கான வசதிகள் அடிப்படையிலும் தயாராக இருக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார். 


சுரேஷ் காமாட்சி பேசும்போது Dr.K.வீரபாபு அவர்கள் எழுதி,இயக்கி,தயாரித்து நடிக்க போவதாக கூறியதை கேட்டு அவரது தன்னம்பிக்கையை பாராட்டியதாகவும்,அவரது சமூகத்தின் மீதான அக்கறை அவரின் மீதான மதிப்பை அதிகப்படுத்துவதாகவும் கூறினார்.


இயக்குனர்,நடிகர் சமுத்திரக்கனி அவர்கள் பேசும்போது,"தன்னுடைய கதையின் மீது நம்பிக்கை வைத்து அவர் சொல்லத் துணிந்த சமூகக் கருத்து மிக முக்கியமானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீதான கவனத்தை செலுத்தாமல் பணம் ஈட்டுவதில் குறியாக இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை அறியாமல் இருந்து விடுகின்றனர். அதனால் ஏற்படும் விளைவுகளை இந்த படம் விவரிக்கிறது. கரோனா பெருந்தொற்றில் வீரபாபு பெருந்தொண்டாற்றினார்.தெலுங்கு படமொன்றின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் நிலக்கரி உடல் முழுவதும் இருக்குமாறு நடித்ததால் ஏற்பட்ட ஒவ்வாமையை வீரபாபு தீர்த்து வைத்தார்", என்றும் கூறினார்.


தங்கர் பச்சான் பேசும்போது Dr.K.வீரபாபு தனது சித்த மருத்துவத்தின் மூலம் பலருக்கு சேவையாற்றிப்பதாகவும் அவரின் இந்த படத்தின் மூலம் சிறந்த கருத்தை முன் வைத்திருப்பதாகவும் அவரைப் போன்றவர்கள் தமிழ் மண்ணுக்கு கிடைத்த கொடை என்றும், தமிழ் மக்கள் தமிழ் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், இந்த படத்தை தமிழ் மக்கள் வெற்றியடைய செய்ய வேண்டும் என்றும் வாழ்த்தி பேசினார்.


படத்தின் கதாநாயகி மஹானா பேசும்போது," வீரபாபு அவர்கள் 'ஒன் மேன் ஆர்மி' போல நடிப்பு,தயாரிப்பு,இயக்கம் என படத்தின் அனைத்து துறைகளிலும் மிகவும் சிரத்தையுடன் பணியாற்றினார். இந்த படம் பெண்கள் மற்றும் குழந்தை கடத்தலை பற்றி  பேசும் படம். படப்பிடிப்பின் போதும் கூட மூலிகை உணவுகளை கொடுத்து  எங்களை சிறப்பாக கவனித்து கொண்டார்.மயில்சாமி,சாம்ஸ், 'காதல்'சுகுமார்,அம்பானி சங்கர் போன்றோரது நகைச்சுவை நன்றாக வந்திருக்கிறது",என்றார்.


விழா நிறைவாக படக்குழுவை வாழ்த்திப் பேசிய தமிழறிஞரும் அரசியல்வாதியுமான  தமிழருவி மணியன்," நான் வீரபாபுவிற்கு மிகவும் கடமைப்  பட்டுள்ளேன். கரோனா பெருதொற்றில் பாதிக்கப் பட்டிருந்த போது அவர் அளித்த சிகிச்சையால் தான் நான் இப்போது உயிருடன் உள்ளேன்.ஆங்கில மருத்துவத்தால் நான் நிறைய இன்னல்களை சந்தித்தேன்.அதனால் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்", என்று கேட்டு கொண்டார்.


விழா நிறைவாக படக்குழுவினர் அனைவருக்கும் மூலிகைகள் நிறைந்த பைகள் வழங்கப்பட்டன.


'முடக்கறுத்தான்' திரைப்படம் ஜனவரி-25 திரையரங்குகளில் வெளியாகிறது.

Mudakkaruthan Trailer Launch

 *Mudakkaruthan Trailer Launch*







Dr.K.Veerababu, a chiropractor, who is known for his great social service by volunteering to save 5394 patients affected by the pandemic (COVID-19) in the years 2020-2021 through Siddha medicine has now turned Actor- Director with 'Mudakkaruthan'. He has also bankrolled the film and composed the background score. This film is based on the crime of child begging. 


Mahana Sanjeevi is playing the female lead. The film also stars Samuthirakani, Super Subbarayan, Kadhal Sukumar, Chaams, late actor Mayilsamy and others in supporting roles. The trailer launch of the film was held yesterday. The event was graced by the cast and crew of the film along with special guests- Politician Tamilaruvi Maniyan, Director Thangar Bachchan, Actor- Director Samuthirakani and Producer Suresh Kamatchi. 


Dr. Veerababu, who spoke first at the function, said that through his film, he has made important comments and demands for the society and the government. He said that all of them will be children's request and the core of the film is to destroy the gangs that kidnap children and keep them begging on the roads. He asked the government to be prepared in terms of medical and patient facilities to meet the next Covid-19 pandemic.


Speaking at the event, Producer Suresh Kamatchi said: "I appreciated his  confidence when I got to know that after he would write, direct, produce and act, and his concern for society increased his respect."


When director and actor Samuthirakani spoke, he said "The social message he dared to convey by believing in his story is very important. Parents are busy making money without paying attention to their children, so they don't know the impact on them. This film describes the consequences. During the shooting of a film, Veerababu cured the allergy caused by pretending to have coal all over his body in one scene," he added.


Dr.K.Veera Babu while speaking said that he is  has been serving many people through his Siddha medicine and he has put forward the best idea through this film and people like him are a gift to the Tamil land and Tamil people should give importance to Tamil medicine and Tamil people should make this film a success.


Actor Mahana said, "Veerababu worked very hard in all aspects of the film like 'one man army' like acting, production and animation. This film is about women and child trafficking. Even during the shoot, he took good care of us by giving us herbal food. The comical track with Mayilsamy, Chaams, 'Kadhal Sukumar and Ambani Shankar has come out well".


Congratulating the team at the end of the event, Tamil scholar and politician Tamilaruvi Manian said, "I am very much indebted to Veerababu. I am alive now because of the treatment he gave me when I was affected by the corona virus. I faced a lot of hardships due to English medicine. Therefore, all Tamil people should give importance to Tamil medicine."


As the event concluded,  bags full of herbs were given to all the crew, in order to spread awareness about healthy lifestyle. 


'Mudakkaruthan' will hit the theaters on January 25, 2024.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ்

 லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ 2024, பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாகிறது!






இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே' படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. சமீபத்தில் வெளியான அதன் டீசர் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு தொடங்கி உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோடு முடிந்திருக்கிறது இந்த டீசர். படத்தின் உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஜி.கே.எம். தமிழ்குமரன் பெற்று உலகம் முழுவதும் வெளியிட உள்ளனர். படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது என்பதைப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.


நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது. படத்தின் ட்ரைய்லர், ஆடியோ வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

பாராட்டும்படியான படைப்புகளை சரியானத் திட்டமிடலுடன் கொடுக்கக்கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது. 70 நாட்களில் அவர் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரித்துள்ளனர் மற்றும் வம்சி, பிரசாத் கோதா மற்றும் ஜீவன் இணைந்து தயாரித்துள்ளனர்.


*நடிகர்கள்:*


அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


இயக்கம்: விஜய்,

லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்: ஜி.கே.எம். தமிழ்குமரன்,

தயாரிப்பு: சுபாஸ்கரன், எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி,

இணைத்தயாரிப்பு: சூர்யா வம்சி பிரசாத் கோதா- ஜீவன் கோத்தா,

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,

கதை & திரைக்கதை: ஏ.மகாதேவ்,

வசனம்: விஜய்,

ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்,

எடிட்டிங்:  அந்தோணி,

ஸ்டண்ட்: ஸ்டண்ட் சில்வா,

கலை இயக்குநர்: சரவணன் வசந்த்,

ஆடை வடிவமைப்பாளர்: ருச்சி முனோத்,

ஒப்பனை: பட்டணம் ரஷீத்,

நிர்வாகத் தயாரிப்பாளர்: வி கணேஷ்,

தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: கே மணி வர்மா,

நிர்வாகத் தயாரிப்பாளர்கள் (யுகே): சிவகுமார், சிவ சரவணன்,

தயாரிப்பு நிர்வாகி - மனோஜ் குமார் கே,

ஆடை வடிவமைப்பாளர்:  மொடப்பள்ளி ரமணா,

ஒலி வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,

VFX – D நோட்,

ஸ்டில்ஸ்: ஆர் எஸ் ராஜா,

Promotion & Strategies: ஷியாம் ஜாக்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி'ஒன்,

விளம்பர வடிவமைப்பாளர் - பிரதூல் என்.டி

டங்கி : ஷாருக் கான் -ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான 'டங்கி' திரைப்படம்

 *டங்கி : ஷாருக் கான் -ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான 'டங்கி' திரைப்படம், பார்வையாளர்களின் இதயங்களை வென்று இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாயைக் கடந்து வசூலித்திருக்கிறது.*



ராஜ்குமார் ஹிரானியின் 'டங்கி' திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே குறிப்பிடத்தக்க வகையில் தனது முத்திரையை பதித்துள்ளது. இதயத்தை வருடும் கதையுடன் படம் பார்வையாளர்களின் இதயங்களை தொடர்ந்து வென்று வருகிறது. அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் முதல் தேர்வாகவும் இப்படம் அமைந்துள்ளது. இந்த திரைப்படம் என் ஆர் ஐ (NRI) பார்வையாளர்களுடன் மிகவும் தொடர்புடையதாக அமைந்திருப்பதால்... அவர்களிடமிருந்தும் அதிக அன்பைப் பெற்றுள்ளது. பார்வையாளர்களின் மனதில் அதன் முத்திரையை பதித்த பிறகு, இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பிற்குள் நுழைந்து.. பாக்ஸ் ஆபிஸில் தனது இருப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த சாதனை.. இந்தியாவில் படம் வெளியான நான்கு நாட்களிலேயே நடைபெற்றிருக்கிறது. 


'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு இந்த ஆண்டில் வெளியான ஷாருக்கானின் 'டங்கி' திரைப்படம் - இந்தியாவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறது. இது அவருடைய இந்த ஆண்டின் திரைப்பயணத்தில் தொடர்ந்து மூன்றாவது திரைப்படமாக 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறது. இத் திரைப்படம் சனிக்கிழமையன்று 29. 25 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஞாயிற்றுக்கிழமையன்று 30.25 கோடி ரூபாய்க்கு வசூல் செய்ததன் மூலம் அதன் மொத்த வசூல் 102.50 கோடியாக உயர்ந்திருக்கிறது. மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரூ போன்ற மாநகரங்களில் குடும்ப பார்வையாளர்கள் ஏராளமாக திரையரங்குகளில் குவிந்தனர். மேலும் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய இத்திரைப்படம்.. இந்தியாவின் வணிக வளாகங்களில் உள்ள மல்டி பிளக்ஸ்களில் தொடர்ந்து அற்புதமான வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் மூலம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த ஷாருக்கானின் பத்தாவது திரைப்படமாக 'டங்கி' இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படத்திற்கான ஆதரவும், வரவேற்பும் நாள்தோறும் அதிக வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில்.. ஞாயிற்றுக்கிழமை இப்படத்திற்கான வசூல் சுமார் 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக திரையுலக வணிகர்கள் அவர்களுடைய எக்ஸ் ( ட்விட்டர் )தளத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர்.



ஷாருக்கானுடன் பொமன் இரானி,  டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் டங்கியில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் இணைந்து கதை எழுதி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

Dunki : SRK - Rajkumar Hirani's Dunki continues winning hearts

Dunki : SRK - Rajkumar Hirani's Dunki continues winning hearts, crosses 100 Cr in India*



Rajkumar Hirani's Dunki has significantly made its mark from the first day itself. With its heart warming and touching story, the film is winning hearts of audiences, and has emerged as a first choice impressing the audience of all the age groups. This film has also been receiving love from the NRI audience as its very relatable to them.After leaving its mark on the audience's mind, the film made its presence at the box office by entering the 100 Cr. club in India in just 4 days.


Dunki becomes the third consecutive film for SRK to enter the Rs 100 crore club in India in 2023 after Pathaan and Jawan. The film collected around 29.25 Cr. to 30.25 Cr. on Sunday taking its total collections to 102.50 Cr. Rajkumar Hirani's directorial Dunki continues to receive amazing responses from multiplexes in India as places like Mumbai, Delhi, Kolkata, and Bangalore recorded terrific occupancy throughout the day with family audiences flocking to the theaters in abundance. With this, Dunki becomes SRK's 10th film to enter the 100 Cr. club. While the film is growing at a good pace every day, On Sunday, the film witnessed a jump of around 25 percent. 


https://x.com/sacnilkentmt/status/1739121217142206958?s=46&t=5RIwNRycJ8MV9YSxIBI6Fg


https://x.com/tutejajoginder/status/1739164646144344154?s=46&t=5RIwNRycJ8MV9YSxIBI6Fg


https://x.com/himeshmankad/status/1738970179848011955?s=46&t=5RIwNRycJ8MV9YSxIBI6Fg


https://x.com/aavishhkar/status/1738919120601514376?s=46&t=5RIwNRycJ8MV9YSxIBI6Fg


https://x.com/georgeviews/status/1739156427199950887?s=46&t=5RIwNRycJ8MV9YSxIBI6Fg


Dunki features an ensemble cast, with colorful characters portrayed by exceptionally talented actors Boman Irani, Taapsee Pannu, Vicky Kaushal, Vikram Kochhar, and Anil Grover, along with Shah Rukh Khan. A JIO Studios, Red Chillies Entertainment, and Rajkumar Hirani Films presentation, produced by Rajkumar Hirani and Gauri Khan Written by Abhijat Joshi, Rajkumar Hirani, and Kanika Dhillon, Dunki is now released on the big screen.

Monday 25 December 2023

வட்டார வழக்கு' பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

 'வட்டார வழக்கு' பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!


மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வழங்கும், இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி நடிப்பில் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் 'வட்டார வழக்கு'. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.













சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் பேசியதாவது, "'மாமன்னன்' படத்தில் அமைந்தது போல ஒரு கதாபாத்திரம் தான் ரவீனாவுக்கு இந்தப் படத்தில். மிக நேர்த்தியாக நடித்துள்ளார். கமர்ஷியல் படங்கள் என்பதை விட உண்மைக்கு நெருக்கமான படங்கள் விநியோகிப்பதில் தான் எனக்கு ஆத்மார்த்த திருப்தி. உங்கள் ஆதரவு நிச்சயம் வேண்டும்" என்றார். 


நடிகை ரவீனா ரவி, "2019-ல் நடித்தப் படம் இது. ராமச்சந்திரன் சார் நினைத்தது போல படம் வந்திருக்கிறது என நம்புகிறேன். நல்ல கதை இது. வருகிற 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மீடியா நல்ல விமர்சனம் கொடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். படப்பிடிப்பு நடத்திய ஊரில் உள்ள கிராமத்து மக்களும் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்தனர். எல்லோரும் ரிஸ்க் எடுத்து தான் நடித்திருக்கிறோம். திரையரங்கில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்".


இயக்குநர் கண்ணுச்சாமி   ராமச்சந்திரன், " இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போகும்போது எல்லாம் எங்களை உற்சாகம் குறையாமல் படக்குழுவினர் பார்த்துக் கொண்டனர். இவர்கள் எண்பது சதவீதம் பேர் சம்பளம் வாங்காமல் வேலை பார்த்துள்ளனர். சிறு சிறு விஷயங்களுக்கு கூட எங்களை எதிர்பார்க்காமல் அவர்களது சொந்த காசை செலவு செய்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். கேபிள் சங்கர் சார், சித்ரா லட்சுமணன் சார் எனப் பலரும் எங்களுக்கு வழிகாட்டி, பொருளாதார உதவி வரை செய்தனர். பின்னணி இசையை நம்பி இருக்கக்கூடிய படம் இது. இந்தக் கதைக்கு ராஜா சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். படத்தைப் பார்த்துவிட்டு அவர் சம்மதம் சொன்னார். ஒரு சின்ன படத்திற்கான அடிப்படைத் தேவைக்கான செலவு மட்டும் தான் ராஜா சார் கேட்டிருந்தார். ஆனால், அவர் கேட்டதில் 60% தான் என்னால் கொடுக்க முடிந்தது. 40% பணம் என்னிடம் இல்லை. அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாது இசையை செய்து தருவதாக சொன்னார். அவர் காலில் விழுந்து விட்டேன். 12 நாட்கள் ஒரு தியானம் போல, இதன் பின்னணி இசையை செய்து கொடுத்தார். நல்ல படம் என்பதால், இதற்குப் பலரும் எந்தவிதமான எதிர்பார்பும் இல்லாமல் ஆதரவு கொடுத்தனர். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் சார் எப்பொழுதும் நல்ல படம்தான் எடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். பத்திரிக்கையாளர்களின் உதவியோடு அவரை அணுகினேன். அவருக்கும் படம் பிடித்து சம்மதம் சொன்னார். சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவிமர் அனைவருக்கும் நன்றி. பொருளாதாரத்தில் சில குறை நிறைகளோடு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். அதை மன்னித்து உங்கள் ஆதரவைக் கொடுங்கள். 29 ஆம் தேதி 'வட்டார வழக்கு' வெளியாகிறது இந்த படத்திற்கு இரண்டு எஜமானர்கள். ஒன்று பார்வையாளர்கள், இன்னொன்று ஊடகங்கள். நீங்கள் தரும் ஆதரவினால் தான் 'வட்டார் வழக்கு' மைலேஜ் ஏற்றி அடுத்தடுத்து நகரும்" என்றார். 


நடிகர் சந்தோஷ் நம்பிராஜன், "இந்தப் படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை இஷ்டப்பட்டு தான் வேலை செய்து இருக்கிறோம். இசைஞானி அவர் பெயரை சொல்வதற்கு கூட எனக்குத் தயக்கமாக இருக்கிறது. அவரது இசையில் நடித்துள்ளது எனக்குப் பெருமையாக உள்ளது.  இயக்குநர், ரவீனா எனப் படக்குழுவினர் அனைவருமே அவரவர் சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர். இப்போது எல்லாம் சின்ன படங்களை வெளியிடுவது கஷ்டம், தியேட்டர் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். நீங்கள் ஒரு தரமான படத்தை எடுத்தால் அதை வெளியிடுவதற்கு சக்திவேல் சார் தயாராக இருக்கிறார். நீங்கள் உழைப்பையும், படத்தையும் நேர்மையாக கொடுத்தால் உங்களுக்கான அங்கீகாரமும் அடையாளமும் விருதுகளும் தானாக வந்து சேரும் என்பது நிச்சயம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்" என்றார்.

பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில், எம்.எஸ். ராஜா இயக்கத்தில்

 *'பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில், எம்.எஸ். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'செவப்பி- ஆஹா ஒரிஜினல்' ஜனவரி 12, 2024 அன்று ப்ரீமியர் ஆகிறது!*












 நம்பிக்கைக்குரிய மற்றும் பாராட்டுக்குரிய படங்களை தயாரித்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது ஆஹா தமிழ்.  அந்த வரிசையில், இப்போது அவர்கள் 'செவப்பி' என்ற படத்துடன் பார்வையாளர்களை மீண்டும் கவர தயாராக உள்ளனர். ராஜேஷ்வர் காளிசாமி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் தயாரித்திருக்க, எம். எஸ். ராஜா இந்த ஃபீல் குட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். குமரன் என்ற 5 வயது சிறுவனுடைய கதாபாத்திரமும், அவனது அம்மாவாக நடித்திருக்கும் 'பிக் பாஸ்' புகழ் பூர்ணிமா ரவியின் கதாபாத்திரமும் முதன்மையானது. பிரபல தமிழ் கலைஞரான ரிஷிகாந்த் சிறுவனின் தாய் மாமாவாக நடித்துள்ளார்.


1990 களில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு ஐந்து வயது சிறுவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த செவப்பி யின் கதை. அச்சிறுவன் ஒரு கோழியை நேசத்தோடு வளர்க்கிறான். ஒரு தந்தை தன் குழந்தைகள் மீது காட்டும் அதீத அன்பை போல அந்தக் கோழியை பாதுகாப்போடும் நேசத்தோடும் அச்சிறுவன் வளர்க்கிறான். பாசப்பிணைப்பு ஒரு கட்டத்தில் பிரிய நேரிடுகிறது இதனால் இரு தரப்பினர்கள் ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து வாழும் அந்த கிராமம் இரண்டாகப் பிரிந்து மோதிக்கொள்கிறது. இறுதியில் அந்தச் சிறுவனும் கோழியும் ஒன்று சேர்ந்தார்களா? கிராம மக்கள் ஒன்று சேர்ந்தார்களா?   என்பதுதான் "செவப்பி"யின் கதை.


கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள மத்திபாளையம் என்ற கிராமத்தில் முழு கதையும் வெறும் 27 நாட்களில் படமாக்கப்பட்டது. ப்ரீ புரொடக்‌ஷன் கட்டத்தில், பல கிராமவாசிகள் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதை இயக்குநர் ராஜாவும் அவரது குழுவினரும் கண்டுபிடித்தனர். கிராமவாசிகள் ஆசையை நிறைவேற்றவும் கதையின் உண்மைத் தன்மைக்காகவும் அவர்களுக்கும் நடிக்க வாய்ப்பளித்துள்ளது 'செவப்பி'. 


'செவப்பி' ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஜனவரி 12, 2024 அன்று பொங்கல் பண்டிகைக்கு ப்ரீமியர் ஆகிறது. 



*நடிகர்கள்*


பூர்ணிமா ரவி,

ரிஷிகாந்த்,

ராஜாமணி பாட்டி,

ஷ்ரவன் அத்வேதன்,

டில்லி,

செபாஸ்டியன் ஆண்டனி



*தொழில்நுட்ப குழு*


ஒளிப்பதிவு - மனோகரன் எம்,

எடிட்டிங் & விஎஃப்எக்ஸ் - வச்சு லட்சுமி,

இசை - ஏ.பிரவீன் குமார்,

ஒலி வடிவமைப்பு - ஷெஃபின் மாயன்,

கலை - ஆசை தம்பி,,

ஆக்‌ஷன் கோரியோகிராஃபி - அபிஷேக் ஸ்ரீனிவாஸ்,

விளம்பர வடிவமைப்பு - ராகவன்,

நிர்வாகத் தயாரிப்பாளர் - எஸ்.வினோத்குமார்.