Featured post

MITTAI MAZHAI’ FROM AOT RELEASED ON DULQUER SALMAAN’S BIRTHDAY

 MITTAI MAZHAI’ FROM AOT RELEASED ON DULQUER SALMAAN’S BIRTHDAY* The makers of AOT celebrated Dulquer Salmaan’s birthday by unveiling the fi...

Wednesday, 27 November 2019

பிறந்த நாளன்று உதயநிதி ஸ்டாலினை வாழ்த்திய தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்!


டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம், உதயநிதி ஸ்டாலினை அவரது பிறந்த நாளன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பிறந்த நாளைக் கொண்டாடியது மட்டுமின்றி, அவரது தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'சைக்கோ' படம் வெகு சிறப்பாக வந்திருப்பது குறித்து மகிழ்ச்சியும் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம், "வழக்கமான பாணியிலிருந்து விலகி, முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய வகைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றியது பெருமகிழ்ச்சியாக அமைந்தது. ஏற்கெனவே பல மாறுபட்ட வேடங்களில் நடித்து தன் திறமையை நிரூபித்த உதயநிதி ஸ்டாலின், 'சைக்கோ' படத்தில் நடிப்பின் புதிய பரிமாணத்தைத் தொட்டிருப்பதை ரசிகர்கள் வெகுவாக ரசிப்பார்கள். முன்பே படத்தின் டீஸரும், முதல் பாடலும் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரையரங்குக்கு வரும் ஒவ்வொரு ரசிகரையும் திருப்திபடுத்தும் வகையிலான தனித்தன்மை கொண்ட படமாக 'சைக்கோ' இருக்கும் என்பதை மட்டும் இப்போது என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். எதிர்வரும் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் மற்ற பாடல்களையும் ட்ரைலரையும் விரைவில் வெளியிட இருக்கிறோம்" என்றார்.

மிஷ்கின் எழுதி இயக்கியிருக்கும் 'சைக்கோ' படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி மற்றும் நித்யா மேனன் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி சென், 'ஆடுகளம்' நரேன், சிங்கம் புலி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 'மாஸ்ட்ரோ' இசைஞானி இளையராஜாவின் இசை, 'சைக்கோ' படத்தில் பலராலும் பாராட்டப்படும் சிறப்பம்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment