Featured post

ஐந்தாம் வேதம்’’ சீரிஸ் ZEE5 இல் 50 மில்லியன் ஸ்ட்ரீமிங்

 “ஐந்தாம் வேதம்’’  சீரிஸ் ZEE5 இல் 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து  சாதனை படைத்துள்ளது ! ZEE5 இல் 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங...

Thursday 31 August 2023

ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின்

 *ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியது !!*







 *“டியர்”  திரைப்பட உரிமையை கைப்பற்றிய ரோமியோ பிக்சர்ஸ் !!*


Nutmeg Productions  தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் வெளியீட்டு உரிமையை  தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. 


தமிழ் திரையுலகில் பல தரமான வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வழங்கியதுடன், பல ப்ளாக்பஸ்டர் படங்களை வெளியிட்டுள்ளது ரோமியோ பிக்சர்ஸ். நேர்கொண்ட பார்வை, வலிமை, நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம், டிரிக்கர், துணிவு, டைனோசர்ஸ் போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களை இந்நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது. 


தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. 


Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி  மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் இணைந்து  தயாரித்துள்ளனர்.  விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.


‘இசை மன்னன்’ ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன் முறையாக இணைந்து நடிப்பதால், ‘டியர்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெருமளவில் அதிகரித்துள்ளது.  


இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.



இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ருகேஷ் படத்தொகுப்பையும், பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளையும், அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பையும் கவனித்து வருகின்றனர். ‘ராப்’ ஐகான் அறிவு, ஏகாதசி, ஜிகேபி, விண்ணுலக கவி ஆகியோர்  பாடல்கள்  எழுதியுள்ளனர்.


டியர் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

இன்ஸ்டாவில் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா

 இன்ஸ்டாவில் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா !! 



ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தந்த நயன்தாரா இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கினார் !! 



தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, 

பிரபல சமூல வலைதளமான இன்ஸ்டாகிராமில்  இணைந்திருக்கிறார். நயன்தாரா  இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில், உலகம் முழுவதிலிருந்து, ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.  


தென்னிந்திய திரையுலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  உடன் வர் நடித்த “சந்திரமுகி”  படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு,   அவர் தொடந்து நடித்த அனைத்துப் படங்களும் ப்ளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.  ரஜினிகாந்த், விஜய், அஜித், தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் என சூப்பர்ஸ்டார்  நடிகர்களின் முதல் சாய்ஸாக மாறினார் நயன்தாரா. முன்னணி டாப் நடிகர்கள் அனைவருடனுடன்  இணைந்து ப்ளாக்பஸ்டர் படம்  தந்த பெருமை கொண்ட நயன்தாரா, தென்னிந்திய சினிமாவிமன் நம்பர் 1 நடிகையாக புகழப்பட்டார். 


நாயகர்களுக்கு சமமாக  பெண் கதாப்பாத்திரங்களை  மையமாக கொண்ட கதைகளில் அவர் நடித்த, மாயா, அறம், கோலமாவு கோகிலா படங்கள்  ப்ளாக்பஸ்டர்  படங்களாக வெற்றி பெற்றன. நாயர்களுக்கு இணையாக நயன்தாராவிற்கென தனி மார்க்கெட் உருவானது.  அனைவராலும் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டார் நயன்தாரா.   20 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய  திரையுலகின் முடிசூடா ராணியாக விளங்கி வருகிறார் நயன்தாரா. 


தற்போது பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அட்லி இயக்கத்தில் பிரமாண்ட பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள ஜவான் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. 



 தற்போது தன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவர்களுடன் தொடர்ந்து உரையாடும் நோக்கில் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். உலகம் முழுக்கவுள்ள ரசிகர்கள் நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்து அவரது சமூக வலைத்தள பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர்

ஷாருக்கானின் 'ஜவான்' பிரீ ரிலீஸ் ஈவன்ட்

 *ஷாருக்கானின் 'ஜவான்' பிரீ ரிலீஸ் ஈவன்ட்*















*'ஜவான்' பட நிகழ்வில் 'மான்- புலி -வேடன்' குட்டி கதை சொன்ன அட்லீ*


*‘’தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’’ - ஷாருக் கான்*



ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் கலை அரங்கில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் ரசிகர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, யோகி பாபு,  அனிருத், சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, பாடலாசிரியர் விவேக், சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசு, படத்தொகுப்பாளர் ரூபன்,  கலை இயக்குநர் முத்துராஜ், நடன இயக்குநர் ஷோபி, 'ஜவான்' படத்தை தமிழகம் மற்றும்  கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். 


இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் வரவேற்றார்.


இந்நிகழ்வில் இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், '' என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கும், பூஜா தட்லானி மற்றும் கௌரி கான் ஆகியோருக்கும் நன்றி. பாடலாசிரியர் விவேக் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார். அவருடைய ஈடுபாட்டின் காரணமாக இந்த படத்தின் பாடல்கள் ஒரு ரீமேக் படத்தின் பாடல்கள் போலில்லாமல்.. அசல் தமிழ் படத்தின் பாடல்களைப் போல் எழுதியிருக்கிறார். இதனால் ஷாருக்கான் இவரது பாடல் வரிக்கு வாயசைத்து  நடனமாடி இருக்கிறார்.


என்னுடைய சகோதரர்.. இயக்குநர் அட்லீக்கும் நன்றி. சென்னையிலிருந்து மும்பைக்கு இயக்குநர்கள் ரீமேக்கிற்காக சென்றிருக்கிறார்கள். ஆனால் சென்னையிலிருந்து புறப்பட்டு இந்தியாவின் நட்சத்திர  நடிகரான ஷாருக் கானை சந்தித்து, கதை சொல்லி, அவரது தயாரிப்பில் படத்தை இயக்குவது என்பது சாதாரண விசயமல்ல. சவாலானது. அதற்கு அவருக்கு நாம் அனைவரும் கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவிக்க வேண்டும்.  அவர் மட்டும் பணியாற்றாமல்.. அவரை நம்பி இருந்த எடிட்டர், கேமராமேன், டான்ஸ் மாஸ்டர், ஃபைட் மாஸ்டர்.. ஆர்ட் டைரக்டர் என எல்லோரையும் அழைத்துச் சென்று தன்னுடன் பணியாற்ற வைத்திருக்கிறார். அதிலும் பத்து ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் என்னை பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அனைவரும் கடினமாக உழைத்து ஜவானை உருவாக்கி இருக்கிறோம்.


ஷாருக்கான்- வாழ்க்கையில் சில விசயங்கள் நடக்குமா.. என எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அதைவிட முதலில் இசையமைப்பாளராக வருவேனா..! என்பதே சந்தேகமாக இருந்தது. தற்போது இசையமைப்பாளராகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் அதுவும் ஷாருக் கான் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அங்கு அறிமுகமாகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

கிங் கான் ஷாருக்... நான் உங்களை தவற விடுகிறேன். நீங்கள் தினமும் இரவு இரவில் ஃபேஸ் டைம் இணைப்பில் வருகை தந்து ஒரு மணி நேரம் பேசுவீர்கள். அந்த பேச்சை தற்போது மிஸ் செய்கிறேன். 

ஷாருக் கான் மிகவும் அன்பானவர். குடும்பத்தில் ஒருவராக பழகக் கூடியவர். ஒரு முறை லண்டனுக்கு சென்றிருந்தபோது.. அங்கு அவர் எனக்காக ஷாப்பிங் சென்று, அங்கிருந்து எனக்கு போன் செய்து.. என் உடை அளவை தெரிந்து கொண்டு, எனக்காக பிரத்தியேகமாக ஆடையை வாங்கி பரிசாக அளித்தார். அந்த அன்பு ஈடு இணையற்றது. 


இந்த படத்தில் ஷாருக்- அட்லீ இணைந்திருப்பதால் இந்தப் படத்தை இந்தி திரைப்படமாக பார்க்காமல்.. இந்திய சினிமாவாக கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். '' என்றார். 


விஜய் சேதுபதி பேசுகையில், '' ஜவான் படத்தைப் பற்றி.. அட்லீ பற்றி.. நிறைய சொல்லலாம். இயக்குநர் அட்லீ ஒரு இயக்குநரை போல்.. படத்தில் உள்ள கதாபாத்திரங்களிடம் பேசுவது போல் அல்லாமல், கலைஞர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களிடமிருந்து எப்படி நடிப்பை வாங்க வேண்டும். அவர்களுக்கான சௌகரியத்தையும், சுதந்திரத்தையும் எப்படி அளிக்க வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்.

இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளுமுன் அட்லீயிடம் நிறைய விவாதிக்க வேண்டும் என சொன்னேன். 'வாங்கண்ணே.. நாம பண்ணலாம். என்ன வேணும்னாலும் பண்ணுங்க' என்றார்.  இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. படத்தில் என் கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்திருக்கிறார். 


நான் ஸ்கூலில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணைக் காதலித்தேன். அது அந்த பெண்ணிற்கு தெரியாது. இது வழக்கமானது. ஜானு இல்லாமல் ராம் ஏது? ஆனால் அந்தப் பெண் ஷாருக்கானின் ரசிகை. அவரை காதலித்தார். அதுக்கு பழி வாங்க இத்தனை வருஷமாயிருக்கு. 


ஷாருக்கானை முதன்முதலாக சந்தித்தபோது அவர் என்னிடம் நீங்கள் நல்ல நடிகர். உங்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது என சொன்னார். அதனை நான் இயல்பாக எடுத்துக் கொண்டேன். ஆனால் மீண்டும் ஒரு முறை வேறு இடத்தில் சந்தித்த போதும் இதையே சொன்னார். அதற்காக இப்போது நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


யோகி பாபு - ஒவ்வொரு படத்திலும் அவருடைய பஞ்ச் டயலாக் பிரபலமாகும். அதன் பின்னணியில் அவருடைய கடின உழைப்பு இருக்கிறது. அது பெரும்பாலும் படப்பிடிப்பு தளத்தில் அவரே சொந்தமாக யோசித்து பேசுவார்.


படத்தின் பணியாற்றிய நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி'' என்றார். 


இயக்குநர் அட்லீ பேசுகையில், '' நான்காண்டிற்கு முன்னால் இதே இடத்தில் 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உங்கள் அனைவரையும் சந்தித்தேன். ஜவான் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சியை எங்கு நடத்துவது? என்ற விவாதம் நடைபெற்றது. சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியதில் பங்காற்றிய வீர முத்துவேல் நினைவுக்கு வந்தார். அவர் இந்த கல்லூரியில் படித்த மாணவர் என்பதால்.. இதே இடத்தை மீண்டும் பெருமிதத்துடன் தேர்வு செய்தோம்.  


இந்த திரைப்படத்தை நான் இயக்குவதற்கு முக்கிய காரணம் தளபதி விஜய் கொடுத்த ஊக்கம் தான். ’ராஜா ராணி'யில் தொடங்கிய வாழ்க்கையை 'தெறி', 'மெர்சல்', 'பிகில்: என சௌகரியமான நிலையில் வாழ வைத்தது விஜய்ப் சார்தான்.


மும்பையிலிருந்து ஆலிஃப் என்ற நண்பர் ஷாருக்கான் உங்களை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார். நான் முதலில் நம்பவில்லை. பிறகு உண்மை தான் என்று தெரிந்தவுடன் ஷாருக் கானை சந்திக்க மும்பைக்கு சென்றேன்.


பத்து வருடத்திற்கு முன் இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக எந்திரன் படத்தில் பணியாற்றியபோது மற்றொரு உதவி இயக்குநரான ஆடம் தாஸ் படப்பிடிப்பு நடக்கும் வீதியில் உள்ள ஒரு வீட்டில் கேட்டின் முன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்தார். அந்த வீடு ஷாருக்கானுடையது. எனக்கு அது அப்போது தெரியாது. பத்தாண்டுகளுக்குப் பிறகு அதே கேட் எனக்காக திறந்தது. உள்ளே சென்று ஷாருக் கானை சந்தித்தேன்.  


ஆண்டவன், அம்மா, மனைவி ஆகியோர்களை  நிஜமாக நேசித்தால்.. கடவுள் நமக்கான சிறந்த வாய்ப்புகளை வழங்குவார். 


ஷாருக்கானை சந்தித்த நிமிடம் முதல் இந்த நிமிடம் வரை அவர் என்னை கேட்காமல் எதுவும் பேச மாட்டார். 


ஒருவர் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்றால், அவருக்கு அருகில் இருக்கிறவர்கள் நேர்மையாகவும் திறமையுடனும் இயங்குவார்கள். அந்த வகையில் ஷாருக்கானுக்கு பூஜா தட்லானி பணியாற்றி வருகிறார். இவர் தான் இந்த படத்தின் பணிகள் சிறப்பாக நடப்பதற்கு அச்சாணியாக இருந்தவர். 


இப்படத்தின் கதை விவாதம் நடைபெறுகிறது. இடையில் கோவிட் வருகிறது.. நான் தமிழ் திரையுலகில் ஆறு மாதத்திற்கு  படத்தை இயக்கி ஏழாவது மாதத்தில் வெளியிட்டு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து ஜாலியாக சென்று கொண்டிருந்தேன். அதற்கு காரணம்  தளபதி விஜய்.


எட்டு மாதத்திற்குள் இந்த படத்தை நிறைவு செய்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் கொரோனா காரணமாக இது மூன்றாண்டுகளுக்கு மேலானது.

கதை பேச பேச... பிரம்மாண்டமாக உருவானது. பட்ஜெட்டும் உயர்ந்தது. எனக்கு தெரிந்து அந்த தருணத்தில் அந்த பட்ஜெட்டிற்கு ஷாருக்கானும் கௌரி கானும் ஓகே சொன்னார்கள். அது மிகப்பெரிய முடிவு. அதற்காக இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இதற்காக மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்தோம். இதன் காரணமாகத்தான் யாரையும் சந்திக்க முடியவில்லை.


இப்படத்தின்  நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று பேச்சு வார்த்தை நடத்த நடந்தபோது, ஷாருக் உங்கள் விருப்பம்  என்றார். நான் அப்போது டார்லிங் நயன்தாராவை முன்மொழிந்தேன். அவரும் சம்மதித்தார். அதன் பிறகு நயனிடம் பேசி கதையை சொன்ன பிறகு அவரும் சரி என்றார். ஓணம் திருவிழாவை கொண்டாடுவதற்காக கேரளாவுக்கு சென்றிருப்பதால் அவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.


இந்த படத்தில் வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடந்த போது நான் விஜய் சேதுபதியை சொன்னேன். அவரை நேரில் சந்தித்துப் பேசினேன். அவரும் என்னை சௌகரியமான சூழலில் வைத்துக் கொண்டார். கதையைப் பற்றி நிறைய பேசினோம். இந்த படத்தில் அவரும் ஒரு ஹீரோதான். அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வருகிறார். அவர் தனக்கான பாதையை அவரே தேர்வு செய்து கொண்டு பயணிக்கிறார். எல்லோரும் அவருடன் பயணிப்போம். இந்த படத்தில் அவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். 


அடுத்ததாக படத்தின் இசையமைப்பாளராக யாரை பணியாற்ற வைப்பது என்று விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, என்னுடைய சகோதரரும், நண்பனுமான அனிருத்தை தொடர்பு கொண்டேன். படத்தின் பணிகள் குறித்து விவரித்து, ஒரே ஒரு மெட்டை எனக்காக போட்டு தாருங்கள். அதை ஷாருக்கிற்கு அனுப்பி அவரின் முடிவை அறிந்து கொள்கிறேன் என்றேன். உடனடியாக 'சிங்க பெண்ணே சித்திரப் பூ..' எனத் தொடங்கும் மெட்டை உருவாக்கி கொடுத்தார். அந்தப் பாட்டு வேற லெவலில் இருந்தது. அவர் இசையமைக்க தொடங்கினார். இந்த படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இருக்கிறது. அனிருத்துடன் பணியாற்றுவது என்பது வகுப்புத் தோழருடன் இணைந்து பணியாற்றுவது போல் எளிதானது.


யோகி பாபு மீது தமிழ் திரையுலகில் தவறான விசயங்கள் பரப்பப்பட்டு வருகிறது. அவர் கால்ஷீட் தரவில்லை. சம்பளம் அதிகமாக கேட்கிறார் என்று.. ஆனால் எனக்குத் தெரிந்து பல உதவி இயக்குநர்களுக்கு சம்பளம் வாங்காமல் கால்ஷீட் கொடுத்து அவர்களுக்கு உதவி இருக்கிறார். 


முத்தழகு நான் படிக்கும் காலகட்டத்தில் அவர் மீது ஈர்ப்பு இருந்தது. சானியா மல்கோத்ரா மற்றும் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நன்றி. படத்துகுப்பாளர் ரூபன், ஒளிப்பதிவாளர் விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ், நடன இயக்குதர் ஷோபி, சண்டை பயிற்சி இயக்குநர் அணல் அரசு என அனைவருக்கும் நன்றி.


பாடலாசிரியர் விவேக் இந்த படத்தில் பாடலாசிரியராக மட்டும் பணியாற்றாமல் கதை விவாதத்திலும், இப்படத்தின் பின்னணி பணிகளிலும் எனக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்.


குட்டியை பிரசவிக்கும் தருணத்தில் மான் ஒன்று அந்த காட்டில் பிரசவம் செய்வதற்கான சரியான இடத்தை தேர்வு செய்து கொண்டு இருந்தது. ஒரு பக்கம் நீரோடை.. மறுபக்கம் முட்புதர். இதுதான் சரியான இடம் என்று தேர்வு செய்து கொண்டிருந்த கணத்திலேயே அந்த மானுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குட்டி பிறந்துவிடும் என்ற மகிழ்ச்சியிலிருந்த அந்த மானுக்கு திடீரென்று மேகம் கருத்து மழை வரும் என்று அறிகுறி தென்பட்டது. அந்தமானின் வலப்பக்கத்தில் ஒரு புலி, வேட்டையாடுவதற்காக மானை பார்த்துக் கொண்டிருந்தது. புலி நம்மை மட்டுமல்ல நம் குட்டியையும் கடித்து தின்று விடுமே என்ற தவிப்பில் அந்த தாய் மான் இடப்பக்கம் பார்த்தபோது அங்கு ஒரு வேடன் வில்லில் அம்பைப் பொருத்தி வேட்டையாடுவதற்காக குறி பார்த்துக் கொண்டிருந்தான். இந்த நேரத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நினைத்து கண்ணை மூடியதாம். 


கண்ணை மூடுவதற்கு முன் ஒரு விசயம் நடந்தது. மேகம் கருத்து இடி இடித்து அந்த மரம் எரிந்தது. ஒரு பக்கம் புலி.. மற்றொரு பக்கம் வேடன்.. திரும்பவும் ஒரு இடி இடித்தது. அந்த அதிர்ச்சியில் வேடன் எய்த அம்பு புலி மீது பாய்ந்தது. மழை பெய்து அந்த காட்டுத்தீ அனைந்து விட்டது.  உங்களை சுற்றி ஆயிரம் எதிர்நிலை ஆற்றல்கள் இருந்தாலும்... உங்களுடைய கவனம் உங்கள் பணியின் மீது இருந்தால் போதும். வெற்றி நிச்சயம். 

என் வெற்றியின் ரகசியம் என் மனைவி தான். அவர் கொடுக்கும் ஒத்துழைப்பு எதனோடும் ஒப்பிட இயலாது. '' என்றார்.


ஷாருக்கான் பேசுகையில் , '' தமிழ் திரையுலகில் இதற்கு முன் மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகிய இருவரை மட்டுமே எனக்கு தெரியும். ஜவான் படத்தின் மூலம் ஏராளமான தென்னிந்திய திரையுலக கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் அறிமுகமும், நட்பும் கிடைத்திருக்கிறது. நான் தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகத்திலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். 


விஜய் சேதுபதி என் ரசிகையை பழி வாங்கி விட்டதாக சொன்னார். அது நிச்சயம் நடக்காது. ஏனென்றால் அவர் என் ரசிகை. நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். 


எங்கள் பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே இயக்குநர் அட்லீ சொந்தமாக ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள். பெற்றோர்களாகியிருக்கும் அட்லீக்கும் பிரியாவிற்கும் வாழ்த்துக்கள். 


இந்தப் படத்தின் நடனத்திற்காக நான் பட்ட பாடு.. மறக்க இயலாது.  இயக்குநர் அட்லி மரண மாஸ்-  ஒளிமயமான விஷ்ணு- கம்பீரமான முத்துராஜ்- விறுவிறுப்பான ரூபன்-அட்டகாசமான விஜய் சேதுபதி- வித்தைக்காரன் அனிருத் என இளம் திறமையாளர்களின் கூட்டணியில் தயாராகி இருக்கிறது 'ஜவான்'. 


இயக்குநர் அட்லீ  'ஜவான்' படத்தில் வித்தியாசமான கோணத்தில் என்னை காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் நீங்கள் திரையில் பார்க்கும்போது தான் புரியும். சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் பிரியாமணி இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் அனைத்து ரசிகர்களையும் கவரும். இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது '' என்றார்.  


ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில்  கௌரி கான் தயாரித்திருக்கிறார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Pre-release event of Shah Rukh Khan-starrer Jawan held in grand fashion

 *Pre-release event of Shah Rukh Khan-starrer Jawan held in grand fashion*
















The pre-release event of director Atlee's eagerly-awaited pan-Indian film, 'Jawan', featuring Bollywood Baadshah Shah Rukh Khan in the lead and produced by his firm Red Chillies Entertainment, was held with great fanfare in the presence of scores of students at the Sairam Engineering college on Wednesday.


Welcoming the gathering, Gopalan of Gokulam Films, which has acquired the film's distribution rights for Tamil Nadu and Kerala, said that actor Shah Rukh Khan's real life was an example for all as the star had risen like a phoenix. He also pointed out that although Jawan was a Bollywood film, many south Indians had been a part of the film. 


The film's editor Ruben, who spoke next, said that Jawan was his 65th film and that he was happy to be a part of it.  


Candidly admitting that the person who scolded and fought with him the most was his director Atlee, Ruben said that he was a good friend. 


"Trust is important in any relationship. Atlee was the first to give me a blockbuster," he said and added that when the director first told him that they were going to Bollywood, he was a little tense as they did not know Hindi. However, he said that they felt at home in Mumbai as all the technicians in the film were their technicians. 


"It was like an IPL team which has all friends in it," Ruben said, adding that this was all possible only because of the film's producer Shah Rukh Khan. 


Pointing out that cinema was one and that everybody was only representing Indian cinema, the editor spoke highly of Shah Rukh Khan. "When editing, Shah Rukh Khan would come and say,'Cut down on my portions, not the other actors' portions.'"


Anirudh began his speech by thanking Red Chillies Entertainment, Pooja Dadlani and Gauri Khan for reimposing faith in him and giving him the opportunity to score music. 


"Lyricist Vivek has penned all the songs of this film. Thanks to his efforts and involvement, the songs in the Tamil version don't appear like as if they are original Tamil numbers. The lyrics were so impressive that they got Shah Rukh excited and he offered to sing those lines in Tamil. 


"I am also proud of my friend Atlee. Directors have gone from here and have made remakes but to actually go there and get one of India's top stars and  make a  film in his production is no easy task. He needs to be applauded for the effort. Atlee did not go alone, he also took his entire team of editor, cameraman, choreographers and stunt masters to work with him there. He has taken me, who has been working as a music director here, to Bollywood. We have all worked very hard to make Jawan. "


Speaking about Shah Rukh Khan, Anirudh said, "Never dreamt that my first Hindi film itself would have Shah Rukh Khan in it. I consider this to be God's blessing."


Turning to the actor, he said, " I love you Shah Rukh Sir and I'm going to miss you a lot. Every night, we would speak for an hour on Facetime."


Stating that Shah Rukh treated everybody like family, Anirudh recalled an instance when the Bollywood superstar had gone to London. 


"He called me and asked me for my shirt size, saying he was going to buy me some clothes," Anirudh recollected, saying that he believed that Jawan, which is an Indian film, would be a blockbuster."


Actor Vijay Sethupathi, while speaking on the occasion, said,"Jawan started with Atlee. Atlee knows how to treat people who work with him. When I was working with him, he made me feel very comfortable.  We would discuss several scenes and worked on it. He knows how to extract work."


"When I was studying in school, I was in love with a girl. Like in most other cases, it was a one-sided love story. The girl did not know that I was in love with her. I got to know that she was in love with Shah Rukh Khan. Now, after so many years, I have got my revenge on Shah Rukh Khan," he said  with a laugh.    


Speaking highly of Shah Rukh Khan, Vijay Sethupathi said that he did not know that he would work with Shah Rukh or fight with him or sit next to him. 


"I first met him in Melbourne. They told me to be seated and I went around searching for my seat. I couldn't find mine and thought I would sit somewhere at the back. It was then that my attention was drawn to the fact that my seat was right next to his. I believe the most important quality that he has is that he treats people equally.  The way he treats people  in a respectful manner is what makes him so loveable."


Talking about Yogi Babu, Vijay Sethupathi said, "We have been working together from Aandavan Kattalai. Usually, when we work, Yogi Babu would say, 'We'll see'. He'll improvise and deliver it in such fine fashion that it'll surprise you. Most dialogues that you have seen Yogi Babu deliver are his own improvisations.  It is very difficult not to smile while acting with Yogi Babu."


Director Atlee, while speaking on the occasion, said, "I met you all here four years ago during the audio launch of Bigil. When the question arose as to where we should conduct the pre-release event of Jawan, I got to know that the man who played a crucial part in the launch of Chandrayaan3 to the moon, Veera Muthuvel, was a former student of this college. We decided we would conduct the event here.


"One important reason why I could do this film was the motivation my brother, my thalapathy Vijay sir gave me. It was Vijay sir who got me to move out of my comfort zone which got established after Raja Rani, Theri, Mersal and Bigil."


"When Alif, who had worked with me in Raja Rani, called me and told me that Shah Rukh Khan sir wanted to meet me, I went. Almost 13 years ago, when I was an assistant director to Shankar, we were shooting outside Shah Rukh Khan sir's home for Endhiran. At that point, another assistant director called Adam Das took a picture of me outside Shah Rukh sir's home. Now, 13 years later, those very gates were opening for me. I went in and met Shah Rukh sir. 


"I realised God grants you what you deserve if you love your mother and wife. From the time Shah Rukh sir met me, till this second, no decision has been taken without asking me. He is more than my father. 


"When someone is consistently at the top, it means those around them are honest and smart. Pooja Dadlani is one such person. She is more like a mother to all of us. We discussed the story and began work when Covid struck. 


"I am someone who is used to making films in eight months and so thought that this film too would get over in eight months. However, due to Covid, it kept getting longer and  the film kept getting bigger. But Shah Rukh Khan and Gauri ma'am took the big decision then to produce this magnum opus. People taking a decision to make big films at a later point is understandable but they took this big decision when Covid had struck. I thank them both and want to give my best for this film."


"When we were deciding the heroine, Shah Rukh said it was my decision. When I told Nayanthara was my choice, Shah Rukh agreed. We spoke to Nayanthara and she too was happy to come on board. She was not able to make it to this event as she has gone back home for Onam celebrations. 


"When the decision on who would play the role of the villain came, I asked for Sethupathi. One comfortable meeting happened," he said and turned to Vijay Sethupathi and said, " No other hero would have done what you have done Sethu anna."


Stating that Anirudh, who was chosen as the music director, put in incredible work, Atlee said that the effort that Anirudh put in was unimaginable. "It all started with me asking for a single tune from Anirudh, which I sent to Shah Rukh for his approval. He sent me a number. Soon after, Anirudh came on board.  There are 12 songs in this film and  working with Anirudh, who is humble and sweet, was like working with my schoolmate."


The director also spoke about Yogi Babu. "There are several wrong allegations being levelled against Yogi Babu saying, he doesn't give dates and that he demands more money. But as far as I know, he has helped several assistant directors by giving them dates and not even taking a salary for his efforts."


Atlee then went on to narrate a small story. 


"A deer that was about to deliver went into labour. It chose to deliver its baby in a thicket of thorns. Just as its pain increased and it was about to deliver, dark clouds began to gather and it began to pour. On the other side, there was a hunter looking to hunt it. On the third side, there was a tiger waiting to pounce on it and on the fourth, a forest fire was raging. Under pressure and in fear, the deer closed its eyes. At that point, a thunderbolt struck and the hunter, who was rattled by it, let loose his arrow killing the tiger and the rain put out the forest fire. When the deer opened its eyes, all its problems had vanished and it had delivered its baby successfully. Similarly, if you close your eyes to negativity and focus on what you do, you will succeed."


Atlee also praised his wife Priya, who had stood by him always, on the occasion. He told her, "If I am here, no one can be responsible but you. She is the secret of my success."


Shah Rukh Khan, who spoke last, began by thanking everyone for having him and his team there and by saying how he fell in love with Tamil cinema. 


"Very early on I understood that some of the finest cinema comes from TN and I was very lucky to make two friends from this industry. One was Mani Ratnam and the other was Santosh Sivan. When I came down here and shot Dil Se, which was my first experience of a Tamil film, I got to know the wonderful Mr Kamal Haasan. I worked with him, for him in a film called Hey Ram. And that was the first and the last time that I ever spoke in Tamil because I have actually spoken Tamil in that film. And then, the greatest of them all became my friend by coming over one night and doing one shot for my film Ra. One -- The great Rajinikanth sir.


"So, I have these three-four friends in the Tamil film industry. And watching them from afar, I have always wanted , if there was something that I could come, learn something from the Tamil film industry. So, I spoke to Alif and asked him to arrange a meeting with Atlee after this wonderful film Raja Rani. We got together. Priya and Atlee are such a beautiful couple. There was a whole new production they had while we were making Jawan for three-and-a-half years. They produced their own little beautiful baby called Neel. Congratulations. God willing, Jawan will do well on September 7th. 


"I would like to recount things of all the friends and family I have made over the last three years. There's this little baby who I think of as my own son. That's Anirudh. He's telling me that he will miss my calls. I hope that he doesn't graduate so so much into the Hindi film industry that he doesn't take my calls. I'll miss you my son.  When Atlee sir told me there's this young kid, can we do one song in the Tamil version and the Hindi versions, I said, "No, we have to do all the songs with only Anirudh. He has put in so much of hard work."  


"I remember Yogi Babu from Chennai (Express). He was so shy and so quiet. I remember I came to market the film here and everybody was screaming and shouting in the theatre. For one moment, I thought it was for me. But no, they were pushing me aside to see Yogi Babu. So, thank you so much for being a part of Jawan.


The actor also gave titles in Tamil to his unit. "If I have to praise Atlee in Tamil, I will call him Marana Mass. Cinematographer Vishnu, who is such a wonderful human being, has done such outstanding work in this film. He is Olimayamaana Vishnu. We call Muthuraj, art director, Gambeeramana Muthuraj. Our editor Ruben is Viruvirupaana Ruben. I call her Vaseegaramana Nayanathara." 


Shah Rukh also thanked the beautiful actresses who have played  significant roles in the film. "Priyamani, who has been trying to teach me dance 1234 and I still haven't learnt. Sachita, Lehar, Alia, Girija and Nidhi. All these ladies have been so wonderful, waiting on the sets for me to do prosthetics and the looks. I want to thank you all from the bottom of my heart," he said. 


Calling Vijay Sethupathi Attagaasamana Vijay Sethupathi, the King Khan said,"I will take a moment and tell you how much I love Vijay sir.  I met him in Melbourne first. One day he was here for Nayantharaji's wedding. We met and decided to work together. I cannot tell you how much I have learnt from you." 


The actor further said, "I just want to tell everyone from the Tamil film industry who has worked in Jawan that I have only come here to learn from you and take that learning and present that in front of all the Tamilians here to tell you how much I have learnt and if you can appreciate the teachings of the great team of Jawan to me. 


"People talk lovely things about me. I am called a global star and a big star.  All that means nothing to me. To me, everything means that I learn from great talent like we have in Jawan. So, thank you all. From the youngest one to the eldest one, thank you for allowing me to learn so much from the film."     


Shah Rukh Khan added, "All of us from Mumbai have learnt a lot from this film. We have learnt a lot from these doyens. From Anirudh, Vijay Sir, Atlee Sir, Yogi Babu and all of you. Inshallah, we will be able to perform our best and maybe the Tamil audience can make us your own.  Thank you to the whole industry for giving us this opportunity. You have been very very kind. The best thing apart from the talent is you have fed me well, I've lost my six-pack. I have a paunch because the food here in Tamil Nadu is the nicest."

 

Jawan has been produced by Gauri Khan on behalf of Red Chillies Entertainment. Gaurav Varma has co-produced the film. The film, which has been directed by Atlee, is to release in Tamil, Telugu and Hindi around the world on September 7.

Wednesday 30 August 2023

Renowned Cricketer, Ravichandran Ashwin to inaugurate

 Renowned Cricketer, Ravichandran Ashwin to inaugurate 

Phoenix Marketcity’s ‘Sneaker Fest’.

Special Offers & Discounts can be availed between September 1st - 10th, 2023 on top international Sneaker brands Only at Phoenix Marketcity and Palladium, Chennai

Phoenix Marketcity, one of the premium malls in Chennai is all set to inaugurate the ‘Sneaker Fest’ on the 3rd of September 2023 (Sunday) at 6pm with cricketing sensation Ravichandran Ashwin at the Central Atrium, Phoenix Marketcity, Chennai. The sneaker footwear fest is all set to bring together a galaxy of new designs and styles of emerging international sneakers brands namely Reebok, Puma, Adidas, Diesel, H&M, Asics, Fila, Bata, Sketchers, Hush Puppies, Shopper Stop, Aldo, Clark, Mochi, Charles Keith, The Collective, with irresistible discounts and offers for the customers between the 1st – 10th of September 2023. 

Sneaker enthusiasts and people who love sports shoes can shop for top variety and models of sneakers like Air Jordan 1 Low, Chuck Taylor, Velcro sneakers, Adidas Superstar etc. Having made his mark in the international cricket arena, Ravichandran Ashwin is all set to galvanize the on lookers with his magnetic presence setting the weekend shopping spree on high levels. The typical cricketing star   from Chennai Ravichandran Ashwin combines an amazing melange of his winning streaks with great bowling skills and charming personality. The enthusiastic cricket fans will have their unforgettable moments with the Chennai cricketing star at Phoenix Marketcity, as he will be there to engage with the onlookers and visit a couple of stores of Sneaker brands. 

To avail discounts up to 60% at your favourite sneaker brands, visit Phoenix Marketcity and Palladium, Chennai and enjoy the one-of-a-kind premium shopping experience for sneakers.

 About Phoenix Marketcity: A premier destination for luxury lifestyle, it provides guests a variety of opulent options. Phoenix continues to be "The" destination for the most affluent and sophisticated residents of the city as well as expats thanks to its truly international appearance and feel, elegantly decorated interiors, and the best of food, fashion, and entertainment from across the world. The mall provides Chennai with the most extensive and appealing lifestyle shopping experience. The stores represent a comprehensive mix of international, national, and regional luxury brands. Phoenix Marketcity in Chennai is more than simply a mall; it's a confluence of fascinating cultures, lovely clothes, and high-end couture. A city within a city, in an urban setting with coexisting shopping, entertainment and leisure options. 



About Palladium Chennai: connotes high-end, luxurious shopping, an upscale shopping mall. The complex makes a bold design statement in the Chennai landscape thanks to its distinctive architecture. The opulent Palladium sprawl is home to a mix of retail and lifestyle businesses, with close to 70 retailers. The mall is home to a variety of cafes, fine dining restaurants, and salons in addition to premium labels and high fashion companies, making it the only of its kind,for luxury retail in India.

குடும்ப உறவுகளில் உள்ள மேன்மைகளையும் அழகியலையும் பற்றி

 குடும்ப உறவுகளில் உள்ள மேன்மைகளையும் அழகியலையும் பற்றி எதார்த்தமாக பேசும் 'ரங்கோலி'










கோபுரம் ஸ்டுடியோஸ், G.சதீஷ்குமார் மற்றும் Kபாபு ரெட்டி தயாரிப்பில் சிறுவர்களின் பள்ளி வாழ்க்கை மற்றும் நடுத்தர குடும்ப வாழ்வியலை அழகியலோடு மையமாக கொண்டு வண்ணமயமான உணர்வுகளையும் கதாபாத்திரங்களையும் கொண்டு உருவாகியுள்ள படம் 'ரங்கோலி'. அறிமுக இயக்குனர் வாலி மோகன் தாஸ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Rangoli Official Trailer - https://youtu.be/LohOGaqFw1g?si=sktaUtGqO_bMWzXc

அரசு பள்ளியில் மகிழ்ச்சியாக படிக்கும் சத்யா என்ற மாணவன் குடும்ப வற்புறுத்தலினால் தனியார் பள்ளிக்கு மாற்றப்படுகிறான். விருப்பமில்லாமல் செல்லும் சத்யா அந்த புதிய பள்ளியின் சூழலை எவ்வாறு எதிர்கொண்டான். அந்த தனியார் பள்ளிக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அந்த குடும்பம் எவ்வாறு அந்த பிரச்சனையை எதிர்கொண்டது என்பதையும் குடும்ப உறவுகளில் உள்ள மேன்மைகளையும் அழகியலையும் பற்றி எதார்த்தமாக இப்படம் பேசுகிறது.


தெய்வதிருமகள், மாநகரம், நிமிர் மற்றும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், பிரார்த்தனா, சாய்ஸ்ரீ, அக்ஷயா, அமித் பார்கவ் ஆகியோர் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  


சென்னை சுற்றியுள்ள பகுதிகள் குறிப்பாக ராயபுரம், காசிமேடு, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் என பல பகுதிகளில் படிப்பிடிப்பை நடத்தியுள்ளனர். எட்டு தோட்டாக்கள், ஐரா, ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமுர்த்தி K.S இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு I.மருதநாயகம், படத்தொகுப்பு R.சத்யநாராயணன் மற்றும் கலை இயக்கம் ஆனந்த்மணி செய்துள்ளனர்.


'ரங்கோலி' திரைப்படம் செப்டம்பர் 1 ம் தேதி வெளியாக இருக்கிறது

First south Indian Actor to collab with Instagram

First south Indian Actor to collab with Instagram

Allu Arjun Gives The World A Glimpse Of Pushpa 2 on the world’s most followed Instagram account - @instagram 

The reel on Instagram gets you up close and personal with him and gives fans the first sneak-peek into the massive sets of Pushpa2-The Rule. 


With hishttps://www.instagram.com/reel/CwjcwvwSlxO/?igshid=MzRlODBiNWFlZA==

 win at the 69th National awards where he was awarded the "Best Actor” for his role as Pushparaj in Pusha-The Rise, Allu Arjun has been at the epicenter of cinema conversation since. The elusive actor who is known for his superhit performances is also known to be a private person otherwise. In a rare gesture, the Icon Star lets audiences across the globe get a glimpse into his work and life in the reel on the world’s most followed Instagram account - @instagram. He lets his audience into his home, office and even in his car while he makes it to the sets of Pushpa2-The Rule. 


While on set, the actor transforms himself from the suave star that he is, into the rugged Pushparaj. Maestro director Sukumar is seen directing Allu Arjun in a scene of the under-production sequel, and it is an absolute treat to watch the actor perform. 


Released in 2021, Pushpa- The Rise had created a historic wave at the box office and was the turnaround film post pandemic which got audiences back to the theaters. The film has taken over the nation with its iconic dialogues, storyline and addictive music. The trends on Instagram, where people danced to the movie songs, and enacted Pushparaj’s moves has a fan following of its own. Allu Arjun’s portrayal of Pushparaj went on to become one of the most loved characters in the history of Indian Cinema as he resonated with masses across language or strata. The world created by maestro director Sukumar achieved cult status and set it up for an even bigger sequel. 


While the audiences across the globe eagerly wait for Pushpa2 -The Rule, this sneak peek on @instagram makes the anticipation reach new heights with promise of absolute magic on the big screen.

Tuesday 29 August 2023

லக்கிமேன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

 *‘லக்கிமேன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்டப் பலரது நடிப்பில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லக்கிமேன்’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று (29.08.2023) நடைபெற்றது. 










நடிகர் அப்துல் பேசியதாவது, ’’தீரா காதல்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி நன்றாக எழுதி இருந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த படக்குழுவுக்கும் நன்றி” என்றார். 


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது, “பாலாஜி அண்ணனை சிறு வயதில் இருந்தே எனக்குத் தெரியும். இந்த காலத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்களில் யோகிபாபுவும் ஒருவர். ‘லக்கிமேன்’ போன்ற கதைக்களம் எனக்கு பெரும் சவாலாக இருந்தது. வாய்ப்பு கொடுத்த பாலாஜி அண்ணனுக்கு நன்றி. யோகிபாபு சார் நடிப்பை படத்தில் ரசித்துப் பார்த்தேன். இது மிகப்பெரிய விஷயம். மிகப்பெரிய புகழ் அவர் அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். ஃபீல்குட் படங்களின் வரிசையில் கண்டிப்பாக ‘லக்கிமேன்’ இருக்கும். பாடல்களில் பாலாஜி நிறைய இன்புட்ஸ் கொடுத்தார். என்னுடைய குழுவுக்கும் நன்றி. சக்திவேல் சார் படத்தை எடுத்தால் அதை பார்வையாளர்கள் நம்புகிறார்கள். அது மிகப்பெரிய பலம். உறுதுணையாக இருக்கும் சக்தி சாருக்கு நன்றி”.


எடிட்டர் மதன் பேசியதாவது, “இந்தப் படம் எனக்கு ஸ்பெஷல். நான் நிறைய ஹாரர், த்ரில்லர் படங்களில் வேலை செய்திருக்கிறேன். எனக்கு ஃபீல்குட் படங்களில் வேலை பார்க்க வேண்டும் என்பதும் விருப்பம். அது இந்தப் படம் மூலம் நிறைவேறி உள்ளது. இயக்குநர் பாலாஜி சாருக்கும் நன்றி. மியூசிக் டைரக்டர் ஷானுக்கு நன்றி. என்னுடன் பேசி கலந்துதான் அவரும் வேலை செய்தார். எனக்கும் அது வேலையை எளிதாக்கி கொடுத்தது. இந்தக் கதையில் யோகிபாபு சார் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவரைதான் இயக்குநரும் உறுதி செய்துள்ளார். வசனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். யார் பார்த்தாலும் இந்தப் படத்தை கனெக்ட் செய்து கொள்வார்கள். நடிகர்கள் எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். அனைவருக்கும் நன்றி”.


நிகழ்வில் நடிகை சுஹாசினி குமரன் பேசியதாவது, “இந்த வாய்ப்பு கொடுத்த பாலாஜி அண்ணாவுக்கு நன்றி. இந்தப் படத்தில் நான் கடைசியாகதான் இணைந்தேன். படத்தில் பெரிய நடிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் நடிப்பு எனக்கு பிடிக்கும். இதில் நானும் இருப்பது மகிழ்ச்சி”.


குழந்தை நட்சத்திரம் சாத்விக், “படப்பிடிப்பு போனது போலவே இல்லை! ஜாலியாகவே இருந்தது. யோகிபாபு, ரேச்சல் அக்காவுக்கு நன்றி”.


நடிகர் வீரா பேசியதாவது, “படக்குழுவில் பாசிட்டிவாக ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. யோகிபாபு, ரேச்சல் அனைவருக்கும் வாழ்த்துகள். யோகிபாபுவின் அனைத்து படங்களுமே பார்த்து நான் ரசிகனானேன். அவருடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. கடின உழைப்பாளி அவர். உடல் நலனை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் தலைவா”.


காஸ்ட்யூம் டிசைனர் நந்தினி நெடுமாறன், “தனிப்பட்ட முறையில் இது என்னுடைய முதல் படம். என் மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.


நடிகை ரேச்சல், “இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் வேணுகோபால், யோகிபாபு சார், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்”.


சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், “இது மிகவும் அருமையான படம். இந்தப் படம் பார்க்கும்போது ‘குட்நைட்’ பார்ப்பது போல இருந்தது என பலரும் சொன்னார்கள். என்னைக் கேட்டால், யோகிபாபு சாருக்கு ‘மண்டேலா’வுக்கு பிறகு ‘லக்கிமேன்’ என சொல்வேன். சிறந்த நடிகர் அவர். பாலாஜி வேணுகோபால் சார் சிறந்த இயக்குநர். படத்தில் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். படத்திற்கு ஆதரவு தாருங்கள்”.



இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசியதாவது, “இதற்கு முன்பு நான் ‘பானிபூரி’ என்ற குறுந்தொடர் இயக்கி  இருந்தேன். அதற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. யோகிபாபுவை பார்த்து கதை சொன்னதும் அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. அவர் வாழ்க்கையை திரும்பி பார்ப்பது போல உள்ளது என உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். அவரை தமிழ் நடிகர் என சொல்வது குறைவு. இந்திய நடிகர் என சொல்லும் அளவுக்கு திறமையானவர். அவரைப் பற்றிய பல தவறான புரிதல்கள் நிச்சயம் நீங்க வேண்டும். அவர் வீட்டில் ஒருவருக்கு மெடிக்கல் எமர்ஜென்சி எனும் போது கூட ஷூட்டிங் வீணாகக் கூடாது என அந்த கஷ்டத்தை மறைத்து எங்களுக்கு நடித்துக் கொடுத்தார். என்னுடைய உதவி இயக்குநர்களுக்கு நன்றி. அவர்கள் எனக்கு உதவிய இயக்குநர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் மட்டுமில்லாது தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றினர். ஷான் ரோல்டன் என்றாலே ட்யூன் தான். சிறப்பாக செய்துள்ளார். சுஹாசினி சின்ன ரோலாக இருந்தாலும் எனக்காக நடித்துள்ளார். படத்தை வெளியிடும் சக்தி சாருக்கு நன்றி. நண்பர்கள், குடும்பத்தினர் கொடுத்த ஆதரவுக்கு நன்றி”.


நடிகர் யோகிபாபு, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் பாலாஜி சொன்னது போல என்னுடைய வாழ்வை திரும்பி பார்ப்பது போலதான் இருந்தது. இதற்கு முன்பு நான் நடித்த சில படங்களில் நாலஞ்சு சீன் என்னை வைத்து எடுத்து விட்டு ஏன் போஸ்டர் போடுகிறீர்கள் எனக் கேட்டேன். அது ரசிகர்களையும் ஏமாற்றுவது போலதானே? அதைக் கேட்டால்தான் அனைவருக்கும் பிரச்சினை. நான் ஷூட்டிங் வரமால் எங்கு போவேன்? என்னைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் சும்மா. நான் கதை கேட்டு படம் பண்ணுவதை விட அவர்களின் கஷ்டத்தைக் கேட்டுதான் படம் செய்வேன். படம் ரொம்பவே பிடித்து நடித்தோம். படத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருமே சிறப்பாக செய்துள்ளனர்” என்றார்.

பார்ட்டி மூடுக்கு இழுத்துச் செல்லும் கிங்கான் ஷாருக்கான்

 *பார்ட்டி மூடுக்கு இழுத்துச் செல்லும் கிங்கான் ஷாருக்கான் !, ஜவான் படத்திலிருந்து ‘நாட் ராமையா வஸ்தாவையா’  பாடல் வெளியானது*








சமீபத்திய #AskSRK அமர்வு,  ஷாருக்கானின் தீவிர ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, கிங்கான் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும்  திரைப்படமான “ஜவான்” படத்தின் அடுத்த பாடலின் டீசரை தயாரிப்பாளர்கள் சார்பில்  வெளியிட்டார். பெரும் காத்திருப்பிற்கு பிறகு தற்போது , ' நாட்  ராமையா வஸ்தாவையா  ' பாடல் வெளியாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ஜவான் படத்திலிருந்து வெளியாகியுள்ள 'நாட் ராமையா வஸ்தாவையா பாடல்,  பார்ட்டிக்கு அட்டகாசமான பாடலாக அமைந்துள்ளது. SRK இன் மாயாஜால வசீகரம் பாடலை அழகாக்குகிறது. இளம் தலைமுறையினர் விரும்பும் வகையில்  பாடலில்  ட்ரெண்ட்செட்டர் நடன அசைவுகள் இடம் பெற்றிருக்கிறது.  மேலும், மூன்று வெவ்வேறு மொழிகளில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.


பாடலின் இந்தி பதிப்பில், "நாட் ராமையா வஸ்தாவையா" என்ற பாடல் வரிகளை  சமீபத்தில் பல வெற்றிப்பாடல்களை தந்த, மிக பிரபலமான பாடலாசிரியர் குமார்  எழுதியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர், விஷால் தத்லானி மற்றும் ஷில்பா ராவ் ஆகிய திறமையான இசை கலைஞர்கள் இப்பாடலுக்கு குரல் கொடுத்துள்ளனர், வைபவி மெர்ச்சன்ட் அழகாக நடனம் அமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் விருது பெற்ற, புகழ்மிக்க பாடலாசிரியர் சந்திரபோஸ் தெலுங்கு பாடலை எழுதியுள்ளார். ஸ்ரீராம சந்திரா, ரக்ஷிதா சுரேஷ் மற்றும் அனிருத் ரவிச்சந்தர்  தெலுங்குப்பதிப்பை பாடியுள்ளனர்.


மேலும், "நாட்  ராமையா வஸ்தாவையா" என்று ஆரம்பிக்கும் தமிழ் பதிப்பிற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை பிரபலமான பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர், ஸ்ரீராம சந்திரா மற்றும் ரக்ஷிதா சுரேஷ் ஆகியோர் தங்களின் வசீகரமான குரல்களில் பாடியுள்ளனர்.  இந்த பாடலுக்கு வைபவி மெர்ச்சன்ட் அழகாக நடனம் அமைத்துள்ளார்.


“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. https://youtu.be/K9PTXC7GJAo?si=Ta-geAsvAAa-BViH


https://x.com/iamsrk/status/1696440949805863270?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA