Featured post

ரெட்ரோ 'நாயகனுக்கு வைர மோதிரம் பரிசளிப்பு

 *ரெட்ரோ 'நாயகனுக்கு வைர மோதிரம் பரிசளிப்பு* *சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன்* 2 டி ...

Sunday, 21 February 2021

“தீனி” படத்தின், ரசிகர்களை மயக்கும்

 “தீனி” படத்தின்,  ரசிகர்களை மயக்கும் “நான் கேட்டேன்” காதல் மெலடி  !


காதல் ஒரு அதிஅற்புத உணர்வு,  உலகம் இயங்குவதன் அடிநாதமே காதல் தான். காதலின் உச்சநிலை போதை தரவல்லது. அதனால் தான் காதல் பறவைகள் ஒரு நிலையில் இருப்பதில்லை. ரசிகர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் இந்த உணர்வை, சினிமா பயன்படுத்திக்கொள்ள தவறியதே இல்லை. அப்படியான ஒரு அழகான காதல் தருணம் தீனி படத்திலும் உள்ளது. அதுவே “நான் கேட்டேன்” எனும் மனம் மயக்கும்  மென்மையான மெலடி  பாடலாக  வந்துள்ளது. 


அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள “தீனி” படத்தினை பாபிநீடு B வழங்குகிறார். தென்னிந்தியாவின் புகழ்மிகு நிறுவனங்களான  Sri Venkateswara Cine Chitra LLP மற்றும்  Zee Studios  இப்படத்தினை தயாரிக்கின்றன. BVSN பிரசாத் தயாரிக்கிறார். இயக்குநர் அனி I.V. சசி இப்படத்தினை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ட்ரெயலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. 


பிப்ரவரி 16 அன்று இப்பாடல் வெளியானது. 


“ நான் கேட்டேன் விண்மீன் பாஷயை காதிலே, 

என்னோடு நாளும் பேசுதே ராவிலே, 

என் வீடு பூலொகம், 

என் நண்பன் தினம் தோள் உரசியே, 

நடந்திடும் காற்றுதான்”


எனும் அற்புத வரிகளை கோ.சேஷா எழுதியுள்ளார். அழகு குரலில் விஜய் ஏசுதாஸ் பாடியுள்ளார். மெலடி பாடல்கள் காதல் பொங்கும்  அதேநேரம் சாந்தமிகு மெலடியாக ரசிகர்களை தூக்கத்திலும் தாலாட்டுவதாக இருக்கும். படத்தில் அசோக் செல்வன் பாத்திரம் தவிர்த்து அனைவரும் சோர்வான தூக்க கலக்கத்தில் இருக்கும் தருணத்தில் இப்பாடல் வருகிறது. 







“தீனி” திரைப்படத்தின் போஸ்ட் புரடக்சன்  வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 26 அன்று ZeePlex தளத்தில் வெளியாகிறது. 


இத்திரைப்படம் ரசிகர்களின் நாவூறும் வண்ணம்   நேரடியாக அவர்களை சமையலறைக்குள் அழைத்து செல்லும். இப்படத்தில் நடிகர் நாசர் சமையல் கலை வல்லுநராக கலக்கியுள்ளார். நடிகர் சத்யா முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். 


நடிகர்கள் 


அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா மற்றும் பலர்



தொழில்நுட்ப குழு 


இயக்குநர் - அனி I.V. சசி 


தயாரிப்பாளர் - BVSN பிரசாத்


வழங்குபவர் - பாபிநீடு B


ஒளிப்பதிவாளர் - திவாகர் மணி 


இசையமைப்பாளர் - ராஜேஷ் முருகேசன்


பாடல்கள் - கோ சேஷா 


தமிழ் டப்பிங் ஒருங்கிணைப்பு  - S.ராமமூர்த்தி


கலை இயக்கம் - ஶ்ரீ நாகேந்திரா தங்கலா 


படத்தொகுப்பு - நவீன் நூலி

No comments:

Post a Comment