Featured post

Abhishek Nama’s ambitious project Nagabandham is gearing up for a grand worldwide release on July 3

 Abhishek Nama’s ambitious project Nagabandham is gearing up for a grand worldwide release on July 3.* Produced by Kishore Annapureddy and N...

Sunday, 21 February 2021

காலம் சென்ற நடிகை வி.ஜே.சித்ராவின்

 காலம் சென்ற நடிகை வி.ஜே.சித்ராவின் கால்ஸ் படத்தின் பாடலான  "காலங்கள்" படைத்த சாதனை!


டெலிவிஷன் நாடகங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு  அறிமுகமாகி மக்கள் உள்ளங்களில் மட்டுமல்லாது இல்லங்களிலும்  நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. அவர் திடீரென  இறந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை  ஏற்படுத்தியது.  அவரின் மரணம்  ரசிகர்களுக்கு அதிர்சியையும் வருத்தத்தையும் அளித்த இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த  படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே  வெளியாகியிருந்தது..வெளிவந்த இரண்டே நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது  அப்படத்தின் காலங்கள் கரைகிறதே எனும் பாடல் ஒன்றும் வெளியாகி  உள்ளது. 




 அது தற்போது 5 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து ட்ரென்டிங்கில் எண் 4 ல் உள்ளது.  மக்கள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடங்கி தற்போது வெளியிட்ட பாடல் வரை மகத்தான ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்படம் வரும் 26 ஆம் தேதியன்று  திரைக்கு வர தயாராகவுள்ளது. மேலும் இப்படத்தின் இயக்குனர் திரு. சபரிஷ் அவர்கள் பேசுகையில் வி. ஜே சித்ராவின் மரணத்திற்கு பிறகும் மக்கள் அவர் மீதும் அவர் படத்தின் மீதும் அளவற்ற அன்பினை பொழிந்துள்ளனர். அனைவரும் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் மற்றும் இப்படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment