Featured post

Spiderman English Movie Review

Spiderman The Brand New Day Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம spiderman brand  new day படத்தோட review வை தான் பாக்க போறோம். Marvel uni...

Saturday, 10 April 2021

திறமைகளுக்கான புதிய தளம் “Vels Signature”

திறமைகளுக்கான புதிய தளம் “Vels Signature” மூலம் வெளியாகும் முதல் பாடல் Criminal Crush  ! 











இளம் திறமைகளுக்கான புகலிடமாக, தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக Vels Film International  நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் திரைத்துறையில், தங்களின் படைப்புகளின் வழியே சாதிக்க துடிக்கும்  திறமையாளர்களை, அடையாளப்படுத்தும் விதமாக “Vels Signature”  எனும் புதிய  டிஜிட்டல் தளமொன்றை Dr ஐசரி K கணேஷ்  நிறுவியுள்ளார். 


திரைத்துறையில் தனியே குறும்படம், சுயாதீன இசை ஆல்பம், போன்றவற்றை உருவாக்கி இணைய வெளியில் அடையாளம் தேடும்,  புதிய திறமையாளர்களை இந்த தளம் ஊக்குவித்து அறிமுகப்படுத்துகிறது. இந்த டிஜிட்டல் தளத்தின்  மூலம் முதல் ஆல்பம்  பாடலாக

Criminal Crush வெளியாகிறது. இப்பாடலை Vels Film International  நிறுவனம் தயாரித்து வெளியாகி வெற்றி பெற்ற “கோமாளி” படத்தின் இணை  இயக்குநர் ருத்ரா மணிகண்டன் மற்றும் “பப்பி” பட இணை இயக்குநர் க.ச. ஆனந்த் ஆகியோர் இயக்கியுள்ளனர். Dream Big Entertainments நிறுவனத்தின் சார்பில் நீரஜ் M இந்த ஆல்பத்தினை தயாரித்துள்ளார். இப்பாடலை ராக்ஸ்டார் அனிருத் அவர்களும், சூப்பர் சிங்கர் புகழ்  ஶ்ரீனிசா ஜெயசீலன் அவர்களும் இணைந்து பாடியுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும் அனிருத் அவர்கள் இளம் திறமையாளர்களின் திறமையை மதித்து மிக எளிமையுடன் அவர்களுக்கு ஆதரவு தந்து இப்பாடலை பாடித்தந்துள்ளார். இப்பாடலில் நாயக பாத்திரத்தை ‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் நடிக்க, நாயகி பாத்திரத்தை ‘கருப்பன்’ பட நாயகி தன்யா ரவிசந்திரன் நடித்துள்ளார். சுயாதீன இசையமைப்பாளர் Godson இந்த ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார். கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, கோகுல் வெங்கட் படத்தொகுப்பு செய்துள்ளார். MGM பாடல் வரிகள் தந்துள்ளார். இளம் திறமைகளான அஷ்வின், தன்யா நடிப்பில் வித்தியாசமான வடிவில்  அழகான ரொமான்ஸ் பாடலாக அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது  Criminal Crush  பாடல்.

No comments:

Post a Comment