Featured post

Noise & Grains brings Walking Through the Rainbow to Chennai, celebrating Yuvan Shankar Raja through a grand symphonic experience

Noise & Grains brings Walking Through the Rainbow to Chennai, celebrating Yuvan Shankar Raja through a grand symphonic experience* Chenn...

Monday, 21 September 2026

ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

 *ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!*



*அசத்தலான போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து வீடியோவுடன் ‘ராவடி’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!*


பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அசத்தலான புதிய போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து (Gujilimasthu) வீடியோவுடன் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.


‘ராவடி’ திரைப்படம் வரும் 2026 டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியாகியுள்ள புதிய போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.


படக்குழு வெளியிட்டுள்ள ‘குஜிலிமஸ்து’ வீடியோ ரசிகர்களின் கவனத்தை வருகிறது. ஃபார்ட்டி கொண்டாட்டத்துடன் தொடங்கும் இந்த வீடியோ, ‘அராஜகம் பத்தல பத்தல’ என்ற பாடலுடன் காதல், கல்லூரி, அடிதடி, கொண்டாட்டம் என பல்வேறு தருணங்களை அடுத்தடுத்து காட்டுகிறது. இதில் பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இருவரும் வெவ்வேறு பரிமாணங்களில் தோன்றுவது, படம் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.


இன்றைய இளைஞர்களை கவரும் வகையில், இளமை துள்ளலுடன் கூடிய காமெடி என்டர்டெயின்மென்டாக ‘ராவடி’ திரைப்படம் உருவாகியுள்ளது. கலகலப்பான சம்பவங்கள், நகைச்சுவை நிறைந்த தருணங்கள், இளைஞர்களின் ரசனைக்கேற்ற திரைக்கதை என முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.


அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒகேனக்கல்லின் இயற்கை அழகுடன் படமாக்கப்பட்ட காட்சிகள் படத்திற்கு தனித்துவமான காட்சியமைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பஸில் ஜோசப், L. K. அக்ஷய் குமார் ஆகியோருடன் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைக்க, பரத் விக்ரமன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனித்துள்ளார்.


செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


முன்னதாக வெளியான ‘ராவடி’ படத்தின் டீசர் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள ‘குஜிலிமஸ்து’ வீடியோ மற்றும் டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்ற அறிவிப்பு, படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.

No comments:

Post a Comment