Featured post

Thank you for the overwhelming love and support shown towards the trailer and promotional campaign of Anbil Avan.

Thank you for the overwhelming love and support shown towards the trailer and promotional campaign of Anbil Avan. The response from audience...

Monday, 21 September 2026

தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்

தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்*




*UAE: திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு விநியோகத்தில் கவனம் செலுத்தி வரும் Triple M Production LLC, தமிழ் திரையுலகில் தனது செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.*


UAE-யை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தை அதன் Executive Director ஜி. பாபு ராமகிருஷ்ணன் வழிநடத்தி வருகிறார். UAE, கத்தார், இந்தியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் FMCG வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறையில் அனுபவம் பெற்ற அவர், Triple M Production மூலம் சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறையிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளார்.


Irani, Niram Marum Ulagil, Ace, Akkenam, Bun Butter Jam உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களுடன் Triple M Production இணைந்து பணியாற்றியுள்ளது. UAE, சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் உள்ளிட்ட GCC நாடுகளிலும் திரைப்பட வெளியீடு மற்றும் விநியோக பணிகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.


இந்நிலையில், இயக்குநர் ராம் இயக்கியுள்ள Yezhu Kadal Yezhu Malai திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோகத்திலும் Triple M Production LLC, Dubai இணைந்துள்ளது.


நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். V House Productions சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த திரைப்படம் 2026 அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


தமிழ் திரைப்படங்களை GCC மற்றும் சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், இந்திய திரையுலகுக்கும் வெளிநாட்டு சந்தைகளுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் Triple M Production LLC செயல்பட்டு வருகிறது.


No comments:

Post a Comment