Featured post

*A Village. A Nest. A 35-Day Sacrifice. Panorama Studios Expands Its Tamil Slate with KOODU in Association with Skymoon Entertainment and Cult Digital*

 *A Village. A Nest. A 35-Day Sacrifice. Panorama Studios Expands Its Tamil Slate with KOODU in Association with Skymoon Entertainment and C...

Saturday, 14 November 2026

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்!*

 *தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்!*






தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான முன்னாள் தலைவர்கள் திரு. எஸ்.ஏ. சந்திரசேகரன், திரு. கேயார், கலைப்புலி எஸ். தாணு, திரு. டி.ஜி. தியாகராஜன், முன்னாள் செயலாளர்கள் திரு. ஏ.எல். அழகப்பன், திரு. டி. சிவா, முன்னாள் பொருளாளர்கள் திரு. கஹஜாமைதீன், திரு. சந்திரபிரகாஷ் ஜெயின், திரு. வி.சி. குகநாதன், பெப்சி தலைவர் திரு. ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் திரு. ஐசரி கே. கணேஷ், திருமதி கமிலா நாசர், சங்கத்தின் துணைத் தலைவர் திரு. எஸ். கமலக்கண்ணன், செயலாளர் திரு. ஆர். ராதாகிருஷ்ணன், பொருளாளர் திரு. சுபாஷ் சந்திரபோஸ், இணைச் செயலாளர் திருமதி சுஜாதா விஜயகுமார், நடிகரும் தயாரிப்பாளருமான திரு. தியாகராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்கால நலன் குறித்துப் பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.


மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு, 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு நிலுவையில் இருந்த மானியத் தொகையை வழங்கியதற்கும், பண்டிகைக் காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ஒரு வாரத்திற்கு ஆறு காட்சிகள் திரையிட அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டதற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment