Featured post

Veeravanakkam Movie Review

 Veeravanakkam Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம வீரவணக்கம் ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். Anil V. Nagendran இயக்கி இருக்கற இ...

Showing posts with label Utharavu maharaja Movie. Show all posts
Showing posts with label Utharavu maharaja Movie. Show all posts

Thursday, 7 March 2019

அபிநந்தன், உதயா, உத்தரவு மகாராஜா - ஒப்பிட்ட உதயகுமார்

பொருளாதார அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளால் சிறுவயதிலே பாதிக்கப்படும் உதயா, குறுக்கு வழியில் பெரும் கோடீஸ்வரனாக ஆகும் கதை தான் உத்தரவு மகாராஜா. அறிமுக இயக்குநர் ஆஷிஃப் குரைசி இயக்கத்தில் வெளிவந்து பலராலும் பாராட்டப்பட்ட இந்தப்படத்தில், எதிர் நாயகனாக நடித்திருந்தாலும் மிகவும் வித்தியாசமான ஒப்பனைகளில் வந்து அசத்தியிருப்பார் உதயா.

இவரால் பாதிக்கப்படும் பிரபு, ஒரு கட்டத்தில், மிகவும் நுண்ணிய சிப் எனப்படும் தகவல் தொடர்பு சாதனத்தை உதயாவின் காதில் பொருத்தி, பல உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பார். எங்கிருந்து..? யாரால் ? இயக்கப்படுகிறோம் என்பது தெரியாத உதயா படும் வேதனைகள் படத்தின் சிறப்பம்சமான காட்சிகள் என்றால் அதுமிகையாகாது. இந்த நிலையில், இந்தப்படம் இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்காகப் பிரத்யேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த மூத்த இயக்குநர் ஆர் வி உதயகுமார், “சமீபத்தில் பாகிஸ்தான் போர் விமானத்தை அதைவிட பல மடங்கு வலிமை குறைந்த விமானத்தால் சுட்டு வீழ்த்தி, பாகிஸ்தான் இராணுவத்திடம் மாட்டிக் கொண்ட நமது விங் கமாண்டர் அபிநந்தன் கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இந்தியாவிற்குத் திரும்பிய அவருக்கு முழு உடல்பரிசோதனை செய்து மருத்துவ அறிக்கை வருவதற்குள், பாகிஸ்தான் இராணுவம் அவரையறியமல் அபிநந்தன் உடலில் சிப் பொருத்தியிருக்கக் கூடும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பேசிக்கொண்டார்கள். அபி நந்தன் உடலில், எந்தவிதமான சிப்புகளும் பொருத்தப்படவில்லை என்பதே , மருத்துவப் பரிசோதனையின் பிரதான அறிக்கையாக இருந்தது,,, உடலுக்குள் சிப் பொருத்தி வேவு பார்க்கவோ அல்லது இன்னொருவரை இயக்கவோ முடியும் என்று உத்தரவு மகாராஜா படத்தில் காண்பித்த சில நாட்களுக்குள், நிஜமாகவே அப்படி இருக்கலாமோ என்று விங் கமாண்டர் அபிநந்தன் விஷயத்தில் பலரும் பேசிக்கொண்டது, ஏதேச்சையாக ஒத்துப் போகிற நிகழ்வாக அமைந்துவிட்டது..” என்று பேசினார்.