*வார் 2 படத்தின் கதையை எல்லோருக்கும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் வேண்டுகோள் வைத்துள்ளனர்!*
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் வார் 2 படத்தின் ரகசியங்கள், திருப்பங்கள், பரபரப்புகளை ரசிகர்கள், ஊடகம் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, சிறப்பு செய்தி ஒன்றை வெளியிட்டு, கதையை முன் சொல்லுதல் போன்ற பதிவுகளை பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அதிரடியான பிரம்மாண்ட படத்தில், ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் இந்திய சிப்பாய்கள் கதாபாத்திரங்களில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் என இருவரும் வார் 2 படத்தில் இணைந்து நடித்துள்ளனர். “மிகுந்த அன்பும், நேரமும், ஆவலும் வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் வார் 2” என்றும், இந்த படத்தின் அனுபவத்தை பெரிய திரையில் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
ஹ்ரித்திக் ரோஷன் கூறுகையில், “வார் 2 படத்தை மிகுந்த அன்பு, நேரம், மற்றும் ஆவலுடன் உருவாக்கப்பட்டது. இந்த சினிமா அனுபவத்தை உண்மையாக ரசிக்க சிறந்த வழி, திரையரங்கில் பார்த்து கொண்டாடுவது மட்டும் தான் . ஏனெனில், இந்த பரபரப்பான கதையின் திருப்பங்கள் உங்கள் கண்முன்னே நிகழும். எனவே, ஊடகம், பார்வையாளர்கள், ரசிகர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள்.. எங்கள் கதையில் உள்ள ரகசியத்தை காப்பாற்றுங்கள்.”
ஜூனியர் என்டிஆர் கூறுகையில்," வார் 2 படத்தை காண திரையரங்கிற்கு வரும் மக்களுக்கு , நீங்கள் முதல் முறையாக காணும்போது உணர்ந்த அதே மகிழ்ச்சி, திகில், மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களை அவர்களும் அனுபவிக்க வேண்டும். கதையின் ரகசியத்தை பதிவிடுவதில் எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லை, மேலும் அது படத்தை காண வருபவர்களின் அனுபவத்தை பெரிதும் பாதிக்கும். எங்களுக்கு நிறைய அன்பைத் தாருங்கள், வார் 2 கதையை எல்லோருக்கும் ரகசியமாக வைத்திருங்கள் . நாங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.”
யாஷ் ராஜ் ஸ்பை யூனிவர்சில் இடம்பெறும் படமான வார் 2, நாளை உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
No comments:
Post a Comment