Featured post

Samsari Sanyasi Review

Samsari Sanyasi Tamil Movie Review அந்த காலத்துல பாத்தீங்கன்னா ரெண்டு படம் ஒரே படமா release பண்ணிருக்காங்க. இது அப்போ ஒரு trend அ follow பண்...

Tuesday, 19 August 2025

தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின் தொழில்முனைவோர் மாநாடு

 *தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின் தொழில்முனைவோர் மாநாடு 2025 மிகவும் சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகிறது!*



தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பு (CTMA) 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பதிவுசெய்யப்பட்ட ஒரு சமூக கலாச்சார அமைப்பு. தமிழ்நாட்டில் வாழும் பெரும்பான்மையான கேரள மக்களின் சமூக கலாச்சார பண்பாட்டை, தாய் அமைப்பாக CTMA பிரதிபலிக்கிறது.

இந்த ஆண்டு உலக தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு, தொழில்முனைவோர் மாநாட்டை (Entrepreneurship Summit) நடத்துகிறது. தனித்துவமான இந்த நிகழ்வில் புதிய தொழில்நுட்பம், வணிகத்தில் சமூக முன்னேற்றம் மற்றும் பொருளாதார வெற்றிக்காக ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தொழில்முனைவோர் மாநாடு நடக்க இருக்கிறது.


பல தடைகளை கடந்து தங்கள் தொழிலில் வெற்றி பெற்று மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கும் பேச்சாளர்கள், தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் என பல முக்கியஸ்தர்கள் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். ஆகஸ்ட் 21, 2025 அன்று சென்னை ஹயாத் ரீஜென்சியில் நடைபெறும் இந்த மதிப்புமிக்க நிகழ்வுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


தமிழ்நாட்டில் உள்ள தொழில்முனைவோர்கள், முன்னணி வணிகர்கள், மேலாண்மை நிபுணர்கள், தொழில்முறை மேலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மேலாண்மை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தேசிய மற்றும் உலகளவில் மதிப்புக்க ஆளுமைகளும் உரையாற்ற இருப்பதால் உங்கள் அனைவரின் பங்கேற்பு நிகழ்விற்கு மேலும் பெருமை சேர்க்கும். 


தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பிரவீன் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் இந்தியாவை சார்ந்த பல்துறை நிபுணர்கள்:

டாக்டர் சசி தரூர், எம்.பி. , 

டாக்டர் டி.ஆர்.பி. ராஜா,

பி. விஜயன், ஐபிஎஸ்,

பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, 

சச்சின் பிள்ளை, 

ஏ.டி. பத்மசிங் ஐசக், 

சி. சிவசங்கரன், 

பாபி செம்மனூர், 

முருகவேள் ஜானகிராமன், 

ராதிகா சரத்குமார்,

ரவி டீசீ,

சி.கே. குமரவேல்,

கோபிநாத் முதுகாட்,

சுரேஷ் பத்மநாபன்,

புரொபசர். டாக்டர். சஜி கோபிநாத்,

சுரேஷ் கோவிந்த்,

சஞ்சய் கே. ராய்,

டாக்டர். கே. அன்சாரி,

டாக்டர். ஸ்ரீமதி கேசன்,

சிந்து அகஸ்டின்.


மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நிபுணர்களின் கருத்துகள், நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கும் எதிர்கால புதிய இந்தியாவிற்கும் நிச்சயம் உந்துதலாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறோம். 


*அமைப்பின் மற்ற முக்கிய உறுப்பினர்கள்:*


கெளரவ தலைவர்: எம் பி புருஷோத்தமன்,

சேர்மன்: கோகுலம் கோபாலன்,

பொது செயலாளர்: எம் பி அன்வர்,

பொருளாளர்: ஆர். ராதாகிருஷ்ணன்,

சேர்மன் புராஜெக்ட்ஸ்: சோமன் கைதக்கட்,

மாநாடு ஒருங்கிணைப்பாளர்: ஜி பிரஷீத் குமார்.

No comments:

Post a Comment