Featured post

Coolie Movie Review

Coolie Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம coolie படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துக்கு ஏகப்பட்ட expectation இருந்தது. தொ...

Thursday, 14 August 2025

Coolie Movie Review

Coolie Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம coolie படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துக்கு ஏகப்பட்ட expectation இருந்தது. தொடர்ந்து இந்த படத்தோட updates எல்லாமே trending ல தான் இருந்தது. சோ இன்னிக்கு இந்த படம் release ஆகி வெற்றிகரமா theatre ல ஓடிட்டு இருக்கு. logesh kanagaraj ஓட direction ல rajini , nagarjuna , upendra , soubin , satyaraj , amir khan , pooja hegde , shruthi hasan னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. 




படத்தோட ஆரம்பத்துல superstar rajini ஓட introduction ரொம்ப cool அ இருந்தது. இவரு சினிமா ல வந்து 50 வருஷம் ஆகுது. அதுக்கான celebration னே சொல்லலாம். rajinikanth deva ன்ற character ல நடிச்சிருக்காரு. இவரு harbour ல வேலை பாக்குறவங்களோட union ஓட  தலைவர்  அ இருக்காரு. இவங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் deva தான் solve பண்ணறாரு. இந்த படத்தோட கதையை ஒரு வரில சொல்லனும்னா deva க்கும் போதை பொருளை கடத்துற simon அ நடிச்சிருக்க nagarajuna க்கும் simon க்கு main ஆள் அ இருக்கற dayal அ நடிச்சிருக்க soubin க்கும் நடக்கற பிரச்சனை தான். deva க்கு friend அ இருக்காரு rajasekhar அ நடிச்சிருக்க satyaraj . ஒரு பிரச்சனை ல rajasekhar  இறந்து போய்டுறாரு, இவரோட பொண்ணு தான் preethi அ நடிச்சருக்க shruthi hasan . preethi  அ காப்பாத்துறதுக்காக தான் deva எறங்குறாரு. actual அ rajasekhar mobile cremator ன்ற ஒரு machine அ உருவாக்கி இருப்பாரு. இந்த machine என்ன பண்ணும்னு கேட்டிங்கன்னா இது ஒரு electric chair இதுல உட்கருறவுங்க எரிஞ்சு சாம்பல் ஆயிடுவாங்க. இந்த machine க்காக தான் dayal rajasekhar கிட்ட வருவாரு. இந்த machine அ எப்படி operate பண்ணனும் ன்றது rajasekhar க்கு மட்டும் தான் தெரியும். இவரு இறந்து போறதுனால dayal க்கு என்ன பண்ணறது னு தெரியமா இருப்பாரு. என்னதான் deva வும் rajasekhar யும் friends அ இருந்தாலும் இவரு பண்ணற business ல deva தலையிட மாட்டாரு. ஆனா rajasekhar இறந்துதுக்கு அப்புறம் தான் இது வரையும் அமைதியா இருந்த deva மறுபடியும் violence ல எறங்குறாரு.  இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்துல நெறய scenes gore அ intense அ இருக்குனு தான் சொல்லணும். ஆணிய உடம்பு ல இறக்குறது, ரத்தம் தெறிக்கிறது னு கொஞ்சம் violence அ தான் இருக்கு. படத்தோட first half ல dhyal ஒரு முக்கியமான ஆள அ காமிக்கறாங்க. இவரோட வேலைய இவங்களுக்கு opposite அ வேலை பாக்குறவங்கள போட்டு தள்ளுறதுதான். rajini ஓட intro வும் simple அ தான் இருந்தது. இவரு ஒரு mansion அ நடத்திட்டு வருவாரு. அங்க தங்கி இருக்கற ஆட்களை நல்ல படிய பாத்துக்கவும் செய்யுறாரு. first half அ பொறுத்த வரையும் slow motion ல வர fights , mansion ல் நடக்கற விஷயங்கள், deva க்கும் rajasekhar க்கும் நடுவுல இருக்கற நட்பு  எப்படி உருவாச்சு ன்ற விஷயங்கள் தான் வரும். அதுலயும் powerhouse அப்புறம் monica songs எல்லாமே தெறிக்க விட்ருச்சு னு தான் சொல்லணும்.  rajini ஓட swag அ இருக்கட்டும் அவரோட magnetic presence எல்லாமே அசத்தல் அ இருந்தது. rajnikanth ஒரு super ஆனா hero வா நடிச்சிருக்காரு னா villain அ nagarjuna வவும் அசத்திட்டாரு னு தான் சொல்லணும். ரெண்டு பேருமே நேருக்கு நேர் மோதிக்கிறது எல்லாமே அவ்ளோ intense அ இருந்தது. amir  khan ஓட cameo  role யும் நல்ல இருந்தது. இவரோட character க்கு இன்னும் importance குடுத்திருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். upendra deva ஓட பழைய friend அ வராரு. இவரோட perfromance யும் super அ இருந்தது. 


lokesh kanagaraj ஓட movies ல எப்பவுமே ஒரு template இருக்கும் mystery, non linear reveals, mulitple cameos னு இது எல்லாமே இந்த படத்துலயும் இருந்தது. rajini ஓட பாஷா, jailer படத்தோட reference ல use பண்ணிருக்கறாங்க இதெல்லாமும் நல்ல இருந்தது. de aging sequences அ இருக்கட்டும் 80'ஸ் ல கம்மிக்ர flashback portions எல்லாமே அசத்தல் அ இருந்தது. இந்த படத்தோட technical aspect அ பாக்கும் போது anirudh ஓட songs and bgm எல்லாமே வேற level ல இருந்தது. action scenes க்கு வர bgm எல்லாமே mass அ இருந்தது. girish gangadharan ஓட cinematography யும் super அ இருந்தது. philomin raj ஓட editing யும் short அண்ட் crisp அ இருந்தது. 


மொத்தத்துல ஏகப்பட்ட twist turns இருக்கற ஒரு பக்காவான revenge drama னு தான் சொல்லணும் .  சோ கண்டிப்பா இந்த படத்தை இந்த holidays  ல உங்க family  and  friends  ஓட சேந்து thetre ல பாக்குறதுக்கு miss  பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment