நடிகர் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகிறது ’18 மைல்ஸ்’!
பதினெட்டு மைல்களுக்கு அப்பாலும் வானம் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கை வெவ்வேறானது. முடிவில்லாத கடல், அமைதி, தொலைவு, சொல்லப்படாத காதல் எனப் பல விஷயங்கள் இதில் இருக்கிறது. இவற்றை எல்லாம் பேசும் கடலோர காதல் கதை ’18 மைல்ஸ்’ என்கிறது குழு. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் உருவான இந்த உணர்வு
உங்கள் மனங்களை ஊடுருவி ஆன்மாவைத் தொடும். சித்து குமார் இசையமைப்பில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல்கள் எழுதியுள்ளார்.
கே எழில் அரசுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கவிதையாக விரியும். நாஷின் படத்தொகுப்பும் எம். தேவேந்திரனின் கலை வடிவமைப்பும் நம் உணர்வுகளை தாலாட்டும்.
இவற்றை எல்லாம் தாண்டி நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னாவுக்கு இடையிலான காதல் காலம் தாண்டியது. அவர்களின் பார்வையும் மெளனமும் கவிதையாக பார்க்கலாம். இசையின் கடைசி ரிதம் வரையிலும் பாடலை நம் மனதால் உணரலாம்.
இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறியதாவது “காதல் உலகமொழி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லைகளும் சர்வதேச நீர்நிலைகளும் காதலுக்கு இன்னும் ஒரு தடையாகவே இருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நிகழ்வு ஒன்றை காட்சி படுத்த விரும்பினேன். தற்காலிகமாக தங்குவதற்கு இடம் தேடும் ஒரு அகதி கடலின் சட்டத்தை இயற்றுபவரின் இதயத்தில் இடம் பிடிக்கிறார். மனிதர்களின் உணர்வுகளுக்கு கடலும் அதன் அலையும் மெளன சாட்சியாக எப்போதும் இருக்கும். கடலை போலவே காதல் அழகானது. அதே சமயத்தில் கடலின் ஆழத்தை போல ஆபத்தானதும் கூட! நிலம்தான் இங்கு அரசியல். உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் நிச்சயம் இந்த கதையுடன் இணைவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
No comments:
Post a Comment