சமீபத்தில் நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்கம் தேர்தலில் (2025-2028), சின்னத்திரை வெற்றி அணி சார்பாக
தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்ட பரத்,
செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நவிந்தர்,
பொருளாளர் பதவிக்கு போட்டிவிட்ட கற்பகவல்லி மற்றும் அனைத்து போட்டியாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதை முன்னிட்டு, தங்கள் அணிக்கு வாக்களித்த அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும், தேர்தல் ஆணையர், காவல் துறை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும், சங்க உறுப்பினரும் மூத்த நடிகருமான எம். எஸ். பாஸ்கர் அவர்கள் தேசிய விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த புதிய நிர்வாகிகள், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கும், கூலி பட வெற்றிக்கும், டிசம்பர் மாதம் ரஜினிகாந்த் அவர்கள் கொண்டாட இருக்கும் 75வது பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment