Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Thursday, 7 August 2025

இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது!

 *இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது!*



விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் இருந்து ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. தந்தை-மகன் உறவை அடிப்படையாக வைத்து மியூசிக்கல் காமெடியாக உருவான இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் ஜூலை 4 அன்று வெளியானது.  


மிர்ச்சி சிவா முன்னணி கதாநாயகனாக நடித்திருக்க அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, குழந்தை நட்சத்திரம் மிதுல் ரயான், பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ், அஜூ வர்கீஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ‘பறந்து போ’ படத்தை இயக்குநர் ராம் எழுதி இயக்கி இருக்க, என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். வி.எஸ். மதி படத்தொகுப்பு செய்திருக்க, படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை சந்தோஷ் தயாநிதி கவனித்தார். 


தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தை ‘வாழ்வின் சிறு, சிறு தருணங்களில்தான் எதிர்பாராத ஆச்சரியம் உள்ளது’ என்றும் ‘மனதிற்கு இதமான ஃபீல் குட் கதை’ என்றும் விமர்சகர்கள் பாராட்டினர். செண்டிமெண்ட், எண்டர்டெயின்மெண்ட், நகைச்சுவை, என இதயப்பூர்வமான படமாக அமைந்ததாக ரசிகர்கள் தங்கள் கருத்தை  இணையத்தில் பதிவிட்டனர். 


தற்போது ‘பறந்து போ’ திரைப்படம் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் சப்டைட்டிலோடு ஸ்ட்ரீம் ஆகிறது. மேலதிக விவரங்களுக்கு சமூகவலைதளங்களில் ஜியோஹாட்ஸ்டாரை பின்தொடருங்கள்!


*ஜியோஹாட்ஸ்டார் பற்றி:*


ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதை களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment