Featured post

பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக கொண்டாடிய நடிகர் ஷண்முகம் (Actor Shanmugam)

 பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக கொண்டாடிய நடிகர் ஷண்முகம் (Actor Shanmugam)  இன்றைய உலகில் பிறந்த நாள் என்றாலே  குடி,கும்மாளம்,ஆட்டம் பாட்டம் என...

Sunday, 10 August 2025

பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக கொண்டாடிய நடிகர் ஷண்முகம் (Actor Shanmugam)

 பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக கொண்டாடிய நடிகர் ஷண்முகம் (Actor Shanmugam) 


இன்றைய உலகில் பிறந்த நாள் என்றாலே  குடி,கும்மாளம்,ஆட்டம் பாட்டம் என்று இருக்கும் இவ்வேளையில் நடிகர் ஷண்முகம் தன் பிறந்த நாளை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தி உள்ளார் என்றே சொல்லலாம்.


ஷண்முகம் தமிழ் டிவி தொடர்களிலும், திரைப்படத்துறையிலும் பிரபலமான நடிகர்.


அவர் தனது நடிப்பு பயணத்தை சன் டிவியில் ஆதிரா, வாணி ராணி ஆகிய தொடர்களில் ராதிகா சரத்குமார் உடன் 50 எபிசோடுகள்  மேலாக நடித்துள்ளார்.


அதனை தொடர்ந்து விஜய் டிவி தொடர்களான பொன்மகள் வந்தாள், மௌன ராகம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.


தொலைக்காட்சியில் மட்டுமல்லாமல், பல நாடகத்தில் நடித்துள்ளார். பல விருதுகள் பெற்றுள்ளார். Orange Vision விளம்பரத்திலும், Licence திரைப்படத்திலும் நடித்துள்ளார். Zee Tamil வழங்கிய "மோனோ ஆக்டிங்" 1-ஆம் பரிசு மற்றும் Music Academy வழங்கிய "Mediya Focusing Award" ஆகியவை இவருக்குக் கிடைத்துள்ள முக்கிய விருதுகள்.


நடப்பில், Kalaignar TVயில் ஒளிபரப்பாகும் பவித்ரா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 200ஆம் எபிசோட் கடந்து சாதனை புரிந்து வருகிறது.படப்பிடிப்பில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.


சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கருணை இல்லத்தில் தனது பிறந்த நாளை அர்த்தமுள்ள முறையில் கொண்டாடினார்.

No comments:

Post a Comment