Featured post

Mission Santa YoYo to the Rescue Movie Review

Mission Santa YoYo to the Rescue Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mission santa yoyo  to the rescue  படத்தோட review அ தான் பாக்க போ...

Wednesday, 24 December 2025

Sirai Movie Review

Sirai Movie Review, Sirai Movie Rating 4.5/5

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம sirai படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது suresh rajakumari . vikram prabhu வும் akshay kumar யும் தான் main role ல நடிச்சிருக்காங்க. akshay kumar இந்த படத்தோட producer ஆனா lalit kumar ஓட பையன். இந்த படம் மூலமா இவரு actor அ அறிமுகம் ஆகுறாரு. இந்த படத்தோட கதையை tanakkaran ஓட director tamil தான் எழுதி இருக்காரு. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதையை பாக்கலாம். 

Sirai Movie Video Review;

https://youtu.be/0YbtEeh7GPs?si=6ylDjR0sXXVZosG2

kathiravan அ நடிச்சிருக்க vikramprabhu ஒரு நேர்மையான police constable அ இருக்காரு. court க்கு வாய்தா வாங்குறதுக்காக ஒரு கொலை குற்றவாளியான abdul அ நடிச்சிருக்க akshay kumar யா velore ல இருந்து sivagangai க்கு கூட்டிட்டு போறாரு கதிரவன். இவரு கிட்ட இருந்து தப்பிச்சிடலாமா னு abdul யோசிப்பான். ஆனா நேரம் போக போக kathiravan  கிட்ட abdul அவருக்கு நடந்த சோகமான கதையை சொல்லுறாரு. abdul க்கு kalaiarasi யா நடிச்சிருக்க anishma தான் girlfriend அ இருப்பாங்க. எதிர்பாக்காத ஒரு incident abdul ஓட life ல நடந்திருக்கும் அதோட விளைவா தான் ஒருத்தர கொலை பண்ணிருப்பாரு. abdul ஓட situation அ புரிஞ்சுக்குறாரு kathiravan . இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட first half ல நமக்கு custody ல இருக்கற procedures , police work னு எல்லாமே detailed அ காமிச்சிருப்பாங்க. அதே மாதிரி vikram prabhu ஒரு constable அ அவரால என்ன பண்ண முடியுமோ அதா தான் பண்ணுவாரு. ரொம்ப heroic அ இவரை காமிச்சிருக்கமாட்டாங்க. கதையை எடுத்துட்டு போன விதமும் realistic அ slow அ tension அ build பண்ணுற மாதிரி இருந்தது.  படத்தோட ஆரம்பத்துல வர 20 நிமிஷமும் interval scene நும் தான் இந்த கதைக்கு ரொம்ப முக்கியமா இருக்கு. படத்தோட second half ல தான் கதை ரொம்ப emotional அ போகும். law system எல்லாருக்கும் equal அ இல்லாதனால சில பேர் இதுல மாட்டிகிட்டு எப்படி கஷ்டப்படுறாங்க ன்றது தான் இந்த படத்தோட முக்கிய emotional  core அ இருக்கும்.  abdul அப்புறம் இவரோட  girlfriend kalaiyarasi ஓட life இதுனால தான் பாதிக்கபற்றுக்கும். அதே மாதிரி நெறய எடத்துல twist and turns யும் வச்சுருக்காங்க. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது vikramprabhu ஓட acting அ பத்தி சொல்லியே ஆகணும். ஏற்கனவே tanakkaran படத்துல இவரோட performance அட்டகாசமா இருந்தது. இப்போ இந்த படத்துல ஒரு constable அ ஒரு genuine ஆனா performance அ குடுத்திருக்காங்க. இவரோட body language, dialogue delivery னு எல்லாமே பக்காவா இருந்தது. akshay kumar க்கு இது தான் முதல் படமா இருந்தாலும் கொலை குற்றவாளியா அ நடிச்சு ஒரு emotional  ஆனா performance  அ குடுத்திருக்காரு.  ashima ஓட performance  யும் நல்ல இருந்தது. படத்துல நடிச்சிருக்க மத்த supporting  actors யும் அவங்களோட role  அ புரிஞ்சுகிட்டு நல்ல perform  பண்ணிருக்காங்க. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது suresh rajakumari ஓட direction ரொம்ப genuine ஆவும் confident ஆவும் இருந்தது. police procedures எல்லாம் factual  அ குடுத்திருக்காரு. இந்த படத்தோட கதைய sharp ஆவும் emotional ஆவும் கொண்டு வந்திருக்காரு. madhesh ஓட cinematography இந்த கதைக்கு நல்ல set யிருந்தது. justin prabhakaran music இந்த படத்தை ஒரு படி மேல எடுத்துட்டு போயிருக்குனு தான் சொல்லணும். முக்கியமா emotional  scenes  க்கு பக்கவா suit யிருந்தது. philomin raj ஓட editing யும் sharp  and short அ இருந்தது. 


மொத்தத்துல audience ஓட கவனத்தை சிதறாத மாதிரி அமைச்சிருக்க கதைக்களம், actors ஓட அசத்தலான performance , ஒரு social message அ சொல்லுற விதமா அமைச்சிருக்க  படம் தான் இது. சோ உங்க family and friends  ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment