Featured post

HOTSTAR SPECIALS ‘LBW – LOVE BEYOND WICKET’, STARRING VIKRANTH, TO LAUNCH ON JIOHOTSTAR ON JANUARY 1, 2026

 HOTSTAR SPECIALS ‘LBW – LOVE BEYOND WICKET’, STARRING VIKRANTH, TO LAUNCH ON JIOHOTSTAR ON JANUARY 1, 2026  JioHotstar releases the launch ...

Friday, 19 December 2025

நடிகர் விக்ராந்த் நடிப்பில் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள ‘LBW – லவ்

 *நடிகர் விக்ராந்த் நடிப்பில் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய தமிழ் தொடருக்கான அறிமுக புரோமோவை ஜியோஹாட்ஸ்டார் அதன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது!*





’ஹார்ட்பீட்’, ’போலீஸ் போலீஸ்’ மற்றும் ’ஆஃபீஸ்’ போன்ற லாங்-ஃபார்மேட் வெப் சீரிஸ் வெற்றியை தொடர்ந்து தற்போது கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட 'LBW - லவ் பியாண்ட் விக்கெட்' என்ற புதிய வெப்சீரிஸை ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் அறிமுகப்படுத்துகிறது. பிளாக்பஸ்டர் ’ஹார்ட்பீட்’ வெப்சீரிஸை தயாரித்த அட்லீஃபேக்டரி தயாரித்திருக்கும் இந்தத் தொடர் மூலம் நடிகர் விக்ராந்த் ஓடிடி தளத்தில் அறிமுகமாகிறார். ஜனவரி 1, 2026 முதல் LBW ப்ரீமியர் ஆகிறது. சமீபத்தில் நடைபெற்ற, ஜியோஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் அறிவிக்கப்பட்டதன்படி ப்ரீமியர் ஆகும் முதல் அசல் தமிழ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. 


தற்போது வெளியாகியுள்ள ’LBW – லவ் பியாண்ட் விக்கெட்’டின் புதிய புரோமோவில், ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரனாக இருந்த  ரங்கனின் கரியரில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் போகிறது. இப்போது பயிற்சியாளராக இருக்கும் ரங்கன், போராடும் கிரிக்கெட் அகாடமியில் ஒரு பின்தங்கிய அணியைப் பயிற்றுவித்து அதன் இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்கிறார். கிரிக்கெட்டின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தத் தொடரில் விளையாட்டு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் லட்சியத்தோடு இரண்டாவது வாய்ப்புக்காகப் போராடுவதன் உண்மையான அர்த்தத்தை களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் படம்பிடித்து காட்ட இருக்கிறது இந்தத் தொடர். 


இந்தத் தொடர் குறித்து நடிகர் விக்ராந்த் சந்தோஷ் பகிர்ந்து கொண்டதாவது, ”ஜியோஹாட்ஸ்டாருடன் முதன் முதலாக இணைகிறேன். எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டுடன் ஓடிடி தளத்தில் அறிமுகவாது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. கிரிக்கெட் எப்போதும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. கிரிக்கெட்டுடன் இருக்கும் ஆழமான தொடர்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்த LBW எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நிச்சயம் பார்வையாளர்களுக்கும் இது பிடித்தமானதாக இருக்கும்” என்றார். 


அருணா ராக்கி திரைக்கதை எழுதியிருக்க கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்ஷதா, நவீன், நிகில் நாயர் மற்றும் விஸ்வ மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


வலுவான கதைசொல்லல் மற்றும் கதாபாத்திரங்களுடன், ’LBW - லவ் பியாண்ட் விக்கெட்’ தொடர் தலைமுறைகள் கடந்து பார்வையாளர்களை ஈர்க்கும் ஸ்போர்ட்ஸ் கதையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனவரி 1, 2026 முதல் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் தமிழில் ’LBW - லவ் பியாண்ட் விக்கெட்’ ப்ரீமியர் ஆகிறது. 


*ஜியோஹாட்ஸ்டார் பற்றி:*


ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment