Featured post

நடிகர் தனுஷ் வெளியிட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்

 *நடிகர் தனுஷ் வெளியிட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்* *நடிகர் விக்ரம் பிரபு &  LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) படத்தின் ட...

Friday, 12 December 2025

பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ படத்தை – Sun NXT-இல், டிசம்பர் 19 முதல் கண்டுகளியுங்கள்

 பார்வதி நாயரின்  ‘உன் பார்வையில்’  படத்தை – Sun NXT-இல், டிசம்பர் 19 முதல் கண்டுகளியுங்கள் 







பார்வதி நாயரின்  ‘உன் பார்வையில்’ – Sun NXT-இல் டிசம்பர் 19 முதல் நேரடியாக ஸ்ட்ரீமிங் ஆகிறது !


தென் இந்தியாவின் முன்னணி OTT தளமான Sun NXT, தனது பிரபலமான Direct-to-Sun NXT பிரீமியர் பட்டியலில் அடுத்ததாக ஒரு  அதிரடியான திரில்லரை சேர்த்துள்ளது. டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை முதல், நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவான ‘உன் பார்வையில்’ படத்தை,  Sun NXT-இல் மட்டும் நேரடியாக கண்டுகளிக்கலாம். 


இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக  அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் அசத்தியுள்ளார்.  கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.


தன்னுடைய வலுவான நடிப்பால் படத்தை முழுவதுமாக தாங்கிச் செல்லும் பார்வதி நாயரின் நடிப்பு, படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. திரைக்கதையின் மர்ம மரணங்களின் விசாரணை பக்கத்தில், முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதாப்பாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளார். மேலும், கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிழல்கல் ரவி ஆகியோரின் வலுவான நடிப்பு ‘உன் பார்வையில்’ படத்தின்  ஈர்க்கும் அம்சமாக திகழ்கிறது.


நடிகை பார்வதி நாயர் கூறியதாவது.., 

“பார்வையற்ற பெண்ணாக நடிப்பது சவாலானதும், அதே நேரத்தில் மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது. டிசம்பர் 19 அன்று ‘உன் பார்வையில்’ படத்தை Sun NXT-இல் நேரடியாக நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ்வதைக் காண, ஆவலுடன் காத்திருக்கிறேன்.”


மேலும், Sun NXT-இன் புதிய எக்ஸ்குளூசிவ் இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் ‘தீயவர் குலை நடுங்க’ படத்தையும் தவறாமல் கண்டுகளியுங்கள். ஆக்சன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாச்சலம் நடித்துள்ள இந்தப் படம், ஒரு முக்கியமான சமூக பிரச்சனையை துறுதுறு விசாரணையின் மூலம் வெளிக்கொண்டு வருகிறது. திரில்லர் ரசிகர்களுக்கு இது மிகச்சிறந்த விருந்தாக இருக்கும். 


7+ மொழிகளில் 4000+ தலைப்புகள், 44+ நேரடி சேனல்கள் ஆகியவற்றுடன், அனைத்து வயதினருக்கும் மற்றும் அனைத்து பிராந்தியங்களின் பார்வையாளர்களுக்கும் Sun NXT தொடர்ந்து முன்னணி OTT தளமாக திகழ்கிறது.


https://youtu.be/6kAdJtO6M_8?si=R2hsRCHJkrc4Am7z

No comments:

Post a Comment