Featured post

Anger and Inner Change Take Centre Stage in New Tamil Single “Sinam Kol Manamae"

 Anger and Inner Change Take Centre Stage in New Tamil Single “Sinam Kol Manamae" Exploring anger as an emotion that surfaces, disrupts...

Friday, 12 December 2025

நடிகர் சாந்தனு பாக்யராஜின் ’மெஜந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை பிராண்ட்

 *நடிகர் சாந்தனு பாக்யராஜின் ’மெஜந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ளது!*



பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் டாக்டர் ஜெ பி லீலாராம், ராஜு க, சரவணன் பா, மற்றும் ரேகா லீலாராம், ஆகியோர் இணைந்து, இயக்குநர் பரத் மோகனின் ’மெஜந்தா’ படத்தின் வசீகரமான முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில் எளிய பூஜையுடன் ‘மெஜந்தா’ படக்குழு படப்பிடிப்பை தொடங்கியது. தற்போது வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அடர்த்தியான மெஜந்தா வண்ணம் படத்தின் மையக்கருவான ‘மனதின் வண்ணங்களில் இருந்து பிறந்த காதல்’ என்பதை பிரதிபலிக்கிறது. ஒ௫ அரிதான காதல் கதையாக ‘மெஜந்தா’ உருவாகியுள்ளது. 


நுணுக்கமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்ற இயக்குநர் பரத் மோகன் (இக்லூ புகழ்) ‘மெஜந்தா’ படத்தை இயக்கியுள்ளார். இரண்டு மனங்களின் வெவ்வேறு பக்கங்களை இந்தக் கதை நுணுக்கமாக ஆய்வு செய்கிறது. இந்தக் கதையின் உணர்வுப்பூர்வமான மற்றும் தீவிரமான தருணங்களை உணர்ந்து நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கோத்தகிரியில் முக்கிய காட்சிகளும் மற்ற ஷெட்யூல் சென்னையிலும் படமாக்கப்பட்டுள்ளது. கண்ணைக் கவரும் காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை, ஆழமான உணர்வுகளுடன் 2026ஆம் ஆண்டின் தவிர்க்க முடியாத காதல் படமாக ‘மெஜந்தா’ இருக்கும். 



*நடிகர்கள்:* உளவியல் காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ், அர்ச்சனா ரவிச்சந்திரன், ஷரத் ரவி, சௌந்தர்யா சரவணன், படவா கோபி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


இசை: தரண் குமார்,

ஒளிப்பதிவு: பல்லு,

படத்தொகுப்பு: பவித்ரன், 

கலை இயக்குநர்: பிரேம், 

ஆடை வடிவமைப்பாளர்: குவோச்சாய்,

ஆக்‌ஷன் வடிவமைப்பு: சக்தி சரவணன்.

No comments:

Post a Comment