Varisu Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம varisu படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vamshi Paidipally, இந்த படத்துல Vijay Rashmika Mandanna, R. Sarathkumar, Shaam, Prabhu, Prakash Raj, Srikanth, Jayasudha, Sangeetha, Samyuktha Shanmughanadhan, Nandini Rai, Yogi Babu, Ganesh Venkatraman and Suman.னு பலர் நடிச்சிருக்காங்க. இது தான் நடிகர் vijay ஓட 66 ஆவுது படம். இந்த படம் 11 jan 2023 ல release ஆகி மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு யும் கிடைச்சது. படத்தோட collection மட்டுமே 290 ல இருந்து 293 கோடி இருக்கும் னு sources சொல்லுது.
சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். rajendran அ நடிச்சிருக்க sarathkumar க்கு மூணு பசங்க இருப்பாங்க. அவங்க தான் jai யா நடிச்சிருக்க srikanth , ajay அ நடிச்சிருக்க shaam அப்புறம் vijay யா நடிச்சிருக்க vijay . rajendran க்கு wife அ sudha வா நடிச்சிருப்பாங்க jayasudha . rajendran ஒரு பெரிய businessman அ இருப்பாரு. அவரோட முதல் ரெண்டு பசங்களும் இவரோட business அ பாத்துப்பாங்க ஆனா vijay க்கு இதுல விருப்பம் இருக்காது அதுனால இவரை வீட்டை விட்டு தொரத்திடுறாரு rajendran . இப்போ எட்டு வருஷம் கழிச்சு rajendran க்கு cancer last stage ல இருக்கும். இதை பத்தி வீட்ல யாருகிட்டயும் சொல்லிருக்கமாட்டாரு. இவரோட business அ முதல் ரெண்டு பசங்கள யாருக்காவுது ஒருத்தருக்கு கொடுக்கணும் அப்படினு இவரோட doctor friend அ நடிச்சிருக்க prabhu கிட்ட சொல்லிருப்பாரு. வீட்ல நடக்கற function க்கு vijay யும் வந்திருப்பார். அப்போ தான் எல்லாருக்கும் ரெண்டு விஷயம் தெரியவரும். ஒன்னு jai இன்னொரு பொண்ணு ஓட affair ல இருப்பாரு. ரெண்டாவுது ajay ஒரு financiar கிட்ட பெரிய loan அ வாங்கிருப்பாரு, அதா திருப்பி தரமுடியாதனல company ஓட ஒரு secret tender அ leak பண்ணிருப்பாரு.
கடைசில rajendran ஓட நிலைமை தெரிய வரவும், company ஓட ceo வா vijay வந்துடுறாரு. இதை கேள்விப்பட்ட vijay ஓட ரெண்டு அண்ணன்களும் சண்டை போட்டு வீட்டை விட்டே கிளம்பி போயிடுறாங்க. அதுமட்டுமில்ல rajendran க்கு எதிரியா இருக்கற jp யா நடிச்சிருக்க prakashraj ஓட jai யும் ajay யும் கூட்டு சேந்துடுறாங்க. இன்னொரு பக்கம் vijay nila வா நடிச்சிருக்க rashmika வை love பண்ணிட்டு இருப்பாரு. பிரிஞ்சு போன rajendran ஓட குடும்பம் ஒண்ணா சேந்ததா? vijay தான் அந்த company க்கு நிரந்தர ceo வா ஆனாரா இல்லையா? தன்னோட தம்பி மேல பாசம் காமிப்பாங்களா இல்ல எதிரிகளா நிக்க போறாங்களா ? ன்ற பல கேள்விகளுக்கு இந்த படம் தான் பதில் அ இருக்கு.
இந்த படத்துல emotion, romance, comedy னு எல்லாமே பக்கவா balance பண்ணிருப்பாங்க. படத்தோட first half ல rajendran ஓட family எப்படி இருக்கு, vijay அவங்க அம்மா மேல காமிக்க்ர பாசம், yogibabu ஓட அடிக்கற comedy, னு எல்லாமே நல்ல இருக்கும். படத்தோட second half ல vijay க்கு mass ஆனா scenes , punch dialogues னு எல்லாமே அட்டகாசமா இருக்கும். முக்கியமா conference room ல வர scene இன்னும் நல்ல இருக்கும். படத்துல அங்க அங்க family க்கான messages அ அல்லி விட்டிருப்பாங்க. ஆனா ரொம்ப advice பண்ணுற மாதிரியும் இருக்காது. நெறய இடங்கள் ல கதை எப்படி போகும் னு guess பண்ணாலும் கதையை எடுத்துட்டு வந்த விதம் ரொம்ப clear அ இருக்கும்.
படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது sarathkumar ஒரு selfish person அ கடைசில கடைசில பண்ண தப்ப regret பண்ணுற ஒரு person அ transform ஆகுறது ரொம்ப நல்ல இருக்கும். ரொம்ப emotional அ நடிச்சிருப்பாரு. jayasudha பசங்க மேல அதிகமா அன்பு வச்சுருக்க, குடும்பத்தை நல்ல படிய பாத்துக்கற அக்கறையான amma வா நடிச்சிருக்காங்க. vijay எப்பவும் போல ஒரு mass ஆனா performance அ குடுத்திருக்காரு. rashmika ஓட performance யும் நல்ல இருந்தது. prakashraj தான் இந்த படத்துல villain அ இருக்காரு. இவரை இன்னும் terror அ காமிச்சிருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ஒரு best ஆனா performance அ வெளி படுத்திருக்காங்க.
படத்தோட technical aspects னு பாக்கும்போது thaman ஓட songs and bgm எல்லாமே பக்கவா இருந்தது. karthik palani ஓட cinematography ரொம்ப bright ஆவும் colourful ஆவும் இருந்தது. pravin k l ஓட editing யும் நல்ல இருந்தது.
ஒரு நல்ல family entertainer , படம் தான் இது. இந்த படத்தை நீங்க இன்னும் பாக்களான கண்டிப்பா போய் பாருங்க.

No comments:
Post a Comment