Featured post

சக்தி பீடம் ப்ரொடக்‌ஷன்ஸ் & Face Guru Institute of Legends movie media தயாரிப்பில்

 *Puththam Puthu Neram Movie Audio Launch*                                                              சக்தி பீடம் ப்ரொடக்‌ஷன்ஸ் & Face...

Thursday, 4 December 2025

சாரா' படத்திற்காக யோகிபாபுயுடன் இணைந்த விஜய் விஷ்வா

 *'சாரா' படத்திற்காக யோகிபாபுயுடன் இணைந்த விஜய் விஷ்வா* 








*யோகிபாபு - விஜய் விஷ்வா -  சாக்ஷி அகர்வால் நடிப்பில் நாளை வெளியாகும் 'சாரா*


நாளை டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள “சாரா” திரைப்படத்தில் வளர்ந்து வரும் நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வாவும், பிரபல நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபுவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். செல்லக்குட்டி  இயக்கியுள்ளார்.


இப்படத்தில் சாக்ஷி அகர்வால்,  தங்கதுரை,  அம்பிகா, மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது.


இப்படத்தின் பூஜை விழா சென்னையில் இசையமைப்பாளர் “இசைஞானி” இலையராஜா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


படம் வெளியாவதை முன்னிட்டு நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வா மதுரையில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்தில் ‘சாரா’ படத்தின் டிரெய்லரை திரையிட்டு குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். இத்துடன், அங்கு நடிகர் நெப்போலியனின் பிறந்தநாளை உணவு வழங்கி கொண்டாடினர்.


அத்துடன், சமீபத்தில் மரணமடைந்த மறைந்த நடிகர் ரோபோ சங்கர் அவர்களுக்கு அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.


மேலும்,  விஜய் விஷ்வா நடிப்பில் உருவாகியுள்ள அவரது அடுத்த திரைப்படமான “பிரம முகூர்த்தம்”  விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

No comments:

Post a Comment