Featured post

Malayalam actor Kamal Roy passes away at 54 due to cardiac arrest

 *Malayalam actor Kamal Roy passes away at 54 due to cardiac arrest* Kamal Roy was the brother of celebrated actors Kalaranjini, Kalpana (La...

Wednesday, 21 January 2026

திரௌபதி 2’ திரைப்படம் குறித்து கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!*

 *‘திரௌபதி 2’ திரைப்படம் குறித்து கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!*








இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன், தேவியானி ஷர்மா, திவி வைத்யன் ஆகியோருக்கு தங்கள் நடிப்பை வலுவாக வெளிப்படுத்தும் விதமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் தங்கள் கதாபாத்திரங்களான திரௌபதி, ஆயிஷா, கோதை ஆகியவற்றின் அனுபவங்களை நாயகிகள் பகிர்ந்துள்ளனர். 


திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்த ரக்ஷனா இந்துசூடன் பகிர்ந்து கொண்டதாவது, “’திரௌபதி 2’ படத்தில் திரௌபதியாக நடித்தது என் சினிமா கரியரில் மறக்க முடியாத அனுபவம். இந்த கதாபாத்திரம் தீவிரமான உணர்வுகளையும், எதையும் தாங்கும் உறுதியையும் அதே சமயம் நளினத்தையும் ஒருங்கே கொண்டது. அந்த ஆழமான உணர்ச்சிகளையும் வலிமையையும் வெளிப்படுத்துவது எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குநர் மோகன் ஜி சாருக்கு மனமார்ந்த நன்றி. எப்போதும் ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்திக்கும், ஒவ்வொரு காட்சியிலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் ரிச்சர்ட் ரிஷி சாருக்கும் நன்றி. நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலருடன் இந்தப் படத்தில் பணியாற்றியது மனதுக்கு நிறைவான அனுபவமாக இருந்தது” என்றார். 


ஆயிஷா கதாபாத்திரத்தில் நடித்த தேவியானி ஷர்மா பகிர்ந்து கொண்டதாவது, “’திரௌபதி 2’ திரைப்படத்தில் ஆயிஷா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது எனக்கு பெருமையான விஷயம். அறிவும் அமைதியும் மன உறுதியும் கொண்டவள் ஆயிஷா. இயக்குநர் மோகன் ஜி இதை சரியாக திரையில் காட்சிப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் நன்றி. ஜிப்ரான் சாரின் மனதை தொடும் இசை, கதையை பிரம்மாண்டமாக திரையில் கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தரின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம். உடன் பணிபுரிந்த அனைவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார். 



கோதை கதாபாத்திரத்தில் நடித்த திவி வைத்யன் பகிர்ந்து கொண்டதாவது, “’திரௌபதி 2’ திரைப்படத்தில் நான் நடித்திருக்கும் கோதை கதாபாத்திரம் உறுதியான உண்மையான உணர்ச்சிகளை பிரதிபலிப்பாள். அதை முழுமையாக நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நம்புகிறேன். பல திறமையான கலைஞர்களுடன் இந்தப் படத்தில் நான் அறிமுகமாவது மகிழ்ச்சி. என்னை நம்பி இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் மோகன் ஜி அவர்களுக்கும், தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்திக்கும் என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பில் எனக்கு வழிகாட்டியாக இருந்த ரிச்சர்ட் ரிஷி சாருக்கும் நன்றி. கோதையின் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்த ஆக்‌ஷன் சந்தோஷ் சாருக்கும் நன்றி” என்றார். 


இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி  தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷியுடன் ரக்ஷனா இந்துசூடன், தேவியானி ஷர்மா, திவி வைத்யன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


*தொழில்நுட்பக் குழு:*


இசை: ஜிப்ரான்,

ஒளிப்பதிவு: பிலிப் கே. சுந்தர், 

கலை இயக்குநர்: எஸ். கமல், 

சண்டைப் பயிற்சி: ஆக்‌ஷன் சந்தோஷ், 

படத்தொகுப்பு: எடிட்டர் தேவராஜ்

No comments:

Post a Comment