*தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி வழங்கும் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் 'திரெளபதி 2'!*
இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான பிரம்மாண்ட கதைகளை கொடுக்க தயாரிப்பாளர்களின் ஆதரவு மிக அவசியம். அப்படியான திரைப்படங்கள் இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கிறது என்றால் அதற்கு சோலா சக்ரவர்த்தி போன்ற தயாரிப்பாளர்களே முக்கிய காரணம். இன்று (ஜனவரி 23, 2026) உலகம் முழுவதும் 450 +
திரையரங்குகளில் வெளியாகும் 'திரெளபதி' திரைப்படத்தை தயாரித்திருப்பதன் மூலம் திரைத்துறையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி.
படம் குறித்து தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி பகிர்ந்து கொண்டதாவது, "இயக்குநர் மோகன் ஜி 'திரெளபதி 2' கதையை பிரம்மாண்டமாக திரையில் கொண்டு வந்திருக்கிறார். அவருடைய டைரக்ஷன் ஸ்டைல், சரியான திட்டமிடல், அர்ப்பணிப்பு இவை எல்லாம்தான் பல சவால்களை தாண்டி படத்தை திட்டமிட்ட நேரத்தில் முடிக்க உதவியது. எங்கள் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ரிச்சர்ட் ரிஷியின் வலுவான திரை ஆளுமை, ரக்ஷனா இந்துசூடனின் திறமையான நடிப்பு, நட்டி நடராஜ், வேல ராமமூர்த்தி, தேவியானி ஷர்மா மற்றும் திவி வைத்தியநாதன் என ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இது சர்ச்சைக்குரிய படம் அல்ல! நாம் வாழ்ந்த வரலாற்றை பேசும் கதை. சுபாஷ் சந்திரபோஸின் 129 ஆவது பிறந்தநாளை ஒட்டி இந்தப் படத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்" என்றார்.
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷியுடன் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
*தொழில்நுட்பக் குழு:*
இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: பிலிப் கே. சுந்தர்,
கலை இயக்குநர்: எஸ். கமல்,
சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்,
படத்தொகுப்பு: எடிட்டர் தேவராஜ்


No comments:
Post a Comment