Featured post

G.V. Prakash Kumar to Unveil First Thiruvasagam Song on

 *G.V. Prakash Kumar to Unveil First Thiruvasagam Song on January 22! A Divine Rendition That Captivated Prime Minister Narendra Modi* Thiru...

Tuesday, 20 January 2026

பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த 'அறுவடை' படக்குழு!

 பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த 'அறுவடை'  படக்குழு!



'லாரா' திரைப்படத்தைத் தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பு 'அறுவடை'  திரைப்படம்.


இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்.கார்த்திகேசன் நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். ஆனந்த், ஒளிப்பதிவு -ரகு ஸ்ரவண் குமார், இசை , படத்தொகுப்பு - கே .கே . விக்னேஷ். பாடல்கள் - கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி. கிராமியப் பின்னணியிலான கமர்சியல் படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தை எம் கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரிக்கிறார்.


கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் 'அறுவடை' படத்தின்  சார்பில்  கோயம்புத்தூரில் பொங்கல் விழா கொண்டாடிப் படப்பிடிப்பை  முடித்துள்ளனர்.


அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாளில் பொங்கல் விழா கொண்டாடி 'அறுவடை' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், 


'' ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை,  மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு 'அறுவடை' என பெயரிட்டிருக்கிறோம்.  விரைவில் படத்தை வெளியிட உள்ளோம் " என்றார்.

No comments:

Post a Comment