Featured post

புதியவர்களுக்கு மேடை அமைக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி K கணேஷ் – மாயபிம்பம் இயக்குநருக்கு புதிய வாய்ப்பு

 புதியவர்களுக்கு மேடை அமைக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்  ஐசரி K கணேஷ் – மாயபிம்பம் இயக்குநருக்கு புதிய வாய்ப்பு !!  தமிழ் சினிமாவில் புத...

Thursday, 22 January 2026

திரெளபதி 2' திரைப்படத்திற்காக மனதை ஊடுருவும் இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்

 *'திரெளபதி 2' திரைப்படத்திற்காக மனதை ஊடுருவும் இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்!*




வெவ்வேறு ஜானர்களில் தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போடும் இசையமைப்பாளர் ஜிப்ரான், மோகன் ஜி இயக்கத்தில், சோலா சக்ரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்று கதையான 'திரெளபதி 2' திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நாளை (ஜனவரி 23, 2026) உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. 


படம் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்து கொண்டதாவது, "நாம் வாழும் காலத்தைத் தாண்டி, கடந்த காலத்தை நினைவூட்டும் இசையை உருவாக்குவது மிகப் பெரும் சவாலாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மோகன் ஜி மற்றும் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்திக்கு என் மனமார்ந்த நன்றி. ‘திரௌபதி 2’ ஒரு சாதாரண வரலாற்று திரைப்படம் அல்ல!  அது நம் மக்களின் உணர்வுகள், கலாச்சாரம், வலி, கவிதை, காதல், பழிவாங்கும் உணர்வு, தேசப்பற்று ஆகிய அனைத்தையும் பிரதிபலிக்கிறது. கமல்ஹாசன் சார் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தில் இசையில் பல புதிய விஷயங்களை ஆராய்ந்து கொண்டு வந்தேன். அதேபோன்று நிறைய ஆராய்ந்து இந்தப் படத்திலும் புது இசையை கொடுத்திருக்கிறேன். பிலிப் கே. சுந்தரின் அற்புதமான ஒளிப்பதிவுக்கு இணையாக பின்னணி இசையும் சிறப்பாக வந்திருக்கிறது என நம்புகிறேன். நாளை திரையரங்குகளில் படம் பார்க்க ஆவலுடன் உள்ளேன்" என்றார்.


இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி  தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷியுடன் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


*தொழில்நுட்பக் குழு:*


இசை: ஜிப்ரான்,

ஒளிப்பதிவு: பிலிப் கே. சுந்தர், 

கலை இயக்குநர்: எஸ். கமல், 

சண்டைப் பயிற்சி: ஆக்‌ஷன் சந்தோஷ், 

படத்தொகுப்பு: எடிட்டர் தேவராஜ்

No comments:

Post a Comment