Featured post

காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம்

 *“காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம்* Zee Studios, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற...

Wednesday, 28 January 2026

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் - இயக்குநர் விஷ்ணு மோகன் - மோகன்லால் - இணையும் '#L367'

 *ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் - இயக்குநர் விஷ்ணு மோகன் - மோகன்லால் - இணையும் '#L367'*




*ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் - இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கிறது*


ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில், மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை பற்றி தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  இந்த படத்திற்கு தற்காலிகமாக' #L367' என  பெயரிடப்பட்டுள்ளது. தனது முதல் படமான 'மெப்படியான் ' படத்தின் மூலம் தேசிய விருதை வென்ற இயக்குநர் விஷ்ணு மோகன் இப்படத்திற்கு கதை எழுதி, இயக்குகிறார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் #L367 எனும் திரைப்படம் - ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் வரலாற்றின் மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக அமையவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பைஜு கோபாலன் மற்றும் வி.சி.பிரவீன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். கிருஷ்ணமூர்த்தி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். 


மிகப்பெரிய அளவில் உருவாகும் இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் பாலிவுட் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இணைய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. படக் குழுவினர் படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 


தற்போது ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் - சுரேஷ் கோபியின் 'ஒட்டக்கொம்பன்', ஜெயராம் -‌ காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் 'ஆசைகள் ஆயிரம் ', ஜெயசூர்யாவின் 'கதனார்', நிவின் பாலி- பி.உன்னிகிருஷ்ணன் இணையும் ஒரு படம் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் 'கில்லர் ' உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் #L367 படமும் இணைவதன் மூலம் மலையாள திரையுலகில் ஒரு சக்தி வாய்ந்த தயாரிப்பு நிறுவனமாக ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தன்னுடைய பணியையும், பங்களிப்பையும் மேலும் வலுப்படுத்தி கொள்கிறது.

No comments:

Post a Comment