Featured post

திரெளபதி 2’ சாதாரண வரலாற்று படம் அல்ல! நம் முன்னோர்களின் போர்க்குரலை

 *“’திரெளபதி 2’ சாதாரண வரலாற்று படம் அல்ல! நம் முன்னோர்களின் போர்க்குரலை மீண்டும் உயிர்பிப்பது” – நடிகர் ரிச்சர்ட் ரிஷி!* பத்து ஆண்டுகளுக்கு...

Tuesday, 20 January 2026

திரெளபதி 2’ சாதாரண வரலாற்று படம் அல்ல! நம் முன்னோர்களின் போர்க்குரலை

 *“’திரெளபதி 2’ சாதாரண வரலாற்று படம் அல்ல! நம் முன்னோர்களின் போர்க்குரலை மீண்டும் உயிர்பிப்பது” – நடிகர் ரிச்சர்ட் ரிஷி!*






பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நடிகராக வலம் வரும் ரிச்சர்ட் ரிஷி, சவாலான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். காதல் நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தற்போது, வரலாற்றுப் படமான ‘திரௌபதி 2’ மூலம் இதுவரை காணாத வீரத் தோற்றத்தில் ரசிகர்களை திரையில் சந்திக்க உள்ளார். ஜனவரி 23 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ’திரெளபதி 2’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்தான அனுபவங்களை ரிச்சர்ட் ரிஷி பகிர்ந்து கொண்டார். 


“’திரௌபதி 2’ படத்தில் மன்னர் வீர சிம்ம கடவராயனாக நடித்திருப்பது என் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை. இது வெறும் நடிப்பு அல்ல; தமிழ்நாட்டில் ரத்தம் சிந்திய வீரமும் தியாகமும் நிறைந்த வரலாற்றிற்கு உயிர் கொடுத்திருக்கும் அனுபவம். இயக்குநர் மோகன் ஜியின் ‘திரௌபதி 2’ சினிமா என்பதைத் தாண்டி வரலாற்றின் மறுபிறப்பாக உள்ளது. ’திரௌபதி’ படத்திற்கு பிறகு அவருடன் மீண்டும் பணியாற்றுவது, நம்பிக்கையுள்ள தளபதியுடன் மீண்டும் போர்க்களம் சென்ற அனுபவம் போல இருந்தது” என்றார். 


மேலும் பகிர்ந்து கொண்டதாவது, “இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை பேரரசர்களின் ஆன்மாவை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தரின் ஒளிப்பதிவு அரச கம்பீரத்தை அழகாகப் பதிவு செய்கிறது. ஆக்‌ஷன் சந்தோஷ் அமைத்த போர் காட்சிகள் வரலாற்று காவியங்களுக்கு இணையானவை. ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி ஆகியோருடன் இணைந்து நடித்தது ஒவ்வொரு காட்சியையும் மேலும் சிறப்பாக்கியுள்ளது. ‘திரௌபதி 2’ வரலாற்று திரைப்படம் என்பதைத் தாண்டி, நம் முன்னோர்களின் மறைக்கப்பட்ட போர்க்குரலை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒரு வரலாற்றுப் பயணம். நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், தலைமுறைகள் கடந்து ஒலிக்கும் தமிழ் சினிமாவின் மிகத் துணிச்சலான வரலாற்றுக் காவியமாக இருக்கும். ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை கட்டிப்போடும் அனைத்து அம்சங்களுடனும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார். 


இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி  தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷியுடன் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


*தொழில்நுட்பக் குழு:*

இசை: ஜிப்ரான்,

ஒளிப்பதிவு: பிலிப் கே. சுந்தர், 

கலை இயக்குநர்: எஸ். கமல், 

சண்டைப் பயிற்சி: ஆக்‌ஷன் சந்தோஷ், 

படத்தொகுப்பு: எடிட்டர் தேவராஜ்

No comments:

Post a Comment