Kolai Seval Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kolai seval படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது VR Thudhivaanan. இந்த படத்துலY Kalaiyarasan, Deepa Balu, Bala Saravanan, Gajarajனு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
tamilcinema புராணங்கள் பத்தின கதைகளை காமிச்சிருக்கு. ஆனா ஊர் பகுதிகள் ல வழிபடுற கடவுள்கள், காவல் தெய்வங்களை பத்தின கதைகள் ரொம்ப rare தான். உதாரணத்துக்கு விருமாண்டி படத்துல Pekkaaman அப்புறம் Virumandi தெய்வங்களுக்கு நடுவுல வர சண்டையை பத்தி சொல்லிருப்பாங்க. இந்த kolai seval படத்துல ஜாதிப்ரச்சனைல ஒரு பொண்ணை கொலை பண்ணிடுறாங்க கடைசில கொலைப்பண்ணபட்ட அந்த பொண்ணை தெய்வமா வழிபடுறாங்க அந்த ஊர் மக்கள். இந்த கதையை தான் ரொம்ப interesting அ மக்களுக்கு எடுத்து சொல்லிருக்காரு director.
இந்த படத்தோட கதை திருவண்ணாமலை ல நடக்குது. kalaiyarasan தான் kaali ன்ற character ல நடிச்சிருக்காரு.kaali ஓட மனைவி தான் anusuya வா நடிச்சிருக்க deepa balu. இவங்களோட குலதெய்வம் தான் நிறை சூலி ன்ற கடவுள். இந்த கடவுள் கர்பிணியா இருக்கற மாதிரி தான் காட்சி குடுப்பாங்க. இந்த கோயில்க்கு போறதுக்கு தான் kaali யும் அவரோட குடும்பம் மும் ready ஆயிட்டு இருக்காங்க. இதுக்கு ஒரு காரணம் இருக்கு, kaali ஓட wife pregnant அ இருப்பாங்க. இவங்களோட delivery safe அ இருக்கணும் ண்றதுக்காக தான் குலதெய்வ கோயில்க்கு போறதுக்கு plan பண்ணிருப்பாங்க. இவங்க ready ஆயிட்டு இருக்கும்போது தான் ரெண்டு புது characters அ அறிமுகம் பண்ணுறாங்க. இவங்களும் அதே கோவில் க்கு தான் போவாங்க. கதை போக போக தான் இவங்க ரெண்டு பேரும் யாரு ன்றதை detailed அ தெரிய வரும்.
இந்த படத்தோட மொத்த கதையும் ஒரு விஷயத்தை சுத்தி தான் நடந்திருக்கும், மலை பகுதில இருக்கற அந்த கோவிலுக்கு போற hero ஓட குடும்பத்துக்கு என்ன ஆகும் ன்றது தான் கதையா இருக்கு. படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஆணவ கொலை யா பத்தி தான் சொல்லிருக்காங்க. உதாரணத்துக்கு anusuya காளியை கல்யாணம் பண்ணுறதுக்காக அவங்களோட குடும்பத்தை விட்டு ஓடி தான் வந்திருப்பாங்க. அதேமாதிரி இந்த soceity ல வாழுற சில பேரோட எண்ணம் எவ்ளோ கீழ்த்தனமா இருக்குன்றதை புரிய வைக்கிற மாதிரி பழைய படங்களோட தத்துவ பாட்டு யும் bgm அ போட்டிருக்காங்க.
balasaravana தான் kumar ன்ற character ல நடிச்சிருக்காரு. இவரு சென்னைக்கு வந்த காரணம் director ஆகணும் ண்றதுக்காக தான். குடி பழக்கத்தை பத்தியும் cinema வை பத்தியும் நெறய jokes அ சொல்லிட்டு இருப்பாரு. இவரோட இந்த portion எல்லாம் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கும். இதுக்கு அப்புறம் படத்தோட கடைசில தான் kumar அ serious அ காமிச்சிருப்பாங்க. இருந்தாலும் இவரோட character க்கு இன்னும் detailing குடுத்து இருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். இந்த படத்துல ஒரு பெரிய flashback portion குடுத்திருக்காங்க. இதுல kaali அப்புறம் anusuya ஓட love story , இதுனால ஏற்படுற ஜாதி பிரச்சனை, இவங்க ரெண்டு பேரோட family எப்படி பட்டது னு எல்லாம் clear அ explain பண்ணிருக்காங்க. flashback முடிஞ்சதும் climax scenes ரொம்ப violent ஆவும் ரத்தம் தெறிக்கற மாதிரி யும் குடுத்திருக்காங்க. இதுக்கு பதிலா இந்த problem க்கு என்ன தீர்வு குடுத்த சரியா இருக்கும் ன்றதை பத்தி குடுத்திருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும்.
இந்த படத்துல நடிச்சிருக்க எல்லா actors யுமே super அ நடிச்சிருக்காங்க. இவங்களோட performance யும் எதார்த்தமாவும் இருந்தது. gajaraj தான் இந்த படத்தோட வில்லன். இவரு வர scenes எல்லாம் மிரட்டலா இருந்தாலும், இவரோட character க்கு இன்னும் detailing குடுத்திருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். இந்த படத்துல ஒரு சில அழகான moments யும் இருந்தது. காளி ஓட அம்மா பசங்க கிட்ட அவங்க குலதெய்வ கதையை சொல்லுவாங்க. இந்த தெய்வத்தோட சிலை ஊர்காரங்களுக்கு எங்கயோ கிடைச்சிருக்கும், அதா எடுத்துட்டு வந்து தான் மக்கள் வழிபட்டுட்டு இருப்பாங்க. அதே மாதிரி anusuya, க்கு இந்த கோவிலுக்கு ஏற்கனவே வந்த மாதிரி ஒரு feeling இருக்கும். ஊர்ல வணக்கப்படுற காவல்தெய்வங்கள் ஒரு காலத்துல சாதாரண மனுஷங்களா இருக்கலாம், அவங்களும் இந்த மாதிரி பிரச்சனைகள் ல மாட்டி உயிரை விட்டிருக்கலாம் ன்ற மாதிரி director சொல்லிருப்பாரு. கடவுளே வந்து ஜாதி ன்ற ஒரு விஷயம் கிடையாது னு சொன்னாலும், மக்கள் அந்த கடவுளை நிராகரிச்சிடுவாங்க, காரணம் ஜாதியை ஆதிரிக்கற கடவுள் தான் இவங்களுக்கு வேணும் ன்ற ஒரு voice over message அ குடுத்து இந்த படத்தை முடிச்சிருக்காங்க. ஜாதியை விரும்புற மக்களோட மனநிலையை மாத்தவே முடியாது ன்றதை இந்த message ஏ strong அ சொல்லிருக்கும்.
ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:
Post a Comment