Vasool Mannan Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம வசூல் மன்னன் படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Arumugam Mathappan. இந்த படத்துல Sridevaa Krishnan, Niveda R. Nair, Saravana Subbaiya, Vela ராமமூர்த்தி, Saravana Sakthi.னு பலர் நடிச்சிருக்காங்க. srideva ஏற்கனவே சிறகடிக்க ஆசை ன்ற serial ல நடிச்சு famous ஆனவரு. இந்த படம் மூலமா சினிமா ல actor அ அறிமுகம் ஆகுறாரு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
இந்த படத்துல நெறய கதைகள் ஒண்ணா சேருது அதெல்லாம் பாக்கலாம். முதலாவுது, saravanan அ நடிச்சிருக்க Sridevaa Krishnan ஊர் முழுக்க கடன் வாங்கி வச்சிருக்காரு. கடனை திருப்பி குடுக்காம அவங்கள ஏமாத்திட்டு இருக்காரு. இந்த காரணத்துனால அந்த ஊர் மக்கள் எல்லாரும் இவரை அல்வா சரவணன் னு சொல்லி கூப்பிடுவாங்க. இவரு மட்டும் தனியா இல்ல இவருகூட இவரு மாமா saravana sakthi யும் சேந்து ஊர் ல லூட்டி அடிக்கிறாங்க. ரெண்டாவுது, பல business அ பண்ணிட்டு இருக்கற velaramamoorthy. இவரோட பொண்ணு தான் nivetha. இவங்களுக்கு police ஆகணும் னு ரொம்ப ஆசை. அதுனால எப்பவுமே police uniform போட்டுட்டு ஊரை சுத்திட்டு இருப்பாங்க. மூணாவுது, saravana subbaiya வை காமிக்கறாங்க. இவரு ஒரு நேர்மையான பத்திரிக்கையாளர். ஒருத்தரோட murder அ பத்தி மக்களுக்கு தெரியப்படுத்துனும் ண்றதுக்காக clues அ கண்டுபிடிக்க முயற்சி பண்ணிட்டு இருக்காரு.
ஒரு கட்டத்துக்கு மேல நிவேதாவும் sreedeva வும் சந்திக்கறாங்க. இந்த பொன்னையும் ஏமாத்திடுறாரு, அப்போ தான் nivetha க்கு sreedeva ஓட உண்மையான முகம் என்னனு தெரிய வருது. police ஆனதுக்கு அப்புறம் முதல் encounter நீதான் னு சபதம் எடுக்கறாங்க nivetha. இந்த மூணு கதைகளும் எப்படி சந்திக்குது இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது sreedeva ஓட acting natural அ இருந்தது. serial ல நடிச்ச அனுபவம் cinema ல கைகுடுத்திருக்கு னு தான் சொல்லணும். இவரு கடன் குடுத்தவங்கள ஏமாத்துறது, அவங்க பக்கத்துல வரக்கூடாது ண்றதுக்காக police கிட்ட பந்தோபஸ்து கேட்குறது னு இவரு அடிக்கற looty நல்ல இருந்தது. saravana sakthi ஓட comedy scenes எல்லாம் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு. முக்கியமா பாதுகாப்புக்கு வர police கிட்ட இருக்கற gun அ எடுத்து இவரு பண்ணுற அட்டகாசம் எல்லாம் audience அ சிரிக்க வைக்குது. nivetha ஓட performance யும் நல்ல இருந்தது. எப்பவும்போல வில்லத்தனத்தால மிரட்டிட்டு போயிருக்காரு velaramamoorthy.
படத்தோட technical aspects னு பாக்கும்போது barani ஓட bgm அப்புறம் songs எல்லாம் இந்த கதைக்கு பொருந்தி இருந்தது. என்னதான் இது ஒரு சின்ன budget படமா இருந்தாலும் cinematography தான் இந்த படத்துக்கு highlight அ அமைச்சிருக்கு. ஒரு சின்ன கதையா இருந்தாலும் மக்களுக்கு interesting அ இருக்கற மாதிரி கொண்டு போயிருக்காரு director.
ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre ல பாக்க miss பண்ணிடாதீங்க.

No comments:
Post a Comment