Featured post

சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “கில்லர் டேவிட்” திரைப்படத்தின் பூஜை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது

 சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “கில்லர் டேவிட்” திரைப்படத்தின் பூஜை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இப்படத்தின் இயக்குநர் சிவானி செந...

Friday, 20 March 2026

சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “கில்லர் டேவிட்” திரைப்படத்தின் பூஜை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது

 சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “கில்லர் டேவிட்” திரைப்படத்தின் பூஜை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

இப்படத்தின் இயக்குநர் சிவானி செந்தில். இவர் இதற்கு முன்பு “கார்கில்” மற்றும் “டேக் டைவர்சன்” ஆகிய இரண்டு திரைப்படங்களை தயாரித்து, இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






இத்திரைப்படத்தின் கதையைப் பற்றி இயக்குநர் கூறுகையில்,

“கில்லர் டேவிட்” எனும் மாபெரும் டான், தனது கௌரவத்தை நிலைநாட்டுவதற்காக 100-வது கொலையை நிறைவேற்ற ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் முயற்சிகளை முழு நீள நகைச்சுவை கதையாக இத்திரைப்படம் சொல்லும் என தெரிவித்தார்.


இக்கதையின் நாயகனாக டைகர் சக்ரவர்த்தி நடிக்கிறார்.

மற்ற நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும்.

No comments:

Post a Comment