Featured post

G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai

 _*G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai’*_ G.V. Prakash Kumar’s...

Saturday, 20 June 2026

58 கால்வாய் நீர்ப்பாசன திட்டத்தை 58 அடியில் இருந்தே கொடுக்க வேண்டும்...

*58 கால்வாய் நீர்ப்பாசன திட்டத்தை 58 அடியில் இருந்தே கொடுக்க வேண்டும்...*





*உசிலம்பட்டி தொகுதி 58 கால்வாய் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை கோரி கோரிக்கை மனு வழங்கப்பட்டது*


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 58 கால்வாய் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தில், 58 அடி மட்டத்திலிருந்தே உபரி நீரை வெளியேற்றும் நடைமுறையை நிரந்தர அரசாணை மூலம் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. விஜய் அவர்களின் முன்னிலையில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.


மேலும், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களிடமும், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களிடமும் இதுகுறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.


58 கால்வாய் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, 67 அடியில் இருந்ததை , 58 அடி மட்டத்திலிருந்தே பாசனத்திற்கு தேவையான நீரை வெளியேற்றும் நடைமுறையை நிரந்தரமாக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


இந்நடவடிக்கை மூலம் உசிலம்பட்டி தொகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு நிலையான நீர்ப்பாசன வசதி கிடைத்து, விவசாய உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது…


*PRO : Shiek*

No comments:

Post a Comment