Nizhal Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம nizhal படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்காரு A K kumar. இந்த படத்துல srivisakan, janani, kowshik, rameshkanna, harivijay னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
businessman அ இருக்கற sivan seenivasan ஓட பையன் தான் vijay hari . இவரும் இவரோட friends யும் சேந்து, rameshkhanna ஓட பொண்ணு janani யா கொடூரமா தாக்கி hospital ல admit ஆகா வச்சுடுறாங்க. sivan seenivasan ஓட wife என்ன பண்ணுறாங்க ந தன்னோட பையன் பண்ண தப்பை ஒரு police officer ஓட உதவி மூலம investigate பண்ணுறாங்க. அப்போ தான் இவங்களுக்கு janani பத்தின பல விஷயங்கள் தெரிய வருது. இந்த incident எப்படியோ court வரைக்கும் போயிடுது. இது க்கு அப்புறம் என்ன நடந்துச்சு? janani என்ன தான் பண்ணாங்க? court ல இதுக்கு என்ன தீர்ப்பு குடுத்தாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
bigboss ல வந்த janani இந்த படத்துல heroine அ நடிச்சிருக்காங்க. அதுவும் முதல் தடவையா twins அ நடிச்சிருக்காங்க. ஒரு character doctor இன்னொரு character audience அ பயமுறுத்துற மாதிரி நடிச்சிருக்காங்க. இவங்களுக்கு ஜோடியா வராரு visakan . இவரோட character க்கு இன்னும் detailing குடுத்திருந்த இன்னுமே நல்ல இருந்திருக்கும். climax ல இவரு lawyer அ வர scenes மட்டும் நல்ல இருந்தது. villain அ வர vijay hari அப்புறம் அவரோட friends ஓட நடிப்பை பாக்கும்போது கண்டிப்பா audience க்கு பயம் தான் வரும். janani ஓட அப்பாவை நடிச்சிருக்க rameshkanna ஒரு பாசக்கார அப்பாவா வளம் வந்து போறாரு. அப்புறம் villain அம்மாவோட மிரட்டல் யும் அதிகமா இருக்கு. இந்த படத்தோட director serial ல work பண்ணிருக்காரு. அதுனால இந்த படத்துல நெறய serial artist யும் நடிச்சிருக்காங்க. இவங்களோட characters யும் இந்த கதைக்கு ஏத்த மாதிரி அமைச்சிருக்கு.
படத்துல பெரிய highlight ஆனா விஷயம் ந அது janani character தான். முக்கியமா court scene and climax ல லாம் super அ இருந்தது. இது ஒரு serious ஆனா கதை ண்றதுனால dance , songs , comedy னு எதுவுமே குடுக்காம, கதையை மட்டும் straightforward அ எடுத்துட்டு போயிருக்காங்க. இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது abubakkar ஓட music and bgm இந்த கதைக்கு நல்ல பொருந்தி இருக்கு. mohankumar ஓட cinematography யும் நல்ல இருந்தது.
இந்த படத்துக்கு குடுத்திருக்க social message யும் அட்டகாசமா இருந்தது. முக்கியமா பெண்களுக்கு எதிரா நடக்கற கொடுமைகள், police ஓட partiality , departments ல irukkra politics னு எல்லாமே இந்த படத்துல காமிச்சிருக்காங்க. பெண்களுக்கு எதிரா நடக்கற கொடுமைகளுக்கு தக்க தண்டனை குடுக்க படவேண்டும் ன்றது தான் இந்த படத்தோட உட்கரு வா இருக்கு.
இது ஒரு நல்ல கதைக்களம் தான். சோ உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:
Post a Comment