Aati Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம aati படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்காரு T kittu. இந்த படத்தோட கதையை எழுதி இருக்கிறது thirumurugan. இந்த படத்துல Kadhal Sukumar, Abi Nakshathra, Anand Sounderarajan, Praveen Palanisamy, Karan Chakravarthy, Alan Krishnan, Sindhu Kumaresan, Essaki Karvanan னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
தமிழ் சினிமா ல பெண்கள் க்கு எதிரா நடக்கற கொடுமைகளை மெய்யம வெச்சு நெறய படங்கள் வந்திருக்கு. ஆனா இந்த படம் கொஞ்சம் வித்யாசமுவும் நம்மள யோசிக்க வைக்கிற விதமாவும் இந்த படத்தை director எடுத்துருக்காரு. என்னதான் ஒரு சாதாரண பொண்ணோட கதை மாதிரி தெரிஞ்சாலும் பெண்களோட அடையாளம், சுதந்திரம், சமூகத்துல ஏற்படுற மாற்றங்கள் னு நெறய விஷயங்களை இந்த படத்துல கொண்டு வந்திருக்காங்க.
isakki karvannan inspector அ வேலை செஞ்சுட்டுருக்காரு. இவரு பெண்களுக்கு எதிரா நடக்கற பல பிரச்சனைகளை தான் case அ handle பண்ணிட்டு இருக்காரு. ஆனா திடுருனு இவரை ஒரு மலைப்பகுதி க்கு transfer பண்ணுறாங்க. அந்த எடத்துல குற்றம் நடக்குறது ன்றது ரொம்ப rare ஆனா விஷயம். இந்த ஊர் ல தான் அழகு வா நடிச்சிருக்க abi nakshtra இருக்காங்க. இவங்க tea தோட்டத்துல தான் வேலை செய்வாங்க. எதிர்பாராத சம்பவம் மூலமா இவங்களோட life ஏ தலைகீழா மாறிப்போகுது.
ஒரு தனிநபர் ஓட போராட்டமா இது ஆரம்பத்துல தெரிஞ்சாலும், பெண்களோட history , ஆணாதிக்கம், பெண்கள் எப்போ அடிமையாக்க பட்டாங்க ன்ற பல விஷயங்களை அழகு character மூலமா காமிக்கறாங்க. women அ ஒரு victim அ மட்டும் காட்டாம, அநீதி க்கு எதிர்த்து நிக்கற மஹாசக்தி யா இந்த படத்துல காமிச்சிருக்காரு director. இந்த oru விஷயம் புதுசா இருந்தது. தமிழர் சமூகத்துல பெண்களுக்கு இருந்த மரியாதை, அதுக்கு அப்புறம் பெண்கள் ஆழ ஏற்பட்ட மாற்றங்கள் னு பல கருத்துகளை audience முன்னாடி வச்சிருக்காரு director.
இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட நடிப்பு னு பாக்கும்போது abi nakshtra ஓட நடிப்பு தான் highlight அ இருக்கு. இவங்களோட நடிப்பு ரொம்ப genuine ஆவும் எதார்த்தமாவும் இருந்தது. முக்கியமா emotional ஆனா scenes ல லாம் ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க. isakki kaarvannan police officer க்கு ஏத்த மாதிரி ரொம்ப கம்பீரமா வந்துட்டு போயிருக்காரு. மத்த supporting actors யும் அவங்க role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ வெளி படுத்தி இருக்காங்க.
இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது cinematography ரம்மியமா இருந்தது . முக்கியமா மலைப்பகுதி ஓட அழகை camera ல அப்படியே படம் பிடிச்சிருக்காங்க. editing யும் sharp and short அ குடுத்திருக்காங்க. படத்துல வந்திருக்க music அப்புறம் bgm னு எல்லாமே கதையோட பொருந்தி இருந்தது.
பொண்ணுங்களோட rights அ பத்தி கூச்சலிடாம, இதோட வேர் எங்க இருந்து ஆரம்பிக்குது றத்தை explore பண்ணிருக்காங்க அதுக்காகவே நம்ம இந்த படத்தோட director க்கு பெரிய கைதட்டல் அ குடுத்து ஆகணும். பெண்களோட குரல் அந்த காலத்து ல இருந்தே எப்படி எல்லாம் ஒலிக்க ஆரம்பிச்சு ன்றதா audience க்கு புரிய வைக்க try பண்ணிருக்காங்க.
இது ஒரு சமூக கருத்து கொண்டுள்ள கதைக்களம் தான். சோ உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:
Post a Comment