Monday, 26 August 2019

Sleep in 5 Seconds Book Launch & The Circle of Success Business Conferenceஎழுத்தாளர் பிரவீணா ஸ்ரீதர்(Writer Pravina) எழுதிய ‘ஸ்லீப் இன் 5 செகண்ட்ஸ்’ (Sleep in 5 Seconds )என்ற புத்தகத்தை அவரின் வழிகாட்டியும், உறவினரும், தொழிலதிபருமான பிலிப்ஸ் சாமுவேல்  (Philip Samuel)வெளியிட்டார்.

சென்னை காமராஜ் அரங்கத்தில் ‘த சர்க்கிள் ஆஃப் சக்ஸஸ்’(The Circle of Success )என்றபெயரில் வணிக கருத்தரங்கம்(Press Conference) ஒன்று நடைபெற்றது.இதில் வெற்றிப் பெற்ற தொழிலதிபர்கள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களையும், தொழில் வாய்ப்புகளையும், வணிக உலகில் வெற்றிப் பெறுவதற்கான சவால்களை எதிர்கொள்வது குறித்தும் விரிவான விவாதமும், நேர்காணல்களும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான தொழில் முனைவோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் ஒரு பகுதியாக ஹொலிஸ்டீக் லைஃப் கோச் (Holistic Life Coach)எனப்படும்வாழ்க்கையை முழுமையாக வாழ கற்பிப்பதில் வல்லவரான திருமதி பிரவீணாஸ்ரீதர் (Mrs.Pravina Sridhar)எழுதிய ‘ஸ்லீப் இன் 5 செகண்ட்ஸ்’(Sleep in 5 seconds) என்ற நூல் வெளியீடும் இடம்பெற்றது. இதனை அவரது வழிகாட்டியும், உறவினரும், தொழிலதிபருமான பிலிப்ஸ் சாமுவேல் வெளியிட்டார்.
  

பிலிப்ஸ் சாமுவேல் பேசுகையில்,‘ இந்த நூலை நான் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. இருப்பினும் பிரவீணா ஸ்ரீதரின் கடும் உழைப்பை அறிவேன். குடும்பத்தலைவி, உலகம் முழுவதும் பயணித்தவர், ஹொலீஸ்டிக் லைஃப் கோச்சாக பணியாற்றி வருபவர், சமூக சேவகர்,தொழிலதிபர் என பன்முகத் திறமைக் கொண்டவர். அவர் இந்த நூலை அறிமுகப்படுத்திய விதம் அருமையாக இருந்தது. இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள்,கவிதைகள், அனுபவங்கள், இன்றைய நாகரீக உலகிற்கு தேவையான உள்ளடக்கம் ஆகியவைஇடம்பெற்றுள்ளன.” என்றார்.


எழுத்தாளர் பிரவீணா ஸ்ரீதர் (Writer Pravina Sridhar)பேசுகையில்,‘இன்றைய உலகில் மக்கள் யாருமே உறக்கத்தின் முக்கியத்துவத்தை அறிவதில்லை. வெற்றி என்ற ஒற்றை குறிக்கோளுடன் பயணிப்பவர்கள் உறக்கத்தை இழந்து ஆரோக்கியமற்று திகழ்கிறார்கள். இதனால் பெற்றவெற்றியை அவர்களால் முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை. இந்நிலையில்வெற்றிக்கும், வெற்றியைத் தக்கவைப்பதற்கும் ஆழ்நிலை உறக்கம் அவசியம் என்பதை வலியுறுத்துவதற்காக, நான் சந்தித்தவர்களிடமிருந்து பெற்ற அனுபவத்தையும், வாழ்க்கையில் கற்றதும், பெற்றதுமான சொந்த அனுபவத்தையும் வைத்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன். உங்களை நீங்கள் கண்காணித்துக் கொண்டேயிருங்கள். முழுமையான வாழ்க்கையை வாழுங்கள் என்பதை உரத்து சொல்வதற்கான முயற்சியே இந்த நூல். இந்தப் புத்தகத்தின் தலைப்பு உங்களை ஆச்சரியப்படுத்தலாம். ஆனால் இது குறித்து, இதை வாசிக்கும் வாசகர்கள் உணரத் தொடங்கினால் அதுவே இந்த புத்தகத்தின் வெற்றியாகும்.விரைவில் இந்நூல் ஆடியோ வடிவிலும் வெளியாகும்.” என்றார்.


பிறகு அரங்கத்தில் இந்த நூலை வாங்குபவர்களுக்கு டீசர்ட் இலவசமாக வழங்கப்பட்டது. அத்துடன் சலுகையுடன் கூடிய பயணத்திட்டங்களுக்கான அதிர்ஷ்டசாலிகளும் தேர்வுசெய்யப்பட்டார்கள். அத்துடன் இந்நூல் வெளியாவதற்காக உழைத்த எழுத்தாளரின் குடும்ப உறுப்பினர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், பதிப்பகத்தார் உள்ளிட்ட பலரும் மேடையில் கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்த நூலில் எழுத்தாளர் தன்னுடைய அனுபவத்தை இங்கிலாந்தை மையமாகக் கொண்ட ஆங்கில நடையில் எழுதியிருக்கிறார். இவர் பயன்படுத்தியிருக்கும் மேற்கோள்கள், சொற்கள் ஆகியவை அனைத்து தரப்பினரையும் எளிதாக சென்றடையும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த நூலிற்காக அவர் பல மருத்துவ நிபுணர்களை சந்தித்து, தூக்கத்தைப்பற்றி மருத்துவ தகவல்களைப் பெற்றிருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது. இந்த நூலை புனைவுகதைகளின் மூலம் விளக்காமல் , நேரடி அனுபவத்தை விளக்கும் வகையில் எழுதியிருப்பதும் இந்த நூலை வாசிக்கத் தூண்டுகிறது. வெற்றி என்பது ஒருவர் ஈட்டும் பணத்தை மட்டுமே அளவுக்கோலாக கொண்டிருப்பதில்லை. அதன் பின்னணியில் உணர்வு பூர்வமான முடிவுகள், குடும்ப உறவு மேலாண்மை, நெருக்கடி நிலைமை, போட்டியாளர்களின் சவால்கள், தொழிலாளர்களின் ஒத்துழைப்பு, ஆரோக்கியம், நேர்மையான அணுகுமுறை என பலவிசயங்கள் உள்ளதுஎன்பதை தெளிவாக எடுத்துரைத்திருப்பதால், இந்த நூலின் தரம் உயர்ந்திருக்கிறது. எனவே, பிரவீணாஸ்ரீதர் எழுதியிருக்கும் ‘ஸ்லீப் இன் 5 செகண்ட்ஸ்’ என்ற நூல், புத்தக உலகில் சிறந்த அதிர்வை ஏற்படுத்தும் படைப்பாகத் திகழும் என்பது உறுதி.
    
              இந்நிகழ்வில் Mr.M.C.Kalaimamani,Dr.Srimathy Kesan,Mr.Aloha Kumaran,Dr.Lathe Christie,Mr.KrishSridhar,Mrs.Revathy Sivakumar,Mr.Philip Samuel,Mr.Christo George,Mrs.Neerja Malik,Mr,Rajiv Chelladurai,Mr.Biju Mohan,Mr.Natchi Lazarus,Mr.Kumaravel போன்றோர் கலந்து கொண்டு தங்களுடைய அனுபவத்தை சொன்னதோடு மட்டுமல்லாமல் வெற்றி பெற தேவையான ஆலோசனைகளை வழங்கினார்கள். 

             மாண்புமிகு அமைச்சர் திரு.மா.பா.பாண்டியராஜன்(Minister For School Education,Youth Affairs and Sports(Govt of Tamilnadu) அவர்கள் கலந்து கொண்டு தொழிலில் எப்படி பெறுவது என்பதை பற்றியும் ,புதிய தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்னையை பற்றியும் கூறினார் .அதோடு மட்டுமல்லாமல் The circle of Success  நிகழ்வில் பேசிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் 

No comments:

Post a comment